என் தோழர்கள்

Tuesday, 30 August 2011

யார் பெற்ற பிள்ளை, மாயவரசனின் மகன் - தெரு கூத்து

                   கடைசியா எழுதன வறுவல் மற்றும் நொருவல எங்க ஊர் திருவிழாவில் தெருகூத்து என்று குறிப்பிட்டு இருந்தேன்.. அதை பற்றி மேலும் தகவல்கள்(மொக்கைகள்)....


யார் பெற்ற பிள்ளை மாயவரசனின் மகன் என்பது தான் நாடகத்தின் தலைப்பு...... மொத்தம் பத்து கலைஞர்கள் இருந்தனர்.. அதில் மூன்று பேர் பின் வாசிப்பு, அர்மோனிய பெட்டி, தவில், ஜால்ரா... ஒரு நாடகம் போட இது மட்டும் போதுமா என ஆராய்ந்தால் கண்டிப்பாக முடியும் என்பது தான் பதில்.. அழகிய ஆண்களும் அவர்களின் திறமைக்கு முன்னும் இசைகருவிகளா முக்கியம்...

 ஶ்ரீ சோலையம்மன் நாடக மன்றம், சோழனும் கிராமம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு... என்று அறிவிப்பு பலகை அவர்களுக்கு பின்னால் கட்டபட்டு இருந்தது.. அவர்கள் அனைவரும் அந்த ஊராரே அவர்... 


தெருகூத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் பெண்கள் இல்லாமல் ஆண்களே அனைத்து வேடமும் பூண்டு நடிப்பர்.. கர்ஜிக்கும் ஆண் குரல் கூட பெண் வேடம் இட்டால் பூ போல மாறுகிறது...


இப்ப கூத்துக்கு வறுவோம்... காலத்தாலும் பிறவற்றாலும் அழிக்க முடியாத அந்த கோமாளி கதாபாத்திரம், உச்சந்தலை வேடிக்க அடிக்கும் அந்த சாட்டை அடி, ஒத்த தவில், பெரிய சைஸ் ஆர்மோனிய பெட்டி, ஆண்கள் சூடும் பெண் வேடம் நடு நடுவுல கோத்து விடும் அந்த நாரதரர் (மாமா பையன்), .... இந்த கூத்துல இந்த வேடத்த ஒரு 17 இல்ல 18 வயசு இருக்கர பையன் போட்டு இருந்தான், ரொம்ப அருமையா இருந்துச்சு... நாரதர் மாறி பேசாம சாதரணமாவே பெசி அசத்தினான், நிச்சயம் அவங்க கலை வாரிசா தான் இருக்கனும்...


எப்பவும் கூத்துனா அதிகமா பாடல் காட்சிகள் வரும், இவங்க மட்டும் விதிவிலக்கா... எனக்கு எது புதுச தெரிஞ்சுதுனா சினிமா படல்களும் அந்த மெட்டில் பாடிய பாடல்கள் தான், இது வரைக்கும் நா இந்த மாறி கேட்டது இல்ல.. அவங்களுக்கும் ஒரு செஞ்ச் வேணும்ல...


ஒவ்வோரு கதாபாத்திரமும் அருமை.. சற்றும் மனம் தளராத நடிகர்கள்.. இடியே இடித்தாலும் தங்களுடைய காட்சியை சிறப்பாகவே நசித்து முடிக்கின்றனர்.. முக்கியமாக அழும் காட்சிகளில் அத்தனை பேர் முன்னிலையில் சர்வசாதரணமாக நடிக்கின்றனர், வேரு யாரலும் முடியாது... பக்கம் பக்கமாய் வசனங்கள் பாடல்கள் நடிப்புகள் எங்கும் மறவாமல் நடித்து முடிப்பதே பெரும் சிரமம்... இக்கால நடிகர்கள் அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும், அப்படி ஒரு நடிப்பின் சக்கரவர்த்தி அவர்கள்....


இவர்கள் தான் மக்களுக்கான உண்மையான கலைஞர்கள்...

இவர்கள் வாங்கும் பணம், இவர்கள் வந்து போரதுக்கும் மேக்கப் போடறதுக்குமே சரியா இருக்கும்... தன் அழியாமல் காக்கும் கலைஞர்கள் இவர்கள்.. எப்பவும் போல மேக்கப் போடர இடத்துல நம்மூர் ஆசாமிங்க குத்தவச்சு இருந்தாங்க...பெண் வேஷம் போட்டவங்க மேடைக்கு வந்த ஓடி போய் ஒரு 50 ரூபாய் நோட்ட ஜாக்கட்டுல குத்தரது... நன்கொடைங்கற பேருல ஒரு கிழிஞ்சு போன 10 ரூபா கொடுத்துட்டடவன் பேர அவனே 10 முற மைக்கில கத்திடு போவான்.. இங்களாம் மைக்க புடுங்கி விட முடியாதோ...


சீரியசான சீன் போய்ட்டு இருக்கும் போது தான், ஒய் ஒய் ட்ருட்ருட்ரா னு எவனாச்சும் மாடு ஓட்டுவான்.. உருருரனு பைக்க முறுக்கவான்.. அவன் கெட்டது பத்தாதுனு இன்னும் நாலு புண்ணியவான் அவன் பின்னால போவன்.. மொத்த கூட்டமும் கூத்த பாக்காம இவன் பண்ற கூத்த பாத்துட்டு இருக்கும்....


மேடை மட்டும் கொஞ்சம் சரியா போடல அம்புட்டு தான், அவங்க போடர ஆட்டத்துக்கு எல்லாரும் கீழ தான் கிடக்கனும்.. என்னா ஆட்டம் போடராங்க... முக்கியமா ஒருத்தர் அம்மன் வேஷம் போட்டு ஆடனாரு பாருங்க குழந்தைலாம் பயத்துல கண்ண மூடிக்கிச்சு ( மீ டு )... ஒரு உயிரோட இருக்கற கோழிய மேடையிலயே அதோட கழுத்த கடிச்சு இரத்தத்த குடிச்ச காட்சி பயங்கரமா இருந்துச்சு....


இன்னும் நாடக கலைஞர்கள் தங்களுடைய சொத்தான அந்த காலத்து ஹேர் ஸ்டைலான ஃப்ங்க் மாத்தவே இல்ல.. ஒரு வேள சென்டிமெண்டா இருக்குமோ..எந்த வித அதட்டலும் இல்லாம அப்பாவி மூஞ்சு தான் இருந்துச்சு எல்லாருக்கும்...அவர்களின் கலையை வாழ வைக்க வேண்டும் என்ற அதங்கம் மட்டுமே தெரிந்தது...


தலைப்பை மட்டும் பெருசா போட்டுட்டு கத என்னனு சொல்ல மாட்றானேனு தானே யோசிக்கிரிங்க... கிட்டத்தட்ட ஒரு கூத்து எட்டு மணிநேரம் நடக்கும், முழுசா பாத்தாலே ஒன்னும் புரியாது.. நா பாத்தது வெரும் ஒரு மணி நேரம் தான், அதுலயும் நோட்ஸ் எடுத்ததுலயே கவனம் போய்டுச்சு... என்ன பண்றது இப்ப தான பதிவுலகிற்கு வந்து இருக்கேன்.. போக போக கத்துக்கறேன் (அப்ப நீ எழுதறத நிறுத்தமாட்ட).....


தெருகூத்து என்னும் கலை அழிகிறது என்பதி விட அது அழிக்கபடுகிறது என்பது தான் உண்மை.. நாங்க வெறும் 50 பேர் கூட அந்த கூத்த பாக்கல.. சுத்தமா கூட்டமே இல்ல, இருந்தாலும் 8மணி நேரம் கூத்து நடைப்பெற்றது.. நாம் கலையை ரசித்து கை தட்டி பாராட்டி ஆராவரம் செய்தால் தான் அந்த கலைஞனும் கலையும் இன்பமுறும் ( கடைசிஒரு மணி நேரம் மட்டுமே கூத்து பாத்த நீயெல்லாம் அத பேச கூடாது).....


அவர்களின் கலை வாழ வேண்டும் என்று ஆசைபடும் சிறிய ரசிகன்...
(இங்குள்ள போட்டோகள் திரட்டியில் திரட்டியதே)

சதீஷ்...........


6 comments:

! சிவகுமார் ! said...

தெருக்கூத்து பற்றி உங்கள் பார்வையில் எழுதிய விமர்சனம் நன்றாக உள்ளது. இது போன்ற வித்யாசமான பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்.

சதீஷ் மாஸ் said...

உங்களின் வார்த்தை என்னை ஊக்கபடுத்துகிறது... நன்றி சார்....

! சிவகுமார் ! said...

சாரா? நான் யூத்து...யூத்து..யூத்து!!

சதீஷ் மாஸ் said...

ஆமாங்க சார் சார்.... இனிமே அப்படி கூப்படல போதுமா சார்...

ந.ர.செ. ராஜ்குமார் said...

கூத்துக் கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஒரு பாரம்பரிய கலை. என் பாட்டி வீட்டிற்கு சென்ற போது மதுரைக்கு அருகிலிருக்கும் ஒரு கிராம திருவிழாவில் முதல் முறையாக நேரில் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம் அது. பதிவர் சந்திப்பின் மூலம் தங்களை அறியப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சதீஷ் மாஸ் said...

நன்றி ராஜ்குமார்... அடுத்த வருடமும் எங்கள் ஊரில் நிச்சயம் கூத்து நடக்கும்... உங்கள் அனைவருக்கும் அதற்கு அழைப்பு விடுக்கிறேன்...