என் தோழர்கள்

Monday, 22 August 2011

இழந்த நட்பின் வரலாறு - 2

பேசிய வார்த்தைகளை மறந்து
     இல்லை மறவாமலோ
நட்பு பாராட்டிய ஒரே-காரணமோ
     அதிலும் இவன் ஒழுங்கினமே
மனமார வாழ்த்த ஒரு மனம்
      வேண்டும் அதை ஏற்க
தகுதியற்ற நிலையில் நான்....
      உன்னை நினைத்து பெருமை
உன் செயலால் நட்பில் செழுமை
     நட்பு கூட கதறி அழும்
நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டால்
    நான் மட்டும் வதிவலக்கா....?!
நான்குமுறை வாசித்ததும் - உன்
    பெயரா என சோதித்ததும்-தான்
நான் கண்ட புண்ணியம்.......


அழகே உருவான உன்
இடத்தில் என் நட்பின் தேடல்
இனி இருக்காது என தெரிந்து
வாழ்த்தியதற்கு வாழ்த்துமடல்
மட்டும் அனுப்பும் பழைய தோழன்....


நட்பு கூட மறந்துவிடும்
ஆனால், விட்டு பிரிந்து
சென்ற நட்பு மறக்காது....


காலத்தாலும் காற்றாலும் பிறவற்றாலும்
அழியாமல் இருக்க இது பதிவு செய்யப்படுகிறது.


வீரசக்தி கொண்ட யானைகள்
மன்னனை காப்பது போல
இவ்வுலக சக்தி அனைத்தும்
ஒன்று கூடி உன்னை வாழ்த்தி
வாழ வைக்க வேண்டும் என
வேண்டிக்கொள்கிறேன்.......


இந்த பதிவு பற்றி::
என் வகுப்பு தோழி ரேவதிபிரியா அனுப்பிய பிறந்தநாள் குறுஞ்செய்திக்கு நான் அனுப்பிய மடல்....


Many more happy returns f day..:-) Njoy d days..:-) Lt b followng yrs brng happines and success..:-) Onc again HAPPY BIRTHDAY 2 U:-D


அந்த அழகிய குறுஞ்செய்தி இது தான்.....


என்றும் இழந்த நட்பின் நினைவுடன்,
சதீஷ் மாஸ்.........


1 comment:

! சிவகுமார் ! said...

ஹல்லோ சதீஷ். நீங்களும் நம்ம சென்னைதானா? மகிழ்ச்சி. பதிவுலகில் வெற்றி பெற வாழ்த்துகள்!!