என் தோழர்கள்

Tuesday, 26 March 2013

கவிதை நேரம்

சிறகடிக்கும் குருவி
    உன்னை கண்டால்
சில்லென்று போய்விடும்
   கிறங்கடிக்கும் அழகுடி - நீ

-----------------------------------------------

காதல் கவிதை எழுதனும்
    அது காதலி இருந்தால் 
எப்படி முடியும் - காதலிப்பவர் சொல்லும் வரிகள்...!

-----------------------------------------------

எவ்வளவு யோசித்தும்
   முடியவில்லை
காதலின் ஆழத்தை பற்றி எழுத,
  யார் மீது பழி போடலாம்....

-----------------------------------------------

எப்போதும் தெரிந்துக் கொள்
  மனிதனுக்கு போதும் என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாது - போதுமா...

-----------------------------------------------

புதிய நண்பனை தேடும் - நீ
   பழையவனை இழந்தே 
ஆக வேண்டும்.....!

-----------------------------------------------

பம்பரம்விட்ட வயதில் - என்னை
    பட்டாம்பூச்சியாய் சுற்றினாய் - நீ
பருவம் அடைந்தவுடன் - என்னை
   பரதேசி ஆக்கிவிட்டாய்...!

-----------------------------------------------

என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்Wednesday, 20 March 2013

கவிதை நேரம்இருட்டுக்குள் இருக்கும் 
    நிலவிற்கு வெளிச்சமாய்
வந்த சூரியனை வேண்டாம் 
                            என்றாள்......

--------------------------------------------------

உன் கைக்குள் இருக்க 
        வேண்டும் என்பதற்கே
மோதிரமாய் பிறந்தேன்.....
     ஆனால் நீ தகுதியை விட
தங்கத்தை பார்த்தாய்....

--------------------------------------------------

உனக்கான உலகத்தில் 
         உனக்கானவனை தேடு.....
பிறருக்காக உன்னவனை இழக்காதே....

--------------------------------------------------

சிற்பத்திற்கும் சிரிப்பு உண்டு...
    தள்ளி நில், இல்லையேல்
நீ ஏமாந்து விடுவாய்.....

--------------------------------------------------

அன்று
      அரக்கனை அமைதிப்படுத்தியவள் - பெண்
இன்று
      அமைதியனவனை அரக்கனாக்குகிறாள்....

--------------------------------------------------

காலம் பதில் சொல்லும் என்பர்
  அவருக்கு தெரியாது
அந்த காலம் எனக்கு இல்லை என்று...

--------------------------------------------------

நகைச்சுவைக்கு நகைப்பு வேண்டும்
  சிந்தனைக்கு ஆற்றல் வேண்டும்
செயலுக்கு தைரியம் வேண்டும்
  மனிதனுக்கு உண்மை வேண்டும் 
உண்மைக்கு உணர்ச்சி வேண்டும்....

--------------------------------------------------

யோசித்து பார் அன்றை
   நேசித்து பார் இன்றை
பிடித்து விடும் நாளையை....

--------------------------------------------------

சிட்டுக்குருவியாய் வாழு
    மயிலாய் வாழ நினைத்து
காட்சிப்பொருளாய் ஆகிவிடாதே...

--------------------------------------------------

முயலுக்கும் ஆமைக்கும் - போட்டி
   உன் முயலாமையை நீக்கு
வெற்றி உன் முதுகில் பயணிக்கும்.....

--------------------------------------------------

என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்....

Thursday, 7 March 2013

கவிதை நேரம்எண்ணத்தை விதைத்து
விளைச்சலை பார்த்தேன்,
அது பயனற்ற பதராய் போயிற்று..
-------------------------------------------------
எழுத்து மூலம் உலகம்
படைக்க உணர்ச்சி இல்லா
எழுதுகோலை எடுத்தேன்
எதுவுமே புரியாமல்.....!
-------------------------------------------------
அர்த்தமே இல்லாமல்
எழுதிய ஆயிரம்
கவிதையை அர்த்தப்படுத்தியவள்,
அவளுக்காக ஆயிரத்து ஒன்றாய் இது...!
-------------------------------------------------
பெண்ணை காதலிப்பதை
       விட
காலத்தை காதலி
அது உன்னை
செம்மையாக்கும்...!
-------------------------------------------------
அழகை பார்த்து காதல்
செய்யாதே...!
அவள் அழுக்காய் இருக்கலாம்.....!
-------------------------------------------------
பேனா பிடித்தவன் எல்லாம்
கவிஞனும் அல்ல
காதலிப்பவன் எல்லாம்
காதலனும் அல்ல......!
-------------------------------------------------
அறிவாளியாய் பிறந்து
அறிவை இழந்து
துறவியோடு சேர்ந்து
துறவு பூண்டு
வேதனையோடு நிற்கிறேன்
                         அவளால்.......!
-------------------------------------------------
ஆயிரம் ஆயிரமாய்
பணம் இருந்தும்
செய்வது அறியாமல்
தவிக்கிறேன்.....
       -வங்கி காவலாளி....
-------------------------------------------------என்றும் கவிதையோடு
சதீஷ் மாஸ்.......