என் தோழர்கள்

Friday, 19 August 2011

என்னை நினைத்து பெருமை

கல்லூரியில் இன்னைக்கு ஒரு பீரியட்க்கு எந்த ஆசிரியரும் வரவில்லை.. லைபிரரி போகனும்னு நியுஸ் மட்டுமே வந்தது..எப்புவும் போல இன்னைக்கும் அங்க போய் சும்மா தான் இருக்க போறனு நா எதயும் எடுத்துகாம போய்டேன்.. எப்பவும் அங்க போன வெட்டியா கத பேசிகிட்டு தான் இருப்பேன்.. 


இன்னைக்கு கொஞ்சம் ஆட்டம் ஓவராயிடுச்சு, என்ன மட்டும் தனியா உக்கார வச்சிட்டாங்க.. அங்க இருந்து பாத்தா பக்கத்துல இருக்குற மெயின் ரோடு நல்ல தெரியும்.. உக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்.. மேடம் அத பாத்துட்டு திட்ட ஆரம்பிச்சாங்க.. நா அமைதியா இருந்துடேன்...


கொஞ்சம் நேரம் கழிச்சு எனக்கு எப்படி தோனுச்சுனு தெரியல.. சும்மா இருக்கறதுக்கு பதிலா எதச்சும் பண்ணலாம்.. அப்ப தான் கவிதை எழுதலாம்னு முடிவு பண்ணேன்.. என்ன தலைப்புல எழுதலாம்னே ஒரு பத்து நிமிஷம் யோசிச்சேன், அந்த அளவுக்கு நா பிரில்லியண்ட்..... 


உயிரணுக்கள் மூலம்
குழந்தை பிறக்கும்
என் உயிரெழுத்தின் மூலம்
கவிதை பிறக்கும்...


சொற்களை
கொண்டு
வடிக்கும்
சிற்பத்தின்
பெயர் தான்
கவிதை.....


காதல் 
கண்ணதாசனை கூட
விட்டு வைக்கவில்லை
அவனையும்
"காவிய பைத்தியன்"
ஆக்கியது


யாரிடமும் சிறைப்படாத
என் மனம்
கவிதை என்னும்
அழகியிடம்
சிக்கிக்கொண்டது.....


கவிஞர் ஆக 
வேண்டுமெனில்
துன்பத்தை அனுபவி.....
(அந்த மேடம் திட்டினாங்கள அதன் விளைவு)


சிறு காகிதம் கிடைத்தால்
அதில் காவியம் படைப்பேன்
மலை போல் நீ உடனிருந்தால்....
ஒராயிரம் அழகிகள்
உள்ள வகுப்பில்
ஒரே நட்சத்திரமாய்
என் தேவதை.....


இத நா எழுதி முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்துச்சு... இந்த கவிதை எல்லாத்தையும் படிச்சுட்டு, எங்க இருந்தோ காப்பி அடிச்ச மாறி இருக்காம் - நண்பனின் கமெண்ட் இது.. சரிதான் போடனு வந்துடேன்... என்னை சிந்திக்க வைத்த பிளாக் என்னை இன்று கவிஞனனாகவும் மாற்றியுள்ளது.. என்னை நினைத்து பெருமையாக தான் இருக்கு... தலைப்பு வந்துருச்சு.....

நீங்க உங்க பதிலை கமெண்டில் எழுதவும்...
அது என்னை ஊக்கபடுத்தும்.....
தொடரும்.....
சதீஷ்.................


No comments: