என் தோழர்கள்

Friday, 2 September 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 03/09/2011

காமெடி:

எனக்கும் என் தம்பிக்கும் நடக்கும் உரையாடல் போன்று,

தம்பி : அது என்ன கடை? எப்ப பாத்தாலும் ஒரே கூட்டமா இருக்கு, ஒரு விளம்பர பலகை கூட இல்ல.... ( என்று டாஸ்மாக் கடையை காண்பித்து கேட்டான்)

நான் : (நம்ம தம்பி இப்படி உலகம் தெரியா புள்ளயா இருக்கேனு மனசுல நினைச்சுகிட்டு) எனக்கு அது என்ன கடைனு சரியா தெரியல நான் பிலாசஃபி பிரபாகரன கேட்டு சொல்றனு சொன்னேன்

தம்பி : அட என்னன இது கூட தெரியாம இருக்க அது ஒயின்ஷாப்ன....

நான் : மக்கா, சாய்ச்சுபுட்டான்...

    -------------------------------------------------------------------------------------------------------
வளர்ச்சி:

கொஞ்ச நாள எல்லாருடைய பதிவையும் விரும்பி படிக்க ஆரம்பிச்சுட்டேன், அதற்க்கு பதில் (அதாங்க கமெண்ட்) எழுதியும் வருகிறேன்.. நண்பர் சசிக்குமார் (வந்தேமாதரம்) ஒரு பதிவுல புதிய பதிவருக்கான சில ஆலோசனை தந்து இருந்தார் அதன் படி செயல்படுகிறேன்... என்னை மேலும் மேலும் மெருகேற்ற அது உதவுகிறது....


சில பதிவர்கள் அவர்களுடைய பிளாக் முகவரியை கமெண்ட் போடும் போது சேர்த்து விடுவார்கள், அந்த மாதிரி செய்ய எனக்கு ஆரம்பத்துல பிடிக்கல... கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு ஆனா நா இனியும் அந்த மாதிரி பண்ணாம இருந்தா என்ன அம்போனு நடு தெருவுல நிறுத்திடுவா(வி)ங்கனு தெரிஞ்சுருச்சு... அதனால அசிங்கமே பாக்காமா என்ன பிளாக் முகவரியை கமெண்ட்டுடன் போட ஆரம்பிச்சுடேன்....

          -----------------------------------------------------------------------------------------------


வருத்தம் :


மூனு நாளைக்கு முன்னாடி காலேஜ்ல நண்பன்கிட்ட இருந்து ஒரு பென்டிரைவ் வாங்கிட்டு வந்தேன் (fully sex movies).... அத பத்தி எதுக்கு இப்ப பேசறேன்னா அதுல குறைஞ்சது ஒரு 50 வீடியோக்கள் தமிழில் இருந்தது.. இதில ஒன்னும் ஆச்சரியம் இல்ல தான், அந்த வீடியோகள் தங்களுடைய மனைவிகளை அம்மணமாக படம் எடுத்து இருந்த கணவன்கள்... தான் ரசிப்பதற்காக எடுத்த வீடியோக்கள் இன்று உலகமே பார்க்கிறது, படிப்பறிவில்லா மனிதன் செய்யும் சிறய  பெரிய தவறு அவனுடைய குடும்பத்தையே அசிங்க படுத்துகிறது... டெக்னாலஜி வளர்ந்து இருக்கற இந்த காலத்துல நம்ம போன்ல இருக்கற வீடியோ வெளி உலகிற்கு போவது ஆச்சரியம் இல்லை.. என் கேள்வி என்னனா, அவன் போட்டோ எடுக்கும் போது என்ன மயித்துக்குடி காட்டிறிங்க... கணவன்கள் மனைவியை எடுப்பதும் காதலன் காதலியை அம்மணமாக வீடியோ எடுத்து வெளியிடுவது கேவலமான் ஒன்று... படிச்சு பட்டம் வாங்கன பரதேசிங்க கூட இந்த வேலயை செய்யுதுங்க.....


என்னை இந்த பதிவுலகமே அசிங்காமாக நினைச்சாலும் பரவாலனு இந்த பதிவை வெளியிட காரணம், இனியாவது இந்த தவறு திருத்தபட வேணும் தான்...


         ---------------------------------------------------------------------------------------


3G explanation is  Go! Goal! Gold! தங்கம் விக்கற விலைக்கு இது ரொம்ப அவசியம் தான்.... ஒரு பையனோட டிசார்ட் பின்னாடி எழுதி இருந்துச்சு..... 


         ---------------------------------------------------------------------------------------


மங்காத்தா : 


அட நா எழுதும் எழுத போறது இல்ல.. ஜெஸ்ட் ஃபோர் லைன்ஸ்... எல்லா பதிவரும் மங்காத்தா பத்தி பக்கம் பக்கமா எழுது தள்ளிடாங்க... நான் எழுதனா சத்தியமா தேரபோறது இல்ல... என் தல அஜித்தின் 50வது படம் வெற்றி அடைந்துவிட்டது (நாங்க ஜெயிச்சுடோம்), படத்தை முதல் நாளே பக்காதது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு... இன்னைக்கு தான் சென்னை உதயம் தியேட்டரில் படத்தை பார்த்தேன்..... வாழ்த்துகள் தல....


           -------------------------------------------------------------------------------------------


என்னை பற்றி:


யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தாரனு விவேக் ஒரு படத்துல கேக்கர மாறி, யாருமே பாக்காத பிளாக்குல யாருக்குடா பதிவ போடறனு நீங்க கேக்கறது புரியுது... என்னையும் நம்பி எனக்கு பின்னால (followers) நாலு பேர் இருக்காங்கல அவங்களுக்காச்சும் நான் எழுதனும்ல... அதிலும்  என்க்கு கமெண்ட் போடும் சிவக்குமார் அன்பர் நண்பர் பதிவர் இருக்காரே.... அவருக்கு தான் என் எழுத்து...


             -----------------------------------------------------------------------------------


பின் குறிப்பு :


நானும் எவ்ளோ நாள் தாங்க நல்லவனாவே நடிக்கறது... காமெடியா எழுத நானும் டிரை பண்றேன், ம்ம்ம் சுத்தமா வரல.... பேசாம இனிமே துய தமிழ்ல எழுதலாமானு யோசிக்கறேன்.. அப்படி இப்படினு என்னத்தயோ எழுதிக்கிட்டு இருக்கேன்... நா எழுதறது எனக்கே பிடிக்கல.... பாக்கலாம் என்ன தான் மேற்க்கொண்டு நடக்குதுனு.....


                    --------------------------------------------------------------------------------------
சதீஷ்........... (வெளங்காதவன் வெரும்பய சோம்பேறி பைத்தியக்காரன்)


10 comments:

Philosophy Prabhakaran said...

தல உங்கள் எழுத்தில் ஒரு விரக்தி, இயலாமை இருக்கிறது... எல்லா பதிவர்களுக்கும் ஆரம்பத்தில் இருப்பது தான்... நானும், சிவகுமாரும் உள்ள வந்துட்டோம்ல... இனி அந்த ஃபீலிங்கெல்லாம் வேண்டாம்... அடிச்சு விளையாடுங்க...

Philosophy Prabhakaran said...

remove word verification...

Philosophy Prabhakaran said...

ஞாயிறன்று நடைபெறவுள்ள பதிவர் சந்திப்பிற்கு தவறாமல் வரவும்... பேசலாம்... தொடர்புக்கு : 8015899828

bandhu said...

// பேசாம இனிமே துய தமிழ்ல எழுதலாமானு யோசிக்கறேன்..//
ஏங்க.. ஏன் இப்படி ஒரு கொலை வெறி?

கலவையா நல்லாவே எழுதறீங்க.. keep it up!

! சிவகுமார் ! said...

பதிவர் சந்திப்பு உங்களுக்கு மேலும் பல நண்பர்களை தேடித்தரும். அப்புறம் தனியா டீ ஆத்தும் நிலைமை வராது. கவலைப்படாதீங்க சதீஷ்!!

! சிவகுமார் ! said...

நிர்வாண வீடியோ பற்றிய தங்கள் ஆதங்கம் புரிகிறது. கோவப்படாதீங்க. படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லையே. எல்லாம் ஒரே கூட்டம்தான்.

சதீஷ் மாஸ் said...

பிலாசஃபி பிரபாவுக்கும் சிவக்குமாருக்கும் நன்றிகள்...

சதீஷ் மாஸ் said...

//பிலாசஃபி பிரபா said : remove word verification... //

ரிமுவ் பண்ணிடேன்....

சதீஷ் மாஸ் said...

Bandhu said : // பேசாம இனிமே துய தமிழ்ல எழுதலாமானு யோசிக்கறேன்..//

ஏங்க.. ஏன் இப்படி ஒரு கொலை வெறி? கலவையா நல்லாவே எழுதறீங்க.. keep it up!

நன்றி... நிச்சயம் தொடருகிறேன்....

Anonymous said...

nice. Ubaidullah