என் தோழர்கள்

Thursday 17 May 2012

சதீஷ் காபிஷாப் - 18/05/2012



வணக்கம் அன்பர்களே...

சென்ற காபிஷாப் பதிவிற்கு அமோக வரவேற்பு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட 505 பேர் வந்து சென்றனர். சின்னதாய் ஒரு நன்றி தான் பாஸ்... இந்த மாதிரி பதிவுக்குனு சில வரைமுறை இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, நாமும் அதியே ஃபலோ பண்ணுவும். (இது போன்ற பதிவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உள்ளதாய் அனைவரும் சொல்கிறார்கள், ஆகையால் நாமும் அதை பின்பற்றி செயல்படலாம்)..
------------------------------------------------------------------------------------------------------------
பதிவர் சந்திப்பு:

பதிவர் சந்திப்பு பற்றி எதாவது நானும் சொல்லியே ஆகனும்ல.. அப்ப தான ஒரு கேத்து இருக்கும். வழக்கம் போல தடபுடலா ஆரவரமா பிரச்சாரம் பண்ணி பதிவர் சந்திப்புக்கான நேரம் அறிவிச்சாங்க.. அது வழக்கம் போல இல்லாம இந்த முறை சொதப்பிடுச்சி. மே20 பதிவர் சந்திப்புக்கான தேதி. அதே தேதியில் சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடக்கிறது. செய்வது அறியாமல் தவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் நிலைமை தான் கவலைக்கிடம்.
------------------------------------------------------------------------------------------------------------
கொங்கு பதிவர் சங்க துவக்க விழா:

இது ஒரு பக்கம் இருக்க, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா கூகிள் பிளசில் ஒரு செய்தி பரவல்... கோவை மாநகர பதிவர்களே வாருங்கள் நாம் ஒன்று கூடுவோம் என அழைப்பு விடுத்து உள்ளார் சஞ்சய் காந்தி.. அப்ப, கூடிய விரைவில் அவர்களுடய சந்திப்பு நடந்து விடும்.. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பதிவர்களை மட்டும் அழைக்கவில்லை. முகநூல் அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அறிய.. அவர்களுடைய இந்த முதல் முயற்சி வெற்றி அடைய சென்னை பதிவர்களின் சார்பாக மனமார நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்... எல்லாருக்கும் ஒரு கன்டிஷன், அங்க அங்க நடக்குற பதிவர் சந்திப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா எல்லாரும் ஒன்னா சேந்துடனும்.. சென்னை பதிவர், கோவை பதிவர், ஈரோடு பதிவர்னு யாராச்சும் பிரிச்சி பாத்திங்க, சுட்டுப்புடுவன்.. ஆயிரம் கைகளை இணைக்கும் சக்தி தமிழனின் எழுத்தில் உள்ளது. சொன்னவர் பிரபல பதிவர் சதீஷ் மாஸ்..
------------------------------------------------------------------------------------------------------------
சென்ற சென்னை பதிவர் சந்திப்பு:

போன வருடம் நடந்த பதிவர் சந்திப்பு தான் என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு. ரொம்ப ஜாலியா இருந்துச்சு . யூத் பதிவர் சந்திப்புனு சொல்லி என்னை அழைத்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்கள் தான். அந்த சந்திப்புக்கு பிறகு தான் என் எழுத்தில் ஒரு சூடுபிடித்தது.. அந்த மொத்த பதிவர் சந்திப்பையும் கவர் ஸ்டோரியாக எழுதிய ஒரே பதிவர் சதீஷ்குமார் மட்டுமே. அதை படிக்க.. பல சூவரிஸ்யமான சம்பவங்கள் நடந்துச்சு சோ டோன்ட் மிஸ் இட்..
ஜாக்கி அவர்களின் தளத்தில் மேலும் வாசிக்க...

பதிவர் சந்திப்புக்கான வேலைகளை எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்து இருக்காங்க. ஆனா இந்த முறையும் கவர் ஸ்டோரி நான் தான் எழுதுவேன் என்று என் வேலையை நானே எடுத்து கொள்கிறேன்... இதுக்கு பேர்தான் வில்லத்தனம்...
------------------------------------------------------------------------------------------------------------
உங்க கமெண்ட்:

இப்ப தான் கொஞ்சம் தைரியம் வந்து கமெண்ட் மாடுரேஷனை நீக்கி உள்ளேன். பார்ப்போம் என்ன நடக்குதுனு... ஹி ஹி.. உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் இல்லை நிறையாவே பயமா தான் இருக்கு.. இருந்தாலும் என் பல ஆசான்களின் பின் தொடர்களாக நானும் செயல்படுவேன்.. ஆவரது ஆகாட்டும்...
------------------------------------------------------------------------------------------------------------
போட்டோ... என்ன கொடுமை சார் இது.. :

எங்க கணக்கு வாத்தியாரின் கணக்கு. சத்தியமா ஒன்னும் புரியலை
இதுல இருக்கற கணக்கை solve பண்ணி நிறைய பேருக்கு விடை கொண்டு வர தெரியாது என்பதே எமக்கு தெரிந்த விடை... அவ்வ்வ்வ்வ்வ்....
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:

போடா போய் வே(வ)லைய பாரு இல்லனா எவனாச்சு ஆட்டய போட்டுறுவான்..

பொன்னுக்கும் பொண்ணுக்கும் தான் சண்டை அதுல உருளுது ஆம்பளைங்க மண்டை..

ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, அனைவரையும் நம்புவது பேராபத்து..

------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரம்:

பிற பதிவரின் பெருமையை எடுத்து சொல்லி அவர்களுக்கு விளம்பரம் செய்வதே இப்பகுதி.. 
இன்று அன்பைத் தேடி.. அன்பு.. தமிழகத்துல இருந்து சிங்கப்பூர் சென்று செட்டில் ஆன நம்மூர் காரர் ஆன அன்பு.. கணிப்பொறி சம்பந்தப்பட்ட தகவல்களை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார். அதான் எல்லாரும் எழுதுறாங்களே அப்புறம் என்ன? அப்படிஎன்று நீர் முழங்குவது எம் காதுகளில் பளார் என கேட்கிறது.. இவர் தனது பதிவை மிக தெளிவாக விவரமாக எழுதுகிறார். நடுநடுவே விளம்பர பேனர்கள் வந்து தொந்தரவு செய்யாத ஒரு வலைப்பூ.. இவருடைய வலைப்பூவில் உலகில் உள்ள எல்லா தமிழ் வானொலிகளுக்குமான லிங்க் கொட்டி கிடக்கிறது.. தமிழ் செய்தித்தாள்களும், தமிழ் தொலைக்காட்சிகளும் காணக்கிடக்கிறது. பல நூறு இலவச சாப்ட்வேர்கள் அண்வகுக்கின்றன.. இப்ப கொஞ்ச நாளைக்கு முன் அவர் எழுதிய பதிவு இசைக்கருவிகள் பற்றியது. மிக அருமையான தொகுப்பு அது..

சார் விளம்பரத்துக்கான பணத்தை என்னோட ஸ்விஸ் அக்கோன்ட்டுல போட்டுறுங்க..
------------------------------------------------------------------------------------------------------------
உண்மை:

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு உண்மைய தெரிஞ்சிக்கிட்டேன். நாம புதுசா யாரவது ஒருவரின் தளத்திற்கு சென்று ஒர்ரே ஒரு கமெண்ட் போட்டால் போதும் அடுத்த நிமிடம் அந்த தளத்தின் உரிமையாளர் நம்ம வலைப்பூவிற்கு வந்து ஒரு நோட்டம் விடுகிறார் என்று... அவ்வ்வ்... (இது இப்ப தான் உனக்கு தெரியுமா உனக்கு)... ஆமாங்க பாஸ்... இதுக்கு தான் கமெண்ட் போடனும்.. புரியுதோ நோக்கு..
------------------------------------------------------------------------------------------------------------
பல்லை காட்டாதீர்:
பாவம் அந்த பிகரு......


------------------------------------------------------------------------------------------------------------
கவிதை நேரம்:

நான்
நீ
நாம்
அவன்
அவள்
எல்லாம் நம்ம
சொந்தம்
வாழ்க வளமுடன்..

என் ஆசான் கவிஞர், புலவர், எழுத்து புயல், கவிச்சக்கரவர்த்தி மிஷ்கின் அவர்களுக்கு சம்ர்ப்பணம்..
------------------------------------------------------------------------------------------------------------

போதும் நிறுத்திக்களாம்டா சதீஷ்.. பாரு இப்பவே பாதி பேர் முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கமெண்ட் போடுவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் அதுவும் என் ஸ்விஸ் அக்கோண்டில் இருந்து தரப்படும்..



என்றும் காபிவுடன்
சதீஷ் மாஸ்........



15 comments:

ஹேமா said...

காப்பி குடிச்சேன்.நன்றி !

குடந்தை அன்புமணி said...

:)

மாலதி said...

பதிவுக்கு பாராட்டுக்கள்..

Unknown said...

கமெண்ட் போட்டுட்டேன்....!




ஆ...ஆ....என்னங்க உங்க அக்கவுண்ட் செவ்வாய் கிரகத்து பேங்குல என வருது!
நான் எப்படி பணம் எடுப்பேன்!

Unknown said...

கோவை சமூகதளங்களின் பதிவர் குழுமத்தினை பற்றி கூறியதுக்கு நன்றி!பாஸ்!

கோகுல் said...

சதீஷ் எழுத்துல சூடு புடிக்க ஆரம்பிச்சு இருக்கு ( வெயில் காலம்ல,உடம்புலயே சூடு புடிக்குது,எழுத்துல பிடிக்காமலா? )

சூடு குறையாம பாத்துக்குங்க

Prem S said...

அந்த கடிகார கணக்கு அருமை எப்டிலாம் யோசிக்கிரான்கப்பா

Philosophy Prabhakaran said...

தல... பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன... ஃபலோ, கேத்து, ஆகாட்டும், ஒர்ரே - இதெல்லாம் என்ன மொழி தல...

குண்டுக்கல் குணபாலன் said...

அன்பின் பிரபாகர் அவர்களே...

நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கொடு எழுதுகிறேன் என்று நக்கலடிக்கிறீர்கள்... உங்களுக்கு என்னுடைய நன்றிகால்... நான் எழுதுவது என்னுடைய காபிஷாப்பை தொடர்ந்து வசிக்கும் ஐநூற்றி ஐந்து வசாகற்களுக்கு புரிகிறது... எனக்கு அது போதும்...

மேலும் நீங்கள் என்னுடைய தளத்திற்கு வந்து கமென்ட் போட்டதால் நான் இங்கே வந்து நோட்டம் விடுகிறேன் என்று அபாண்டமாக குற்றம் சாட்டுகிறீர்கள்... நான் யாருடைய வாழைப்பூவையும் படிப்பது இல்லை... ஏனென்றால் எனக்கு எலுதப் படிக்க தெரியாது...

சதீஷ் மாஸ் said...

// வீடு சுரேஸ்குமார் said... ஆ...ஆ....என்னங்க உங்க அக்கவுண்ட் செவ்வாய் கிரகத்து பேங்குல என வருது!
நான் எப்படி பணம் எடுப்பேன்! //

தலைவா உங்க கிரெடிட் கார்டு நம்பர் கொடுங்க மத்தத நா பாத்துகிறேன்... அப்புறம் நீங்க செவ்வாய்ல அக்கவுண்ட் இருக்கா?

சதீஷ் மாஸ் said...

// கோகுல் said... சூடு குறையாம பாத்துக்குங்க //

நீங்க சொல்லிட்டிங்கல போங்க இதுக்கு அப்புறம் பாருங்க... சென்னையில மீட் பண்ணலாம் வாங்க.....

சதீஷ் மாஸ் said...

// PREM.S said...
அந்த கடிகார கணக்கு அருமை எப்டிலாம் யோசிக்கிரான்கப்பா //

ம்ம்ம் எல்லாம் எங்கள மாதிரி கணக்கு புலிக்களுக்காவே ரெடி பண்றாங்க...

சதீஷ் மாஸ் said...

// Philosophy Prabhakaran said...
தல... பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன... ஃபலோ, கேத்து, ஆகாட்டும், ஒர்ரே - இதெல்லாம் என்ன மொழி தல... //

ஆகாட்டும் என்பதை தவிர எல்லாமே சரியான வார்த்தை தான் அன்பரே.. follow-ஃபலோ, gethu-கேத்து, (ஒர்ரே ஒரு-ஒன்றாய் சேர்த்து ஒரு அழுத்து அழுத்தி படிங்க தலைவா)

சதீஷ் மாஸ் said...

// கொசக்சி பசப்புகழ் said...
அன்பின் பிரபாகர் அவர்களே... //

சார் சத்தியமா ஒன்னும் புரியல.. என் வசனத்தை நீங்க பேசனா நா என்னத்த பேசறது..

நீங்க ரெண்டாவதா எழுதி இருக்குற பத்தியில எத சொல்றீங்கனு தெரியலயே.. அய்யோ எனக்கு பைத்தியம் புடிச்சிடும் போல இருக்கே...

சத்ய நாராயணன் said...

ha.... ha.... ha....:-)