என் தோழர்கள்

Wednesday, 21 September 2011

புது கவிதை

தலைப்பு இல்லாமல் கவிதை எழுத கத்துகோங்க...


*கஷ்டப்பட்டு பெற்ற
 சுதந்திரம் - இன்று
 இஷ்டப்பட்டு அடிமையானேன்
 அவளின் சிறிய அன்புக்காக...


*அன்பு கொள்ள
 ஆளில்லை - என
 அவள் உன்னை 
 விரும்பினால்..
 அவள் இன்பம் அடைகிறாள்
  நீ துன்பத்தில் மூழ்கிறாய்..


*நித்தம்! நித்தம்!!
  துடிக்கிறேன்..
  உன்தன் சித்தம் காண
  சில்லரை கனவுகளுடன் - நான் ??


*ஆண் கடவுளும்
  கலங்கினான்..
  என் காதலியின்
  கடைசி ஊர்வலத்தில்
  மழையாய்!!


*மரணம் கூட
  பயப்படும்
  பாவையின் பார்வைக்கண்டு
  இவள் பெண்ணா? பேயா? என்று...


*காலம் கூட கருணைக் காட்டவில்லை
  என்னிடம், என் கண்ணவளை கனவில் காண
  அதற்குள் என்னை இறையாக்கியது..


*பணம் மட்டும் போதும்
  இது பாவிகளின் கூற்று..
  மனம் மட்டும் போதும்
  இது எந்தன் வாக்கு..


*கவிதையும் காற்றும்
 ஒன்று தான்...
 உன் உணர்வை மெல்ல
 திறந்து விடு
 புயலும் பூங்காற்றுமாய் வீசும்..


*கல்லூரி வாழ்க்கை
 புரிவதற்குள்
 முடிந்தது
 என் வாழ்க்கை
 காதல் பள்ளத்தில் - நான்


*பிறப்பும் 
 இறப்பும்
 ஒன்று
 தான்
 அவளின்
 காதல்
 பார்வையில்..


*பட்டணத்து
 போதை- இது
 இன்று பல
 கிராமமும் 
 அந்த மதுகடையில்..


*ஏதோ சொல்ல நினைக்கிறேன் - உன்னிடம்
  நானே இல்லை என்னிடம்
  மயக்கம் கொண்டேன் உந்தனிடம்
  மரணம் முத்தமிட்டது என்னிடம்


*என்தன்
  கனவுகள்
 முடிகிறது!
 உன்தன்
 ஒரே
 வார்த்தையால்
 பெண்ணே...?!?!?!


*ஏண்படியின்
 ஆணிகள்
 தளர்கின்றது!
 முதிர்ச்சி
 கொண்ட
 பெற்றோர்கள் தான்!
 நான் ஏறி வந்த
 ஏணி அது!


*மலர்கள்
 மயங்கும்
 மண்ணும்
 மணக்கும்
 என் அன்னையின்
 கால்பட்டால்..


காலேஜ்ல மாத தேர்வு வச்சப்ப, ஒழுங்க எக்ஸாம் எழுதாம என் பிரண்டு பெருமாள் எழுதன கவிதை தான் இதாலாம்... வருங்கால வைரமுத்து நிகழ்கால வாலி அவன்(இத அவன் தான் போட சொன்னான்).. சீக்கரமா புத்தகம் போட்டுறுவான்.. யாரும் வாங்கி படிக்காதீங்க....
சதீஷ்...... (நண்பன் பெருமாள் உடன்) 
கோகுலின் ஆசைக்கு இணங்க, எங்கள் இருவரின் போட்டோவும் போடப்படுகிறது... (முதல் கமெண்ட் பார்க்கவும்)

 நானும் பெருமாளும்..... (திருப்பதில இருக்காறே அந்த பெருமாள் இல்ல இவரு, இங்க லோக்கல் சென்னை தான்)


5 comments:

கோகுல் said...

பக்கத்துலையே உன் போட்டோவையும் பெருமாள் போட்டோவையும் போட்டுருந்தா சூப்பாரா இருந்திருக்கும்! கலக்குறிங்க போங்க!

சதீஷ் மாஸ் said...

இப்ப ஓகே வா...???

Philosophy Prabhakaran said...

முதல் இரண்டு கவிதைகளில் எனக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு தெரிந்தது...

Philosophy Prabhakaran said...

தொடர்ந்து படிக்கும்போதே இது உன்னுடைய படைப்பு அல்ல என்று தெரிந்துக்கொண்டேன்... (சில கவிதைகள் நல்லா இருந்ததே)

! சிவகுமார் ! said...

இளம் கவிஞர் பெருமாளுக்கு வாழ்த்துகள்.