என் தோழர்கள்

Friday, 11 November 2011

நட்பு என்பது

நண்பன் இருந்தால் நாட்டையும் ஆளழாலம் என்பது புதுமொழி. ஒரு நட்புக்கு அவ்ளோ பெரிய தைரியம், திமிரு இருக்கா என ஆராய்ந்தால் அது உண்மையே ஆகும். ஆபத்தில் உதவுவனே உற்ற நண்பன் என்ற பழமொழி இன்னும் பழுதாகவில்லை.


இந்த பதிவு எழுத காரணமே என் பாட ஆசிரியர் அவர்கள் தான்.. அவர் வகுப்பில் ஒரு பொது கேள்வி கேட்டார், அதன் தாக்கமே இப்பதிவின் நோக்கம்.

அந்த கேள்வி "" உங்களுக்கு ஒரு நண்பன் அமைய அவனுக்கு என்ன தகுதி வேணும், அவர் எப்படி இருந்தா உங்க நண்பரா அவர ஏத்திப்பீங்க, அவர் என்னாவா இருக்கனும்" இந்த மாறி பல கேள்வி கேட்டாங்க. ஆனா அவங்க கேட்ட கேள்வி எனக்கு புரியலனு சொல்ல முடியாது, எனக்கு பிடிக்கலனு சொல்லலாம்..


அந்த மானங்கெட்ட கேள்விக்கு என் வகுப்புல நிறைய பேர் தங்களோட கருத்த சொன்னாங்க, அது அத விட கேவலமா இருந்துச்சு.. " எனக்கு சமமான தகுதி (status) இருந்தா மட்டும் தான் நான் அவங்கள என் ஃபிரண்டா ஏத்துப்பேன்" அப்படினு ஒரு பொண்ணு சொன்னா.. எனக்கு வந்த கோபத்துக்கு அவள பளார் பளார்னு அடிக்கனும் தோனுச்சு. தெரியாமா தான் கேக்கரேன் அது என்னங்க தகுதி'ங்கறது. நல்ல ஃபிரண்ட்க்கு உண்மையான மனசு இருந்தா போதும், வேற எந்த தகுதியும் தேவையில்லை.. இரண்டு ஃபிரண்டுல ஒருத்தன் பணக்காரனாவும் இன்னொருத்தன் ஏழையாவும் இருந்தா அவங்களால நட்பா பழக முடியாதா என்ன... அந்த இடத்துல எந்த தகுதியும் பாக்காம பழகற அந்த பணக்கார பையனோட நட்பு கிடைக்க அந்த ஏழை பையனும், தன்னுடய ஆழ் மனதில் இருந்து எந்த பலனயும் எதிர்பாக்காம பழகுற ஏழை பையனின் நட்பு கிடைக்க அந்த பணக்கார பையனும் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கனும்.


அடுத்து ஒரு பையன், " என் அளவுக்கு அறிவா பேசற பையன், நல்லா படிக்கற பையன்கிட்ட மட்டும் தான் பழகுவேன், அவங்கள மட்டும் தான் நா என் ஃபிரண்டா ஏத்துப்பேன்" னு சொன்னான். இந்த பதில உங்ககிட்டயே விட்டரேன் சரியா தவறானு சொல்லுங்க. அப்ப என்ன மாதிரி முட்டாள் பசங்க அவன்கூட சேரவே கூடாதா? அந்த நாயோட நட்பே தேவையில்லைனு நா மனசுல நினைச்சுகிட்டேன்.. எங்க ஏரியால எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க, எல்லாரும் நிறைய படிச்சவங்க இல்லை. 5வது 6வது வரைக்கும் படிச்சிட்டு வேலைக்கு தான் போறானுங்க, அவனுங்க கூட நா பழகலயா? உண்மையான நட்பை அவங்ககிட்ட காட்டலயா? எனக்கு எதாச்சும் ஒன்னு ஆயிடிச்சுனு தெரிஞ்சா போதும் ஒவ்வோருத்தனும் சிட்டாட்டும் பறந்து வருவனுங்க.. எங்களுக்கு உள்ள எந்த பிரிவும் வந்தது இல்லை, இனி வரப்போறதும் இல்லை.. நான் நல்ல படிச்ச பசங்ககிட்ட மட்டும் தான் பழகுவேனு சொல்லற வரைக்கும் பிரிவு வராது, கவலப்படாதீங்க அந்த மாதிரி அசிங்கமா நா பேசமாட்டேன்...


அடுத்து என்னோட வாய்ப்பு வந்துச்சு, நான் எழுந்து நின்னு எல்லாரயும் ஒரு பார்வை பாத்தேன்.. எனக்கு பேச புடிக்கல அப்படினு சொல்லுட்டு அமைதியா உக்காந்துட்டேன்... மொத்தம் 50பேர்ல 6பேர் மட்டும் தான் பதில் சொன்னாங்க, மத்தவங்க எல்லாரும் பேச புடிக்கலனு மட்டும் தான் சொன்னாங்க.. ஏன்னா அவங்க சதீஷோட ஃபிரண்ட்ஸ், நா அவங்களோடஃ பிரண்ட்ஸ்னு அன்னைக்கு நிரூபிச்சாங்க...


ரொம்ப அருமையான கேள்வி தான் ஆசிரியர் கேட்டாங்க ஆனா அத கேட்ட இடம் சரி இல்ல, ஃபிரண்ட்ஸிப்ப உயிரா நினைக்கறவங்ககிட்ட அந்த கேள்விய கேட்டு இருக்கனும்... சும்மா டைம் பாஸ்க்கு பழகறவன்கிட்ட கேட்டது தப்பு தான். 


6லிருந்து 60 வரைக்கும் எல்லாருமே இளைஞர்கள் தான் என புதியதலைமுறை இதழில் அடிக்கடி சொல்லுவாங்க.. அது உண்மை தான், அதேபோல தான் நட்புக்கும் வயது வரம்பு கிடையாது. அப்பா தன் மகன்கிட்ட பழகற நட்பை வச்சி தான் இத விளக்க முடியும். அந்த இடத்துல கூட தான் பையன்ங்கற காரணத்தால தான் அவர் நட்பா பழகுவாறு.. ஆனா எந்த ஒரு காரணமும் இல்லாம, எதயும் எதிர் பாக்காம, எல்லாதயும் பெருசா நினக்கமா நட்ப மட்டுமே பெருசா நினைக்கற ஒரு உறவுக்கு பேர் தான் நட்பு..


காதல் கூட நம்மகிட்ட சொல்லிட்டு தான் வந்து போகும் ஆனா நட்பு அந்த மாதிரி கிடையாது.. நட்பை காதலுடன் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது.. ஹாய்டா ஐயம் சதீஷ், அப்படினு நான் ஒருத்தன்கிட்ட சொல்லும் போதும் அந்த நிமிசத்துல இருந்து எங்க நட்பு ஆரம்பிக்கும்.. என்னடா இது பைத்தியகாரன் தனமா இருக்குனு உங்களுக்கு தோனுச்சினா அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது.. ஆனால் இது தான் மறுக்க முடியாத உண்மை...


நாம போற இடம்லாம் நமக்கு நண்பர்கள் இருப்பாங்க, அவங்க எந்த வடிவுல எந்த நிலைல இருந்தாலும் நாம அவங்கள ஏத்துக்கனும்.. உங்களுக்குள்ள ஒரு தடவ செட் ஆயிடிச்சுனா போதும், அப்புறம் உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை..


நட்போட மதிப்பு என்னனு தெரிஞ்சது நால தான் இன்னைக்கு வரைக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் வெற்றிகரமா போய்ட்டு இருக்கு. அவங்கல அழிக்க முடியாது,, ஏன்னா அங்கே பல நட்பு உறவாடி கொண்டு இருக்கிறது.


ஒரு நம்ப முடியாத உண்மை.. முஸ்லிம் ஃபிரண்ட் இல்லாத ஒரு இந்துவ நீ இந்தியால பாக்க முடியாதுனு விஜய் வேலாயுதம் படத்துல சொல்லுவாரு.. அது 99.99% உண்மையா தான் இருக்கும் என்பது என் கருத்து...


சிவகுமார் னு எனக்கு ஒரு நண்பர் இருக்காரு, அவர் அவரோட ஃபிரண்ட்ஸ் பத்தி ஒரு நாள் என்கிட்ட சொன்னாரு நா ரொம்ப அசந்து போய்ட்டேன்.. அவர் ஸ்கூல் படிக்கும் போது உண்டான நட்பு அது, இன்னும் அது ஆடாமல் ஆசையாமல் இருக்கிறது.. சிவகுமார் ஒரு இந்து, அவரோட இன்னொரு நண்பர் கிறிஸ்டின், அவங்களோட இன்னொரு நண்பர் முஸ்லீம்.. இவங்க மூணு பேரும் கடந்த 15 வருஷமா நண்பர்களா இருந்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.. நட்புக்கு இனம், மதம், மொழி என எந்த பாகுப்பாடும் இல்லை என்பதுக்கு இதுவே உதாரணம்... (கண்ணுப்பட போகுதய்யா சின்னகவுண்டரு, சுத்திபோட வேணும்மய்யா சின்னகவுண்டரு)... 


காற்றும் நட்பும் ஒரே மாதிரி தான், ரெண்டயும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.. ரெண்டும் இல்லாம என்னால வாழனும் முடியாது.. காதலை விட சிறந்த நட்பை சிதைத்து விடாதீர்... ஒவ்வோரு ஃபிரண்டும் தேவை மச்சான்...


*காலத்தாலும் காற்றாலும் பிறவற்றாலும்
அழியாமல் இருக்க நட்பு பதிவு செய்யப்படுகிறது.


*காற்றோடு கலந்து சென்று விடும்
நினைவு அல்ல அது - காலத்திற்க்கும்

பேசபட வேண்டிய உறவு அது.நட்பே,
என் இதயம் துடிப்பது போன்ற உணர்வு
                                            - நீ உடன் இருந்தால்
என் இரத்தம் உறைவது போன்ற உணர்வு
                                             - நீ உடன் இல்லையேல்
நீ இல்லா இவ்வுலகம் உயிரற்ற உடல்களின் "நடமாட்டம்"
 
நட்பால் வாழ்தவனும் இருக்கான், செத்தவனும் இருக்கான்.. அது நட்போட தவறு இல்ல நண்பனோட தவறு... உங்க ஃபிரண்ட் உங்கல நம்பி வரான், அவன கெடுத்தற கூடாது. தான் நண்பனுக்கு துரோகம் நினைக்கற எவனும் நண்பனா இருக்க முடியாது. எத்தன பக்கம் வேணாலும் நட்பை பத்தி நான் பெருமையா பேசுவேன், ஆனா இதன் நட்புனு எனக்கு விளக்க தெரியல....

நட்பையும் நண்பர்களை தேடு நாம் பயணிப்போம், என்றாவது ஒரு நாள் பாதை முடியும் அன்று திரும்பி பார்த்தால் நட்பின் பெருமை தெரியும்.. 

என்றும் நட்புடன்,
சதீஷ்.........


Wednesday, 9 November 2011

வெற்றியும் தோல்வியும் - சிறுகதை

அந்த ரெண்டு பசங்களுக்கும் இருபது வயசு இருக்கும். அது வரைக்கும் சந்திச்சிக்காத அந்த ரெண்டு பேரும் சந்திக்க ஒரு வாய்ப்பு வருது. சென்னையில ஒரு மிக பெரிய கல்யாண மண்டபம், அங்க தான் அவர்களின் முதல் சந்திப்பு இனிதே அரங்கேறியது.


பாஸ், ஒரு போன் பண்ணனும் உங்க போன் கொஞ்சம் தர முடியுமா? என கெஞ்சலாக கேட்டது குமரனின் குரல். எதோ அவன் சொத்தையே கேட்ட மாறி ஒரு முற முறச்சிட்டு போன் எடுத்து கொடுத்தான் கிஷோர்... குமரன் போன் பேசி முடிக்கற வரைக்கும் அவன் கூடவே இருந்து அவனோட போன்'அ திரும்ப வாங்கினான் கிஷோர்.


தாங்கஸ் பாஸ், என்கிட்ட பேலன்ஸ் இல்ல அதான் உங்கிட்ட போன் கேட்டேன். ரொம்ப நன்றி, உங்க பேரு என்ன? என தானகவே போய் அறிமுகமாக முயன்றான் குமரன். அவன் பேசிய எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அமைதியாக நகர்ந்தான் கிஷோர். ரொம்ப தலைகணம் பிடிச்சவன் போல என குமரன் நினைத்து கொண்டான்.


அந்த திருமண மண்டபமே ஆரவரத்தில் ஆர்பரித்து இருந்தது. இசைக்கச்சேரிக்கு நடனம் ஆடியபடி இளைஞர்கள் செய்த சில்மிஷத்திற்கு அளவே இல்லாமல் இருக்க குமரனும் அவர்களுடன் சேர்ந்து கும்மி அடித்து கொண்டு இருந்தான். சற்றே ஓய்வு எடுக்க ஒதுங்கிய அவனின் கண்களில் ஒரு பதட்டம் தெரிந்தது.


தூரத்தில் ஒரு குழு கையில் போனை வைத்து கொண்டு முனுமுனுத்து கொண்டு இருந்தார்கள், அது கிஷோரின் போன் என்பதை கவனித்துவிட்டான் குமரன். கிஷோரின் போன் பின்னாடி ஒரு த்ரிஷா போட்டோ ஒட்டப்பட்டு இருப்பதை வைத்தே அவன் அடையாளம் கண்டான்... அந்த குழுவிடம் நாசுக்காகவும் மிரட்டலாகவும் பேசி போனை கைப்பற்றினான் குமரன்.


கிஷோர் போனை தேடி அலைவதை தூரத்தில் இருந்து ரசித்து கொண்டு இருந்தான் குமரன். பரபரப்பாக வந்த கிஷோர் அப்போது தான் குமரனை பார்த்தான். சார், என் போனை காணோம் நீங்க எங்கயாச்சும் பாத்தீங்கல என கிஷோர் கேட்டான். அவன் கண்களில் உண்மையாகவே அவனுடய சொத்தை இழந்த கலக்கம் தெரிந்தது. மேலும் அவனை கலங்கவிடாமல் போனை எடுத்து அவனிடம் நீட்டினான். எதோ மூன்றாம் உலகபோரில் வென்ற மகிழ்ச்சியோடு பேச தொடங்கினான் கதையின் முதல் நாயகன் கிஷோர்.


ஹாய் என் பேரு கிஷோர், உங்களுக்கு எப்படி நன்றி சொல்ரதுனே தெரியல ரொம்ப தாங்க்ஸ். இப்பதான் எனக்கு மூச்சே வருது, இது என் ஆளு எனக்கு கிப்ட்டா கொடுத்தது. தொலைஞ்சி போச்சுனு தெரிஞ்சதும் ரொம்ப ஆடிபோயிட்டேன். என படபடவேன பொரிந்து தள்ளினான் கிஷோர்...

சில நாட்களுக்கு பிறகு... (திருமண நிகழ்ச்சியும் முடிந்த பிறகு)ஹாலோ கிஷோர்,  நான் குமரன் பேசறேன் ஞாபகம் இருக்கா.. சொல்லுடா மச்சி என்றான் கிஷோர். அந்த ஒரு வார்த்தைக்குள் ஓராயிரம் உறவுகளும் நெருக்கமும் தெரிந்தது. இன்னைக்கு பசங்களோட படத்துக்கு போறேன் நீயும் வாடா என அதட்டலாக அழைத்தான் குமரன். அவர்கள் இருவரின் வாழ்க்கை சக்கரமும் அன்று மாறப்போகிறது என்பது மூன்று மணி நேர படம் முடிந்ததும் தெரிந்தது.


படத்தின் விமர்சனத்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த நிருபர்களிடம், படம் மொக்கயா இருக்குங்க வேஸ்ட் என கொந்தளித்தான் குமரன். அதை கேட்ட கிஷோர் அமைதியாக இருந்தான். ஏன் படம் பிடிக்கலனு சொல்லு என குமரனிடம் கேட்டான்., அதற்க்கு அவன் அளித்த பதில்கள் திருப்பிப்படுத்தும் விதமாக கிஷோருக்கு அமையவில்லை.


பிறகு மெல்ல கிஷோர் பேச ஆரம்பித்தான். தான் BBA பட்டதாரி என்பதையும் தற்போது சினிமா துறையில் உதவி இயக்குனராக பணி புரிவதையும் கூறினான். கலைத்துறையில் மிகப்பெரிய முயற்சிக்கு பிறகு சேர்ந்துள்ளான் என்பது அவன் பேச்சில் தெரிந்தது. தமிழ் திரையுலகில் பல மாறுதல்கள் நிகழ்த்த பிறந்துள்ளான் என்பதை போல குமரனுக்கு தோன்றிற்று. 


பின், மாலை பொழுதை ஒரு உணவகத்தில் கழித்துவிட்டு இருவரும் விடை பெற்றனர்..


அதன் பிறகு அவர்களின் உரையாடல் முழுவதும் சினிமா பற்றியே இருந்தது. ப்ல உலக திரைப்படத்தை பற்றி அடிக்கடி விமர்சிப்பான் கிஷோர். தனக்கான ஒரு நல்ல நண்பனாய் குமரனை கருதினான். யாரிடமும் அதிகம் பழக்காத கிஷோரின் ஒரே நண்பன் குமரன் எனலாம்.


இரு வாரங்களுக்கு பிறகு.......


கிஷோரிடம் இருந்து குமரனுக்கு போன் அழைப்பு வருகிறது. மாப்ள ஒரு சின்ன உதவி, நீ இப்ப வடபழனி வரமுடியுமா?... சரிடா ஒரு மணி நேரத்துல வரேன் அங்கயே இரு என குமரன் சொன்னான். காலைல ஒரு தயாரிப்பாளர பாத்து கதை சொன்னேன் ரொம்ப புடிச்சு இருக்குனு சொன்னாருடா, எனக்கு சந்தோஷத்துல என்ன பண்றதுனு தெரில கைகால் ஓடல. உன்கிட்ட தான் முதல சொல்லனும்னு தோனுச்சு அதான் உனக்கு போன் பண்ணேன். கிஷோரின் பேச்சில் இருந்த மகிழ்ச்சிக்கு அடிமையாய் குமரன் இருந்தான், அவன் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது..


அங்கு இருந்து இருவரும் புறப்பட்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். மாலை 5மணி இருக்கும் அப்போது அதே தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. கிஷோரும் குமரனும் அவரை சந்திக்க சென்றனர். மரியாதை நிமத்தமாக குமரன் வெளியே காத்திருக்க அவன் மட்டும் உள்ளே சென்றான். அந்த அலுவலக அறையின் உள்ளே நடக்கும் விஷயங்களை கவனித்து கொண்டு இருந்தான் குமரன்.


அரைமணி நேர உரையாடலுக்கு பிறகு வெளியே வந்தான் கிஷோர். அவன் கண்கள் என்ன சொல்லும் அவன் வாய் என்ன பேசும் என்பதில் கவனம் செலுத்தினான் குமரன். படத்துக்கு ஒகே சொல்லிடாரு, அட்வான்ஸா 10லட்சம் செக் திங்கள்கிழமை தரனு சொல்லிட்டாரு என்றான் கிஷோர். அதை ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ர என கேட்டான் குமரன். 


படத்துக்கு ஹீரோவா யார போடலாம்னு அவரோட அபிப்ரயத்த கேட்டேன், அங்க வெளிய நிக்கரான்ல அந்த பையன்'அ ஹீரோவ போடுனு சொல்லிட்டு அவர் எழுந்து போய்டாரு என மெதுவாக கிஷோர் தன்னுடைய சந்தோஷத்தை ஆரவரமாக வெளிப்படுத்தினான். குமரனுக்கும் இதில் சம்மதமே என்பது அவனுடய சிரிப்பில் தெரிந்தது.


எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருந்த அந்த இருவரின் வாழ்க்கையிலும் தீப ஒளி அன்று படர்ந்தது. தோல்வி மட்டுமே வாழ்வாய் இருந்த அவர்கள் அன்று முதல் வெற்றியின் முதுகில் பயணம் செய்தனர்.
சதீஷ்......


Tuesday, 8 November 2011

வந்தனம் - வந்துடோம்ல

வலைப்பூ நண்பர்களுக்கும் ஆசான்களுக்கும் வணக்கம். ஒரு மிகப் பெரிய நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு வந்துள்ளேன். பெரிய இடைவெளினா ரொம்ப இல்ல ஒரு மாசம் தான். ஆனா அது எனக்கு மிக பெரிய ஒன்னா இருந்துச்சு.


கல்லூரியில 5வது செமஸ்டர் நடந்துச்சு, அதுக்கு தயார் ஆகறதுக்கும் படிக்கறதுக்குமே நேரம் சரியா இருந்த காரணத்தால தான் இந்த பக்கமே வர முடியல.. எப்படியோ ஒரு வழியா வெற்றிகரமா முடிச்சிடேன்.


இந்த ஒரு மாசத்துல ஏகப்பட்ட பண்டிகைகள் வந்துட்டு போய்டிச்சு, தீபாவளி ஆயுத பூஜை விஜயதசமி பக்ரீத்.. எதுக்குமே என்னால பதிவு போட முடியாம போய்டிச்சு. அதுக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. இருந்தாலும் பரவல.


தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மூணு படமும் பாத்துடேன். வேலாயுதம், 7ம் அறிவு, ரா1 எல்லாமே நல்லா இருக்கு. அதுலயும் வேலாயுதம் படம் பாக்க நாங்க சுத்தி சுத்தி வந்தது பெரிய கதை..


உருப்படியா ஒரு பதிவு கை வசம் இருக்கு, அத தான் போட போறேன்... அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது


சதீஷ்.....