என் தோழர்கள்

Sunday, 28 August 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 28/08/2011

ஃபேஸ்புக் கலட்டா:
காலை எழுந்தவுடனே பல்ல கூட தேய்க்காம ஃபேஸ்புக்ல ஸ்டேட்ஸ் போடரத வழக்கமா வச்சி இருக்க என்ன மாறி சோம்பேறி கூட தான் இன்னைக்கு சண்டை.. மங்காத்த படம் வேலாயுதம் படம் ரெண்டுத்துக்கும் நடந்த சண்டை தான்.. இது அஜித்துக்கும் விஜய்க்கும் தெரியுமானு கூட யோசிக்கல.. வேலாயுதம் டிரெய்லர் ரிலீஸ் ஆயிடுச்சு அதானலாயே மங்காத்தா படம் ஓடாதுனு நண்பர் சொன்னதுதான் அதுக்குள்ள எதன பேரு சண்டைக்கு வந்துடானுங்க... எங்க தல பெருச உங்க தளபதி பெருசனு அவங்க அப்பா வரைக்கும் போயாச்சு... இதுல ஹைலேட் என்னனா எங்க தளபதி விஜய் டெல்லி போய் அன்னா'வை சந்தித்ததுக்கு அப்புறம் தான் பார்லிமெண்ட் கூட லோக்பாலை ஏத்துக்கிச்சுனு சொன்னது... அப்படியே என் ஈரக்கொலயே அடிப்போச்சு..... 
              -------------------------------------------------------------------------------


திருவான்மியூர் பயணம்:
நண்பன் பாண்டிச்சேரி சொல்வதால் அவனை வழி அனுப்ப சென்றேன்.. இரண்டு பேர் மட்டுமே என்பதால் டூவிலரில் பயணித்தோம்... எஸ் ஆர் பி டூல்ஸ் தாண்டியதும் நாங்கள் பலவற்றை ரசிக்க ஆரம்பித்தோம்.. அதங்க நம்ம ஐடி கேர்ள்ஸ், என் வீடு தாம்பரம் பக்கத்துல அதனால அங்கே பயணிப்பது அபூர்வம் தான்... என்ன அழகு, என்ன கலரு, என்ன ஃபிகரு...மாடர்ன் கல்சர், வேஸ்டர்ன் டிரஸ்.... அ அ அ அ வ் வ் வ் வ் வ்............
நண்பனை வழி அனுப்ப நான் உடன் சென்று இருந்தேன்.. ஆனால் பல பெண்கள் தனியாக பேருந்தில் பயணித்தது ஆச்சரியமாக இருந்தது... நான் தான் இன்னும் 1800லயே இருக்கேன் ஆனா மத்தவங்களாம் முன்னேறிடாங்க... இது 2011 சார்...
       -------------------------------------------------------------------------------

அழைப்பு:
சென்ற பதிவில் தெரிவித்தை போன்றே எனக்கான அங்கிகாரம் இந்த பதிவுலகில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது... தமிழ் மணம் என் பிளாக்கை ஏற்றுக்கொண்டது, எனக்கான ரேங்க் 1582ல் தற்போது உள்ளது... நான் பதிவு செய்யும் போது 1600 என்று இருந்தது...
வருகிற செப்டம்பர் 4 ஙாயிறு அன்று சென்னையில் சென்னை யூத் பதிவர் சங்கம் கூட்டம் நடைப்பெறுகிறது என எனக்கு அழைப்பு வந்து இருந்தது.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. இது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்... அங்கு சென்றால் பல நண்பர்கள் வட்டம் அமையும் என நினைக்கிறேன் பல பெரிய பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்... நிச்சயம் கலந்து கொள்ள முனைக்கிறேன்...
உங்களை இந்த அடியேன் அழைக்கிறேன், கூட்டத்தில் கலந்துக்கொள்ள... மேலும் விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்
         -------------------------------------------------------------------------------------
 
திருவிழா:
ஆடி 7ம் வார திருவிழா எங்க ஏரியால இப்ப நடக்குது..கோவில் பெரு முத்துமாரியம்மன் ஆலயம் (டேய் கன்னத்துல போடுடா).... தீமிதி திருவிழா வான வேடிக்கை தெரு கூத்துனு ஒரே அமக்களம்... ஊரே கூடி நிக்குது அந்த திருவிழா பாக்க.... சின்ன வயசுல முத ஆளா போய் நிப்பேன்... இப்ப வயசுக்கு வந்ததுனால பெரிய பையன் ஆனதால போக பிடிக்கல.... எப்படியும் தெரு கூத்து பாக்க போகனும்.... 
           -----------------------------------------------------------------------------------


மிண்டும் சந்திப்போம்.......


சதீஷ்...............


2 comments:

! சிவகுமார் ! said...

//அங்கு சென்றால் பல நண்பர்கள் வட்டம் அமையும் என நினைக்கிறேன் பல பெரிய பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்//

சதீஷ்..பெரியவர்கள் யாரும் அங்கு வரமாட்டார்கள். எல்லாருமே கொஞ்சம் ஹைட் கம்மி!!

சதீஷ் மாஸ் said...

ஹி ஹி ஹி.... பரவல விடுங்க ஸ்டூல் போட்டுகலாம்...