என் தோழர்கள்

Monday, 22 August 2011

இழந்த நட்பின் வரலாறு - 1

நட்பே உருவாய் வந்து
    தன் நினைவுப்பரிசை தந்தது
ஏனோ, தம் கடமையை முடித்ததோ
    இல்லை கடனை ஒப்படைத்ததோ....
ஆனால், அந்த அழகியிடம் தான்
     நான் நட்பை கற்க வேண்டும்
எத்தனை பெருந்தன்மை அவளுக்கு....
    சின்னஞ்சிறு குழந்தை பொம்மை
அதிலும் பெண் பொம்மை
     அவளின் நினைவாக இருப்பதற்கோ.....
நட்பை நிலைநாட்டிய பெருமை
     அவள் என்னை வாழ்த்தியதில்
இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி
     உறைய வைத்து விட்டது....
காலத்தால் அழியாத நட்பு
    என கூற இடமில்லை-ஆனால்
நினைவால் அழியாத நட்பு
    என கூற இடமுண்டு.....
அழகாய் இடம் பிடித்தது
    அந்த பொம்மை-எங்கள்
வீட்டிலும் என்னிடத்திலும்.....


காற்றோடு கலந்து சென்று விடும்
நினைவு அல்ல இது - காலத்திற்க்கும்
பேசபட வேண்டும் என்று பதிவு செய்யப்படுகிறது.


அழகாய் இருக்கிறது - நன்றி
    என ஒரே வார்த்தையில் முடித்து 
விட்டு இப்போ ஒருபக்க எழுத்துகளா,
    ஏனோ தெரியவில்லை
பேசவும் சொல்லவும் விருப்பமில்லை
    நான் இழந்த இரண்டாவது
நட்பு ஆயிற்றே இது.......






என்றும் இழந்த நட்பின் நினைவுடன்,
சதீஷ் குமார்...............................






இந்த பதிவு பற்றி::
என் வகுப்பு தோழி ஷ்யாம்லி தந்த பிறந்த நாள் பரிசுக்கு நான் எழுதி தந்த பதில்......


No comments: