என் தோழர்கள்

Showing posts with label ஆரம்பம். Show all posts
Showing posts with label ஆரம்பம். Show all posts

Friday, 26 August 2011

வறுவல் மற்றும் நொறுவல் - ஆரம்ப பூஜை

ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதராங்க... நானும் ரெண்டு மணி நேரமா யோசிக்கரேன்.. கருமம் ஒரு கன்ராவியும் வரல... கடைசில வறுவல் நொறுவல் எங்க அம்மா சொன்னத வச்சி எழுதரேன்.. அம்மா சென்டிமெண்ட் ஆச்சே ஒர்க் ஆவுட் ஆகும்ல.....நம்பிக்கை இருக்கு.. எனக்கு வெள்ளிக்கிழமை மேல ஒரு ஈர்ப்பு, அன்னைக்கு நா என்ன செய்தாலும் நல்லா தன் இருக்கும்.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை தான்... நா பிறந்தது கூட வெள்ளிக்கிழமைல தான்.. அதனால இனிமே நா ஊர சுத்தனது பொறுக்கியது வறுத்தது எல்லாமே இங்க குவிக்கப்படும்.. இலவச இணைப்பு எதும் இல்லைங்கோ.. எனக்கு ஒரு சின்ன வருத்தம் நா இது வரக்கும் எந்த பதிவிலும் போட்டோ நடுநடுவுல போட்டது இல்லை... இனிமே அமக்கள படுத்தனும்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்கோ..... என் வறுவல் நொறுவல் இன்று முதல் ஆரம்பம், விரைவில் உங்கள் அபிமான திரையில்... அட விண்டோ ஸ்கிரின தான் அப்படி சொன்னேன்.... 




நீங்க உங்க விருப்பத்தை சொல்லவும்... படிச்ச மட்டும் போதது பதில் சொல்லனும்... 










சதீஷ்...........