என் தோழர்கள்

Saturday, 12 May 2012

கயவன் படக்குழு தளத்தில் நான் மற்றும் சினிமா தகவல்

             ஆ'னு வாய பொழந்துகிட்டு சினிமா படம் எடுக்கறத வேடிக்கை பாக்கறவங்க இன்னும் நம்ம ஊருல இருக்க தான் செய்யறாங்க... நா மட்டும் என்ன விதி விளக்கா..? எங்க அப்பா கூட சேர்ந்து அடிக்கடி சூட்டிங் பாக்க கிளம்பிடுவேன்.. அது பெரும்பாலும் மே மாதத்தில் நான் நடக்கும்.. இது வரைக்கும் பல வெளியூர் பயணங்களுக்கு அப்பா கூட போய் இருக்கேன். அதுல மறக்க முடியாத வெளியூர் பயணம் அப்படினா அது ஒரிசா போனது தான்... 24மணிநேரம் பயணம் அது, செம ஜாலியான டிரிப்...
(படங்களின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)

இப்ப இந்த மேட்டருக்கு வருவோம்... கடந்த வெள்ளி கிழமை மாலை வீட்டுல வெட்டியா இருந்த அப்போ தான் அப்பா வந்து என்னை நைட் சூட்டிங் க்கு கூட்டிடு போனாறு...


தாம்பரத்துல இருந்து கொஞ்சம் தூரம் போன எல்லாருக்கும் தெரிந்த மணிமங்கலம் ஊர் வரும், அங்க இருந்து ரைட் எடுத்து ஜுட் விட்டு வண்டிய ஒட்டினா வஎது நிக்கும் படப்பை.. இப்ப கொஞ்ச நாளா, நல்ல ஃபேமஸ் ஆகுது அந்த ஏரியா... அங்க இருக்குற மார்க்கெட் ஏரியால இருந்து ரைட் கட் பண்ணி வண்டிய ஓட்டினா, நிறைய தோட்டம் துரவு வரும்... அத எல்லாம் வேடிக்கை பாத்துகிட்டே வண்டிய வேகமா விட்டுடாதீங்க....


ஃபர்ம் ஹவுஸ் அப்படினு சொல்ற பல பெரிய மனிதர்களின் தோட்டம் அங்கு தான் இருக்கு.. மாதா தோட்டம், ஓம் சக்தி தோட்டம், PLR தோட்டம் இந்த மாதிரி பல.....


அந்த ரோட்டுல தான் சசிகலா அவர்களின் ஒயின் ஃபேக்டரி குடியிருக்கு.. இப்ப அந்த ஏரியா பல பேருக்கு ஞாபகம் வரும்னு நினைக்கறேன்...


ஓகே, பிஎல்ஆர் தோட்டம் தான் நாங்க சூட்டிங் போன இடம்.. அந்த தோட்டத்தை பத்தி கொஞ்சம் விளக்கம் தரேன்.. அந்த தோட்டம் பல வருட காலமாக சினிமா சூட்டிங்காகவே பெயர் பெற்ற இடம். சிவாஜி அவர்களின் கடைசி காலத்துல இருந்து ரஜினி, கமல் ஆரம்பிச்சு ராம்கி வரைக்கும் பாத்த அந்த தோட்டம் இப்ப கொஞ்ச நாளா ஈஈஈ ஓட்டுது... சினிமா படம் எடுக்கவே ஏற்பாடு பண்ண மாதிரியே அங்க பல மூங்கில் குடில்கள் இருக்குது.. அதுல தான் பாட்டு சீன் எல்லாம் படம் எடுக்கறாங்க.. அந்த தோட்டம் மொத்தம் 5 ஏக்கர்.. இப்ப அதுல பல குட்டி குட்டி செடிலாம் வளக்கராங்க.. சென்னை முழுக்க இருக்குற பல சிறு குறு வியாபரிகளுக்கு செடிகள் மொத்த விற்பனை செய்யப்படுகிறது.. பல அதிசயக்க கூடிய செடிகள் மரங்கள் அங்கு இருந்துச்சு.. இலவங்க பட்டை மரம், கிராம்பு இன்னும் பல... எல்லாத்தையும் பாக்கறதே ஒரு அழகு தான்... எனக்கு ஏதோ காட்டுக்குள்ள போன மாதிரி இருந்துச்சு... அப்ப மணி கிட்டத்தட்ட இரவு 10 தாண்டி இருக்கும்..
அப்பா (கேமிராவுடன்)
வழக்கம் போல தொழிலாளிகள் சீக்கரம் வர, நம்ம டைரக்டர்ஸ், கேமரா மேன் மற்றும் உதவியாளர்கள் கொஞ்சம் லேட்டா தான் வந்தாங்க.... வந்ததும் வராததுமா எல்லாருக்கும் ஒரு போண்டா கொடுத்தாங்க... பிகாஸ், அது தான் ஈவ்னிங் டிபன்.. என்ன கொடுமை சார் இது-1.... போண்டாவ புட்டு வாயில போட்டு தின்னுட்டு, நாங்க போட்டு இருந்த பேண்ட்டுல அந்த எண்ணெய் கைய துடச்சாச்சு... அப்புறம், லைட் மெம்பர்ஸ் வேகமா லைட் எல்லாம் எடுத்து வச்சி செட் பண்ணிட்டு இருந்தாங்க....


இப்ப அடுத்து ஒரு மணிநேரம் பரபரப்பா அங்க வேலை போய்கிட்டு இருந்துச்சு.. அன்னைக்கு டான்ஸ் சூட்டிங் நடந்துகிட்டு இருந்துச்சு.. டான்ஸ் மாஸ்டர் அவங்களோட ரிகல்ஸல் நடந்துச்சு.. கேமரா மேன் லொகஷன் பாத்துக்கிட்டு இருந்தாங்க... நா அப்படியே எல்லாத்தையும் பராக் பாத்துக்கிட்டு சுத்திகிட்டு இருந்தேன்.... ம்ம்ம் அந்த படத்தோட ஹீரோயின் பாக்க ஒரு மாதிரி நல்லா தாங்க இருந்தாங்கோ... அதுவும் சாங் சூட்டிங் வேறவா, டிரஸ் பத்தி சொல்லவ வேணும்.. அந்த ஹீரோயின் கூட பாதுகாப்புக்கு அவங்க அப்பா, தம்பி கூடவே இருந்தாங்க... என்ன கொடுமை சார் இது-2...


படம் பேர் கயவன்.. தயாரிப்பு மற்றும் ஹீரோ ஒரே ஆள் தான்.. அவர் பேர் தெரியாது.. டைரக்டர் பேர் தெரியாது, கேமராமேன் பேர் தெரியாது.. அப்ப என்னத்துக்கு படம் பேர் மட்டும் தெரிஞ்சிகிட்ட அப்படினு நீங்க கேக்கறது புரியுது சார்... நைட் சூட்டிங் முடிய இரவு 2 மணி ஆயிடும், அப்ப நாமா பைக்'ல போகும் போது போலீஸ் அங்கிள் கிட்ட மாட்டினா அவங்க கேக்கற முதல் கேள்வி "படம் பேர் என்ன?".... பிம்பிலிக்கி பிலாப்பி.....


கேமரா & நாகரா:
 இப்ப நிறைய படத்துக்கு பிலிம் ரோல் கேமிரா யூஸ் பண்றது இல்ல அதுவும் முக்கியமா குறைஞ்ச பட்ஜெட் படங்களில்... இப்ப நிறைய டிஜிட்டல் கேமிரா வந்துடிச்சு... இந்த படத்துலயும் டிஜிட்டல் கேமிரா தான் யூஸ் பண்ணாங்க... ரெண்டு அஸிஸ்டன்ட் கேமிரா ஆப்ரேட்டர் தான் கேமிரா கொண்டு வந்தாங்க... ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, ஒரு படத்துல ரெண்டு கேமிரா அஸிஸ்டன்ட் கேமிராமேன் இருப்பாங்க..அவங்க அந்த கேமிரா யூஸ் பண்ணி படம் எடுக்கறவங்க மட்டும் தான்.. அதாவது உதவி இயக்குனர்கள் மாதிரி தான் அவங்களும்.. ஆனா, அந்த கேமிராக்குனு ரெண்டு அஸிஸ்டண்ட் இருப்பாங்க... அவங்க தான் அந்த கேமிராக்கு முழு பொருப்பு, பாதுகாப்பு எல்லாமே... இதுவே எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரியுமே...அப்புறம் நாகரா... இது நம்ம வீட்டுல இருக்குற டேப்ரெக்கடர் மாதிரி தான் ஆனா கொஞ்சம் சைஸ் பெரிசு... இதுல தான் பாட்டுக்கான டேப் போட்டு டான்ஸ் சூட்டிங் நடத்துவாங்க.... அத சில படங்களில் நாம கவனிச்சா தெரியும்.. அப்புறம் சூட்டிங் நரக்கும் போது பேசற வசனம் கூட இதுல பதிவு பண்ணுவாங்க....


ஒரு வழியா அன்னைக்கு 2 மணி வரைக்கும் சூட்டிங் நடந்து முடிஞ்சிது.. அதுக்கு மேல நேரம் ஆச்சுனா ரெண்டாவது பேட்டா தர வேண்டியது இருக்கும்.. அதுலாம் வேற கதை... எல்லா பொருளையும் வண்டில ஏத்திகிட்டு கிளம்பி ஆச்சு....


----------------------------------------------------------------------------------------------------------------------------------


லோ பட்ஜெட் படத்துல என்ன ஒரு பிரச்சனை'னா சரியான சாப்பாடு கிடைக்காது.. அன்னைக்கு சூட்டிங் நடந்த அப்போ குடிக்க தண்ணி இல்லை.. 2மணி நேரத்துக்கு மேல தான் வாட்டர் பாக்கெட் மூட்டை வாங்கிட்டு வந்தாங்க... அந்த வெறும் போண்டா சாப்புட்டு முடிச்சுட்டு தண்ணி இல்லமா தவிச்ச தவிப்பு இருக்கே அடடா.... என்ன கொடுமை சார் இது-3....


நைட் சாப்பாடு வெளில இருந்து வர வச்சாங்க.. எல்லாருக்கும் சிக்கன் பிரைட் ரைஸ்.... கொஞ்சம் செலவு ஆயிருக்கும் நிணைக்கறேன்....


எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் இல்லைனாலும் கரெக்ட் ஆ படம் சூட்டிங் மட்டும் போயிட்டே இருக்கும் அதான் ஸ்பெஷலே....


----------------------------------------------------------------------------------------------------------------------------------


கீழ இருக்குற படம் எல்லாம் எங்க அப்பா வேலாயுதம் படத்துல வேலை செய்த காட்சிகள்.. பக்கத்துல இருக்கறது இரயில்... அதுல கேமிராவை பொருத்திட்டு அழகா போஸ் கொடுக்கறாறு பாருங்க... அந்த மெசின் பேரு "வேக்கம் பேஸ்".....

தண்டவாளத்துக்கு கீழ கேமிரா பொருத்துகிறார்..
ரயிலின் பக்கவாட்டில் கேமிரா பொருத்துதல்----------------------------------------------------------------------------------------------------------------------------------
 கோவால நடந்த ஒரு சூட்டிங்கல ஹெலிகாப்டர்ல கேமிரா வச்ச போட்டோஸ் காணல, இல்லனா அதயும் போட்டு இருப்பேன்...எல்லா விதமான கேமிராவிலும் இதை பொருத்தாலம்.. கோலிவுட்டில் இதற்கான ஆட்கள் குறைவு தான்... APACHE bike சைலன்சர்ல குட்டி கேமிரா வச்சி எடுத்த காட்சிகள் பல நாள் சின்னதிரையில ஒளிப்பரப்பாச்சு.... 


படம் எடுக்க ஒரு யூனிட் வேணும்னு சொல்லுவாங்க.. சினிமாதுறையில இருக்கறவங்களுக்கு இது புரியும்... அதற்கான மொத்த பொருளும் அப்பாவிடம் இருக்கிறது.. இப்ப பல படங்கள் நல்லபடியா போய்கிட்டு இருக்கு.. அந்த யூனியன் மெம்பர் என்பது கூடுதல் தகவல்... ஆகையால் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்... எனக்கு மெயில் அனுப்பினால் போதும், பிற தகவல் நான் சொல்கிறேன்.. அப்பாவின் தொலைபேசி எண் அப்போது தரப்படும்....
----------------------------------------------------------------------------------------------------------------------------------


என்றும் அப்பாவின் புகழில்
சதீஷ் மாஸ்..........


7 comments:

sunfun said...

nice post nanpa
come to my blog www.suncnn.blogspot.com

சதீஷ் மாஸ் said...

varen...

அன்பை தேடி,,அன்பு said...

என்னையும் ரசிக்க வைத்த பயணம். நண்பரே நீங்கள் இன்னும் சொந்த டொமைன் வாங்காததால் நீங்கள் உங்கள் தல முகவரிக்கு முன்னால் www சேர்க்கவேண்டாம்.அப்படி சேர்த்தால் கூகிள் உங்கள் தளத்தினை redirect செய்யாது http://sathishmass.blogspot.com/2012/05/blog-post.html

சதீஷ் மாஸ் said...

அன்பை தேடி,,அன்பு அவர்களுக்கு நன்றி... இது ஒரு நல்ல தகவல்.... இனிமேல் இதை முயற்சிக்கிறேன்....

Kovam Nallathu said...

way of writing is very good

Tally in Tamil said...

சதீஸ்

அருமையாக எழுதுகிறீர்கள்

வாழ்த்துக்கள்

"அப்புறம் சூட்டிங் நரக்கும் போது"

பிழையில்லாமல் எழுதினால் இன்னும்

சிறப்பாக இருக்கும்.

சங்கர்

சதீஷ் மாஸ் said...

நன்றி Tally in Tamil..

பிழையில்லாமல் எழுதுகிறேன் இனிமேல்....