என் தோழர்கள்

Tuesday, 24 April 2012

சாமி எங்கடா...?

கடவுள் இருக்காறா இல்லயா? இதுக்கு பதில் இன்னைக்கு வரைக்கும் யாருக்குமே தெரியல. ஆனா, நம்மல வழி நடத்துற சக்தி ஒன்னு இருக்குனு மட்டும் எல்லாருக்குமே தெரியும். ஆன்மிகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். ஆன்மிகவாதி கடவுளை நம்பறான், நாத்திகவாதி தன்னை நம்பறான்.


கடவுள் இருக்கார்னு சொல்றான் பாரு அவனை நம்பலாம். கடவுள் இல்லைனு சொல்றான் பாரு அவனை கூட நம்பலாம். ஆனா நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது. கமல்ஹாசன் சார் சொன்னது.


எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது தான், ஆனா கடவுள் இல்லவே இல்லனு சொல்லவேமாட்டேன். ஒரு சக்தி தான் நம்மளை இந்த உலகத்துல செயல்பட வைக்குது. அந்த சக்தி எந்த ரூபத்துல வேணாலும் இருக்கலாம்ல. அத ஏன் பிரிக்கனும், ஆனா அந்த சக்தி மதத்தாலயும் மொழியாலயும் இனத்தாலயும் பலவாறு பிரிஞ்சி இருக்கு...


எனக்கு ஆன்மிகத்த பத்தியும் அதிகமா தெரியாது, நாத்திகத்த பத்தியும் அதிகமா தெரியாது. ஆனா, அந்த ரெண்டுத்த பத்தியும் பேசறவங்களோட பேச்ச கேக்க ரொம்ப பிடிக்கும். ஒரு இந்து உண்மையான ஒரு இந்துவா இருப்பான், ஒரு கிறிஸ்த்துவன் உண்மையான ஒரு கிறிஸ்த்துவனா இருப்பான், ஒரு இஸ்லாமியன் உண்மையான் ஒரு இஸ்லாமியனா இருப்பான். அதுபோல தான் - நாத்திகம் பேசறவங்களும், தங்களுடய கருத்துல மிகச் சரியா இருப்பாங்க.


ஒவ்வோரு மதத்துக்கும் சில கொள்கைகள் இருக்கு. நான் பிறப்பால் ஒரு இந்து அதனால எனக்கு இந்து மத கொள்கைகள், செயல்கள் பத்தி கொஞ்சம் தெரியும். அதுப்போல நா வளர்ந்த சூழ்நிலைகள் கிறிஸ்த்துவ மதம் சார்ந்த இடம், ஆகையால் எனக்கு அந்த மதம் பற்றியும் கொஞ்சம் விவரங்கள் தெரியும்.


ஆனால், இதுவரை எனக்கு பரிச்சியம் இல்லாத மதமான இஸ்லாமியத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அந்த சந்தர்ப்பம் ஒருநாள் கிட்டியது. அதுவரை எனக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு அந்த இஸ்லாமியர் பதில் அளித்தார். அவரின் பதில்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பல புதிய அருமையான ஆச்சரியமான விஷயங்களை அவர் சொன்னார். அனைத்தும் எனக்கு புதியதாய் இருந்தன...


இந்து, கிறிஸ்த்துவம், முஸ்லீம் என மதங்கள் பல உள்ள நம் நாட்டில் தான் எத்துனை அழகான மனங்கள். நான் இந்தியாவில பிறந்ததுக்கே முதலில் பெருமைப்படுகிறேன். 


நான் ஒரு ஆன்மிகவாதி என்றும், கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும் என்னால் முழுமையாக கூறிவிட முடியாது. அதுப்போல நான் நாத்திகவாதியும் அல்ல. வாரந்தோறும் வியாழன் அன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். அங்கு செல்வதால் எதோ ஒரு மன நிம்மதி கிடைக்கிறது. எல்லா செயல்களும் நல்ல விதமாகவே செயல்படிக்கிறது என்று ஒரு சிறுஆறுதல்.


சாய்பாபா அவர்கள் ஒரு இறைதூதர் என்று சொல்லாலம், அவர் வகுத்த சில வழிகள் என்னை போன்று சிலரை நம்ப வைக்கிறது. ஆனால், பிற மதத்தினர் இவரை ஏற்பதில்லை. காரணம், அது அது அவர்களின் கொள்கை.


மனநிம்மதி தேடி அலையும் பல மனிதர்களை நாம் இப்போது காண முடிகிறது. பல ஆசிரமங்களில் தஞ்சம் புகும் மனிதர்களையும் காண முடிகிறது. இறைவனை தேடி மக்கள் ஒருகாலத்தில் அலைந்தார்கள், ஆனால் இப்போது நிலைமை வேறு. இறைவனை தேடி அலையும் மக்களை விட அமைதியை தேடி அலையும் மக்கள் தான் அதிகமே.


Now a days, God is passion.. இந்த வரிக்கு எனக்கு சரியா அர்த்தம் தெரியாது, ஆனா தெரியும். அறைஎண் 305ல் கடவுள் அப்படிங்கற ஒரு தமிழ் படத்துல, ஒரு சீன் வரும். GOD IS NO WHERE அப்படிங்கற ஒரு போர்டுல ஒரு சின்ன திருத்தம் பண்ணி, GOD IS NOW HERE அப்படினு மாத்துவார். கடவுள் இருக்குனு நம்பறவனுக்கு கண்டிப்பா இருக்காருனு இதுக்கு நாம் அர்த்தம் சொல்லலாம்.


கல்லையும் கல்லையும் உரசினா நெருப்பு வரும்னு மனுஷன் கண்டுபிடிச்சு இருக்கலம், ஆனா கல்லயும் கல்லயும் உரசினா நெருப்புதான் வரனும்னு மனுஷன் கண்டுபிடிக்கலயே..


சாமி எங்கனு நாம் தேடி அலைவதை விட அந்த சாமியை நம்மின் மனகோவிலுக்கு கொண்டுவருவோம். இன்று வரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள இறைவனை தேடி நம் பயணம் தொடரட்டும்.
சதீஷ்..........


Monday, 23 April 2012

வறுவல் மற்றும் நொறுவல் - 24/04/2012

என் தம்பி இந்த பன்னிரென்டாவது தேர்வு எழுதி இருக்கான். அவனை காலேஜ் சேக்கற விஷயமா நா அலஞ்சிகிட்டு இருக்கேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை நந்தப்பாக்கத்துல நடந்த கல்வி திருவிழாக்கு நானும் அம்மாவும் போய் இருந்தோம். அப்பதான் விநாயகா மிஷன் யுனிவர்சிட்டி பத்தி அங்க கேள்விப்பட்டோம். Biotechnology துறையை பத்தி விசாரிச்சோம். அந்த துறை எல்லா காலேஜ்லயும் இல்லை என்பது ஒரு வருத்தமே. அதன் பிறகு ஓர் நாள், அந்த கேம்பஸ் பத்தி விசாரிக்கபோணோம். அங்க எனக்கு ஏற்ப்பட்ட சில அனுபவம் இதோ. அம்மாக்கூட போனதுனாலயோ என்னவோ, ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல மாரியாதையோடு எல்லாருமே பேசினார்கள். அங்க வேலை செய்யும் பியுன் அவர்கள், எங்களை இருக்கையில் அமர செய்துவிட்டு காபி குடிக்கிறீங்களா, இல்லை கூல்டிரீங்க்ஸ் குடிக்கரீங்களா என கேட்டு என் புருவத்தை உயர செய்தார். அதே உபசரிப்பு அங்கு 15வருடமாக வேலை செய்யும் ஆயா ஒருவரிடம் இருந்தும் வந்தது. உள்ளே அட்மிஷன் போடற இடத்துல, நாங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்தார். மற்ற காலேஜ் விட இங்கு ஃபீஸ் கொஞ்சம் குறைவு தான். அங்கு இருந்த அட்மிஷன் ஆபிஸ்ர் அவர்கள், எங்களுக்கு காலேஜ் கேண்டீனில் உணவு ஏற்பாடு செய்தார்கள். சாப்பிட்ட கையோடுஓரு அப்பிளிகேசன் வாங்கி கொண்டு வந்தோம். மேலும், அங்கு பணிபுரியும் துறை தலைவருடன் என்னை பேச வைத்ததும், லேப் மற்றும் கேம்பஸை கூடவே ஒரு ஆள் வந்து சுற்றிகாட்டியதும் சொல்லியே ஆகவேண்டும். இந்த செயல் முறை அங்கு வரும் அனைத்து பெற்றோருக்கும் பொருந்தும். பணத்தை மட்டும் குறி வைக்கும் பல கல்லூரி மத்தியில் மனித உணர்வுக்கு பதில் அளிக்கும் இந்த பல்கலைகழகம் என்னால் மறக்கவே முடியாது.. மேலும் அக்கல்லூரி விவரம் அறிய http://www.vinayakamission.com/ 
-------------------------------------------------------------------------------------------------------
எல்லாத்தையும் வித்தியாசமா பாக்கற மனிதர்கள் இருக்காங்க. எதுக்குமே உதவாம இருக்கற குப்பைகூட சில சமயம் உதவும். இப்ப விடுமுறை மாதம் அப்படிங்கறதால நிறைய நேரம் இன்டர்நெட்ல கழிக்க முடியுது.. ஃபேஸ்புக் பரண், இந்த பேஜ் பத்தி எல்லாருக்குமே தெரியும். இதுல நா பாத்த ஒரு சின்ன பதிவு இங்கே.. முடிந்தால் படித்தும் பார்க்கலாம்.. ஃபேஸ்புக் பரண்
---------------------------------------------------------------------------------------------------
ஆளாளுக்கு தத்துவம் சொல்றாங்க நானும் ஒரு தத்துவம் சொல்லட்டுமா...
   *அடுத்தவனின் வளர்ச்சியை மட்டும் பாக்காதே, அதன் பின்னால் உள்ள அவன் உழைப்பையும் பார்*


எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சார். பிரபல பதிவர் ஆகனும்னு அடுத்தவங்கள பாத்து ஆசைப்பட்ட போதாது, அதுக்கு கொஞ்சமாச்சும் உழைக்கனும்.. என்னைக்குமே நம்பிக்கையையும் தன்னம்பிக்கையும் விடவேமாட்டான் இந்த சதீஷ்...
-------------------------------------------------------------------------------------------------------
போனபதிவுல எனக்கு வேலை கிடச்சதுக்கு ஒரு காரணமா, இந்த பிளாக் பத்தி சொல்லி இருந்தேன். இந்த பிளாக் மூலமா எனக்கு வேளை மட்டும் கிடைக்கல, இன்னும் ஒரு நன்மையும் நடந்துச்சு... எனக்கு தெரிஞ்சவரோட நண்பருக்கு பிளாக் எழுதறது எப்படினு சொல்லி தர சொன்னரு. நானும் ஆவலோட போய் சொல்லி கொடுத்தேன். அவர் ஆர்வத்தோடையும் விருவிருப்போடயும் நல்லா கத்துகிட்டாரு. மூனு மணிநேரம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவரிடம் இருந்து விடைபெற்றேன். என் போக்குவரத்து செலவுக்காக எனக்கு பணம் அளித்தார், நான் எவ்வளளோ சொல்லியும் கேட்காமல், அதை என் சட்டைபாக்கெட்டில் வைத்து அனுப்பினார். அங்கு இருந்து கிளம்பியதுக்கு பிறகு என் சட்டையை பார்த்தால், ஒரு 500ரூபாய் நோட்டு என்னைபார்த்து பல் இழித்தது. உடனே அவருக்கு போன் செய்து ஏன் இவ்வளவு பணம் கொடுத்தீர் என்று கேட்டேன். அவர் அமைதியாக சொன்னார் இது குருதட்சணை என்று. எனக்கு அந்த நோட்டை மாற்ற மனமில்லாமல் அது என்னிடமே இருக்கிறது..
--------------------------------------------------------------------------------------------------------
காலேஜ் முடிஞ்சதால எங்க காலேஜ் பொண்ணுங்க வரிசையா படை எடுக்க ஆரம்பிச்சுடாங்க ஃபேஸ்புக்குக்கு. இது நல்ல விஷயம் தான். ஆனா, ஆர்வகோளாறுல எல்லாரும் அவங்க போட்டோஸ் போட்டு நல்லா போசு கொடுக்குதுங்க.. அந்த தளத்துல பொண்ணுங்க போட்டோ போட்டு படற அவஸ்த்த இருக்கே அதலாம் சொல்ல முடியாது. சொந்த போட்டோ போடவேணாம் னு நா எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு பர்சனல் மெசேஜ் அனுப்பி மொக்க வாங்கனது தான் மிச்சம்.
பட்டாத்தாம் தெரியும் இவங்களுக்கு. நா என்னனு சொல்றது. இங்க என்னை கவனிக்கவே ஆள் இல்லயாம் நா போய்ட்டேன் அவளுங்க பஞ்சாயத்துக்கு.
-----------------------------------------------------------------------------------------------------
இதுக்கு பேர் தான் பெல்லி டான்ஸ்
நாங்களும் ஆடுவோம்ல. வேணும் நா வந்து பாருங்க டாஸ்மாகல... எல்லாரும் ஃபுல் போதைல இப்படி தான்யா ஆடறாங்க. ஒரு வேளை, இந்த கலை நம்மஊர்ல இருந்து தான் போய் இருக்குமோ....
----------------------------------------------------------------------------------------------------------
எல்லாக்காலத்துக்கும் ஏற்ற ஒரு நகைச்சுவை நடிகர். ஆல் டைம் ஃபேவரேட் காமெடியன் அவர்களுடைய விடியோ கிளிப் இது. மறைந்த நடிகர் நாகேஷ் அவர்களும் சோ அவர்களும் இணைந்து கலக்கிய காமெடி...
 
------------------------------------------------------------------------------------------------------------
18+ போடற அளவுக்கு நா இன்னும் வளரலனு சொல்ல முடியாது. நானும் போடுவேன்...


அடுத்த பதிவுல போடறேன்....
--------------------------------------------------------------------------------------------------------
வறுவல் மற்றும் நொறுவல் அப்படிங்கற தலைப்பு இந்த தளத்துக்கு சூட் ஆகலை அப்படினு ஒரு நெருங்கிய நண்பர் சொன்னதால, அடுத்த வாரம் ஒரு புது பெயர் வைக்கப்பட உள்ளது. மேலும் பல புத்தம் புது பொலிவுடன் மீண்டும் வருகிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------


என்றும் அன்புடன்
சதீஷ்.........


கனவு காணுங்கள்

கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் அவர்கள் சொல்லி இருக்கிறார். என்னமோ தெரியல நா கண்ட கனவு மட்டும் இது வரை பலித்ததே இல்லை. ஆமாம், கனவு கண்ட மட்டும் போதுமா அதுக்குனு எதாச்சும் முயற்சி செய்யனும்ல.


2007ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிச்சு வெளில வந்த தருணம். ஏதோ மலையை கயிறுல கட்டி இழுத்த சந்தோஷம், அப்பபாடானு பெருமூச்சு விட்டு வீட்டுக்கு ஓடிவந்தேன். ஒரு ரெண்டு மூனு நாள் நல்ல ஜாலியா போச்சு, அதுக்கு அப்புறம் தான் ஒரு வெற்றிடம் வந்துச்சு. இத்தன நாளா ஒன்னா இருந்த என் ஃபிரண்ட்ஸ் இப்ப ஆளுக்கு ஒரு மூலைல இருந்தோம். போன்கூட இல்லாதால் சுத்தாமா தொடர்பு இல்லமா போச்சு. ஆஞ்சிஓஞ்சி ரெண்டு மாசம் போனதுக்கு அப்புறம் எப்படியோ பத்தாவது பாஸ் பண்ணி 11வாப்பு அதே பள்ளில சேந்தாச்சு... அட்ராசக்க


ஒரு புது பயணம், எதோ கம்ப்யுட்டர் மேல இருந்த மோகத்துல அதே பிரிவு எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வோரு ஆசிரியரும் நல்லா பழக ஆரம்பிச்சாங்க, அது ஒரு புது உணர்வு. இதுவரைக்கும் ஆசிரியர் மேல இருந்த ஒருவித பயம் போச்சு. அவங்க பழகன விதம் அப்படி. எனக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த மாரிஸ்வரன் சார் இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்காரு. அவருக்கு அப்ப வயசு 25, இளமை துள்ளலுடன் இருந்த அவரும் நாங்களும் போடாத ஆட்டமே இல்லை. எல்லமே ஒரு லிமிட்டுகுள்ள தான். காஞ்சனா மேடம் அடுத்து, எங்களுக்கு வேதியியல் பாடம் எடுத்தவங்க. எனக்கு இன்னும் இவங்க என்கிட்ட பேசின வார்த்தை நல்லா ஞாபகம் இருக்கு. எனக்கு அப்ப தெரியாது அந்த ரெண்டு வருஷம் என் வாழ்க்கையே மாத்த போகுதுனு. பத்தாவது முடிச்ச அப்ப இருந்த வலியோடு இப்ப அதிகமாவே இருந்துச்சு. அதுக்கு காரணம், இப்ப நா விட்டு பிரிஞ்சி போகறது என் ஃபிரண்ட்ஸ் மட்டும் அல்ல, ஆசிரியர்களையும் தான். (என் கலாஸ் பொண்ணுங்களும் தான். அச்சோ அவங்களாம் விட்டு நா எப்படி இருக்க போறேனோ. )


கடைசி நாள் தேர்வு முடிச்சுட்டு வெளிய வந்தப்ப, எதோ ஒரு பெரிய உலகத்த விட்டு பிரியற அந்த வலிய நான் அன்னைக்கு உணர்ந்தேன். பதிநாலு வருஷம் என்னோட பள்ளி படிப்பு அந்த தினத்தோடு முடியுது. அஹுக்கு அப்புறம் நாம என்னா முயற்சி செஞ்சாலும் அந்த வாழ்க்கைக்கு போக முடியாது. ஆனா பல மறக்க முடியாட தோழர்களையும் தோழிகளையும் கொடுத்த ஒரு குட்டி சொர்க்கம் அது.


அட இதுக்கே இப்படினா, அடுத்து ஒன்னு இருக்கு. அது தான்பா காலேஜ். நினைச்சி பாக்கவே செமயா இருக்கு. 2009ம் ஆண்டு, பல கனவோட கல்லூரிக்கு போறவங்க கூட நானும் போனேன்.(அப்பாடா தலைப்பு வந்துடுச்சு) எதோ சொர்கத்துல கால வச்ச மாதிரி இருந்துச்சு.. எந்த பக்கம் திரும்புனாலும் ஒரே ஃபிகர்ஸ் செம குஜால்ஸ். இனிது இனிது படத்துல காட்டுவாங்கள அதே மாதிரி தான். B.Sc Electronics and Communication Science இது தான் நா எடுத்த பட்ட படிப்பு. அந்த கோர்ஸ் பத்தி ஒரு மண்ணுமே தெரியாது. ஆனா, என்னோட வாழ்க்கை அங்க தான் ஆரம்பிச்சுது..


ஒரு பக்கம் படிப்பு அதுபாட்டுக்கு போயிட்டு இருந்துச்சு. மறுபக்கம் கல்லூரிக்கே உண்டான சில சில்லறை வேலைகள், அதுதாங்க சினிமாக்கு போறது, பீச்க்கு போறது. சொல்ல போன கலேஜ் கட் அடிக்கறது. கல்லூரி பேராசிரியர் கூட சண்ட போடறது, இது எல்லார் வாழ்க்கையிலுமே நடந்து இருக்குமே.. ஸ்கூலை விட காலேஜ்ல தான் நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ். அவங்க கூடலாம் பழகறதே ஒரு தனி அனுபவம். நிறைய அனுபவ பாடத்தையும் வாழ்க்கை பாடத்தையும் எனக்கு கத்து கொடுத்த பெருமை அந்த அழகிய தேவதைகளுக்கே சொந்தம். 


அந்த காலேஜ்ல படிக்கும் போது தன் எனக்கு இன்டர்நெட் புழக்கமும் பழக்கமும் வந்துச்சு. Facebookல ஆரம்பிச்சு இப்ப Blog வரைக்கும் வந்தது ரொம்ப பெருமயா இருக்கு.. அப்ப வரைக்கும் கூட என் வாழ்க்கையில எந்த ஒரு கனவும் இல்லாம லட்சியமும் இல்லாம தான் இருந்துச்சு. அடுத்து வாழ்க்கையில என்ன பண்ணப்போறோம அப்படினு எதுவுமே தெரியாத நிலமை தான்.. இந்த வருஷம் 2012ல வெற்றிகரமா என் கல்லூரி படிப்ப முடிச்சாச்சு.


அப்பாவும் அம்மாவும் ரொம்ப படிச்சவங்க கிடையாது, ஆனா படிப்பு எவ்ளோ முக்கியம்னு நல்லா தெரிஞ்சவங்க. மூச்ச புடிச்சுகிட்டு என்னை கரை சேத்துடாங்க. என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சிடனும்னு ரொம்ப ஆசைப்பட்டு இப்ப அத செஞ்சி முடிச்சிடாங்க. அவங்க கனவு ஆசை லட்சியம் எல்லாமே இப்ப நிறைவேறிடுச்சு. ஆனா நா என்ன பண்ண போறானு தெரியலயே, என்மேல நம்பிக்கை வச்சு என்ன இவ்ளோ தூரம் அனுப்பியங்களுக்கு நான் என்ன செய்ய போறேனு தெரியலயே.


எல்லா காலேஜ்லயும் இருக்கறமாதிரி எங்க காலேஜ்லயும் கேம்பஸ் இன்டர்வியு இருந்துச்சு, நடந்துச்சு. கழுதை, அந்த இங்கீலிஷ் கருமம் தெரியாததுனால DELL, HCL கம்பனி இன்டர்வியு ஊத்திகிச்சு. செம கடுப்பு ஆயிட்டேன், ஆனா அத நினைச்சுலாம் நா கவலைப்படல.. நமக்குனு ஒன்னு இல்லமயா போய்டும். எல்லாமே நன்மைக்கே. (All Is Well)


நமக்கு இந்த வேலைலாம் சரிப்பட்டு வராதுனு முடிவு பண்ணி, அப்பாகிட்ட சொன்னேன். சரி என்ன பண்ண போறானு நீயே சொல்லுனு சொன்னாரு. Cinematography பண்ணனும் ஆசையா இருக்குபானு சொன்னேன். அப்பாக்கு சினிமா துறையப்பத்தி நல்லா தெரியும், ஏன்னா அவர் அதுல தான இருபது வருஷமா குப்பைய கொட்டிகிட்டு இருக்காரு. முதல்ல வேணாம்னு கண்டிப்பா சொன்னவரு, அதுக்கு அப்புறம் எனக்காக ஒத்துக்கிட்டரு. ஆனா அப்பாக்கு உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சு. சினிமாக்கு போறதுக்காக இவன இவ்ளோ கஷ்டபட்டு படிக்கவைச்சோம்னு அவர் நினைக்கறத என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது.


அப்புறம் ஒரு பத்து நாள் கழிச்சு Wipro Technologies ல இருந்து கேம்பஸ் இன்டர்வியுக்கு வந்தாங்க. நாம சினிமாக்கு தான போகபோறோம் அப்படிங்கற நினைப்போடு, எல்லா பசங்களோடும் நானும் அந்த இன்டர்வியு அட்டேன் பண்ணேன்.


எல்லாருடைய வாழ்க்கையுலயும் ஒரு திருப்பம் வரும்ல, அது என்னக்கு அன்னைக்கு அமைஞ்சிச்சு. 25/01/20112, குடியரசு இதினத்துக்கு முன் நாள். முதல் ரவுண்டு objective test, அதனால எப்படியோ பாஸ் பண்ணிடேன். நமக்கு இங்கீலிஷ் மட்டும் தான் வராது, ஆனா Maths,Science,GK அன்னைக்கு டெஸ்ட்ல கலக்கிட்டோம்ல. நான் முதல் ரவுண்டு பாஸ் பண்ணிட்டேனு அவங்க என் பேர வாசிச்ச அப்போ இருந்த உணர்வை சொல்லவே முடியாது. ஏன்னா, அந்த இதுக்கே அவ்ளோ சந்தோஷப்ப்ட்டேனா, அடுத்து பர்ஸ்னல் இன்டர்வியு ஆச்சே. என் நிலமைய சொல்லவா வேணும்.


ஒரு அரைமணிநேரம் உணவு இடைவெளிக்கு அப்புறம் செமினார் ஹாலுக்கு வர சொன்னாங்க. மொத்தமா நாங்க நாப்பது பேர் அங்க இருந்தோம். ஒரு பேப்பர் கொடுத்து அதை ஃபில் பண்ண சொன்னங்க. ஒருவித பயத்தோடவே நா ஒவ்வோரு காய நகத்தினேன். எனக்கு விருப்பமே இல்லாம வந்த இடத்துல நான் முதல் ரவுண்டு பாஸ் பண்ணி இருக்கேனே, அங்க எனக்கு தேவையான எதோ ஒன்னு இருக்குனு தான அர்த்தம். அதனால இப்ப இருக்கற பர்சனல் இன்டர்வியு'அ முழுசா செஞ்சி பாத்தடனும்னு ஆசை வந்துச்சு. வாழ்வோ சாவோ அது ஒருமுறை தான் அப்படினு நல்லா தெரிஞ்சவன் நான்.


சரியா, மாலை 4.30க்கு என்ன உள்ள கூப்டாங்க. அவங்க கேட்ட கேள்விக்குலாம் ரொம்ப அமைதியா பதில் சொன்னேன். முடிஞ்ச வரைக்கும் பாசிட்டிவ் ஆ பதில் சொன்னேன். நான் ஒரு புக்'ல படிச்சு இருக்கேன், எப்படிலாம் அங்க கேள்வி கேப்பாங்க அதுக்கு நாமா எப்படி பதில சொன்னா நால்ல இருக்கும்னு. உன்கிட்ட extra curricular activities இருக்கானு அவங்க கேட்ட கேள்விக்கு என்னோட பதில் என்ன தெரியுமா, நான் இன்டர்நெட்ல பிளாக் எழுதரேன்னு சொன்னது தான். அவங்க ரொம்ப ஆச்சரியத்தோட அதபத்தி விசாரிச்சாங்க. எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்துச்சு, இங்க நாமா யூஸ் பண்ற HTML பத்தி கொஞ்சம் சொன்னேன். அவங்களுக்கு இதலாம் புடிச்சு போச்சு போல.. வெளில வெயிட் பண்ணுங்க கூப்பறோம்னு சொன்னாங்க.. 


5மணிக்கு எல்லாரையும் உள்ள கூப்டாங்க... வந்து இருந்த ரெண்டு HRம் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு ரிசல்ட் சொல்ல ஆயத்தம் ஆனாங்க.எனக்கு அப்பவே வேர்க்க ஆராம்பிச்சுருச்சு... மொத்தம் 25பேர் செலேக்ட் ஆயிருக்காங்க.. அதுல நானும் ஒருத்தேன், என் பேர அவங்க சொன்ன போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். அன்னைக்கு தான் எனக்கும் என் பேருக்குமே பெருமனு தோனுச்சு.. வெளில வந்து ஒவ்வோருத்தர் முகத்தையும் பாக்கனுமே, அட்ராசக்க'னான....


என்னால நம்பவே முடியல. இத்தன நாளா என்ன பண்ணபோறேனு தெரியாம இருந்த எனக்கு கிடைச்சு மிகப்பெரிய வாய்ப்பு இது. என்னைவிட என் அப்பாவும் அம்மாவும் தான் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..... அத நா இன்னைக்கும் பாத்தேன், இத்தன நாளா ரொம்ப கஷ்டபட்டவங்க, இப்பலாம் தினமும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க.... இனிமே அவங்க லைஃப்ல கஷ்டமே கிடையாதுல... இந்த தருணத்துல நா அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகனும். ரொம்ப நன்றி'மா..


இந்த சந்தோஷத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுல நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த பிளாக்கால எனக்கு வேலை கிடைச்சுதுனு சொல்லிகறதுல நா ரொம்ப பெருமைப்படறேன்... தேங்கஸ் டூ ஆல் பிளாக்கர்ஸ்...


அடுத்த மாசம் பெண்களூர்ல வேலைல ஜாயின் பண்ணனும், அதாங்க நம்ம ஜாக்கி சார் ஊரு... நானும் அந்தமிகப்பெரிய கண்ணாடி ஆபீஸ்க்கு வரேன் பாஸ். எங்க ஆயா, சோழிங்கநல்லூர்ல இருக்கற கம்பெனிய பாத்து அப்படி தான் சொல்லவாங்க...


என்றும் வேலையடன்
சதீஷ்.......

Saturday, 21 April 2012

(கை)கடிகாரம்கண்ணாடி கூட்டுக்குள்,
      அரசியை பிடிக்க துரத்தும்
      அரசனாய்-மெளன நடனம்
      சிப்பாயின் ரோந்து பார்வையில்
      சிறியமுள், பெரியமுள், நொடிமுள்...

நீ,
      அழகிய வினைபொருள்-கைவினைபொருள்
      நீ விளைபொருளாய் ஏற்பது-என் நேரத்தை
      இங்கு வினைவிளைபொருள்-காலவிரயம்

நீ கடிகாரம் அல்ல
என் நேரத்தை கற்பழிக்கும்
லோக்கல் ரவுடி...

உன்னில் எத்தனை வகைகள்
மனிதனின் கைகளே அதற்கு சாட்சி
எதற்கும் நீ தள்ளியே நில்
நான் காந்தியவாதி...

சேவலின், சூரியனின் இடத்தை
பிடித்து கொண்ட
சுவர் பிசாசே...
அதனால் தான் சுவரின்
தூக்கில் தொங்குகிறாய்...

ஏனோ, நீயும் இப்போது
மனிதனின் தேவை
ஆதலால்,
மன்னிக்கிறேன் - கடிகாரமே...


என்றும் உன்னுடன்
சதீஷ்......


Friday, 20 April 2012

மின் விசிறி


தலைகணம் பிடித்த
தலைகளின் மேல்
தலையை அசைக்காமல்
சுற்றும் தலைவனே...

ஒரே அச்சில் சுற்ற
யாரிடம் கற்றுக்கொண்டாய்
பூமியிடமா...

இதை எங்கள் பெண் ஆண்களுக்கும்
சொல்லித் தா... ஒரே ஆணின் பெண்ணின்
பின்னால் சுற்ற...

விநாயகனை போல்
சுற்றுகிறாய், என் தாய்தந்தை
தலைகளின் மீது...

உன் ஆட்டம் காண
அனைவரும் தலை நிமிர்ந்தே
ஆக வேண்டும்... 

உன்னை கண்டுபிடித்தவன்
உன்னை அனுபவிக்கவில்லை,
உன்னை தரிசிக்க நான் தவம் கிடந்தேன்
மின்சாரம் இல்லா போது...

உன் அருமையை விளக்க
நீ பெரும்பாடு படதேவையில்லை
ஐந்து நிமிடம் நீ ஓய்வு
எடுத்தால் போதும்...

உன்னால் சாதிக்க பெற்றது
பல உண்டு, விளக்க
எனக்கு பொறுமையில்லை...

மின்சாரம் துண்டிக்கப்பட்டு
பத்து நிமிடம் ஆயிற்றே....                                                                        சதீஷ்......


புது கவிதை

*கவிதையே
உன்னை படைக்க
                           -நான்
உன்னை அழிக்க
                             -அவள்..


*ஆணின்
கண்ணீரை
கூட புரிந்து கொள்ள
தயங்கும்
பெண்ணின்
உலகிற்குள் நுழைவதே
பாவம்..


*கவிதை காதலுக்கு
            சொந்தமில்லை..
காதல் கவிதைக்கு
             சொந்தமில்லை..
பிறகு ஏன்,
             எழுதுகிறேன்
என் காதலிக்காக
              காதல் கவிதை...


*சரவெடியாய்
      இருந்த நான்
இன்று சங்கு
      சக்கரமாய் சுற்றுகிறேன்
அவளால்....


*நான் யார்- என்று
தேடினேன்
தெரியவில்லை
ஆனால்
தெரிந்துகொண்டேன்
நீ யார் - என்று


*காதலில்
விழாதவர்கள்
இருந்தால்
அன்று பெண்கள்
சிரிக்க மறந்தனர்
என்று அர்த்தம்....


*வரிகள்
கொண்ட 
வாழ்க்கை
வலிகளுக்கும்
சொந்தம்....


*ஆணும் பெண்ணும்
சமம்,
அது
கருவறையிலும்
கல்லறையிலும்
மட்டுமே......


*கடலில் காலை நினைக்க தோன்றும்
                    - அது காதலின் ஆரம்பம்.
அதே கடலில் மூழ்கி இறக்கவும் தோன்றும்
                   - அது காதலில் பயண்ம்....


*காதலிக்க 
தைரியமுள்ளவன்
அதை நண்பனிடம்
சொல்ல தயங்குவது - ஏன்
ஏன்னா,
                  அது அவன் தங்கச்சி ஆச்சே.....


*உன் தாயிற்கு
வர்ண்னையும்
ஒப்பனையும்
செய்ய
தெரியுமோ,
கருவறையிலே
உன்னை
கலராக்கிவிட்டாள்....


என்றும் காதலுடன்
சதீஷ்.........


கவிதை நேரம்

காதலே நீ எங்கே....? 

* கண்கள்                        
காண
மட்டும் அல்ல
காதலித்து
கலங்க
வைக்கவும் தான்..
*சிரிப்பது
பெண் இனம்
தவிப்பது
ஆண் மனம்..


*சிற்பம் கூட
சிரிக்கும்
நகைச்சுவையை
கேட்டால்
சிற்பி
சிறந்தவன்
என்றால்...


*சேத்துக்கும்
சோத்துக்கும்
வித்தியாசம்
என்ன,
அன்னையின்
கையினிலே...


*விளங்கி
கொள்ள கூடாத,
புரிந்து
கொள்ள விரும்பாத,
உறவை
அடைய
தவம் கிடக்கிறேன்...


*வெளியில்
வெள்ளி நிலவாய்
சென்றவள்
வென்றால்
என்னை
விழி பார்வையால்...

என் கை வண்ணம்
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு,


என்றும் கவிதையுடன்
சதீஷ்......