என் தோழர்கள்

Wednesday 21 September 2011

அணுமின் நிலையம் - கூடங்குளம்

எங்க பாத்தாலும் இதே பேச்சு தான்.. செய்திதாள், தொலைக்காட்சி, இப்ப வானொலில கூட கூவ ஆரம்பிச்சாச்சு..

அந்த ஊர் மக்கள் ரொம்ப நாட்டுப்பற்று உள்ளவங்க போல, என்னாம்மா பொங்கறாங்க... கிடத்தட்ட 10நாளுக்கு மேல உண்ணாவிரதம் இருக்காங்க. அவங்க ஒரே நோக்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடி சீல் வைப்பது மட்டுமே.

ஏன் மக்கள் எல்லோரும் ஒன்னு சேந்து இவ்ளோ அதிரடியாய் இந்த போரட்டத்துல குதிச்சு இருக்காங்கனு தெரியல.. ஆனால் அவங்க சொல்ற பதில் என்னவென்றால் "அணுமின் நிலையம் மிகவும் ஆபத்து"... டேய் அத தவர வேற எதாச்சும் சொல்லுங்கடா....

ஏற்கனவே கல்பாக்கத்துல தான் ஒரு அணுமின் நிலையம் இருக்கே, அப்புறம் என்னத்துக்கு இங்க இன்னொன்னு... இது எல்லாம் வீண் செலவு, மக்களுக்கு தேவை இல்லாத தலைவலி, இப்ப இருக்குற பிரச்சனையில இது தேவையா... இந்த மாதிரிலாம் அணுமின் நிலையத்துக்கு எதிரா கேள்விக்கேக்றவன் நீயா இருந்தா... சத்தியமா சொல்றேன் நீ அஞ்சாகலாசு கூட தாண்டி இருக்கமாட்ட...

ஒவ்வொரு நாடும் தங்களுடைய மண்ணுல அணுமின் நிலையம் அமைக்க எவ்ளோ கஷ்டப்படுதுனு தெரியுமா... நம்ம நிலத்துல கடக்கால் தோண்டி வூடு கட்டற மாதிரி அவ்ளோ சுலபம் கிடையாது... பல நாடுகள் சேர்ந்து தான் நமக்கு பர்மிஷன் தரனும்.. ஏகப்பட்ட பார்மாலிஸ்ட் இருக்கு, அதலாம் தாண்டி வரதுக்குள்ள பல வருஷம் ஆயிரும்... ஆயிடுச்சு...

ஆமா இங்க நம்ம தமிழ்நாட்டுல கரண்ட் எடுத்து பக்கத்து மாநிலத்தல இருக்கரவங்களுக்கு ஓசில கொடுக்கணுமா ? டேய் எப்பத்தல இருந்து இப்படி பிரிச்சு பேச ஆரம்பிச்சுங்க.. எல்லாம் நம்ம இந்தியா தான், நம் மக்கள் தான்... ஒரு சகோதரத்துவம் வேண்டாமா? அவங்க மட்டும் நமக்கு தண்ணி தராங்கலா என்ன" அப்படினு நீங்க முணங்கற சத்தம் கேக்குது... அட, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு இப்படிலாம் பேசலாமா.. நாம நம்மோட கடமைய சரியா செய்வோம். நடக்கறது நடக்கட்டும்...

அய்யோ அம்மா அப்பா தாத்தா..... சுனாமி, பூகம்பம், புயல் வந்தா அந்த கண்ராவி புடிச்ச அணுஉலை வெடிச்சுடுமே.. ஜப்பானும் ஜப்பான் மக்களும் அழிஞ்ச மாறி நாமலும் அழிஞ்சு போய்டுவுமே.... முதல போய் உன் வாய்ல பினாயில் ஊத்தி கழுவுடா ராஸ்கல்....

இந்தியாவை ஜப்பானோட கம்பெர் பண்ணாதீங்க பாஸ்... ஜப்பான்ல ஒரே சமயத்துல பூகம்பம், சுனாமி, புயல், எல்லாமே வரும்.. ஆனா இந்தியால அந்த மாதிரி எல்லா ஆபத்தும் ஒரே நேரத்துல அதிரடியாய் வந்து தாக்காது... அதான் நம்ம நாட்டோட ஸ்பெஷல்.... ம்ம்ம்ம்ம்ம்....

கூடங்குளம் அணுமின் நிலையத்தால சுத்தாமா மக்களுக்கு பாதிப்பே இல்லை, நிறைய பலன் மட்டுமே இருக்கு... அணுமின் நிலையம் அமைஞ்சி இருக்குற இடத்துல பூகம்பம் வர வாய்ப்புகள் மிக குறைவாக தான் உள்ளது.. சுனாமி வந்தாலும் இந்த நிலையத்திற்கு பாதிப்பு இல்லை.. பல முன் அறிவிப்பு கருவிகள் அங்காங்கே பொறுத்தப்பட்டுள்ளது... சொல்ல போனால் கல்பாக்கத்தை விடவும் மிகுந்த பாதுகாப்பு உடையது தான் கூடங்குளம் அணுமின் நிலையம்....

கல்பாக்கம்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது... ஒரு முறை எங்கள் கல்லூரியின் மூலமாக நாங்கள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி பாக்க சென்று இருந்தோம்... உண்மையா சொல்றேன், அந்த அளவுக்கு பல ஏக்கர்ல மிக பிரம்மாண்டமான இருந்தது.. நான் அதுவரை அந்த மாறி பாத்ததே இல்லை.. மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது... கிட்டத்தட்ட 200பேருக்கு மேல வேலை செய்ராங்க...

அப்ப நாங்க கேட்ட கேள்வி : இந்த அணு உலை வெடிக்காதா? வெடிச்சா என்னவாகும்?

அதுக்கு அவரோட பதில்: ( சிரிச்சுக்கிட்டே சொன்னாரு ) நீங்களாம் இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க... இவ்ளோ பெரிய நிலையத்துல எவ்ளோ பாதுகாப்பு கருவிகள் இருக்கும்.. அத எல்லாத்தியும் மீறி எந்த ஒரு கதிர்வீச்சும் வெளியே போக முடியாது...

அப்ப யோசிச்சு பாருங்க... கூடங்குளத்துல பாதுகாப்பு எந்த அளவுக்கு அதிகாமா இருக்கும்னு... 2004ல சுனாமி வந்தப்ப கூட கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதிக்கபடவில்லை என்பது கூடுதல் தகவல்...

கூடங்குளத்துல யாருக்கு தான் உண்மையான பிரச்சனைனு எனக்கு புரியல... 10வருஷமா அந்த அணுமின் நிலையம் கட்டப்படுது.. அப்பலாம் இல்லாத பிரச்சனை திறக்க போற நேரத்துல எங்க இருந்து வந்துச்சு... அந்த ஊர் மக்கள் என்ன அப்போ பாரின் போய் இருந்தாங்களா? அணுமின் நிலையத்தில் உள்ள லாபத்தை அறியாத மக்கள் தான் முட்டாள் தனாமா எதோ செய்யராங்கனா, இந்த அரசியல் தலைவர்கள் உள்ள புகுந்து நல்லா நோண்டி விட்டாங்க... இப்ப கலங்கி போய் இருக்கற குட்டையில மீன் புடுக்கிறது யாருனு தெரியுதா ? அந்த குட்டையை கலக்கி விட்ட அதே அரசியல் தலைவர்கள் தான்...

லாபம் :

* கிட்டத்தட்ட 200பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய உத்திரவாதம்

*தமிழ்நாட்டுக்கு மட்டும் 1000மெகா வாட் வரை மின்சாரம் சப்ளை செய்யப்படும்... (அது மட்டும் கிடைச்சா மின்தடைக்கு அவசியமே இருக்காது)

*மேலும் ஒரு புது அங்கிகாரம் மற்றும் முன்னேற்றம் நம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்...

*கூடங்குளைத்தை சுற்றியுள்ள பகுதியின் மதிப்பு கூடும்.. பல விதமான போக்குவரத்து கிடைக்கும்...

இந்த மாதிரி நிறைய இருக்கு..

நஷ்டம் :

*அந்த நிலையத்தை மூடிவிட்டால் நமக்கு தான் பெருத்த நஷ்டம்...



என் கருத்து :

ப்ளீஸ் கூடங்குளத்து அணுமின் நிலையத்தை திறக்கவிடுங்க.. உங்க அறியாமையை போக்கற சக்தி எனக்கு இருக்கானு தெரியல, ஆனால் அந்த அறியாமையை ஒழிச்சுருங்க... அரசியல் தலைவர்கள் மக்களுக்கு எடுத்து சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி அவர்களை ஆதரிப்பது தவறு என சொல்லிகறேன்.. பல படித்த தமிழர்கள் உங்களை கவனித்து கொண்டு இருக்கிறார்கள், அதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.. விடுங்க பாஸ்.. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி... ஆனால் கண்டிப்பாக 100% சொல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுமே தவிர சீல் வைக்கப்பட மாட்டாது...





சதீஷ்..........


புது கவிதை

தலைப்பு இல்லாமல் கவிதை எழுத கத்துகோங்க...


*கஷ்டப்பட்டு பெற்ற
 சுதந்திரம் - இன்று
 இஷ்டப்பட்டு அடிமையானேன்
 அவளின் சிறிய அன்புக்காக...


*அன்பு கொள்ள
 ஆளில்லை - என
 அவள் உன்னை 
 விரும்பினால்..
 அவள் இன்பம் அடைகிறாள்
  நீ துன்பத்தில் மூழ்கிறாய்..


*நித்தம்! நித்தம்!!
  துடிக்கிறேன்..
  உன்தன் சித்தம் காண
  சில்லரை கனவுகளுடன் - நான் ??


*ஆண் கடவுளும்
  கலங்கினான்..
  என் காதலியின்
  கடைசி ஊர்வலத்தில்
  மழையாய்!!


*மரணம் கூட
  பயப்படும்
  பாவையின் பார்வைக்கண்டு
  இவள் பெண்ணா? பேயா? என்று...


*காலம் கூட கருணைக் காட்டவில்லை
  என்னிடம், என் கண்ணவளை கனவில் காண
  அதற்குள் என்னை இறையாக்கியது..


*பணம் மட்டும் போதும்
  இது பாவிகளின் கூற்று..
  மனம் மட்டும் போதும்
  இது எந்தன் வாக்கு..


*கவிதையும் காற்றும்
 ஒன்று தான்...
 உன் உணர்வை மெல்ல
 திறந்து விடு
 புயலும் பூங்காற்றுமாய் வீசும்..


*கல்லூரி வாழ்க்கை
 புரிவதற்குள்
 முடிந்தது
 என் வாழ்க்கை
 காதல் பள்ளத்தில் - நான்


*பிறப்பும் 
 இறப்பும்
 ஒன்று
 தான்
 அவளின்
 காதல்
 பார்வையில்..


*பட்டணத்து
 போதை- இது
 இன்று பல
 கிராமமும் 
 அந்த மதுகடையில்..


*ஏதோ சொல்ல நினைக்கிறேன் - உன்னிடம்
  நானே இல்லை என்னிடம்
  மயக்கம் கொண்டேன் உந்தனிடம்
  மரணம் முத்தமிட்டது என்னிடம்


*என்தன்
  கனவுகள்
 முடிகிறது!
 உன்தன்
 ஒரே
 வார்த்தையால்
 பெண்ணே...?!?!?!


*ஏண்படியின்
 ஆணிகள்
 தளர்கின்றது!
 முதிர்ச்சி
 கொண்ட
 பெற்றோர்கள் தான்!
 நான் ஏறி வந்த
 ஏணி அது!


*மலர்கள்
 மயங்கும்
 மண்ணும்
 மணக்கும்
 என் அன்னையின்
 கால்பட்டால்..






காலேஜ்ல மாத தேர்வு வச்சப்ப, ஒழுங்க எக்ஸாம் எழுதாம என் பிரண்டு பெருமாள் எழுதன கவிதை தான் இதாலாம்... வருங்கால வைரமுத்து நிகழ்கால வாலி அவன்(இத அவன் தான் போட சொன்னான்).. சீக்கரமா புத்தகம் போட்டுறுவான்.. யாரும் வாங்கி படிக்காதீங்க....








சதீஷ்...... (நண்பன் பெருமாள் உடன்) 




கோகுலின் ஆசைக்கு இணங்க, எங்கள் இருவரின் போட்டோவும் போடப்படுகிறது... (முதல் கமெண்ட் பார்க்கவும்)

 நானும் பெருமாளும்..... (திருப்பதில இருக்காறே அந்த பெருமாள் இல்ல இவரு, இங்க லோக்கல் சென்னை தான்)


Friday 16 September 2011

என்ன ஆச்சு பதிவுலகத்திற்கு

அட நானே எப்பயாச்சும் தான் இந்த பக்கம் வரேன்.. இங்க வந்தா மனசுக்கு நிம்மதியா இருக்கும் கொஞ்சம்... பதிவுலகத்த தான் சொல்றேன்...


எத்தன பேர் நோட் பண்ணாங்கனு தெரியல... என் பிளாக்கு ஜொரம் வந்துருச்சு.. எல்லாம் ஒரே சிகப்பு சிகப்பா தெரியுது.. ஒன்னு கூட படிக்க முடியல.. அவ்ளோ தான் என் பிளாக்குக்கு சங்கு ஊதிடாங்கனு நினைச்சேன்..




இரெண்டு நாளா நானும் ரீப்ரெஸ் பண்ணி பண்ணி பாத்துடேன், ஒன்னும் வேலைக்கு ஆகல... பிளாக்குல ரைட் சைடுல வர எல்லா கேட்ஜேட்சும் கீழ அடியில போய் உக்காந்துருச்சு.. ம்ம்ம் கடைய சாத்திட வேண்டியது தான்...


தெரிஞ்ச நண்பருக்கு போன் பண்ணி இன்னைக்கு காலையில விசயத்த சொன்னேன்.. அவர் என்ன பிரச்சனனு பாத்து சொல்ரனு சொன்னாரு.. காலேஜ் போய்ட்டு வந்ததும் வராதுமா பிளாக்க தான் ஓபன் பண்ணி பாத்தேன்.. ம்ஹீம் ஒரு மாற்றமும் இல்ல...


அப்புறம் எனக்கே இருக்குற ஏழாவது அறிவ யூஸ் பண்ணி, டாஸ்போர்டுல இருக்குற டிசைனை ஓபன் பண்ணி எதாச்சும் பண்ண முடியுமானு பாத்தேன்... இவரு பெரிய பில்கேட்ஸ், இவரு நினைக்கறது எல்லாம் நடந்துடுமா...


அட போங்கயா... பிளாக்கு ஒரே சிவப்பு கலருல இருந்துச்சு அதனால தற்காலிகமா வேற டெம்பிளேட் மாத்தி இருக்கேன்.. இப்ப கொஞ்சம் பரவால, என் பிளாக்க பாக்க முடியுது, படிக்கவும் முடியுது...


ரைட் சைடுல வர எல்லா கேட்ஜேட்டயும் அழிச்சுடேன்.. ரொம்ப கஷ்டமா இருக்கு... அத மறுபடியும் எப்ப சேக்க போறானு தெரியல...




**இதுக்குலாம் காரணம் என்ன ????


கூகிள் நிறுவனம் அவங்களோட சைன் இன் பக்கத்த மாத்தி அமைச்சி இருக்காங்க.. அதன் காரணம்னு எனக்கு தோன்றுகிறது...


**பின்குறிப்பு :::


இது எல்லா பதிவருடைய பிளாக்குலயும் நடந்து இருக்கு.. எல்லாருமே பாதிச்சு இருக்காங்க... என்ன பண்ணலாம் னு யாராச்சும் ஒரு முடிவு சொல்லுங்க ஐயா..


1. எல்லா பதிவரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கிட்டு போய் கூகிள் நிறுவனத்தை முற்றுகை இடலாமா?


2. பழைய நிலைக்கு எங்கள் பிளாக்கை திரும்ப தரும் வரை நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போறோம்னு வெறும் அறிக்கை மட்டும் விடலாமா?


3. அடிதடி கலவரம் கூகிள் நிறுவனத்தை அடித்து நொறுக்குதல் என ஆர்ப்பாட்டம் செய்யலாமா?


4. இதுக்கு மேலயும் நான் எதாச்சும் எழுதுனா கலவரத்தை தூண்டும் விதமாக பதிவு போட்டதுக்காக போலீஸ் என்னை முற்றுகை இடுவார்கள்..


5. சிம்பிளா சொல்லாட்டா, யாராவது நல்லா இங்கிலீஸ் தெரிஞ்ச பெரிய மனுசங்க கூகிளுக்கு ஒரு மெயில் அனுப்பி என்ன பிரச்சனனு கேளுங்கப்பா...


**அட நீங்களுமா??


எனக்கு இந்த பிரச்சன இல்லனு மார்த்தட்டி கொள்ளூம் ஒவ்வொரு பதிவருக்கும் ஒன்னு சொல்லிகறேன்.. பாதிச்சது நான் மட்டும் இல்லங்க, நீங்களும் தான்.. போய் உங்க பிளாக்க பாருங்க பாஸ்... பிம்பிலாக்கி பிலாபி...
www.*****.com என மாற்றி கொண்டு தொடர்ந்து கூகிளில் எழுதும் பதிவருக்கும் வச்சிடங்க ஆப்பு...


இதுக்கு ஒரு முடிவே இல்லாயாப்பா.... இப்ப எல்லா பிளாக்ஸ்க்கும் வந்து இருக்கற இந்த ஃபீவருக்கு, சதீஷ் மாஸ் ஆகிய நான் "பிளாக்ஸ் காய்ச்சல்" என பெயரிடுகிறேன்.. ஆங்கிலத்தில் "Blogs Fever" என அன்போடு அழைக்கபடட்டும்...




(தற்காலிகமா என் பிளாக் கலர மாத்தி இருக்கேன்)


சதீஷ்.......


Thursday 15 September 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 14/09/2011

செய்திகள் வாசிப்பது :
மிக பரப்பரப்பாக தொடங்கப்பட்ட ஒரு விவகாரம் இப்ப எந்த நிலையில இருக்குனு கூட நிறைய பேருக்கு தெரியல... 2ஜி ஸ்பெக்ட்ரம் பத்தி தான் சொல்றேன்..


ராசா அவர்கள் பிரதமருக்கும் சிதம்பரத்திற்க்கும் இதில் தொடர்பு உள்ளது என சொன்ன ஒரே காரணத்துக்காக மொத்த மேட்டரயும் ஆரம்பத்துல இருந்து மாத்தறது மிக பெரிய தப்பு... இப்ப நிலைம என்னனா யாருமே தப்பு செய்யல.. ஊழல் நடக்கல, அரசுக்கு 7000கோடி லாபம் தான்.... 


மேலும் புள்ளி விவரத்தோட ஆதாரம் வேணும்னு கேக்கற (கேட்ட)அப்பாவிகள் அனைவரும் "புதிய தலைமுறை"  இதழில் வெளிவந்துள்ள தலையங்கத்தை பார்க்கவும்....


யூ டான்ஸ் :
பிரபல பதிவரான கேபிள்சங்கர் அவரோட நண்பர் சேர்ந்து புதுசா ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சு இருக்கிறார்கள். அந்த ஸ்கூலுக்கு பேர் தான் "யூ டான்ஸ்" .. அங்க அட்மிஷன் ஃபீஸ் கிடையாது நன்கொடை ஏற்கபடமாட்டாது. பதிவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு, குறிப்பாக தமிழ் பதிவர்கள் வரவேற்கபடுகிறார்கள். என்னை போன்ற வேர்ல்ட் ஃபேமஸ் பதிவர்கள் சீக்கரம் வந்து சேரவும் என அறிவிக்கப்படுகிறது...


மேலும் அறிய, www.udanz.com




விளம்பரம் :
எத்தன நாளைக்கு தான் இப்படியே காலத்த ஓட்டறது. நமக்குனு ஒரு வெளம்பரம் வேணாமா? அப்படினு யோசிக்கும் போது தான் இந்த ஐடியா வந்துச்சு... மிக பெரிய கார் கம்பெனியோட முதலாளியான ஹென்றி ஃபோர்ட், தான விளம்பரத்த தேடி போகமலயே அவரும் அவருடைய காரும் சந்தையில் விளம்பரபடுத்தப்பட்டது... தீ சேம் ஐடியா.....


என்னை பற்றி கூகுள் பஸ்ஸில் நடந்த ஒரு உரையாடல் இது... கொஞ்சம் படிச்சு பாருங்க.. என் விளம்பர யூத்தி தெரியும்..


பஸ்ஸில் என் பயணம்... 




கவிதை :
சொந்த கவிதை, நல்ல இல்லனு சொல்லிடதீங்க...


காகிதம் பேனா
இருந்தால் கவிதை வராது
காதலும் சோகமும் 
இருந்தால் கவிதை வராது
எழுத்தும் எழுத்துவடிவமும்
இருந்தால் போதும் - தலைப்பே
இல்லாமல் கவிதை வரும்....


சின்ன வயசுல
பிஞ்சு மனசுல
விவரம் அறியா பருவத்துல
பேச பழகின நேரத்துல
ஓடி ஆடின வேளையில
என்ன நிக்க வச்சு
ஒத்த வார்த்த சொன்னா
எங்க ஆத்தா
நீ என் குல சாமிடானு
ஆனா எனக்கு தான்
அவங்க சாமி


பாடல் வெளியீடு :
இன்று காலை தான் அந்த பாடலை முதல் முறையாக கேட்டேன்.. காதல் பத்தி என்னமா சொல்லி இருக்காங்க... இப்ப மிக பிரபலமா இருக்கற 
"Yogi B & Co" அவர்களுடய ஒரு ஆலபத்தில் உள்ள பாடல் தான்.. "TRUTH HURTS" என்னும் ஆல்பத்தில் உள்ள பாடல் என நினைக்கிறேன்..

" கண்ணில் கண்ணில் காதல் வைத்து என்னை கொல்லாதே, 
இன்னும் உன்னை நம்புவேன் என்று பெண்ணே நம்பாதே, 
கண்கள் மூடி காதல் செய்தால் கற்று தந்தாயே, 
உண்மை தெரிந்து நான் இன்னும் உன்னை ம்ம்ம்ம்ம்ம்ம் ""

இதான் பாடலின் ஆரம்ப வரிகள், இதுக்கு அப்புறம் வர ராப்பிங் (Rap) தான் பாடலோட ராக்கிங் ஸ்டைல்....


பழசு ஆனா மவுசு :
எதாவது மூலையில சத்தமே இல்லாம பல வருடமா பதிவு எழுதறாவங்கல இங்க வெளிச்சம் போட்டு காட்ட போறேன்..
அந்த வரிசையில் இன்று " நல்லவன்" 
இவருடய பதிவும் இவரும் மிக்க நலமே.. திருநங்கை அக்காகளை பற்றி இவர் எழுதி இருக்கும் பதிவு அருமை.. மேலும் அறிய அவருடய தளத்திற்கு சென்று பார்க்கவும்...


என் நோக்கம் :
எதாச்சும் உருப்படியா எழுதனும் தான் நினைக்கிறேன்... என் பதிவை படிக்க வரவங்களூக்கு இது பொழுதுபோக்கா தான் இருக்கனும்.. அழுகை கண்ணீர் சோகம் வருத்தம் எனக்கு சுத்தமா பிடிக்காது... அதனால தான் முடிஞ்ச வரைக்கும் அதலாம் தவிர்க்க பாக்கறேன்....




சதீஷ்......


Tuesday 13 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -2

என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 

நான் என் போனையும் மேல்வருவத்தூர் செல்லும் பாதையையும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருந்தேன். தீடீரென்று அதே ப்ஞ்சர் கடைக்காரனின் குரல், அப்பாட பஞ்சர் போட்டாச்சு போல என நினைக்கும் முன்பே "இத சரி பண்ண முடியாது வேற தான் மாத்தனும்"... எத சொல்றானு புரியாம முழுச்சிகிட்டு நின்னேன்...


அப்புறம் தான் புரிஞ்சிது அவன் என் வண்டியின் டயரை பற்றி பேசுகிறான் என்று. வெகுதூரம் தள்ளி கொண்டும் பல வளைவு சுளைவுகளில் எற்றி இறக்கி வந்த்தாலும் வண்டியின் டயர் ஒரு பக்கமாய் நசுங்கியே போய்விட்டது. அதை மாற்றினால் தான் மேற்கொண்டு போக முடியும்..

எவ்ளோ ஆகும்னு கேட்டேன், அந்த கடைக்காரன் முறைச்சான்.. ஏன்னு தான் இப்ப வரைக்கும் தெரியல... என்கிட்ட ஒரு பழைய டயர் இருக்கு அத போட்டு விடேறேன், அப்படினு சொன்னான்.. "கல்லுக்குள் ஈரம்" அது இதனா என மகிழ்ச்சி என் மனதில் பொங்குவதற்குள், ஒரு 200ரூ கொடுத்துருங்க னு சொல்லிடான்..... ஏன்டா என் உயிர இப்படி வாங்கற...

இப்ப டயர் இல்லாம நான் சென்னைக்கும் போக முடியாது, மேல்வருத்தூருக்கும் போக முடியாது... அவ்வளவு தான் முடிஞ்சிது கதை... என் போனை எடுத்து முதலாளிக்கு போன் பண்ணேன்...

"அண்ணேன் இங்க இந்த மாதிரி ஆயிடுச்சு, அடுத்த என்ன பண்ணட்டும்" கேட்டேன்... அந்த ஆளுக்கு என்ன தோனுச்சுனே தெரியல பட்டுனு போனை கட் பண்ணிடான்... அட போட கொயய்யால... இனிமே என்ன நான் தான் பாதுகாத்துகனும்...

ஆத்துல ஓடற மீன் தண்ணில இருந்து  வெளிய வந்து விழுந்த அடுத்து என்ன பண்ணறதுனு தெரியாம முழிக்கற மாறி முழிச்சேன்... மீண்டும் தெய்வம் வந்தது டீக்கடையில் இருந்து.. என்னப்பா என்ன ஆச்சுனு கேட்டார்... டயர் மாத்தனும்னு சொல்றாருனு சொன்னேன்... அட இந்த கடகாரன் கூட பெரிய தொந்தரவா போச்சுனு சொல்லிகிட்டடே, அந்த கடைக்காரன் கிட்ட கொஞ்சம் நேரம் பேசினார்... அப்புறம் தன்னோட பக்கெட்டுல இருந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து கொடுத்தார்.. அது எனக்கு தெரிய கூடாதுனு மறைக்க நினைத்தார்... ஆனால் நான் அதை பார்த்துவிட்டேன், கண்ணீல் கண்ணீர் வராதது தான் குறை....

அப்புறம் எதோ ஒரு பழைய டயரை எடுத்து மாட்டி விட்டு தயாராகி விட்டதுனு சொன்னான்(ர்)... அந்த டிரைவர் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிட்டு பிரியாவிடை பெற்றேன்.. என் வாழ்நாளில் நான் இதுவரை சந்திக்காத புது மனிதர்... எத்தனை பேருக்கு இந்த உதவும் எண்ணம் வரும்.. இதுவரை என்னை ஏமாற்றிய மனிதர்களுக்கு மத்தியில் அவர் ஒரு மாணிக்கம்... மீண்டும் ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்...

பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்து மேல்வருவத்தூர் நோக்கி மிக மெதுவாக ஓட்ட ஆரம்பித்தேன். சரியான நேரத்தில் சென்றுவிட்ட சந்தோஷம்.. சென்ற காரியம் நல்ல படியாக முடிந்தது.. இப்போது எனக்கு 150ரூ அங்கு இருந்தவர் கொடுத்தார்.. அதை பெற்று கொண்டு மீண்டும் சென்னை செல்ல ஆயத்தமானேன்..

அம்மன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை பார்த்து சிறிது நேரம் சாமி கும்பிட்டேன்.. அந்த டிரைவர் அண்ணன் முகம் தான் வந்துபோயிற்று.. அவரின் பெயர் தெரியவில்லை என இங்கு எழுதுவதற்கே எனக்கு கேவலமாய் இருக்கிறது....

அப்பாட என நீங்கள் பெரு மூச்சு விடுவது எனக்கு தெரிகிறது ஆனால் இன்னும் முடியவில்லை... மீதி இருப்பதை சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறேன்...

 மேல்வருவத்தூர் தாண்டி வரும் போது இரண்டாவதாக ஒரு பாலம் இருக்கும்.. அதன் மேல் ஏறி வரும் போது மீண்டும் டயர் பஞ்சர் ஆனது.. இப்போதும் அதே முன்சக்கரம் தான்... என் வாயில அசிங்க அசிங்கமா வந்துச்சு ஆனா யாரை திட்டுவது என்று தான் அப்போது தெரியவைல்லை.... வண்டியை நிறுத்தாமல் ஓட்டினேன்.. ஏனெனில் தள்ளிட்டு போற அளவுக்கு உடம்புல தெம்பு இல்லைங்க...

பாலத்தை தாண்டி ஒரு 50அடிக்கும் குறைவான தூரத்தில் ஒரு பஞ்சர் கடை இருந்தது.. அங்கே நான் இன்னும் ஒரு கடவுளை கண்டேன்.. அது அந்த பஞ்சர் கடை ஓனர் தான்.. முன்சக்கரத்தை பிரித்து பார்த்து பஞ்சர் ஆகியிருப்பதை உறுதி செய்தார்.. அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை அப்படியே கலங்க வைத்து விட்டது... 

அந்த சிங்கபெருமாள் கோவில் இருந்த இடத்தில் நான் மாற்றிய டியூப் பாக்கா லோக்கல் டியூப் ஆகும்.. அதன் விலை 80ரூ தான் இருக்கும் என்றார்... "சென்சார்டு" என அந்த கடைக்காரனை மனதில் திட்டினேன்... அவன் மாத்தி கொடுத்த டயர வச்சிக்கிட்டு சத்தியமா நீ சென்னைக்கு போக முடியாதுனு சொன்னார்... அடுத்த என்ன அதே தான், அடிச்சேன் போனை என் ஓவருக்கு... "தம்பி யாருப்பா நீங்க அப்படினு கேக்காதது ஒன்னு தான் குறை"... மீண்டும் இங்கு சென்சார்டு வார்த்தைகள் என அறிவிக்கப்படுகிறது...

பிறகு அவர் வேரோரு நல்ல டயரும், பஞ்சர் ஒட்டியும் கொடுத்தார்... அதற்கு நான் வெறும் அந்த 150 மட்டுமே கொடுத்தேன்... என்னை முறைத்து கொண்டே அதை வாங்கி கொண்டார் என் நிலைமையை புரிந்துகொண்டு...  அதன் பிறகு இத்தனை நாள் ஆகியும் அந்த டயரும் டியூப்க்கும் ஒன்னும் ஆகவில்லை என்பது தான் அதிசயம்...

மெல்ல வண்டியை உருட்டிக்கிட்டு சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டேன்.. அதுவரை நான் தவித்த தவிப்பு வார்த்தையால் சொல்ல முடியாது.. மீண்டும் ஒரு முறை பஞ்சர் ஆகி இருந்தாலோ இல்லை வேறு எதாவது பிரச்சனை என்றலோ  நான் நடுரோட்டில் பிச்சை தான் எடுத்து இருக்க வேண்டும்...

அன்று தான் நான் பைக்கில் பயணம் மேற்கொள்வதை அடியோடு வெறுத்தேன்.. ஏன் சொல்ல போனால் வாழ்க்கையையே வெறுத்தேன் எனலாம்.... இனி மீண்டும் இப்படி ஒரு பயணத்தை பைக்கில் மேற்கொள்ளமாட்டேன்... சீக்கரம் BMW கார் வாங்கறேன்.... அதுல தான் டிராவல் பண்ண போறேன்...


பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி... கடந்த சில தினங்களாக அதிக வேலை பளுவின் காரணமாய் எழுத முடியவில்லை... நமக்கு காலேஜ் தாங்க முக்கியம்... படிப்பு தாங்க முக்கியம்... ஹி ஹி ஹி....




சதீஷ்............ 


Friday 9 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -1

நான் சென்னையில் இருந்து மேல்வருவத்தூர் சென்ற போது நிகழ்ந்த பல கசப்பான ஆனால் நினைவில் நின்ற பயணம் இது. கிட்டத்தட்ட ஒரு பத்து நாள்களுக்கு முன் நடந்த சம்பவம் தான்.


அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து புறப்பட தயாரானேன். சென்னையில் இருந்தே பைக்கில் செல்வதாக திட்டமிட்டு இருந்தேன். நான் மட்டும் தான் தனியாக சென்றேன். மேல்வருவத்தூரில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் ஒரு தற்காலிக வேலைக்காக தான் சென்றேன்.

நெடுந்தூர பயணம் என்பதால் முதல் நாள் இரவே பெட்ரோல் போட்டு விட்டேன். நான் செய்த உருப்படியான ஒரே விஷயம் அது தான். ஹெல்மேட் மாட்டிக் கொண்டு என் எல்ஜி போனின் ஹெட்செடை காதில் திணித்து கொண்டு பைக்கில் பறந்தேன். இளையாராஜா முதல் யுவன்சங்கர்ராஜா வரை அனைவரின் பாடல்களும் அந்த அதிகாலை வேளையில் மனதிற்கு இதமாக அமைந்தது. என் பைக்கின்  வேகமும் கூடியது.


மிக ரம்மியமான பொழுது தான். சூரியன் தன் கடமையை சரிவர செய்தது, அது வானம் எங்கும் செந்நிறத்தை பரப்பியபடியே வெளியே எட்டி பார்த்தது. ஆனால் என்னால் தான் அதை அனைத்தையும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தேன்.


வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என அனைத்து ஊர்களையும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தாண்டிவிட்டேன். சிங்க பெருமாள் கோவிலை நெருங்கி செல்லும் வேளையில் எனக்கு முதல் சோதனை நடந்தது. அப்போது தெரியாது அது ஒரு மிக பெரிய விஷமாகவும் நான் திரும்ப வீட்டிற்கு செல்வது கடினமாகவும் போகிறது என்று.


ஒரு அரசாங்க பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்து அதன் ஒரு பக்கவாட்டில் ஏறினேன். என்னை சற்றும் கவனிக்காத பேருந்தின் ஓட்டுனர் திடிரென்று ஒரு ஓரமாக பேருந்தை செலுத்தினார். சட்டென்று சுதாரித்துக் கொண்டு என் பைக்கின் வேகத்தை மளமளவென குறைத்தேன். இரண்டு பிரேக்குகளையும் அழுத்தி பிடித்தேன். இப்போது பேருந்தின் வாயில் இருந்து தப்பிவிட்டேன் ஆனால் அந்த ரோட்டின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரின் மீது இடித்து தொப்பென்று கீழே விழுந்தேன்.


பைக்கின் பின்னால் ஒரு பெரிய பைபை கட்டி வைத்திருந்தேன். அது இல்லாமல் இருந்து இருந்தால் நான் சற்றே என வண்டியை நிறுத்தி இருப்பேன். நேரம் சரியாக ஆறு மணி இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் குறைவாக தான் இருந்தது. தன் கையே தனக்கு உதவி. மெல்ல எழுந்து நின்று என் பைக்கையும் நிமிர்த்தினேன். பெட்ரோல் கசிந்து அந்த வாசம் வீசிக்கொண்டு இருந்தது. 7.30மணிக்குள் மேல்வருவத்தூர் செல்ல வேண்டும் என்பதற்காக வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தேன்.


ஒரு 50அடிக்கும் குறைவான தூரம் செல்வதற்குள் அடுத்த சோதனை. வண்டியின் முன் சக்கரம் பஞ்சர் ஆகியிருப்பது தெரிந்தது. இப்போது சரியாக நான் சிங்கபெருமாள் கோவில் ஜாங்ஷனை அடைந்து விட்டேன். அங்கு இருந்த ஒரு டீக்கடை முன் வண்டியை நிறுத்தி செய்வது அறியாமல் நின்றேன். என் முதலாளியிடம் இருந்து போன் வந்தது. விவரமாக நடந்ததை கூறினேன், "பஞ்சர் போட்டுகிட்டு சீக்கரம் கிளம்பு தம்பி, நீ அங்க 7.30 மணிக்கு எல்லாம் இருக்கணும்" என தெரிவித்தார்.. இதற்கு பெயர் தான் முதலாளித்துவம் என அன்று அறிந்து கொண்டேன்..


அந்த டீக்கடைக்கு போய் விசாரித்தேன், அருகில் எதுவும் பஞ்சர் ஒட்டும் கடை இந்நேரத்துக்கு இல்லை என சொன்னார். அவர் சொன்னது உண்மைதான். மேலும் சில கடைகளில் விசாரித்தவாறே நான் மட்டும் முன்னேறினேன். வண்டியில் பெரிய மூட்டை இருப்பதாலும் பஞ்சர் ஆகியிருப்பதாலும் வண்டியை அந்த டீக்கடையிலேயே நிறுத்திவிட்டேன். பலபேரிடம் விசாரித்தேன் எல்லோரும் ஒருசேர அந்த ஒரு கடையை மட்டுமே சுட்டிக்காட்டினர். "அந்த ரிலையான்ஸ் கட்டவுட் கீழ உள்ள பில்டீங்கில் ஒரு கடை இருக்கிறது, அது 24மணி நேர கடை" என தெரிவித்தனர். கிட்டத்தட்ட அந்த கடை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு குறையாமல் தூரத்தில் இருந்தது.


இப்போது எனக்கு துணையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா யாருமே இல்லை. அந்த காலை பொழுதிலும் எனக்கு வியர்வை கொட்டி கொண்டு இருந்தது. வேகவேகமாக அந்த கடையை நோக்கி நான் மட்டும் நடந்தேன். மன்னிக்கவும் ஓடினேன் என தான் சொல்ல வேண்டும். 10 நிமிட ஓட்டத்துக்கு பிறகு அந்த கடையை அடைந்து எட்டி உள்ளே பார்த்தேன். ஒரு லாரி டிரைவர் வெளியே வந்தார், அவரிடம் விவரத்தை கூறினேன். "வண்டியை தள்ளிக்கிட்டு வா, இந்த கடைக்காரர் இப்ப வந்துருவாரு" என சொன்னார். சட்டென்று சிட்டாய் என் பைக்கை நோக்கி நான் பறந்தேன்.


வேகவேகமாக தள்ளிக் கொண்டு அந்த கடையை அடைந்தேன். ஒரேவரியில் இங்கு முடித்து விட்டேன், ஆனால் நான் அப்போது பட்ட துன்பம் அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். நான் மட்டுமே பரபரபாய் இருந்தேன். என்னை தவிர வேறுயாருக்கும் அந்த பரபரப்பு இல்லை. அந்த கடைக்காரர் வருவதற்குள் நான் முன்பு சொன்ன டிரைவர் என் வண்டியின் சக்கரத்தை கழட்டி ஆயத்தமாக வைத்தார்.


ஒரு பத்து நிமிடம் கழித்து கடைக்காரன் வந்தான். மிக பொறுமையாக வேலையை கையாண்டான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவன் தலையில் கல்ல தூக்கி போட்டு இருப்பேன், பாவம்னு விட்டுடேன். அந்த புண்ணியவான் வாய திறந்து சொன்ன முதல் வார்த்தை "டியுப் கிழிஞ்சிறுச்சு, புதுசு தான் போடனும்.. கம்பெனி டியூப் தான் என்கிட்ட இருக்கு" "அதோட விலை 200ரூ அப்புறம் நான் கழட்டி மாட்டனதுக்கு 50ரூ"... அடப்பாவிகளா "என்ன கொடுமை சார் இது"


என் பார்சை எடுத்து உள்ள எவ்வளவு இருக்குனு பார்த்தேன். சரியா சொல்லனும்னா 238ரூ தான் இருந்துச்சு. அந்த கடைக்காரன்கிட்ட சொன்னேன் "238ரூ தான் இருக்கு".. "இல்லை கட்டுபடி ஆகாது, நீங்க கிளம்புங்க"... மனசாட்சி இல்லாத ஜென்மம்...


என் தவிப்பை புரிந்து கொண்டது அந்த லாரி டிரைவர் மட்டும் தான். ஒரு 20ரூ எடுத்து கொடுத்தார். தெய்வம் போல எனக்கு காட்சி தந்தார். இன்னும் அவரின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சென்னை கே.கே.நகரில் தான் வசிக்கிறார் என சொன்னார். மீண்டும் ஒரு நாள் அவரை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் தோன்றுகிறது..


என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 


இப்போது அதே பஞ்சர் கடையில் வேறொரு பிரச்சனை அதுவும் அந்த டிரைவர் அண்ணனால் தான் சரி செய்யப்பட்டது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....






தொடரும்....








சதீஷ்........


Thursday 8 September 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 09/09/2011

என் கருத்து :


பிரபல பதிவரான யுவகிருஷ்ணா அவர்கள் வெளியிட்ட பதிவில் 2ஜி-அரசுக்கு 7000கோடி லாபம் என குறிப்பிட்டு இருந்தார். அவர் சொல்லும் தகவல்களை (தரவுகள்) சற்றே ஆராய்ந்து பார்த்தால் அதில் பல விஷயங்கள் இருப்பதாக தோன்றுகிறது ஒரு சாதாரண மனிதனாக அதை அனைவரும் உற்று பார்க்க வேண்டும். ஊடகங்கள் இது போன்ற கருத்துகளை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பது பற்றி பேச இப்போது நேரம் கூட இல்லை. அவர் 2ஜிக்கும் 3ஜிக்கும் கொடுத்த விளக்கமே பல பேர் புரிந்து கொள்ளமல் உள்ளனர். அந்த வித்தியாசம் தெரிந்தால், யுவகிருஷ்ணாவை புரிந்து கொள்ள முடியும்.


மக்கள் : ராசா நல்லவரா கெட்டவரா ?
சதீஷ் : தெரியலயே (டென்டடுன் டென்டயின்)


பி.கு : இது ஒரு பதிவருடைய பதிவிற்கு என் கருத்து மட்டுமே...


-----------------------------------------------------------------------------------------


சுயம்வரம் :


சென்னையில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைப்பெற்றது. சாதி மதம் அந்தஸ்து என எந்த வித்தியாசமும் இல்லாமல் நடந்தது. தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். பல பேருக்கு திருமண பேச்சுகள் அவர்களுடைய பெற்றோரால் அங்கயே பேசி முடிக்கப்பட்டது. சிலருக்கு ஏற்ற துணை கிடைக்காமல் வருத்ததுடன் காணப்பெற்றனர். அவர்களுக்கும் அடுத்த வருடம் நல்ல செய்தி வரும் என வாழ்த்துவோம்.


-----------------------------------------------------------------------------------


ஹெல்மேட் : 


தமிழக அரசு எவ்வளவு வற்புருத்தினாலும் ஹெல்மேட் போடமாட்டேன் என பல பேர் அடம் பிடித்து கொண்டு இருக்கும் இந்த நிலையில், பல பேர் ஹெல்மேட் அணிய தொடங்கிவிட்டன. இப்போது அவர்கள் தங்கள் பாதுகாப்பு பற்றி அறிய தொடங்கிவிட்டனர். சாலையில் நடக்கும் பல விபத்துகளை அவர்கள் பார்த்த பயத்தால் கூட ஹெல்மேட் அணிய ஆரம்பித்து இருக்கலாம். சென்னையில் ஆங்காங்கே போலிசார் இது குறித்து பல நடவடிக்கையில் ஈடுப தொடங்கி உள்ளனர். அவர்களின் உழைப்பின் பலன் அனைவரும் ஹெல்மேட் போடும் போது தான் தெரிய வரும்.


-----------------------------------------------------------------------


அறிவிப்பு :


எல்லோருக்கும் வெற்றி கொஞ்சம் முயற்சி செய்தாலே கிடைக்கப் பெற்றுவிடும். ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, அவன் முன்பு உழைத்ததை விட பல மடங்கு முயல வேண்டும். வெற்றி பெற்ற பலர் அடுத்த சுற்றில் தோல்வி பெற காரணமும் அதான்.
எனக்கு இப்போது ஒரு வெற்றி கிடைத்து இருக்கிறது, அதை நான் தக்க வைத்துக் கொள்ள இனி தான் கடுமையாக உழைக்க வேண்டுமே.


-----------------------------------------------------------------------------------


புகைப்படம் : 


வாரம் ஒரு அழகிய புகைப்படம் இங்கு வெளியிடப்படும். அது உங்கள் படமாக இருந்தாலும் சரி.


என்னை மிகவும் சுண்டி இழுத்தது இந்த நிறம்....


  -------------------------------------------------------------------------------------------

ஓணம் :


கேரளாவில் மிக பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா எனில் அது ஓணம் பண்டிகை தான். கேரள நண்பர்களுக்கும் மற்ற மலையாள மக்களுக்கும் ஓணம் வாழ்த்துகள்.


-----------------------------------------------------------------------------------------------


நன்றி : 




என்னை ஊக்கப்படுத்திய உற்சாக மூட்டிய என் எழுத்தை ரசித்த தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்ட அத்துணை சகோதர சகோதரிகளுக்கும் தோழர் தோழிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

-------------------------------------------------------------------------------------------------


வறுவல் மற்றும் நொறுவலில் மசாலா கொஞ்சம் குறைவாக இருப்பதாக தகவல்... அதை உடைத்து எறிய 11 பேர் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும்...


--------------------------------------------------------------------------------------







சதீஷ்......


Tuesday 6 September 2011

நானும் ஜாக்கியும்

பதிவர் சந்திப்பு நடந்துச்சுனு சொன்னான், ஜாக்கிசேகர் வந்தார்னு சொன்னான்.. அவ்ளோ தானா? அப்ப தலைவரு தலைவருனு சொல்லி பதிவு போட்டது எல்லாம் ஒரு விளம்பரம் தானா???

இப்படிலாம் உங்க மனசுல அசிலி பிசிலியா எதாச்சும் இருந்தா அதை அப்சரா ரப்பர் போட்டு அழிச்சுருங்க.... அவர் எப்ப வருவார்னு வாசக்காலயே பாத்துக்கிட்டு இருந்தேன்.... இந்த பதிவை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு "சென்னை பதிவர் சந்திப்பு" அந்த பதிவ படிச்சிட்டு வாங்க அப்ப தான் புரியும்..


என்னோட அறிமுக பேச்சு முடிஞ்சுருச்சு... அது வரைக்கும் கூட நா ஜாக்கிசேகர் கிட்ட போய் அறிமுக பண்ணிகல... மீண்டும் வந்து என் இடத்துலயே உக்காந்துட்டேன்... பிரபா அவர்கள் ஜாக்கிசேகருக்கு ஒரு சீட்டு போட சொன்னாருனு நா அங்கு பேசும் போது சொன்னேன்...


ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் அருகில் ஒரு குரல் கேட்டது... "என்னடா சீட்டு போட்டு வச்சிருக்கியா?" அது ஜாக்கி சார் வாய்ஸ்.... எனக்கும் ஒன்னும் புரியாம "ம்ம்ம், ஆமா சார் உங்களுக்கு தான் இந்த சீட்டு" என சொன்னேன்.... அதற்க்கு ஏற்றார் போல் என் அருகில் ஒரு சீட்டு மட்டும் காலியாக இருந்தது.....


சரி அப்புறம் என்ன ஆச்சு.... நா என்ன கதையா சொல்றேன்...


இரண்டு முறை என் போன் சினுங்கியது... "போனை, சைலெண்டில் போடு" என ஒரு சிறிய அதட்டல்...  சட்டென்று என் போன் அமைதியானது.... ஹி ஹி ஹி நைஸ் ஜாக்கி..... வேறு எதுவும் அவருடன் பேசவில்லை... நான் அமைதியாய் தான் இருந்தேன்....


சற்று நேரம் கழித்து, சந்திப்புக்கு வந்து இருந்த அனைவருக்கும் டீ சப்ளை செய்யப்பட்டது.... நான் ஒரு கப் டீயை எடுத்து அதை அவருக்கு கொடுத்தேன்... 


பிறகு பல சூடான விவாதங்கள் நடைப்பெற்றன.. அதில் அவரும் பங்கேற்றார்.... "புதிய பதிவர்கள் தங்களுடைய பதிவுகளை சந்தைபடுத்துவது ரொம்ப முக்கியம்.. அப்ப தான் அது பல முகவரை சென்று அடையும்... பல திரட்டிகளில் பதிவு செய்வது நலமே... முடிந்த வரை லேபிள் உபயோகிக்கவும் " இந்த மாதிரி நிறைய சொன்னாரு...


புதிய பதிவர்கள் தொடர்ந்து எழுதனும், பின்னூட்டம் இல்லை எனவும் வருகையர் யாரும் இல்லை எனவும் கவலைபடதீங்க.... என கூறி ஆறுதல் அளித்தார்...

கூட்டம் நிறைவாய் முடிய, என் கண்கள் மட்டும் ஜாக்கி சாரை தேடியது... அவரை சந்தித்து பேச வேண்டும் என ஆவல்.... அவரை பார்த்து சிரித்தவாறே அருகில் சென்றேன்... பல கேள்விகளை கேட்டேன், சற்றும் சளைக்காமல் பதில் தந்தார்... மிகுந்த மரியாதையுடன் பேசினார்... என்னை ஊக்கபடுத்தியது அவரது வார்த்தைகள்.... ஒரு பத்து நிமிடம் அவருடன் தனியாய் பேசியதில் மகிழ்ச்சி....



இது தாங்க "பைனல் கிளிக்"..... கேபிள்சங்கர், நான், ஜாக்கிசேகர்.... இவ்ளோ சீக்கரத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது..... இந்த போட்டோ எத்தனை பேரின் வயித்து எரிச்சலாக மாறபோகிறது என தெரியவில்லை.....

என் கையில இருக்கற அந்த புத்தகம் தான் சிவகுமார் அண்ணன் தந்தது.... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

மீண்டும் அடுத்த சந்திப்பில் பாக்கலாம்......





சதீஷ்..........


Monday 5 September 2011

சென்னை பதிவர் சந்திப்பு - 04/09/2011

ஆரம்பத்துல இருந்து வரேன்.. சென்னையில ஒரு பதிவர் சந்திப்பு நடத்தனும் அப்படினு பிரபல பதிவரான கே.ஆர்.பி.செந்தில், சிவகுமார், பிரபா மற்றும் பலர் முடிவு பண்ணி அத வெற்றிகரமா செய்தும் முடிச்சுடாங்க.....


செப்டம்பர் 4,2011 அன்று கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸின் மேல்தளத்தில் நடைப்பெருகிறது, புதிய மற்றும் அறிமுகமில்லாத பல பதிவர்களை அறிமுகபடுத்தும் விழா தான் அது... என்னையும் தனிப்பட்ட முறையில் சிவகுமார் சார் அழைத்து இருந்தார்... சாரி சாரி அவரை சார் என் அழைக்க கூடாதுனு அவர் அன்பு கட்டளை போட்டு இருக்கார்.. அதனால சிவகுமார் அண்ணே என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து இருந்தார்... அப்பாடா இன்ரோடக்‌ஷன் முடிஞ்சுபோச்சு....


இனிமே என் பார்வையில் இருந்து பதிவர் சந்திப்பு நடைபெற்ற விதத்தை எழுதுகிறேன்......


1. மங்காத்தா படம் பாத்துட்டு நேராக பதிவர் சந்திப்புக்கு போனேன்.. கே.கே.நகர் போனதும் அங்க இருந்து பாண்டிச்சேரி (புதுச்சேரி) கெஸ்ட் அவுஸ்க்கு ஒரு இளநீர் கடைகாரர் வழிசொன்னார்...

2. அங்க போனதும், பதிவர் சந்திப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேசும்படி ஒரு தொலைபேசி இருந்தது.. அந்த எண்ணை தொடர்புக் கொண்டு மீதி முகவரியை வாங்கி கொண்டு, அந்த இடத்தை அடைந்தேன்...

3. என்னை கீழே இறங்கி வந்து அழைத்து சென்றார் சிவகுமார் அண்ணே, பிறகு தான் தெரிந்தது அது அவருடய தொலைபேசி எண் தான் என்பது.. இன்முகத்துடன் வரவேற்றார்.. 


சிவகுமார் : உங்க பேரு?
நான் : சதீஷ் சார்..
சிவகுமார் : அட நீங்க சதீஷ்மாஸ் ஆ?!?!
நான் : ஆமா சார், நீங்க?
சிவகுமார் : மெட்ராஸ் பவன் சிவகுமார்.. உங்களுடைய தெருகூத்து கலைஞர்கள் பற்றிய போஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு.. கீப்ட் அப்...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்..

4. என்னை உள்ளே அழைத்து சென்று, ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அறிமுகம் செய்து வைத்தார்... அவர்கள் அனைவரும் என்னை வாழ்த்தினர்.. பிரபா, கவிதைவீதி சௌந்தர், சென்னை பித்தன், மாறன் மற்றும் பலரிடம்...  நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்...


5. எனக்குனு ஒரு சீட் போட்டு நா உக்காந்துடேன்... அப்போது இன்னும் இரு பதிவர் தங்களை அறிமுக படுத்தி என்னை பற்றியும் கேட்டார்கள்.. அதில் மணிவண்ணன் அவர்களும், பதிவர் தென்றல் உரிமையாளரும் ஒருவர்...


6. பதிவர் தென்றல் என்பது ஒரு பத்திரிக்கை.. பதிவர்கள் எழுதும் சில கட்டுரைகளை அவர்களின் அனுமதியோடு பிரசுரம் செய்யப்படுகிறது... அந்த பத்திரிக்கையின் ஒரு காப்பி எனக்கும் தந்தார்...


7.அமைதியாய் அமர்ந்து இருந்தேன்.. அப்போது கே.ஆர்.பி.செந்தில் அவர்களை அழைத்து வந்து என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் சிவகுமார்..


கே.ஆர்.பி : வணக்கம், சதீஷ் ஆ?
நான் : ம்ம்ம் ஆமா சார்..
கே.ஆர்.பி : ஜாக்கியோடு ரசிகர் தான?
நான் : (எனக்கு ஆச்சரியம்) சார் உங்களுக்கு எப்படி தெரியும்?
கே.ஆர்.பி : உங்க பிளாக் படிச்சு இருக்கேன்.. நல்லா எழுதறீங்க...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்...
கே.ஆர்.பி : உங்க தலைவரும் இங்க வராரு...
நான் : (மனதிற்குள் பயங்கர சந்தோஷத்தில்) ஒகே ஒகே சார்..


பிரபா : ஜாக்கி சார் அவருக்கு உன் பக்கதுல ஒரு சீட்டு போட்டு வை..
நான் : கண்டிப்பா....


8. சிவகுமார் அவர்கள் தாங்கள் கொன்டுவந்த பிளக்ஸ் பேனரை ஒட்டினார்.. அதில் "வா நண்பா" , "சென்னை பதிவர் சங்கம்" என அழகாய் எழுதப்பட்டு இருந்தது.. மேலும் மற்றொரு பேனரில் கவுண்டமணி படம் போட்டு அழகாய் வரவேற்று இருந்தார்...


9. சென்னையை சேர்ந்த பதிவரான கேபிள்சங்கர் வந்தார்.. அதன்பிறகு பல கலகலப்பான விஷயம்லம் நடந்தது... அனைவரும் அவரை சூழ்ந்து நிற்க அந்த இடமே சிரிப்பின் பிறப்பிடமாய் மாறியது... கேபிள்சங்கர் எகிறி எகிறி குதித்து "நானும் யூத் நானும் யூத்" கூப்பாடு போட்டார்...


10. பல பிரபலமான பதிவர்கள் வருகை புரிந்தனர்... யுவகிருஷ்ணா, நரேன், சுரேகா மற்றும் பலர்... (அட என்னடா, யார் யார் வந்தங்கனு முழுசா சொல்லேன்...  -  நா முதல்முறையாக அங்கு சென்றால் எனக்கு அவர்களின் பெயர் மனதில் பதியவில்லை)


11.பின்பு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, ஒவ்வொருவராய் எழுந்த சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.. பெரும்பாலும் அவர்களுடைய அறிமுகத்தை யாரும் கவனிக்கவில்லை.... ஆனால், ஒவ்வொருவரையும் நம்ம கேபிள்ஜீ நக்கல் விட்டு கமெண்ட் அடிச்சது சூப்பர் அப்பு (நோ ஆப்பு)...


12.ஒரு பத்து பேர் பேசி முடிச்சசிருப்பாங்க.. அப்ப திடீர்னு ஒரு பரபரப்பு, ஆரவரம், கலவரம், Hero Entering... Ya u r right... My thala JackieSekar coming... அவர் பின்னால ஒரு கூட்டம்... (தலைவர்னா அப்படி தாங்க இருப்பாங்க).... நா எதோ அவரையே பாத்தேன்... எனக்கு பின்னால இருக்கற சீட்டுல இருந்து ஒரு நாலு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தார்... சில பேர் எழுந்து போய் அவர்கிட்ட அறிமுகம் பண்ணிகிட்டாங்க... எனக்கு போக பிடிக்கல...


13.என்னை அறிமுகம் படுத்திக்கொள்ள அழைத்தார்கள்.. நான் முன்னே சென்று பேசினேன்... பத்து பேர் முன்னாடி பேசினா எனக்கு கை,கால்லம் உதரும்... ஆனா அங்க எப்படி பஅவ்ளோ தைரியமா பேசினேன் எனக்கு தெரியல... என்னை பொறுத்த வரை நான் நன்றாகவே பேசினேன்...  கொஞ்சம் அதிக நேரம் எடுத்து கொண்டேன்.. அனைவரின் மனதிலும் அழகாய் பதிந்தேன்.. அங்கு என் எழுத்தை ரசிக்காதவர்கள் கூட என் பேச்சை ரசித்தனர்...


14. இப்ப சீரியஸ் ஆன விஷயத்துக்கு வரலாம்... பல முன்னணி பதிவர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைத்து பேசினார்கள்... பல விவதங்கள் முன் வைக்கப்பட்டன... யுவகிருஷ்னா அவர்கள் பல நல்ல தகவல்களை புதிய பதிவர்களுக்கு (அத கொஞ்சம் சொல்லவும் - முடியாது, சந்திப்புக்கு வாரதவங்களுக்கு அதான் தண்டனை)... கூகுள் பஸ் வந்ததில் இருந்து பதிவர்கள் குறைந்து விட்டதாக தெரிவித்தார்.. நல்ல விவாதங்கள் தற்போது இல்லை எனவும் சொன்னார்... உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளியிடவும் என அறிவுருத்தினார்...


15.அவரை தொடர்ந்து "உருப்படாத" நரேன் (நா சொல்லல அவரே தான் சொன்னாரு) பேசினார்.... பற்பல விவாதங்களை முன் வைத்தார்... ராஜீவ், ஈழ தமிழர், அன்னா ஹசாரே.. போன்ற பல முக்கிய விவாதம் நடைப்பெற்றது...


16. சிவகுமார் அவர்கள் பேச ஆரம்பித்தார்.. அதை ஒரே வரியில் சொல்ல முடியாது, ஈழ தமிழர்களை பற்றி கவலைப்படுகிறோமே தவிர நம் தமிழர்களை யாரும் கண்டுக்கொள்வது இல்லை.. டாஸ்மாக் கடையில் பள்ளி சிறுவர்கள் நிற்பது மனதிற்கு வெக்கபட வேண்டிய விஷயம்.. இதை அரசாங்கம் எப்போது தான் கண்டுக்கொள்ளும் என நம் அரசாங்கத்தை பற்றி தெரியாமல் பேசிட்டார் சைவகுமார் (சைவகுமார்)...நாம அவர மன்னிச்சடலாம்...


17.அப்புறம் சுரேகா, தாங்கள் ஆரம்பித்த "கேட்டால் கிடைக்கும்"  பற்றி சூடாக பேசினார்... ஆட்டோ மீட்டர் பற்றியும் தன் கருத்தை முன் வைத்தார்... வெகுஜன மக்களின் நிலை குறித்து கடிந்து கொண்டார்...

18.கணிப்பொறியில் தமிழை உபயோகிக்க முடியும் எனவும் அதை அனைவருக்கும் அறிமுகம் படுத்தவும் அனைவரும் முடிவு எடுத்தனர்... அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்..


19. பின் கூட்டம் தொடர்ந்து நடக்க, சிவகுமார் அண்ணன் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்... பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் நல்ல புத்தகங்களை கொண்டு வந்து புதிய பதிவருக்கு பரிசளிக்கும் படி சொல்லி இருந்தார்கள்.. அதை சரிவர செய்தது சிவகுமார் அண்ணன் ம்ட்டும் தான்.. "ஹென்றி ஃபோர்ட், எழுதியவர் இலந்தை சு.இராமசாமி " அந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.. அதில் அவரின் கையெழுத்தும் அழகாய் போட்டு தந்தார்... அண்ணன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...


20. கூட்டம் முடிந்து ஒவ்வோருவரய் கலைந்தனர்.... பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த சந்தோஷம் சிவகுமார் முகத்திலும் பிலாசஃபி பிரபா முகத்திலும்.. என்னை இந்த சந்திப்பிற்கு அழைத்து அறிமுகபடுத்தி வைத்த இவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல....








மீண்டும் சந்திப்போம்.........






சதீஷ்.............


Saturday 3 September 2011

என் மச்சானின் மனசாட்சி

வணக்கம் தோழர்களே, என் மச்சானின் மனசாட்சியின் திறப்பு விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி (முன்னாலயும் பின்னாலயும் மூடிக்கிட்டு என்ன விஷம்னு சொல்லுடா - சரிங்க பாஸ்)....


நீங்க மேல படிச்சிங்களே ஒன்னு அது தான் தலைப்பு (எங்க கானோம்)...
என் மச்சானின் மனசாட்சி ( தோ இருக்கா )... ஒவ்வொரு மனுஷனுக்கும் வாழ்க்கையில சிலபல பிரச்சனைகள் வரும்  (வாழ்க்கைனாலே பிரச்சன தான்பா)... பெரிய பிரச்சன வந்த அத மாத்தவங்ககிட்ட பகிர்ந்து தீத்துபோம்... ஆனா ஒன்னுமே இல்லாத சின்ன சின்ன பிரச்சனைக்கு நாமலே யோசிச்சு அத முடிச்சுடுவோம்...


உதாரணத்துக்கு, இன்னைக்கு ஆவடிக்கு போகலாமா இல்ல அம்பத்தூர் போகலாமா? சினிமாக்கு போகலாமா இல்ல காலேஜ்க்கு போகலாமா? இந்த மாதிரி சின்ன சின்ன கேள்விக்கு (எதோ பிரச்சனைய பத்தி சொல்ரதா சொன்ன..) நாமே பதில் தேடிப்போம்... அதுக்கு பெரிதும் உதவியாய் இருப்பது ந்ம்முடைய மனம் (மனசுங்க) தான்... அப்பேர்பட்ட என் மனதிற்க்கு நான் இட்ட பெயர் தான் "என் மச்சான்" (துதுதுதுது கேவலமா இருக்கு.. - துடைச்சுகிட்டேன்)

நான் பெரிய பிரச்சனையா இருந்தாலும் சரி சின்ன பிரச்சனையா இருந்தாலும் சரி என் மச்சான்கிட்ட தான் கேட்பேன்... எந்த ஒரு சூழ்நிலையுலும் என்னை கைவிடாத என் தோழன் அவன், நான் கேட்கும் கேள்விக்கு நடுநிலையான பதில் தந்து என்னை காப்பாற்றும் என் தோழன்.. நான் சிரிக்கும் போதும் அழும் போதும் என்னோடே இருக்கும் என் தோழன் மச்சான்....


வலிய தாங்கற சக்தி மனசுக்கு இருக்குனு யாரோ சொன்னாங்க... ஆனா அது உண்மை தான்... நான் ஜெயிச்சா நாலு பேர் பின்னால இருப்பான் (உன் followers சொல்றயா - டேய் நீ மொதலுக்கே மோசம் பண்ணிடுவல போல இருக்கே) ஆனா நா தோத்தா என் மச்சான் மட்டும் தான் என்கூட இருப்பான்....
i love my machansssss (எங்கோ கெகேட்ட குரல் - இது அது இல்லைங்கோ)


யார் யாரயோ காதலிக்குறோம் ஆனா நம்மோட மனச எத்தன பேர் காதலிக்குறோம், எத்தன பேர் அவன் கூட பேசறோம்... அவனை மதிச்சு அவன் கூட பேசி பார் உன்னை வெற்றியின் உச்சியில் நிறுத்துவான் (தோ வந்த்டாருடா புலவரு).... நா வாழ்க்கையில அடிப்பட்டு நின்னப்ப என் கூட இருந்தவன் என் மச்சான்.... யாருமே இல்லாத போது எனக்கு பேச்சு துணையாகவும் ஆசானாகவும் இருந்தவன் என் மச்சான்...


உங்க மனசு பேசுமா'னு நீங்க கேக்கறது புரியது... சாமியார் சொல்ற மாதிரி அதலாம் நல்லவங்களுக்கு தான் கேக்கும் (அப்புறம் எப்படி உனக்கு கேக்குது..)... ஒவ்வோரு விஷயத்தை அலசும் போது நமக்கு ஒரு முடிவு கிடைக்காது, அப்ப உங்க மனசுகிட்ட கேளுங்க என்ன பண்ணலாம்னு, அது ஒரு பதிலயும் அதுக்கான வழியையும் காட்டும்... அந்த வழில போன நிச்சயம் வெற்றி கிடைக்கும்..... எவன் பேச்சயும் கேக்காதீங்க, அவன் உன்னயும் என்னையும் சேத்து கவுத்திருவான்.... எப்பவும் உங்க மனசு மச்சான் சொல்றத கேளுங்க...


நா அதிகமா என் மச்சானை நம்புறவேன்.. அதுக்கான காரணத்தையும் சொல்லிடேன்... இது என் கருத்து மட்டுமே... மனமிருந்தால் மார்க்கமுண்டு, என் மச்சான் இருந்தால் இந்த உலகமே என்னுது... 


இந்த தலைப்பில் என் பதிவு புதிய வடிவில் தொடரும், அதற்க்கு உங்கள் ஆதரவு வேண்டும் (அரசியல் மூளையோ - அதலாம் இல்லைபா - ஓ மூளையே இல்லையோ).... 












சதீஷ்......... (முன்னேறிட்டான்)


Friday 2 September 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 03/09/2011

காமெடி:

எனக்கும் என் தம்பிக்கும் நடக்கும் உரையாடல் போன்று,

தம்பி : அது என்ன கடை? எப்ப பாத்தாலும் ஒரே கூட்டமா இருக்கு, ஒரு விளம்பர பலகை கூட இல்ல.... ( என்று டாஸ்மாக் கடையை காண்பித்து கேட்டான்)

நான் : (நம்ம தம்பி இப்படி உலகம் தெரியா புள்ளயா இருக்கேனு மனசுல நினைச்சுகிட்டு) எனக்கு அது என்ன கடைனு சரியா தெரியல நான் பிலாசஃபி பிரபாகரன கேட்டு சொல்றனு சொன்னேன்

தம்பி : அட என்னன இது கூட தெரியாம இருக்க அது ஒயின்ஷாப்ன....

நான் : மக்கா, சாய்ச்சுபுட்டான்...

    -------------------------------------------------------------------------------------------------------




வளர்ச்சி:

கொஞ்ச நாள எல்லாருடைய பதிவையும் விரும்பி படிக்க ஆரம்பிச்சுட்டேன், அதற்க்கு பதில் (அதாங்க கமெண்ட்) எழுதியும் வருகிறேன்.. நண்பர் சசிக்குமார் (வந்தேமாதரம்) ஒரு பதிவுல புதிய பதிவருக்கான சில ஆலோசனை தந்து இருந்தார் அதன் படி செயல்படுகிறேன்... என்னை மேலும் மேலும் மெருகேற்ற அது உதவுகிறது....


சில பதிவர்கள் அவர்களுடைய பிளாக் முகவரியை கமெண்ட் போடும் போது சேர்த்து விடுவார்கள், அந்த மாதிரி செய்ய எனக்கு ஆரம்பத்துல பிடிக்கல... கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு ஆனா நா இனியும் அந்த மாதிரி பண்ணாம இருந்தா என்ன அம்போனு நடு தெருவுல நிறுத்திடுவா(வி)ங்கனு தெரிஞ்சுருச்சு... அதனால அசிங்கமே பாக்காமா என்ன பிளாக் முகவரியை கமெண்ட்டுடன் போட ஆரம்பிச்சுடேன்....

          -----------------------------------------------------------------------------------------------


வருத்தம் :


மூனு நாளைக்கு முன்னாடி காலேஜ்ல நண்பன்கிட்ட இருந்து ஒரு பென்டிரைவ் வாங்கிட்டு வந்தேன் (fully sex movies).... அத பத்தி எதுக்கு இப்ப பேசறேன்னா அதுல குறைஞ்சது ஒரு 50 வீடியோக்கள் தமிழில் இருந்தது.. இதில ஒன்னும் ஆச்சரியம் இல்ல தான், அந்த வீடியோகள் தங்களுடைய மனைவிகளை அம்மணமாக படம் எடுத்து இருந்த கணவன்கள்... தான் ரசிப்பதற்காக எடுத்த வீடியோக்கள் இன்று உலகமே பார்க்கிறது, படிப்பறிவில்லா மனிதன் செய்யும் சிறய  பெரிய தவறு அவனுடைய குடும்பத்தையே அசிங்க படுத்துகிறது... டெக்னாலஜி வளர்ந்து இருக்கற இந்த காலத்துல நம்ம போன்ல இருக்கற வீடியோ வெளி உலகிற்கு போவது ஆச்சரியம் இல்லை.. என் கேள்வி என்னனா, அவன் போட்டோ எடுக்கும் போது என்ன மயித்துக்குடி காட்டிறிங்க... கணவன்கள் மனைவியை எடுப்பதும் காதலன் காதலியை அம்மணமாக வீடியோ எடுத்து வெளியிடுவது கேவலமான் ஒன்று... படிச்சு பட்டம் வாங்கன பரதேசிங்க கூட இந்த வேலயை செய்யுதுங்க.....


என்னை இந்த பதிவுலகமே அசிங்காமாக நினைச்சாலும் பரவாலனு இந்த பதிவை வெளியிட காரணம், இனியாவது இந்த தவறு திருத்தபட வேணும் தான்...


         ---------------------------------------------------------------------------------------


3G explanation is  Go! Goal! Gold! தங்கம் விக்கற விலைக்கு இது ரொம்ப அவசியம் தான்.... ஒரு பையனோட டிசார்ட் பின்னாடி எழுதி இருந்துச்சு..... 


         ---------------------------------------------------------------------------------------


மங்காத்தா : 


அட நா எழுதும் எழுத போறது இல்ல.. ஜெஸ்ட் ஃபோர் லைன்ஸ்... எல்லா பதிவரும் மங்காத்தா பத்தி பக்கம் பக்கமா எழுது தள்ளிடாங்க... நான் எழுதனா சத்தியமா தேரபோறது இல்ல... என் தல அஜித்தின் 50வது படம் வெற்றி அடைந்துவிட்டது (நாங்க ஜெயிச்சுடோம்), படத்தை முதல் நாளே பக்காதது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு... இன்னைக்கு தான் சென்னை உதயம் தியேட்டரில் படத்தை பார்த்தேன்..... வாழ்த்துகள் தல....


           -------------------------------------------------------------------------------------------


என்னை பற்றி:


யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தாரனு விவேக் ஒரு படத்துல கேக்கர மாறி, யாருமே பாக்காத பிளாக்குல யாருக்குடா பதிவ போடறனு நீங்க கேக்கறது புரியுது... என்னையும் நம்பி எனக்கு பின்னால (followers) நாலு பேர் இருக்காங்கல அவங்களுக்காச்சும் நான் எழுதனும்ல... அதிலும்  என்க்கு கமெண்ட் போடும் சிவக்குமார் அன்பர் நண்பர் பதிவர் இருக்காரே.... அவருக்கு தான் என் எழுத்து...


             -----------------------------------------------------------------------------------


பின் குறிப்பு :


நானும் எவ்ளோ நாள் தாங்க நல்லவனாவே நடிக்கறது... காமெடியா எழுத நானும் டிரை பண்றேன், ம்ம்ம் சுத்தமா வரல.... பேசாம இனிமே துய தமிழ்ல எழுதலாமானு யோசிக்கறேன்.. அப்படி இப்படினு என்னத்தயோ எழுதிக்கிட்டு இருக்கேன்... நா எழுதறது எனக்கே பிடிக்கல.... பாக்கலாம் என்ன தான் மேற்க்கொண்டு நடக்குதுனு.....


                    --------------------------------------------------------------------------------------








சதீஷ்........... (வெளங்காதவன் வெரும்பய சோம்பேறி பைத்தியக்காரன்)