என் தோழர்கள்

Saturday 9 June 2012

செருப்பு

           பெரிய பருப்பு மாதிரி பேசாதடா... சென்னைவாசிகளின் மிக பெரிய ஆசிர்வாத சொல்.. இச்சொல்லை உச்சரிக்காதவன் சிங்கார சென்னையில் பிறந்த சிங்கக்குட்டி அல்ல, அவனின் பூர்விகமும் சென்னையாய் இருக்காது. வேறு ஊரிலிருந்து குடி பெயர்ந்தவராக இருக்கலாம்... இன்று பிற ஊரை சேர்ந்தவர்களும் இதை கற்றுக் கொண்டு தன்னை ஒரு அழகிய சென்னைவாசியாக மாற்றி கொண்டனர் என்பதே உண்மை..


நா சென்னை மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு வரை படிச்சேன்... அப்ப என் கூட படிக்கர பசங்ககிட்ட போடா எருமை அப்படினு திட்டினா கூடா அது பெரிய மேட்டாரா ஆக்கிடுவாங்க.. அது கூட கெட்ட வார்த்தை லிஸ்ட்'ல தான் இருந்துச்சு..

இப்ப அதே பள்ளியில் படிக்கற பசங்க, எங்க ஏரியால இருக்கறவனுங்க பேசற பேச்ச காது கொடுத்து கேக்க முடியல... தம்மாதுண்டு இருந்துகினு அதுங்க பேசறது இருக்கே.. ஓத்__ அப்படியே உரிச்சு உப்புகன்டம் வச்சிறனும்... அந்த பசங்களுக்குலாம் முழுசா பத்து வயசு கூட இருக்காது.. இந்த இடத்துல நா அந்த பள்ளிகூடத்த குறை சொல்லல.. நானும் அங்கதானே படிச்சேன்.. எப்படி விட்டு கொடுக்க முடியும்... இந்த நாதரிங்க கெட்டு குட்டி சுவரா போகுது..

நா படிச்ச அப்போ, எங்களில் யாரோட நடவடிக்கையாவது மாறிச்சுனா அதை உடனே டீச்சர் பாத்து எங்கள அப்பவே தண்டிப்பாங்க.... ஆனா இப்ப டீச்சர் எல்லாரும் எதயும் கண்டுகறது இல்ல.. ஏன்னா இந்த பரதேசிங்க அப்படி நடந்துகிதுங்க... அவங்க அதனால ஒரு முடிவுக்கு வந்தறாஙக்.. சேத்துல கல்ல அடிச்சா அது நமக்கு தான் சங்கடம்...

அப்ப நீ மட்டும் இப்ப இந்த மாறிலாம் பேசறியேனு கேப்பவர்களுக்கு, இந்த உலகத்துல எவனும் நல்லவன் கிடையாது.. எவனும் கேட்டவன் கிடையாது... உலகத்தை பத்தி புரிஞ்சவனுக்கு எவனும் அறிவுரை பண்ண தேவை இல்லை... ஆனா அந்த அறிவுரைய கேக்கறவனுக்கு என்ன நடக்கும்னு எவனுக்கும் தெரியாது....

ஒரு முறை பதிவர் சந்திப்பு அப்போ, மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்கள், சின்ன பசங்க எல்லாம் இப்ப ரொம்ப கெட்டு போச்சு.. சின்ன வயசுலயே அவனுங்க டாஸ்மாக்கு போறானுங்க... அதுக்கு எதாச்சும் வழி பண்ணனும் அப்படினு தன்னோட அதங்கத்த வெளிப்படுத்தனாரு... அதுவும் சரி தான்... அவருக்கு ஏன் அவ்ளோ கோபம் அன்னைக்கு வந்துச்சு அப்படினு எனக்கு தெரியல...

ஆனா நாலு நாளைக்கு முன்னாடி என் பிரண்டோட தம்பி சிகரெட் புடிக்கும் போது என் கண்ணுல மாட்டிகிட்டான்... அந்த ரோட்டில நாலு வச்சேன்.. வாங்கிகிட்டு சைலன்ட் ஆ போய்டான்... அப்பா இல்லதா பையன அவங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்க.. இந்த நாய் என்னான தம் அடிக்குது.... அவங்க அம்மாகிட்ட சொல்லவும் எனக்கு மனசு வரல.. அவங்க அண்ணன் கிட்ட இத பத்தி கேட்டதுக்கு அவன் தண்ணி அடிக்கற அளவுக்கு போய்ட்டான்டா.. இப்ப தான் கொஞ்ச நாள ஓக்கியமா இருக்கான் அப்படினு சொல்றான்.... இதுக்கு மேல நான் என்னத்த சொல்றது...

இந்த இடத்துல நா இப்போ யாரை குறை சொல்றது... அவனோட குடும்பத்தய, அவனோட பள்ளியைய, அவனோட நண்பர்களைய, அவனோட ஏரியாவைய, அவனோட இந்த நிலைமைக்கு யார் காரணம்... தெரியலயே...

பேசமா எல்லாரும் கிளம்பி அமெரிக்கா போய்ரலாமா... அங்க எப்படினு அங்க போனா தான தெரியும்...

இன்னொரு மேட்டர்.. இந்த பையன் பேரு மணி... பத்தாவது படிக்கறான்.. கூட படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கு அந்த பக்கி.. அந்த பொண்ணோட அப்பன்காரன் ஆட்டோல நாலு அஞ்சு பேரோட வந்து ஒரு காட்டுகாட்டிடு போய்டான்... தேவையா இது.. மூடிகிட்டு இருந்து இருக்கலாமா.... பத்தவப்புலயே லவ்... விளங்குமா இதலாம்...

பெத்தவங்க எல்லாருமே தான் புள்ளய நல்ல புள்ளய வளக்கனும்னு தான் கஷ்டப்பட்டு உழைக்கறாங்க.. மெட்ரிகுலேஷன் பள்ளில சேத்து படிக்க வைக்கறாங்க... ஆனா ?????

ஆனா நா ஒன்ன மட்டும் உறுதியா சொல்வேன்... பொறக்கும் போது எல்லா குழந்தையும் நல்லா குழந்தை தான்.. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே.... இது எந்த அளவுக்கு உண்மை அப்படினு நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்... அதுக்காக நா யாரையும் குறை சொல்றனு அர்த்தம் இல்லை... ஒரு குழந்தையோட ஒவ்வோரு அசைவையும் அம்மா கவனிச்சாலே போதும்.. அந்த பையன் மனசுல ஒரு பயம் இருக்கும்... வாழ்க்கையில இப்ப நல்ல நிலைமைல இருக்க ஒவ்வொருத்தனுக்கும் அவங்க அம்மாவோட பங்களிப்பு அதிகமா இருக்கும்....

என்னடா சதீஷ், சும்மா பசங்களயே குறை சொல்லிகிட்டு இருக்க... இல்ல மச்சான், சட்டப்படி ஆம்பளைங்க பெண்களை பற்றி பேச கூடாது... ஆனா அவங்களும் லேசுப்பட்டவங்க கிடையாது.. பல பசங்க தண்ணி அடிச்சதுக்கு காரணமா கட்டறது அவன் லவ் பண்ண பொண்ண தான்.... எதுக்கு டா இந்த பொழப்பு... போங்கடா போய் வேளையை பாருங்க....

நான் காலேஜ் படிக்கும் போது என்னை ஒரு ஆசிரியர் திட்டிய வார்த்தைகள் பின்வருமாறு "நீ பெரிய பருப்பா இருந்தா அதலாம் வெளிய வச்சிக்கோ" அப்ப நான் முதல் வருடம் தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு வரைக்கும் நான் அதை மறக்கல அப்படினு சொல்ல முடியாது, மறக்க முடியலனு வேணா சொல்லலாம்... நானும் அன்னைக்கு என்ன பண்ணேன்னு சொல்லனும்ல... அவங்க சொன்னத எழுதிட்டு போகல அதுக்கு என்னை திட்டிக்கிடே இருந்தாங்க... மேம், இந்த மாதிரிலாம் திட்டாதீங்க அப்படினு தான் சொன்னேன்.. அவ்ளோ தான் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் அவளோ ரணகளம்....

எனக்கு வரவர சென்னையில இருக்கவே பிடிக்கல, ஆனா என்ன பண்றது.. இதான் சொந்த ஊர்னு ஆயி போச்சு..இதல எல்லாம் சகித்து கொள்ளும் மனபக்குவம் சென்னைவாசிக்கு அதிகம் உண்டு.... இப்படியே போய்ட்டு இருந்த என்னப்பா ஆகறது இதுகு ஒரு முடிவே இல்லயா....

**முடிவு**

எல்லாம் வல்ல இறைவா போற்றி.....


என்றும் சென்னை வாசியாக செருப்பு பருப்புடன் பொறுப்பாய்
சதீஷ் மாஸ்......


8 comments:

துளசி கோபால் said...

அடடா.....பயங்கர ஃபீலிங்ஸ்லே இருக்கீங்க போல!!!!

என்னதான் பெற்றோர் கவனிச்சு வளர்த்தாலும்...... அதது வெளியே எல்லாத்தையும் கத்துக்குதே:(

சதீஷ் மாஸ் said...

// துளசி கோபால் said...

அடடா.....பயங்கர ஃபீலிங்ஸ்லே இருக்கீங்க போல!!!! ..... //

என்ன பண்றது என்ன கலிகாலம்...

சிவக்குமார் said...

சிறுவர்களை அடிப்பதால் திருத்த முடியாது. அவர்கள் சீரழிவதற்கான அனைத்து வழிகளும் திறந்தே இருக்கிறது. இனிமேல் வேறு மறைவிடத்திலிருந்து அவன் தம்மடிக்கத்தான் போகிறான். அன்னையின் பிள்ளையாக இருக்கும் வரை குழந்தை ந்ன்றாக இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்த பின்புதான் அது கெட்டுப்போகிறது.

ANBUTHIL said...

நீங்க சென்னை காரன்னு நிருபிசிடிங்க

சதீஷ் மாஸ் said...

// தமிழானவன் said...
சிறுவர்களை அடிப்பதால் திருத்த முடியாது. அவர்கள் சீரழிவதற்கான அனைத்து வழிகளும் திறந்தே இருக்கிறது. இனிமேல் வேறு மறைவிடத்திலிருந்து அவன் தம்மடிக்கத்தான் போகிறான். அன்னையின் பிள்ளையாக இருக்கும் வரை குழந்தை ந்ன்றாக இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்த பின்புதான் அது கெட்டுப்போகிறது. //

இது முற்றிலும் ஏற்று கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான்.. சின்ன பசங்கனு தெரிஞ்சி கூட தம்,மாவா,பாக்கு,பீர்,ரம் தர இந்த கடைக்காரங்கள என்னனு சொல்றது...

சதீஷ் மாஸ் said...

// அன்பை தேடி,,அன்பு said...
நீங்க சென்னை காரன்னு நிருபிசிடிங்க //

ஜாலியா சிங்கப்பூர்ல இருந்துக்கிட்டு இருக்கீங்க.. எங்க நிலைமை தான் கவலைக்கிடம்....

Unknown said...

Hi Satish... How are you...

Balaganesan said...

u written well sathish........