என் தோழர்கள்

Tuesday, 30 August 2011

யார் பெற்ற பிள்ளை, மாயவரசனின் மகன் - தெரு கூத்து

                   கடைசியா எழுதன வறுவல் மற்றும் நொருவல எங்க ஊர் திருவிழாவில் தெருகூத்து என்று குறிப்பிட்டு இருந்தேன்.. அதை பற்றி மேலும் தகவல்கள்(மொக்கைகள்)....


யார் பெற்ற பிள்ளை மாயவரசனின் மகன் என்பது தான் நாடகத்தின் தலைப்பு...... மொத்தம் பத்து கலைஞர்கள் இருந்தனர்.. அதில் மூன்று பேர் பின் வாசிப்பு, அர்மோனிய பெட்டி, தவில், ஜால்ரா... ஒரு நாடகம் போட இது மட்டும் போதுமா என ஆராய்ந்தால் கண்டிப்பாக முடியும் என்பது தான் பதில்.. அழகிய ஆண்களும் அவர்களின் திறமைக்கு முன்னும் இசைகருவிகளா முக்கியம்...

 ஶ்ரீ சோலையம்மன் நாடக மன்றம், சோழனும் கிராமம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு... என்று அறிவிப்பு பலகை அவர்களுக்கு பின்னால் கட்டபட்டு இருந்தது.. அவர்கள் அனைவரும் அந்த ஊராரே அவர்... 


தெருகூத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் பெண்கள் இல்லாமல் ஆண்களே அனைத்து வேடமும் பூண்டு நடிப்பர்.. கர்ஜிக்கும் ஆண் குரல் கூட பெண் வேடம் இட்டால் பூ போல மாறுகிறது...


இப்ப கூத்துக்கு வறுவோம்... காலத்தாலும் பிறவற்றாலும் அழிக்க முடியாத அந்த கோமாளி கதாபாத்திரம், உச்சந்தலை வேடிக்க அடிக்கும் அந்த சாட்டை அடி, ஒத்த தவில், பெரிய சைஸ் ஆர்மோனிய பெட்டி, ஆண்கள் சூடும் பெண் வேடம் நடு நடுவுல கோத்து விடும் அந்த நாரதரர் (மாமா பையன்), .... இந்த கூத்துல இந்த வேடத்த ஒரு 17 இல்ல 18 வயசு இருக்கர பையன் போட்டு இருந்தான், ரொம்ப அருமையா இருந்துச்சு... நாரதர் மாறி பேசாம சாதரணமாவே பெசி அசத்தினான், நிச்சயம் அவங்க கலை வாரிசா தான் இருக்கனும்...


எப்பவும் கூத்துனா அதிகமா பாடல் காட்சிகள் வரும், இவங்க மட்டும் விதிவிலக்கா... எனக்கு எது புதுச தெரிஞ்சுதுனா சினிமா படல்களும் அந்த மெட்டில் பாடிய பாடல்கள் தான், இது வரைக்கும் நா இந்த மாறி கேட்டது இல்ல.. அவங்களுக்கும் ஒரு செஞ்ச் வேணும்ல...


ஒவ்வோரு கதாபாத்திரமும் அருமை.. சற்றும் மனம் தளராத நடிகர்கள்.. இடியே இடித்தாலும் தங்களுடைய காட்சியை சிறப்பாகவே நசித்து முடிக்கின்றனர்.. முக்கியமாக அழும் காட்சிகளில் அத்தனை பேர் முன்னிலையில் சர்வசாதரணமாக நடிக்கின்றனர், வேரு யாரலும் முடியாது... பக்கம் பக்கமாய் வசனங்கள் பாடல்கள் நடிப்புகள் எங்கும் மறவாமல் நடித்து முடிப்பதே பெரும் சிரமம்... இக்கால நடிகர்கள் அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும், அப்படி ஒரு நடிப்பின் சக்கரவர்த்தி அவர்கள்....


இவர்கள் தான் மக்களுக்கான உண்மையான கலைஞர்கள்...

இவர்கள் வாங்கும் பணம், இவர்கள் வந்து போரதுக்கும் மேக்கப் போடறதுக்குமே சரியா இருக்கும்... தன் அழியாமல் காக்கும் கலைஞர்கள் இவர்கள்.. எப்பவும் போல மேக்கப் போடர இடத்துல நம்மூர் ஆசாமிங்க குத்தவச்சு இருந்தாங்க...பெண் வேஷம் போட்டவங்க மேடைக்கு வந்த ஓடி போய் ஒரு 50 ரூபாய் நோட்ட ஜாக்கட்டுல குத்தரது... நன்கொடைங்கற பேருல ஒரு கிழிஞ்சு போன 10 ரூபா கொடுத்துட்டடவன் பேர அவனே 10 முற மைக்கில கத்திடு போவான்.. இங்களாம் மைக்க புடுங்கி விட முடியாதோ...


சீரியசான சீன் போய்ட்டு இருக்கும் போது தான், ஒய் ஒய் ட்ருட்ருட்ரா னு எவனாச்சும் மாடு ஓட்டுவான்.. உருருரனு பைக்க முறுக்கவான்.. அவன் கெட்டது பத்தாதுனு இன்னும் நாலு புண்ணியவான் அவன் பின்னால போவன்.. மொத்த கூட்டமும் கூத்த பாக்காம இவன் பண்ற கூத்த பாத்துட்டு இருக்கும்....


மேடை மட்டும் கொஞ்சம் சரியா போடல அம்புட்டு தான், அவங்க போடர ஆட்டத்துக்கு எல்லாரும் கீழ தான் கிடக்கனும்.. என்னா ஆட்டம் போடராங்க... முக்கியமா ஒருத்தர் அம்மன் வேஷம் போட்டு ஆடனாரு பாருங்க குழந்தைலாம் பயத்துல கண்ண மூடிக்கிச்சு ( மீ டு )... ஒரு உயிரோட இருக்கற கோழிய மேடையிலயே அதோட கழுத்த கடிச்சு இரத்தத்த குடிச்ச காட்சி பயங்கரமா இருந்துச்சு....


இன்னும் நாடக கலைஞர்கள் தங்களுடைய சொத்தான அந்த காலத்து ஹேர் ஸ்டைலான ஃப்ங்க் மாத்தவே இல்ல.. ஒரு வேள சென்டிமெண்டா இருக்குமோ..எந்த வித அதட்டலும் இல்லாம அப்பாவி மூஞ்சு தான் இருந்துச்சு எல்லாருக்கும்...அவர்களின் கலையை வாழ வைக்க வேண்டும் என்ற அதங்கம் மட்டுமே தெரிந்தது...


தலைப்பை மட்டும் பெருசா போட்டுட்டு கத என்னனு சொல்ல மாட்றானேனு தானே யோசிக்கிரிங்க... கிட்டத்தட்ட ஒரு கூத்து எட்டு மணிநேரம் நடக்கும், முழுசா பாத்தாலே ஒன்னும் புரியாது.. நா பாத்தது வெரும் ஒரு மணி நேரம் தான், அதுலயும் நோட்ஸ் எடுத்ததுலயே கவனம் போய்டுச்சு... என்ன பண்றது இப்ப தான பதிவுலகிற்கு வந்து இருக்கேன்.. போக போக கத்துக்கறேன் (அப்ப நீ எழுதறத நிறுத்தமாட்ட).....


தெருகூத்து என்னும் கலை அழிகிறது என்பதி விட அது அழிக்கபடுகிறது என்பது தான் உண்மை.. நாங்க வெறும் 50 பேர் கூட அந்த கூத்த பாக்கல.. சுத்தமா கூட்டமே இல்ல, இருந்தாலும் 8மணி நேரம் கூத்து நடைப்பெற்றது.. நாம் கலையை ரசித்து கை தட்டி பாராட்டி ஆராவரம் செய்தால் தான் அந்த கலைஞனும் கலையும் இன்பமுறும் ( கடைசிஒரு மணி நேரம் மட்டுமே கூத்து பாத்த நீயெல்லாம் அத பேச கூடாது).....


அவர்களின் கலை வாழ வேண்டும் என்று ஆசைபடும் சிறிய ரசிகன்...
(இங்குள்ள போட்டோகள் திரட்டியில் திரட்டியதே)

சதீஷ்...........


Sunday, 28 August 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 28/08/2011

ஃபேஸ்புக் கலட்டா:
காலை எழுந்தவுடனே பல்ல கூட தேய்க்காம ஃபேஸ்புக்ல ஸ்டேட்ஸ் போடரத வழக்கமா வச்சி இருக்க என்ன மாறி சோம்பேறி கூட தான் இன்னைக்கு சண்டை.. மங்காத்த படம் வேலாயுதம் படம் ரெண்டுத்துக்கும் நடந்த சண்டை தான்.. இது அஜித்துக்கும் விஜய்க்கும் தெரியுமானு கூட யோசிக்கல.. வேலாயுதம் டிரெய்லர் ரிலீஸ் ஆயிடுச்சு அதானலாயே மங்காத்தா படம் ஓடாதுனு நண்பர் சொன்னதுதான் அதுக்குள்ள எதன பேரு சண்டைக்கு வந்துடானுங்க... எங்க தல பெருச உங்க தளபதி பெருசனு அவங்க அப்பா வரைக்கும் போயாச்சு... இதுல ஹைலேட் என்னனா எங்க தளபதி விஜய் டெல்லி போய் அன்னா'வை சந்தித்ததுக்கு அப்புறம் தான் பார்லிமெண்ட் கூட லோக்பாலை ஏத்துக்கிச்சுனு சொன்னது... அப்படியே என் ஈரக்கொலயே அடிப்போச்சு..... 
              -------------------------------------------------------------------------------


திருவான்மியூர் பயணம்:
நண்பன் பாண்டிச்சேரி சொல்வதால் அவனை வழி அனுப்ப சென்றேன்.. இரண்டு பேர் மட்டுமே என்பதால் டூவிலரில் பயணித்தோம்... எஸ் ஆர் பி டூல்ஸ் தாண்டியதும் நாங்கள் பலவற்றை ரசிக்க ஆரம்பித்தோம்.. அதங்க நம்ம ஐடி கேர்ள்ஸ், என் வீடு தாம்பரம் பக்கத்துல அதனால அங்கே பயணிப்பது அபூர்வம் தான்... என்ன அழகு, என்ன கலரு, என்ன ஃபிகரு...மாடர்ன் கல்சர், வேஸ்டர்ன் டிரஸ்.... அ அ அ அ வ் வ் வ் வ் வ்............
நண்பனை வழி அனுப்ப நான் உடன் சென்று இருந்தேன்.. ஆனால் பல பெண்கள் தனியாக பேருந்தில் பயணித்தது ஆச்சரியமாக இருந்தது... நான் தான் இன்னும் 1800லயே இருக்கேன் ஆனா மத்தவங்களாம் முன்னேறிடாங்க... இது 2011 சார்...
       -------------------------------------------------------------------------------

அழைப்பு:
சென்ற பதிவில் தெரிவித்தை போன்றே எனக்கான அங்கிகாரம் இந்த பதிவுலகில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது... தமிழ் மணம் என் பிளாக்கை ஏற்றுக்கொண்டது, எனக்கான ரேங்க் 1582ல் தற்போது உள்ளது... நான் பதிவு செய்யும் போது 1600 என்று இருந்தது...
வருகிற செப்டம்பர் 4 ஙாயிறு அன்று சென்னையில் சென்னை யூத் பதிவர் சங்கம் கூட்டம் நடைப்பெறுகிறது என எனக்கு அழைப்பு வந்து இருந்தது.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. இது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்... அங்கு சென்றால் பல நண்பர்கள் வட்டம் அமையும் என நினைக்கிறேன் பல பெரிய பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்... நிச்சயம் கலந்து கொள்ள முனைக்கிறேன்...
உங்களை இந்த அடியேன் அழைக்கிறேன், கூட்டத்தில் கலந்துக்கொள்ள... மேலும் விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்
         -------------------------------------------------------------------------------------
 
திருவிழா:
ஆடி 7ம் வார திருவிழா எங்க ஏரியால இப்ப நடக்குது..கோவில் பெரு முத்துமாரியம்மன் ஆலயம் (டேய் கன்னத்துல போடுடா).... தீமிதி திருவிழா வான வேடிக்கை தெரு கூத்துனு ஒரே அமக்களம்... ஊரே கூடி நிக்குது அந்த திருவிழா பாக்க.... சின்ன வயசுல முத ஆளா போய் நிப்பேன்... இப்ப வயசுக்கு வந்ததுனால பெரிய பையன் ஆனதால போக பிடிக்கல.... எப்படியும் தெரு கூத்து பாக்க போகனும்.... 
           -----------------------------------------------------------------------------------


மிண்டும் சந்திப்போம்.......


சதீஷ்...............


Saturday, 27 August 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 27/08/2011

தமிழ் மணம்:


உலக தமிழர்களுக்கு மிக பெரிய திரட்டியாக உள்ள தமிழ் மணம்,  என்னோட இந்த பிளாக்கை தன்னோடு இணைத்து கொண்டது.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. இனி என் பணி செவ்வனே தங்கு தடையின்றி நடக்கும்... (வச்சுருக்க ஒன்றனா பிளாக்குக்கு என்னா சீன் போடரான்)


              -----------------------------------------------------------------------------------

அறிவிப்பு:


பல பேரின் பிளாக்கை பார்த்து நான் என்னுடைய பிளாக்கை மேம்படுத்தி வருகிறேன்... பல தகவல் அறிய முடிக்கிறது.. (ஆட்டய போட்டத கூட நாங்க பப்ளிக்கா சொல்லுவொம்ல)...கடய திறந்து பல நாள் ஆச்சு இன்னும் கல்லா(கள்ளா) தான் கட்டல...


             ------------------------------------------------------------------------------------


சந்தோஷம்:

என் தோழி நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று பேசியது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.. சில கசப்பான சம்பத்தால் ஏற்பட்ட விரிசல் ஒன்று சேராதோ என நினைத்தேன், ஆனால் கடவுளின் கருணை தான் இன்று நான் அவளோடு பேசியது... மன்னிப்பு கேட்க தான் ஏனோ வாய்ப்பு அமையவில்லை.. இந்த நட்பு மீண்டும் பிரியாத அளவிற்கு அமைய விரும்புகிறேன்... 


           --------------------------------------------------------------------------------------


என்னுடைய பகுதி:

ஃபேஸ்புக் Sathish Mass (கிளிக் செய்யவும்)
 ஃபேஸ்புக் Sathish MasS - சதீஷ் மாஸ் பதிவர் (கிளிக் செய்யவும்)
டிவிட்டர் MasS_Sathish (கிளிக் செய்யவும்)

           --------------------------------------------------------------------------------------


உங்கள் ஓட்டுக்களை முடிந்தால் போடவும்.... கமெண்ட் ரொம்ப முக்கியம்............ நன்றி.....
சதீஷ்.......................Friday, 26 August 2011

வறுவல் மற்றும் நொறுவல் - ஆரம்ப பூஜை

ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதராங்க... நானும் ரெண்டு மணி நேரமா யோசிக்கரேன்.. கருமம் ஒரு கன்ராவியும் வரல... கடைசில வறுவல் நொறுவல் எங்க அம்மா சொன்னத வச்சி எழுதரேன்.. அம்மா சென்டிமெண்ட் ஆச்சே ஒர்க் ஆவுட் ஆகும்ல.....நம்பிக்கை இருக்கு.. எனக்கு வெள்ளிக்கிழமை மேல ஒரு ஈர்ப்பு, அன்னைக்கு நா என்ன செய்தாலும் நல்லா தன் இருக்கும்.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை தான்... நா பிறந்தது கூட வெள்ளிக்கிழமைல தான்.. அதனால இனிமே நா ஊர சுத்தனது பொறுக்கியது வறுத்தது எல்லாமே இங்க குவிக்கப்படும்.. இலவச இணைப்பு எதும் இல்லைங்கோ.. எனக்கு ஒரு சின்ன வருத்தம் நா இது வரக்கும் எந்த பதிவிலும் போட்டோ நடுநடுவுல போட்டது இல்லை... இனிமே அமக்கள படுத்தனும்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்கோ..... என் வறுவல் நொறுவல் இன்று முதல் ஆரம்பம், விரைவில் உங்கள் அபிமான திரையில்... அட விண்டோ ஸ்கிரின தான் அப்படி சொன்னேன்.... 
நீங்க உங்க விருப்பத்தை சொல்லவும்... படிச்ச மட்டும் போதது பதில் சொல்லனும்... 


சதீஷ்...........


அனுபவ மொழி-3

உலகத்தின் பல்வேறு மனிதர்களால் சொல்லப்பட்டவை.
மிக உயர்ந்த கருத்துகள் என்று எனக்கு தோன்றியது.


21.மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் - பாரதியார்
22.உண்மை சொல்லி கெட்டவனும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை - வில்லியம்
23.போலியான நண்பணாய் இருப்பதை விட வெளிபடையான எதிரியாக இருத்தல் நலம் - போவீ
24.ஒன்றும் செய்யாது, உட்கார்ந்து உண்பவன், மலையளவு
சொத்தையும் நொடியில் கரைத்து விடுவான் - ட்ரென்ச்
25.பல விஷங்களை நினைக்கலாம்: ஆனால், ஒன்றையே உறுதியாகச் செய்ய வேண்டும் - ராபார்ட் பர்னஸ்
26.நீ, உண்ண கனி கொடுக்கும் மரங்களை நட்டனர்; மற்றவர் உண்ண நீயும் நடு - ட்ரூமென்
27.இடையூறுகளையும், துன்பங்களையுமே மனிதனை மனிதனாக்குபவை - மாத்யூஸ்
28.ஒழுக்கத்தைவிடச் சிறந்த உடை வேறில்லை - கலீல் கிப்ரான்
29.கால் வழுக்கினால் உடல் காயமுறும் : நாக்கு தவறினால் வாழ்வே பாழாகும் - மெல்போர்ன் லீ
30.உன் நண்பனை பற்றி பெருமையாகப் பேசு, உன் பகைவனைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! - கிளாஸ் வொர்தி


(பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாது - கமலஹாசன்) 

சதீஷ்................


Monday, 22 August 2011

இழந்த நட்பின் வரலாறு - 2

பேசிய வார்த்தைகளை மறந்து
     இல்லை மறவாமலோ
நட்பு பாராட்டிய ஒரே-காரணமோ
     அதிலும் இவன் ஒழுங்கினமே
மனமார வாழ்த்த ஒரு மனம்
      வேண்டும் அதை ஏற்க
தகுதியற்ற நிலையில் நான்....
      உன்னை நினைத்து பெருமை
உன் செயலால் நட்பில் செழுமை
     நட்பு கூட கதறி அழும்
நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டால்
    நான் மட்டும் வதிவலக்கா....?!
நான்குமுறை வாசித்ததும் - உன்
    பெயரா என சோதித்ததும்-தான்
நான் கண்ட புண்ணியம்.......


அழகே உருவான உன்
இடத்தில் என் நட்பின் தேடல்
இனி இருக்காது என தெரிந்து
வாழ்த்தியதற்கு வாழ்த்துமடல்
மட்டும் அனுப்பும் பழைய தோழன்....


நட்பு கூட மறந்துவிடும்
ஆனால், விட்டு பிரிந்து
சென்ற நட்பு மறக்காது....


காலத்தாலும் காற்றாலும் பிறவற்றாலும்
அழியாமல் இருக்க இது பதிவு செய்யப்படுகிறது.


வீரசக்தி கொண்ட யானைகள்
மன்னனை காப்பது போல
இவ்வுலக சக்தி அனைத்தும்
ஒன்று கூடி உன்னை வாழ்த்தி
வாழ வைக்க வேண்டும் என
வேண்டிக்கொள்கிறேன்.......


இந்த பதிவு பற்றி::
என் வகுப்பு தோழி ரேவதிபிரியா அனுப்பிய பிறந்தநாள் குறுஞ்செய்திக்கு நான் அனுப்பிய மடல்....


Many more happy returns f day..:-) Njoy d days..:-) Lt b followng yrs brng happines and success..:-) Onc again HAPPY BIRTHDAY 2 U:-D


அந்த அழகிய குறுஞ்செய்தி இது தான்.....


என்றும் இழந்த நட்பின் நினைவுடன்,
சதீஷ் மாஸ்.........


இழந்த நட்பின் வரலாறு - 1

நட்பே உருவாய் வந்து
    தன் நினைவுப்பரிசை தந்தது
ஏனோ, தம் கடமையை முடித்ததோ
    இல்லை கடனை ஒப்படைத்ததோ....
ஆனால், அந்த அழகியிடம் தான்
     நான் நட்பை கற்க வேண்டும்
எத்தனை பெருந்தன்மை அவளுக்கு....
    சின்னஞ்சிறு குழந்தை பொம்மை
அதிலும் பெண் பொம்மை
     அவளின் நினைவாக இருப்பதற்கோ.....
நட்பை நிலைநாட்டிய பெருமை
     அவள் என்னை வாழ்த்தியதில்
இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி
     உறைய வைத்து விட்டது....
காலத்தால் அழியாத நட்பு
    என கூற இடமில்லை-ஆனால்
நினைவால் அழியாத நட்பு
    என கூற இடமுண்டு.....
அழகாய் இடம் பிடித்தது
    அந்த பொம்மை-எங்கள்
வீட்டிலும் என்னிடத்திலும்.....


காற்றோடு கலந்து சென்று விடும்
நினைவு அல்ல இது - காலத்திற்க்கும்
பேசபட வேண்டும் என்று பதிவு செய்யப்படுகிறது.


அழகாய் இருக்கிறது - நன்றி
    என ஒரே வார்த்தையில் முடித்து 
விட்டு இப்போ ஒருபக்க எழுத்துகளா,
    ஏனோ தெரியவில்லை
பேசவும் சொல்லவும் விருப்பமில்லை
    நான் இழந்த இரண்டாவது
நட்பு ஆயிற்றே இது.......


என்றும் இழந்த நட்பின் நினைவுடன்,
சதீஷ் குமார்...............................


இந்த பதிவு பற்றி::
என் வகுப்பு தோழி ஷ்யாம்லி தந்த பிறந்த நாள் பரிசுக்கு நான் எழுதி தந்த பதில்......


Sunday, 21 August 2011

பிறந்த நாள் கொண்டாட்டம்

21.08.2011 இன்றுடன் எனக்கு 20 வயது ஆகிறது..கொஞ்சம் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது...

என்னை இன்று பல்லாண்டு வாழ வாழ்த்திய ஓவ்வொருவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்...
            --------------------------------------------------------------------------------------

பள்ளி தோழர் வட்டம்::


இன்று என் பிறந்த நாள் என்பதை நினைவில் வைத்து, அதை அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து என்னை இன்ப அதிர்ச்சியில் மூழ்க வைத்த என் பள்ளி தோழன் ராகவ் என்னும் ராகவேந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி... அதன் பிறகு என் பள்ளி தோழர்கள் ஓவ்வொருவராய் தங்கள் வாழ்த்துகளை குருஞ்செய்தி மூலம் தெரிவித்தனர்.... முதலில் வாழ்த்து தெரிவித்தது கனகராஜாவின் அண்ணன் வேல் அவர்கள், பின்பு முருகன் தன் வாழ்த்தை தெரிவித்தான்..அவன் +2வில் பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் பெற்றான்... 
அதன் பிறகு சுமார் அரைமணி நேரம் கழித்து தேவராசு போன் செய்து தன் கடமையை சரிவர முடித்தான்.. இவன் சென்ற வருடமும் போன் செய்து வாழ்த்து சொன்னான் என்பது தான் சிறப்பு... என்னுடன் பள்ளியிலும் தற்போது கல்லூரியிலும் ஒன்றாக படிக்கும் ராஜசேகர், தன் வாழ்த்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தான்... ஜெகன்நாதன் குறுஞ்செய்தி அனுப்பினான்....
+2வில் உயிரியல் பிரிவில் படித்த சதிஷ் தன்னுடைய வாழ்த்துக்களை குறுஞ்செய்தியிலும் போனிலும் தெரிவத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது....
என்னுடன் ஒரே வகுப்பில் படித்த அசோக் தன் அப்பாவின் போனில் இருந்து மொத்தம் மூன்று குறுஞ்செய்தி அனுப்பி தன் அன்பை பொங்கவிட்டான்...


கல்லூரி தோழர் வட்டம்::


என் வகுப்பில் படிக்கும்  பெருமாள் என்கிற வெங்கடேச பெருமாள் தன்னுடய வாழ்த்தை 9மணிக்கு தெரிவித்தான்... காரணம் கேட்டதற்க்கு, மச்சான் மொத மொத நா விஸ் பண்ண நல்ல இருக்காது டா அப்படினு சொன்னான்... நா அதுக்கு அசிங்கமா திட்டி குறுஞ்செய்தி அனுப்பினேன்....
என் வகுப்பு தோழி ரேவதி பிரியா, தன் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்.. நான் அத்தோழியுடன் சின்ன பிரச்சனையால் பேசி பல நாட்கள் ஆகிறது.. இருப்பினும் என்னை மறவாமல் விஸ் பண்ண தோழிக்கு கண்ணீர் கலந்த நன்றிகள்... என் போன் நம்பர் இல்லாததால் நேற்றே தன் வாழ்த்தை தெரிவித்தார் தோழி திவ்யா.. சகோதரி திவ்யாவிற்கு நன்றிகள் பல.. என் போன் நம்பர் இருந்தும் நேற்று அட்வான்ஸ் விஸ் செய்ததோடு சரி அதோடு ஆளயே காணும் என் கிளாஸ் பிரவீன்... ராஜசேகர் பற்றி ஏற்கனவே சொல்லிடேன்..


ஃபேஸ் புக் தோழர்கள் வட்டம்::


நேரில் கூட பார்த்திராத ஒரு நண்பர் கூட்டம்.... தங்களுடய வாழ்த்தை தெரிவித்து இருந்தனர்..
kanaga raja
anten prathepan
ram lingam
.•*¨`*•..¸❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥¸ .•*¨`*•.♫❤♫❤♫❤.•*¨`*•.
╔═════════════ ೋღ❤ღೋ ═══════════════╗
******░இனிய ░பிறந்தநாள்░வாழ்த்துக்கள்░*****
╚═════════════ ೋღ❤ღೋ ═══════════════╝
.•*¨`*•..¸❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥¸. •*¨`*•.♫❤♫❤♫❤.•*¨`*•

vignesh balakumar (என் கல்லூரி தோழன்... கனிப்பொறி துறை)
achu chaam
dhanan cheziyan
karthik rocker
shibili poonthiruthi 
ranjini sweetie gal
shobana ranjith
parthiban manikandan
selvam arokiyaraj(send birthday card)
anbu rajan(send personal msg)
ganesh ng(send personal msg)
srini vijay
mukesh kumar
rajesh kanna(என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
guna sekar (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு) 
mahesh babu (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
ravikumar (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
jagan nathan (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
prakash sundar
riyas jenn
jassim jazz
vishunu pappu


வாழ்த்திய அத்தன மச்சானுக்கும் மாமாக்கும் மாப்பிள்ளைக்கும் தோழனுக்கும் தோஸ்த்துக்கும் தோழிகளுக்கும் மத்த எல்லமும் ஆனவர்களுக்கும் எப்படி நன்றி சொல்லவது என தெரியவில்லை.. நன்றி சொல்லி அவர்களை பிரித்து பேசவும் விருப்பமில்லை
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது...


          ------------------------------------------------------------------------------------------------------------


என்ன தான் ஊரே கூடி வாழ்த்தினாலும் மனசுக்கு பிடிச்சவங்க விஸ் பண்ண அதுல இருக்கற சுகமே தனி தான்... நடு ராத்திரி 12மணிக்கு போன் பண்ணி விஸ் பண்ண அந்த குரல கேட்டபோ ஒரு தனி சுகம் அதுல.... கிட்டதட்ட 3நிமிஷம் பேசி இருப்போம்... அதுக்கு அப்புறம் நாலு குறுஞ்செய்தி..... அந்த குரலில் தெரிந்தது அன்பும் பாசமும்...

              ---------------------------------------------------------------------------------------------------------
என்றும் உங்கள் நினைவில்
சதீஷ்............Friday, 19 August 2011

என்னை நினைத்து பெருமை

கல்லூரியில் இன்னைக்கு ஒரு பீரியட்க்கு எந்த ஆசிரியரும் வரவில்லை.. லைபிரரி போகனும்னு நியுஸ் மட்டுமே வந்தது..எப்புவும் போல இன்னைக்கும் அங்க போய் சும்மா தான் இருக்க போறனு நா எதயும் எடுத்துகாம போய்டேன்.. எப்பவும் அங்க போன வெட்டியா கத பேசிகிட்டு தான் இருப்பேன்.. 


இன்னைக்கு கொஞ்சம் ஆட்டம் ஓவராயிடுச்சு, என்ன மட்டும் தனியா உக்கார வச்சிட்டாங்க.. அங்க இருந்து பாத்தா பக்கத்துல இருக்குற மெயின் ரோடு நல்ல தெரியும்.. உக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்.. மேடம் அத பாத்துட்டு திட்ட ஆரம்பிச்சாங்க.. நா அமைதியா இருந்துடேன்...


கொஞ்சம் நேரம் கழிச்சு எனக்கு எப்படி தோனுச்சுனு தெரியல.. சும்மா இருக்கறதுக்கு பதிலா எதச்சும் பண்ணலாம்.. அப்ப தான் கவிதை எழுதலாம்னு முடிவு பண்ணேன்.. என்ன தலைப்புல எழுதலாம்னே ஒரு பத்து நிமிஷம் யோசிச்சேன், அந்த அளவுக்கு நா பிரில்லியண்ட்..... 


உயிரணுக்கள் மூலம்
குழந்தை பிறக்கும்
என் உயிரெழுத்தின் மூலம்
கவிதை பிறக்கும்...


சொற்களை
கொண்டு
வடிக்கும்
சிற்பத்தின்
பெயர் தான்
கவிதை.....


காதல் 
கண்ணதாசனை கூட
விட்டு வைக்கவில்லை
அவனையும்
"காவிய பைத்தியன்"
ஆக்கியது


யாரிடமும் சிறைப்படாத
என் மனம்
கவிதை என்னும்
அழகியிடம்
சிக்கிக்கொண்டது.....


கவிஞர் ஆக 
வேண்டுமெனில்
துன்பத்தை அனுபவி.....
(அந்த மேடம் திட்டினாங்கள அதன் விளைவு)


சிறு காகிதம் கிடைத்தால்
அதில் காவியம் படைப்பேன்
மலை போல் நீ உடனிருந்தால்....
ஒராயிரம் அழகிகள்
உள்ள வகுப்பில்
ஒரே நட்சத்திரமாய்
என் தேவதை.....


இத நா எழுதி முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்துச்சு... இந்த கவிதை எல்லாத்தையும் படிச்சுட்டு, எங்க இருந்தோ காப்பி அடிச்ச மாறி இருக்காம் - நண்பனின் கமெண்ட் இது.. சரிதான் போடனு வந்துடேன்... என்னை சிந்திக்க வைத்த பிளாக் என்னை இன்று கவிஞனனாகவும் மாற்றியுள்ளது.. என்னை நினைத்து பெருமையாக தான் இருக்கு... தலைப்பு வந்துருச்சு.....

நீங்க உங்க பதிலை கமெண்டில் எழுதவும்...
அது என்னை ஊக்கபடுத்தும்.....
தொடரும்.....
சதீஷ்.................


Wednesday, 17 August 2011

ஜாக்கிசேகர் அவர்களுக்கு

நானும் எல்லாம் தெரிஞ்ச மாறி பிளாக் ஒபன் பண்ணீ அதுக்கு அழகாக பேர் கூட வச்சேன்... ஆனா என்ன பிரச்சனனா என்னத எழுதுதரதுனு தன் இன்னைக்கு வர தெரியல... ஒரு கவிதை ஒரு செய்தி ஒரு அறிவுரை அப்படி இப்படினு தடபுடலா யோசிச்சு அத பதிவும் பண்ணி செம மொக்க தான் ஆச்சு... அத பாத்தலே வாந்தி வருது..டெய்லி பேப்பர்ல வரத போடலாமா.. சுத்த வேஸ்ட், அசிங்கமா திட்டுவாங்க.. ஜோக் ஜோசியம் லொட்டு லொசுக்கு, சீ சீ ரொம்ப கேவலமா இருக்கும்....


என்னடா இத்தன நாள் பயபுள்ள சும்மா இருந்துட்டு இன்னைக்கு ஓவரா பொங்குறானே தோனுதா, தோ சொல்றேன் இருங்க...
என் தல ஜக்கிசேகர் பிளாக் பாத்தேன்... ஒன்னு ஒன்னும் நின்னு விளயாடுது.. நா என் கடைய சாத்திடலாமானு கூட தோனுது... 3 வருஷம் முன்னால அவர் எழுத ஆரம்பிச்ச கூட சூப்பரா தான் எழுதி இருக்கரு... அவர் பிளாகுக்கு புதுசுனு சுத்தமா தெரியது.... அவரோட எழுத்துல மயங்கி நேத்து ஒரு கமெண்ட் போட்டேன்.. அத அப்ரூவல் கூட பண்ணிடாரு... (சதாப்த்திரி எக்ஸ்பிரஸ்-ரெயில் பயணம்)... என் பிளாகின் முதல் கமெண்டும் அவருடையது தான்... அந்த சந்தோஷம் தான்.. ஒரு கேஸ், கேஃப் புல்லா அடிச்ச சந்தோஷம் எனக்கு...


இனிமே என் பிளாக்கில் மொக்கைகள் தவிர்க்கபடும்.. நா ஈ ஓட்டினாலும் பரவல.... இன்னொரு மேட்டர் நா பிளாக் ஆரம்பிச்ச போது என் போட்டோ போடவே இல்ல, இப்ப போட்டோ போட்டு இருக்கறதுக்கும் அன்னேன் தான் காரணம்.....


குறிப்பு::
இந்த பதிவு என் தல அண்ண ஜக்கிசேகர் அவர்களின் மீது உள்ள அன்பால் போடபடுவது மட்டுமே.. என் சுயலாபத்திற்கோ விளம்பரத்திற்கோ அல்ல... விஷமிகள் தெரிந்து கொள்ளவும்...


இந்த பதிவு அவருக்கு சமர்பணம்....
அவரின் ஆசியுடன் என் பதிவு தொடரும்....
சதீஷ்.....


Sunday, 14 August 2011

அனுபவ மொழி-2

உலகத்தின் பல்வேறு மனிதர்களால் சொல்லப்பட்டவை.
மிக உயர்ந்த கருத்துகள் என்று எனக்கு தோன்றியது.

11.விடாமுயற்சியுடையவன், தான் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான் - ரூஸ்வெல்ட்
12.கஞ்சன், எப்போதும் பிச்சைக்காரன் - டால்ஸ்டாய்
13.கற்றுக் கொள்வதால், அறிவாளி மேலும் அறிவு பெறுகிறான் - ஜான்ரே
14.நன்றாக வாழ வேண்டுமானால், முன்கூட்டியே திட்டமிடுங்கள் - நெப்போலியன்
15.முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான் - பல்வெர்
16.கோழைகள் ஒழுக்கத்தைப் பின்பற்ற முடியாது - காந்திஜி
17.தெரியாது என்று உணர்வது, அறிவை அடைவதற்கு வழி - பர்க்
18.தவறை ஏற்பது தான், தன்மானத்தின் உச்சநிலை - சிங்சென்
19.சூரிய உதயத்திற்கு முன் எழுபவர் வாழ்க்கை மிகப் பிரகாசமாக இருக்கும் - அவ்வையார்
20.பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை - கபீர்தாசர்
 
(பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாது - கமலஹாசன்)


சன்டே ஸ்பெஷல்

நண்பரின் வீட்டில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, அழைப்பு வந்தது சென்று உண்டு விழாவை சிறப்பித்து விட்டு வந்தேன். நண்பரின் பெயர் பெருமாள். என்னை மதித்து கூப்பிட்டார் என்பது தான் சிறப்பு.

                                  ---------------------------------------------------

சின்ன வயசுல சாமி ஆடரவங்கள பார்த்த ரொம்ப பயமா இருக்கும். அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சுப்பேன். இப்ப எங்க ஊர் திருவிழா'ல சாமி வந்து ஆடரவங்கள பாத்த ஒரு வித சிரிப்பு தான் வருது. நேரம் பணம் எல்லாமே வேஸ்ட். சில பேர் கோவில் நிர்வாகி'னு நல்ல உக்காந்து தின்னு திக்காரானூங்க. நா அவங நம்பிக்கையை குறை சொல்லல ஏன் இந்த ஆடம்பரம்.

                                  -----------------------------------------------------

சன்டே ஆச்சுனா பெட்ரோல்(வண்டிக்கு மட்டும் தான்) போட்டுகிட்டு ஊர் சுத்தர பையன இப்படி கம்பியூட்டர் முன்னாடி உக்கார வைச்ச எங்க குடும்பத்தாருக்கு ஒரு சபாஷ். என்ன கொடுமை சார் இது.

                                  -------------------------------------------------------


அடுத்த வார சன்டே ஸ்பெஷல் "என்னோட பர்த்டே"

                                   ------------------------------------------------------


Saturday, 13 August 2011

கவிதை நேரம்

நட்பே,
என் இதயம் துடிப்பது போன்ற உணர்வு
                                            - நீ உடன் இருந்தால்
என் இரத்தம் உறைவது போன்ற உணர்வு
                                             - நீ உடன் இல்லையேல்
நீ இல்லா இவ்வுலகம் உயிரற்ற உடல்களின் "நடமாட்டம்"


அனுபவ மொழி-1

உலகத்தின் பல்வேறு மனிதர்களால் சொல்லப்பட்டவை.
மிக உயர்ந்த கருத்துகள் என்று எனக்கு தோன்றியது.

1.அரைகுறை படிப்புக்கு, அகந்தை அதிகம் - இங்கர்சால
2.உயரவேண்டுமானால், பணிவு வேண்டும் - ஆர்னால்டு
3.கற்ற அளவே அறிவு இருக்கும் - அவ்வையார்
4.தேவைக்கு அதிகமான செல்வம் சுமை - ரஸ்கின்
5.கீழே விழுந்தவன், தாழ்ந்தவனுக்கு உதவ இயலாது - ஜார்ஜ் ஹொர்பெட்
6.நீயே உனக்கு நண்பனும், பகைவனும் - போகர் சுவாமிகள்
7.எந்தப் பொய்யும், மூப்பு அடையும் வரை வாழ்வதில்லை - சோபாகின்ஸ்
8.அமைதியில் தான் உயர்வும், உணர்வும் உள்ளது: பகையில் அல்ல - காந்திஜி
9.விலை கொடுக்காமல், பெற இயலாத பொருள், அனுபவம் - பியேர்
10.தாகத்திற்கு முன்பே, கிணற்றைத் தோண்டு - அரவிந்தர்

(பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாது - கமலஹாசன்)


Friday, 12 August 2011

என் பதிவுலக தலைவர்கள்

ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு முன் மாதிரியான பதிவர் இருப்பாங்க.அந்த வரிசையில் என்னை பதிவராக மாற்றியவர்கள்.
Blog பற்றி நான் தெரிந்து கொண்டது "புதிய தலைமுறை" வார இதழில் இருந்து.
ஜாக்கி சேகர் (www.jakkiesekar.blogspot.com)
கேபிள் சங்கர் (www.cablesankar.blogspot.com)

இவர்களை போன்ற பதிவர் இருந்தால் தெரியபடுத்தவும்.


புதுசு

எப்படியாச்சும் இனி வாரத்துக்கு 2 பதிவு போட்டு விடுவேன் குறிக்கோளாக இருக்கேன்.... எனக்கு பக்கம் பக்கமா எழுத தெரியல. நாலு வரி அடிக்கறதுக்குள்ள உயிரு போகுது. எப்படி தான் மெயிட்டேன் பண்ணறாங்களோ.