என் தோழர்கள்

Tuesday, 8 May 2012

சதீஷ் காபிஷாப் - 03/05/2012

பெயர் மாற்றம்:
சென்ற பதிவான வறுவல் மற்றும் நொறுவலில் சொல்லியது போல், இனிமே "சதீஷ் காபிஷாப்" என்ற பெயரில் இனிமேல் பதிவு எழுதப்படும். புதிய பெயர் சூட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள். இதே பெயரில் பதிவு எழுதுபவர்கள் அல்லது இந்த தலைப்புடன் ஒட்டி பதிவு எழுதி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுக்கொள். Its a Medical Miracle.
-------------------------------------------------------------------------------------------------------------
கூகிள் டிரைவ்:
கடந்த 2வருடமாக அதோ இதோ என்று கிடப்பில் கடந்த கூகிள் டிரைவ் இப்போது தான் அமலுக்கு வந்துள்ளது. இதை பற்றிய தகவலை நான் வந்தேமாதரம் பிளாக்கில் இருந்து திரட்டினேன். எனக்கு அறிவுறுத்தப்பட்ட படி நான் எனக்கான, கூகிள் டிரைவ்க்கு பதிவு செய்தேன். அது எனக்கு கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிமே அஜால் குஜால் தான் போங்க, நாங்க சும்மாவே காட்டுகாட்டுனு காட்டுவோம் இனிமே கேக்கவா வேணும். தேங்க்ஸ் டூ வந்தேமாதரம் 'சசிகுமார்'..
-------------------------------------------------------------------------------------------------------------
சென்னை கிளப்:
இந்த சென்னை கிளப் பற்றி பலருக்கும் பெருமளவில் தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் எனக்கு இந்த சென்னை கிளப் பற்றி தெரியும். கடந்த சனிக்கிழமை எனக்கு அவர்கள் போன் செய்தார்கள், எனக்கான குலுக்கலில் 45,000ரூபாய்க்கான பரிசு கூப்பன் தருவதாக சொல்லி அழைத்தார்கள். தோ கிளம்பிட்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் சொன்ன இடமான 'வள்ளுவர்கோட்டம் பகுதியில் உள்ள மூன்டிவி அலுவலகம் அருகில் உள்ள இடத்திற்கு சென்றேன். கடந்த ஞாயிறுலிருந்து சென்னை கிளப் ஆனது செலிபிரிட்டி கிளப் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விழா தான் அன்று நடைப்பெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து விட்டு வந்தேன். அந்த முக்கியமான மேட்டரை விட்டுடன் பாத்திங்களா, அது என்ன 45000ரூபாய்னா ஏழுநாள் கோவா சுற்றுலா தளத்திற்கு சென்று தங்கி வருவதற்கான பேக்கஜ். ஆனால், அங்கு தங்கும் ஓட்டல் பில் மட்டுமே அதில் அடங்கும். ரெண்டுநாளா அந்த கூப்பனை தான் தேடறேன், எங்க கொண்டு வந்து வைச்சனு தெரியலை.
-------------------------------------------------------------------------------------------------------------
கயவன் படக்குழு தளம்:
கடந்த வெள்ளிகிழமை, அப்பா கூட சூட்டிங் போனேன். ரொம்ப நாள் கழிச்சு அப்பாகூட போனேன். செம ஜாலியான டிரிப் அது... அதை பத்தின முழு தகவல் அடுத்த பதிவில் எழுதுகிறேன்..
-------------------------------------------------------------------------------------------------------------
உயிர்நுட்பம்:
மிக சிறப்பான ஒரு அறிவியல் தளத்தின் பெயர் தான் உயிர்நுட்பம் பிளாக்.. பல சூவாரிஸ்யமான தகவல்கள் அங்கு கொட்டிக்கிடக்கிறது. நமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அதை பலவாறு தீர்த்து வைக்கிறார் அப்பதிவர். இதில் மற்றுமொரு கூடுதல் தகவல் என்னவென்றால், எவரெனும் அத்தளத்தில் Follower ஆக இணைந்தால் அவர்களுக்கு தனியாக ஒரு பதிவு போட்டு வரவேற்கிறார். நான் Follower ஆக இணைந்த போது எனக்கு வரவேற்பு கொடுத்தை பார்க்கவும். சந்தேகமாக இருந்தால் நீங்கள் இனைந்து பாருங்கள், உங்களுக்கான வரவேற்பு கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------
கூகிள்சிறி:
நிறைய நண்பர்களுக்கு இந்த பெயர் பரிச்சயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் பரவாயில்லை இப்போ நா சொல்லிறேன். தமிழ் பதிவர்களுக்கென பல திரட்டிகள் இணையத்தில் இருக்கிறது. எ.கா: தமிழ்மணம், இன்டலி, யுடான்ஸ்.... கூகிள்சிறி என்பது ஒரு பிளாக் தான்.. அந்த பதிவர் தன்னுடைய பிளாக்கை பல தளங்களில் இணைத்து வைத்துள்ளார். நீங்கள், உங்கள் தளத்திற்கான லிங்கை அவருடைய தளத்தில் பதிவு செய்தால் போதும். பின்பு தன்னிச்சையாகவே நம்முடைய தளமுகவரி எல்லா திரட்டிகளிலும் பதிவு செய்யப்படுகிறது. வாசகர்கள் மேலும் படிக்க விரும்பினால் அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால், முதலில் கூகிள்சிறி பிளாக்குக்கு நம்மை அழைத்து செல்கிறது. பின்பு அங்கு இருந்து நம்மை நம்முடைய தளத்திற்கு அழைத்து செல்கிறது. மேலும் அறிய, அந்த தளத்திற்கு ஒரு விசிட் அடிக்கவும்..
-------------------------------------------------------------------------------------------------------------
History Channel:
பல வெளிநாட்டு சேனல்கள் இப்போது தமிழகத்திற்கு படையெடுக்க ஆரம்பித்து பல நாள்கள் ஆகிவிட்டன.கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளுமே தமிழில் டப் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதில் ஒரு சேனல் தான் History TV18... இது எத்தன நாளா தமிழில் வழங்கப்படுகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் பல ஆச்சரியப்படக்கூடிய நிகழ்ச்சிகள் இந்த சேனலில் ஒளிப்பரப்படுகிறது. ஒவ்வோனும் சும்மா நின்னு விளையாடுது. முடிஞ்சா கொஞ்சம் பாருங்க சார். அந்த சேனலில் அறிவியல் மாணவர்களுக்கு தேவையான அறிவியல் நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் குவிந்து கிடக்கிறது.அவங்க பேசற தமிழ் டப்பிங் இருக்கு பாருங்க, பிண்ணி பெடல் எடுக்கறாங்க. எனக்கு பிடிச்ச சில நிகழ்ச்சிகளின் பெயரை சொல்கிறேன்.. Pawn Stars, The Works, Modern Marvels... இந்த நிகழ்ச்சிகளை மட்டுமாவது பாருங்க, செமயா இருக்கும்.

-------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:
ஓய்வு என்பது அழகான ஆடை, அதை தொடர்ந்து அணிவது நல்லதல்ல.

இளமை இருக்கும் போது மட்டும் தான், ஆசைப்படவும் முடியும் அனுபவிக்கவும் முடியும்..

(டேய் இத காலைல காலண்டர்ல தேதி கிழிக்கும் போது தான படிச்ச..)
-------------------------------------------------------------------------------------------------------------
போதும் நிறுத்துங்கடா...
என்ன கொடுமை சார் இது..
-------------------------------------------------------------------------------------------------------------

என்றும் உங்களுடன்
சதீஷ்.......14 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

கோவை நேரம் said...

சுட..சுட...காபி நல்லா இருக்குங்க..

மனசாட்சி™ said...

பல தகவல்கள் அறிந்து கொண்டேன், என்ன கொடும சார் ரசித்தேன் - பகிர்வுக்கு நன்றி

சதீஷ் மாஸ் said...

வலைஞன் அவர்களுக்கு மிக்க நன்றி... என்னுடைய தளத்தினை இணைத்துவிட்டேன்... மீண்டும் ஒருமுறை நன்றி...

சதீஷ் மாஸ் said...

கோவை நேரம் அவர்களுக்கு, காபியை ரசித்து அருந்தியதற்கு நன்றி....

சதீஷ் மாஸ் said...

மனசாட்சி அவர்களின் நன்றிக்கு நன்றி... ரசித்தமைக்கு நன்றி....

சதீஷ் மாஸ் said...

இன்று எமது தளத்தில் புதியதாக இணைந்த அந்த மூவருக்கும் நன்றிகள்....

PREM.S said...

என்ன கொடும சார் கலக்கல்

Kovam Nallathu said...

THANK YOU SATHIS... ITS MY PLEASURE TO CONWAY MY DELIGHT AND THANK YOU FOR THE LINK...

Philosophy Prabhakaran said...

// இதே பெயரில் பதிவு எழுதுபவர்கள் அல்லது இந்த தலைப்புடன் ஒட்டி பதிவு எழுதி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுக்கொள். Its a Medical Miracle. //

அது அப்படியில்லை நண்பா... Its a coincidence damid...

// சென்னை கிளப் //

பார்த்து சூதானமா நடந்துக்கோங்க பாஸ்...

யூசுப் பாய் இன்னொரு ரெண்டு இஞ்ச் கம்மி பண்ணியிருந்திருக்கலாம்...

பின்னூட்டப்பெட்டி ஸ்டைலை மாற்றவும்... பின்னூட்டமிட சிரமமாக இருக்கிறது...

! சிவகுமார் ! said...

Kalakkunga Coffee ya nalla. Congrats.

சதீஷ் மாஸ் said...

//Philosophy Prabhakaran said :அது அப்படியில்லை நண்பா... Its a coincidence damid... //

பாஸ் கண்டுபிடிச்சிடிங்களா.....


// யூசுப் பாய் இன்னொரு ரெண்டு இஞ்ச் கம்மி பண்ணியிருந்திருக்கலாம்... //

சட்டத்தில் அதற்கு மேல் இடம் இல்லையாம்...

// பின்னூட்டப்பெட்டி ஸ்டைலை மாற்றவும்... //

அதயும் copy பண்ணிடலாம்....

சதீஷ் மாஸ் said...

PREM.S மற்றும் Kovam Nallathu ஆகிய இருவருக்கும் எனது நன்றிகள்....

சதீஷ் மாஸ் said...

திரு.சிவகுமார் அவர்களுக்கு வணக்கம்... காபிய இன்னும் கொஞ்சம் நல்லா கலக்க கத்துகறேன் பாஸ்...