என் தோழர்கள்

Tuesday 6 September 2011

நானும் ஜாக்கியும்

பதிவர் சந்திப்பு நடந்துச்சுனு சொன்னான், ஜாக்கிசேகர் வந்தார்னு சொன்னான்.. அவ்ளோ தானா? அப்ப தலைவரு தலைவருனு சொல்லி பதிவு போட்டது எல்லாம் ஒரு விளம்பரம் தானா???

இப்படிலாம் உங்க மனசுல அசிலி பிசிலியா எதாச்சும் இருந்தா அதை அப்சரா ரப்பர் போட்டு அழிச்சுருங்க.... அவர் எப்ப வருவார்னு வாசக்காலயே பாத்துக்கிட்டு இருந்தேன்.... இந்த பதிவை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு "சென்னை பதிவர் சந்திப்பு" அந்த பதிவ படிச்சிட்டு வாங்க அப்ப தான் புரியும்..


என்னோட அறிமுக பேச்சு முடிஞ்சுருச்சு... அது வரைக்கும் கூட நா ஜாக்கிசேகர் கிட்ட போய் அறிமுக பண்ணிகல... மீண்டும் வந்து என் இடத்துலயே உக்காந்துட்டேன்... பிரபா அவர்கள் ஜாக்கிசேகருக்கு ஒரு சீட்டு போட சொன்னாருனு நா அங்கு பேசும் போது சொன்னேன்...


ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் அருகில் ஒரு குரல் கேட்டது... "என்னடா சீட்டு போட்டு வச்சிருக்கியா?" அது ஜாக்கி சார் வாய்ஸ்.... எனக்கும் ஒன்னும் புரியாம "ம்ம்ம், ஆமா சார் உங்களுக்கு தான் இந்த சீட்டு" என சொன்னேன்.... அதற்க்கு ஏற்றார் போல் என் அருகில் ஒரு சீட்டு மட்டும் காலியாக இருந்தது.....


சரி அப்புறம் என்ன ஆச்சு.... நா என்ன கதையா சொல்றேன்...


இரண்டு முறை என் போன் சினுங்கியது... "போனை, சைலெண்டில் போடு" என ஒரு சிறிய அதட்டல்...  சட்டென்று என் போன் அமைதியானது.... ஹி ஹி ஹி நைஸ் ஜாக்கி..... வேறு எதுவும் அவருடன் பேசவில்லை... நான் அமைதியாய் தான் இருந்தேன்....


சற்று நேரம் கழித்து, சந்திப்புக்கு வந்து இருந்த அனைவருக்கும் டீ சப்ளை செய்யப்பட்டது.... நான் ஒரு கப் டீயை எடுத்து அதை அவருக்கு கொடுத்தேன்... 


பிறகு பல சூடான விவாதங்கள் நடைப்பெற்றன.. அதில் அவரும் பங்கேற்றார்.... "புதிய பதிவர்கள் தங்களுடைய பதிவுகளை சந்தைபடுத்துவது ரொம்ப முக்கியம்.. அப்ப தான் அது பல முகவரை சென்று அடையும்... பல திரட்டிகளில் பதிவு செய்வது நலமே... முடிந்த வரை லேபிள் உபயோகிக்கவும் " இந்த மாதிரி நிறைய சொன்னாரு...


புதிய பதிவர்கள் தொடர்ந்து எழுதனும், பின்னூட்டம் இல்லை எனவும் வருகையர் யாரும் இல்லை எனவும் கவலைபடதீங்க.... என கூறி ஆறுதல் அளித்தார்...

கூட்டம் நிறைவாய் முடிய, என் கண்கள் மட்டும் ஜாக்கி சாரை தேடியது... அவரை சந்தித்து பேச வேண்டும் என ஆவல்.... அவரை பார்த்து சிரித்தவாறே அருகில் சென்றேன்... பல கேள்விகளை கேட்டேன், சற்றும் சளைக்காமல் பதில் தந்தார்... மிகுந்த மரியாதையுடன் பேசினார்... என்னை ஊக்கபடுத்தியது அவரது வார்த்தைகள்.... ஒரு பத்து நிமிடம் அவருடன் தனியாய் பேசியதில் மகிழ்ச்சி....



இது தாங்க "பைனல் கிளிக்"..... கேபிள்சங்கர், நான், ஜாக்கிசேகர்.... இவ்ளோ சீக்கரத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது..... இந்த போட்டோ எத்தனை பேரின் வயித்து எரிச்சலாக மாறபோகிறது என தெரியவில்லை.....

என் கையில இருக்கற அந்த புத்தகம் தான் சிவகுமார் அண்ணன் தந்தது.... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

மீண்டும் அடுத்த சந்திப்பில் பாக்கலாம்......





சதீஷ்..........


21 comments:

சதீஷ் மாஸ் said...

முதல் வடை, முருக்கு எல்லாம் எனக்கு தான்.... ஹி ஹி ஹி....

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் எழுத்துநடை இம்ப்ரூவ் ஆனா மாதிரி இருக்கு...

// உங்க மனசுல அசிலி பிசிலியா எதாச்சும் இருந்தா அதை அப்சரா ரப்பர் போட்டு அழிச்சுருங்க... //

இந்த வரியில சிவா அண்ணா ஸ்டைல் தெரியுதே...???

Philosophy Prabhakaran said...

என்னவோ இவரு பீமா விக்ரம் மாதிரியும் அவரு பிரகாஷ்ராஜ் மாதிரியும் உங்க அலம்பல் தாங்க முடியலடா சாமீ...

Philosophy Prabhakaran said...

யோவ்... கேபிளையும் ஜாக்கியையும் பார்த்தா உனக்கு மாங்கா மாதிரி இருக்கா...

Philosophy Prabhakaran said...

இந்தமாதிரி தான் அடிக்கடி நையாண்டி பின்னூட்டங்கள் போடுவேன்... முதல்முறை என்பதால் சொல்லிவிடுகிறேன்...

Anonymous said...

சென்னையின் ஸ்டார் பதிவர்கள் மத்தியில் ஒரு லிட்டில் ஸ்டார். நல்ல பதிவுகள் மூலம் மேலும் வளர வாழ்த்துகள்!!

சதீஷ் மாஸ் said...

பிரபா : // கொஞ்சம் எழுத்துநடை இம்ப்ரூவ் ஆனா மாதிரி இருக்கு...

// உங்க மனசுல அசிலி பிசிலியா எதாச்சும் இருந்தா அதை அப்சரா ரப்பர் போட்டு அழிச்சுருங்க... //

இந்த வரியில சிவா அண்ணா ஸ்டைல் தெரியுதே...??? //

சதீஷ் : அப்படிலாம் இல்லை... அப்படி இருந்தாலும் அது தப்பில....

சதீஷ் மாஸ் said...

சிவகுமார் : // சென்னையின் ஸ்டார் பதிவர்கள் மத்தியில் ஒரு லிட்டில் ஸ்டார். நல்ல பதிவுகள் மூலம் மேலும் வளர வாழ்த்துகள்!! //

சதீஷ் : அண்ணா, அந்த அளவுக்குலாம் நா இல்லைணா... எதோ கொஞ்சம் முன்னேறிட்டேன் அவ்ளோ தான்... எல்லாம் உங்க ஆச்ர்வாதம் தான்...

சதீஷ் மாஸ் said...

பிரபா : // என்னவோ இவரு பீமா விக்ரம் மாதிரியும் அவரு பிரகாஷ்ராஜ் மாதிரியும் உங்க அலம்பல் தாங்க முடியலடா சாமீ... //

சதீஷ் : என்ன ரொம்ப புகழிறீங்க.... எனக்கு வெக்கம் வெக்கமா இருக்குல...

Jackiesekar said...

இது தாங்க "பைனல் கிளிக்"..... கேபிள்சங்கர், நான், ஜாக்கிசேகர்.... இவ்ளோ சீக்கரத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது..... இந்த போட்டோ எத்தனை பேரின் வயித்து எரிச்சலாக மாறபோகிறது என தெரியவில்லை..../

மாறிவிட்டது சதிஷ்...இருப்பினும் வாழ்த்துகள்..

N.H. Narasimma Prasad said...

ஜாக்கியோடும், கேபிளோடும் போட்டோ எடுத்துட்டு என்னை வயிறேரிய வச்சிட்டிங்களே சதீஷ்? பரவாயில்லை. நாங்களும் கூடியவிரைவில் அவர்களை சந்திப்போம்ல?

ஆர்வா said...

நானும் இந்த மாதிரி பதிவர் சந்திப்புல கலந்துக்கணும்ன்னு நினைப்பேன். ஆனா வேலை டென்ஷன்ல அது முடியுறதே இல்லை.. வாய்ப்பு அமைந்தால் மற்றொரு சந்திப்புல் நிச்சயம் சந்திப்போம் நண்பா.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து நல்ல பல பதிவுகளை தாருங்கள்

சதீஷ் மாஸ் said...

ஜாக்கி : //மாறிவிட்டது சதிஷ்...இருப்பினும் வாழ்த்துகள்.. //

சதீஷ் : நன்றி சார்...

சதீஷ் மாஸ் said...

பிராசாத் : //பரவாயில்லை. நாங்களும் கூடியவிரைவில் அவர்களை சந்திப்போம்ல? //

சதீஷ் : நிச்சயம்... அவரை சந்திக்க போகும் போது சொல்லுங்கள் நானும் வருகிறேன்...

சதீஷ் மாஸ் said...

கவிதை காதலன் : //நானும் இந்த மாதிரி பதிவர் சந்திப்புல கலந்துக்கணும்ன்னு நினைப்பேன். ஆனா வேலை டென்ஷன்ல அது முடியுறதே இல்லை.. வாய்ப்பு அமைந்தால் மற்றொரு சந்திப்புல் நிச்சயம் சந்திப்போம் நண்பா.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து நல்ல பல பதிவுகளை தாருங்கள் //

சதீஷ் : நன்றி... அடுத்த ச்ந்திப்பில் நிச்சயம் எதிர் பாக்கிறேன்....

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உண்மையாக மிக அருமையான எழ்த்து நடை உள்ளது .
வாழ்க வளர்க
அன்புடன்
யானைக்குட்டி

சதீஷ் மாஸ் said...

யானைகுட்டி : //உண்மையாக மிக அருமையான எழ்த்து நடை உள்ளது .
வாழ்க வளர்க
அன்புடன்
யானைக்குட்டி //

சதீஷ் : நன்றி... மீண்டும் வருக...

selva blog said...

Vazhga Vlamudan for you future, i am 21(century)st Members in your blog.

சதீஷ் மாஸ் said...

Selva : // Vazhga Vlamudan for you future, i am 21(century)st Members in your blog. //

sathish : thank u sir....

குடந்தை அன்புமணி said...

சுத்தி போட்டோ எடுத்தாக... ஆனா கண்லேயே மாட்டமாட்டேங்குதே... வேற யாரும் போட்டிருக்கிறீகளா....

சதீஷ் மாஸ் said...

குடந்தை அவர்களுக்கு : நான் மட்டும் தான் இதை பற்றி போட்டு இருக்கேன். இன்னும் பல பேர் மிக விரைவில் வெளியிடுவார்கள். கவுண்டமணிஃபேன்ஸ் அந்த பிளாக்கில் தான் வெளியிட போகிறார்கள்..