என் தோழர்கள்

Friday 9 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -1

நான் சென்னையில் இருந்து மேல்வருவத்தூர் சென்ற போது நிகழ்ந்த பல கசப்பான ஆனால் நினைவில் நின்ற பயணம் இது. கிட்டத்தட்ட ஒரு பத்து நாள்களுக்கு முன் நடந்த சம்பவம் தான்.


அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து புறப்பட தயாரானேன். சென்னையில் இருந்தே பைக்கில் செல்வதாக திட்டமிட்டு இருந்தேன். நான் மட்டும் தான் தனியாக சென்றேன். மேல்வருவத்தூரில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் ஒரு தற்காலிக வேலைக்காக தான் சென்றேன்.

நெடுந்தூர பயணம் என்பதால் முதல் நாள் இரவே பெட்ரோல் போட்டு விட்டேன். நான் செய்த உருப்படியான ஒரே விஷயம் அது தான். ஹெல்மேட் மாட்டிக் கொண்டு என் எல்ஜி போனின் ஹெட்செடை காதில் திணித்து கொண்டு பைக்கில் பறந்தேன். இளையாராஜா முதல் யுவன்சங்கர்ராஜா வரை அனைவரின் பாடல்களும் அந்த அதிகாலை வேளையில் மனதிற்கு இதமாக அமைந்தது. என் பைக்கின்  வேகமும் கூடியது.


மிக ரம்மியமான பொழுது தான். சூரியன் தன் கடமையை சரிவர செய்தது, அது வானம் எங்கும் செந்நிறத்தை பரப்பியபடியே வெளியே எட்டி பார்த்தது. ஆனால் என்னால் தான் அதை அனைத்தையும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தேன்.


வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என அனைத்து ஊர்களையும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தாண்டிவிட்டேன். சிங்க பெருமாள் கோவிலை நெருங்கி செல்லும் வேளையில் எனக்கு முதல் சோதனை நடந்தது. அப்போது தெரியாது அது ஒரு மிக பெரிய விஷமாகவும் நான் திரும்ப வீட்டிற்கு செல்வது கடினமாகவும் போகிறது என்று.


ஒரு அரசாங்க பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்து அதன் ஒரு பக்கவாட்டில் ஏறினேன். என்னை சற்றும் கவனிக்காத பேருந்தின் ஓட்டுனர் திடிரென்று ஒரு ஓரமாக பேருந்தை செலுத்தினார். சட்டென்று சுதாரித்துக் கொண்டு என் பைக்கின் வேகத்தை மளமளவென குறைத்தேன். இரண்டு பிரேக்குகளையும் அழுத்தி பிடித்தேன். இப்போது பேருந்தின் வாயில் இருந்து தப்பிவிட்டேன் ஆனால் அந்த ரோட்டின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரின் மீது இடித்து தொப்பென்று கீழே விழுந்தேன்.


பைக்கின் பின்னால் ஒரு பெரிய பைபை கட்டி வைத்திருந்தேன். அது இல்லாமல் இருந்து இருந்தால் நான் சற்றே என வண்டியை நிறுத்தி இருப்பேன். நேரம் சரியாக ஆறு மணி இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் குறைவாக தான் இருந்தது. தன் கையே தனக்கு உதவி. மெல்ல எழுந்து நின்று என் பைக்கையும் நிமிர்த்தினேன். பெட்ரோல் கசிந்து அந்த வாசம் வீசிக்கொண்டு இருந்தது. 7.30மணிக்குள் மேல்வருவத்தூர் செல்ல வேண்டும் என்பதற்காக வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தேன்.


ஒரு 50அடிக்கும் குறைவான தூரம் செல்வதற்குள் அடுத்த சோதனை. வண்டியின் முன் சக்கரம் பஞ்சர் ஆகியிருப்பது தெரிந்தது. இப்போது சரியாக நான் சிங்கபெருமாள் கோவில் ஜாங்ஷனை அடைந்து விட்டேன். அங்கு இருந்த ஒரு டீக்கடை முன் வண்டியை நிறுத்தி செய்வது அறியாமல் நின்றேன். என் முதலாளியிடம் இருந்து போன் வந்தது. விவரமாக நடந்ததை கூறினேன், "பஞ்சர் போட்டுகிட்டு சீக்கரம் கிளம்பு தம்பி, நீ அங்க 7.30 மணிக்கு எல்லாம் இருக்கணும்" என தெரிவித்தார்.. இதற்கு பெயர் தான் முதலாளித்துவம் என அன்று அறிந்து கொண்டேன்..


அந்த டீக்கடைக்கு போய் விசாரித்தேன், அருகில் எதுவும் பஞ்சர் ஒட்டும் கடை இந்நேரத்துக்கு இல்லை என சொன்னார். அவர் சொன்னது உண்மைதான். மேலும் சில கடைகளில் விசாரித்தவாறே நான் மட்டும் முன்னேறினேன். வண்டியில் பெரிய மூட்டை இருப்பதாலும் பஞ்சர் ஆகியிருப்பதாலும் வண்டியை அந்த டீக்கடையிலேயே நிறுத்திவிட்டேன். பலபேரிடம் விசாரித்தேன் எல்லோரும் ஒருசேர அந்த ஒரு கடையை மட்டுமே சுட்டிக்காட்டினர். "அந்த ரிலையான்ஸ் கட்டவுட் கீழ உள்ள பில்டீங்கில் ஒரு கடை இருக்கிறது, அது 24மணி நேர கடை" என தெரிவித்தனர். கிட்டத்தட்ட அந்த கடை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு குறையாமல் தூரத்தில் இருந்தது.


இப்போது எனக்கு துணையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா யாருமே இல்லை. அந்த காலை பொழுதிலும் எனக்கு வியர்வை கொட்டி கொண்டு இருந்தது. வேகவேகமாக அந்த கடையை நோக்கி நான் மட்டும் நடந்தேன். மன்னிக்கவும் ஓடினேன் என தான் சொல்ல வேண்டும். 10 நிமிட ஓட்டத்துக்கு பிறகு அந்த கடையை அடைந்து எட்டி உள்ளே பார்த்தேன். ஒரு லாரி டிரைவர் வெளியே வந்தார், அவரிடம் விவரத்தை கூறினேன். "வண்டியை தள்ளிக்கிட்டு வா, இந்த கடைக்காரர் இப்ப வந்துருவாரு" என சொன்னார். சட்டென்று சிட்டாய் என் பைக்கை நோக்கி நான் பறந்தேன்.


வேகவேகமாக தள்ளிக் கொண்டு அந்த கடையை அடைந்தேன். ஒரேவரியில் இங்கு முடித்து விட்டேன், ஆனால் நான் அப்போது பட்ட துன்பம் அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். நான் மட்டுமே பரபரபாய் இருந்தேன். என்னை தவிர வேறுயாருக்கும் அந்த பரபரப்பு இல்லை. அந்த கடைக்காரர் வருவதற்குள் நான் முன்பு சொன்ன டிரைவர் என் வண்டியின் சக்கரத்தை கழட்டி ஆயத்தமாக வைத்தார்.


ஒரு பத்து நிமிடம் கழித்து கடைக்காரன் வந்தான். மிக பொறுமையாக வேலையை கையாண்டான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவன் தலையில் கல்ல தூக்கி போட்டு இருப்பேன், பாவம்னு விட்டுடேன். அந்த புண்ணியவான் வாய திறந்து சொன்ன முதல் வார்த்தை "டியுப் கிழிஞ்சிறுச்சு, புதுசு தான் போடனும்.. கம்பெனி டியூப் தான் என்கிட்ட இருக்கு" "அதோட விலை 200ரூ அப்புறம் நான் கழட்டி மாட்டனதுக்கு 50ரூ"... அடப்பாவிகளா "என்ன கொடுமை சார் இது"


என் பார்சை எடுத்து உள்ள எவ்வளவு இருக்குனு பார்த்தேன். சரியா சொல்லனும்னா 238ரூ தான் இருந்துச்சு. அந்த கடைக்காரன்கிட்ட சொன்னேன் "238ரூ தான் இருக்கு".. "இல்லை கட்டுபடி ஆகாது, நீங்க கிளம்புங்க"... மனசாட்சி இல்லாத ஜென்மம்...


என் தவிப்பை புரிந்து கொண்டது அந்த லாரி டிரைவர் மட்டும் தான். ஒரு 20ரூ எடுத்து கொடுத்தார். தெய்வம் போல எனக்கு காட்சி தந்தார். இன்னும் அவரின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சென்னை கே.கே.நகரில் தான் வசிக்கிறார் என சொன்னார். மீண்டும் ஒரு நாள் அவரை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் தோன்றுகிறது..


என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 


இப்போது அதே பஞ்சர் கடையில் வேறொரு பிரச்சனை அதுவும் அந்த டிரைவர் அண்ணனால் தான் சரி செய்யப்பட்டது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....






தொடரும்....








சதீஷ்........


29 comments:

Philosophy Prabhakaran said...

// சூரியன் தன் கடமையை சரிவர செய்தது, அது வானம் எங்கும் செந்நிறத்தை பரப்பியபடியே வெளியே எட்டி பார்த்தது. //

பழைய காலத்து நாவல் படிச்சா மாதிரி இருக்கு...

Philosophy Prabhakaran said...

// என் முதலாளியிடம் இருந்து போன் வந்தது. விவரமாக நடந்ததை கூறினேன், "பஞ்சர் போட்டுகிட்டு சீக்கரம் கிளம்பு தம்பி, நீ அங்க 7.30 மணிக்கு எல்லாம் இருக்கணும்" என தெரிவித்தார்.. இதற்கு பெயர் தான் முதலாளித்துவம் என அன்று அறிந்து கொண்டேன்.. //

ஹா... ஹா... ஹா...

Philosophy Prabhakaran said...

// அந்த கடைக்காரன்கிட்ட சொன்னேன் "238ரூ தான் இருக்கு".. "இல்லை கட்டுபடி ஆகாது, நீங்க கிளம்புங்க"... மனசாட்சி இல்லாத ஜென்மம்... //

அடப்பாவி வெறும் பன்னிரண்டு ரூபாய்க்கா...?

Philosophy Prabhakaran said...

இவ்வளவு கஷ்டப்பட்டு பைக்கில் சென்றதற்கு பதிலாக இந்தியா மேப்பில் பயணம் செய்திருந்தால் சுலபமாக மேல்மருவத்தூர் என்ன பெண்களூருக்கே சென்றிருக்கலாம்....

வெளங்காதவன்™ said...

oh shit...

யுவகிருஷ்ணா said...

ஒருவேளை இவரு ஜாக்கியை நக்கலடிக்கிறீங்களோன்னு ஒரு டவுட்டு. ஆனா அப்படியெல்லாம் இருக்காதுன்னு நெனைக்கிறேன் :-)

சக்தி கல்வி மையம் said...

நல்ல எழுத்து நடை..
படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது?

calmmen said...

boss unga writting style super!

சதீஷ் மாஸ் said...

பிலாசபி பிரபா : இவ்வளவு கஷ்டப்பட்டு பைக்கில் சென்றதற்கு பதிலாக இந்தியா மேப்பில் பயணம் செய்திருந்தால் சுலபமாக மேல்மருவத்தூர் என்ன பெண்களூருக்கே சென்றிருக்கலாம்.... //

சதீஷ் : ஏன் இந்த கொலைவெறி.. இனிமே பைக்கில் தாம்பரத்தை கூட தாண்டமாட்டேன்...

சதீஷ் மாஸ் said...

வெளங்காதவன் : oh shit...

சதீஷ் : தமிழ் என் உயிர் தமிழ் என் மூச்சு.. அப்புறம் ஞாபகம் வரும் போது சொல்றேன் :-)

சதீஷ் மாஸ் said...

யுவகிருஷ்ணா : ஒருவேளை இவரு ஜாக்கியை நக்கலடிக்கிறீங்களோன்னு ஒரு டவுட்டு. ஆனா அப்படியெல்லாம் இருக்காதுன்னு நெனைக்கிறேன் :-) //

சதீஷ் : நா எப்படி சார் அவர நக்கல் அடிப்பேன்.. அப்படிலாம் ஒன்னும் இல்லை சார்...

சதீஷ் மாஸ் said...

வேடந்தாங்கல் : நல்ல எழுத்து நடை..
படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது? //

சதீஷ் : அப்புறம் எதுக்கு சார் கடைசியா ஒரு கேள்விக்குறி போட்டு இருக்கீங்க...

பாராட்டியதுக்கு நன்றி...

சதீஷ் மாஸ் said...

கருகிருக்கன் : boss unga writting style super! //

சதீஷ் : nanri and welcome...

தம்பி கூர்மதியன் said...

//இளையாராஜா முதல் யுவன்சங்கர்ராஜா வரை அனைவரின் பாடல்களும் அந்த அதிகாலை வேளையில் மனதிற்கு இதமாக அமைந்தது. என் பைக்கின் வேகமும் கூடியது.//

இளையராஜா பாட்ட கேட்டுட்டு பைக் வேகத்தை கூட்டிட்டாராம்...

தம்பி கூர்மதியன் said...

///ஆனால் என்னால் தான் அதை அனைத்தையும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தேன்.//

அய்யய்யோ...! கலக்குறாப்புல..

தம்பி கூர்மதியன் said...

//ஆனால் அந்த ரோட்டின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரின் மீது இடித்து தொப்பென்று கீழே விழுந்தேன்.//

ரசித்தேன்... ஹி ஹி...(சும்மா)

தம்பி கூர்மதியன் said...

//தன் கையே தனக்கு உதவி. மெல்ல எழுந்து நின்று என் பைக்கையும் நிமிர்த்தினேன். பெட்ரோல் கசிந்து அந்த வாசம் வீசிக்கொண்டு இருந்தது. 7.30மணிக்குள் மேல்வருவத்தூர் செல்ல வேண்டும் என்பதற்காக வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தேன்.//

விஜய் படம் பாத்த எபெக்ட்..

தம்பி கூர்மதியன் said...

//ஒரு பத்து நிமிடம் கழித்து கடைக்காரன் வந்தான். மிக பொறுமையாக வேலையை கையாண்டான். //

அவர் வந்ததை சொல்லும் போதே அவர் உங்களை கடுபேத்திருப்பார் என்பதை புரிய வைக்கும் வகையில் ஒருமையில் அந்த கடைகாரர் அறிமுகத்தை சொன்னது மிக சிறப்பு.

தம்பி கூர்மதியன் said...

//சென்னை கே.கே.நகரில் தான் வசிக்கிறார் என சொன்னார். மீண்டும் ஒரு நாள் அவரை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் தோன்றுகிறது..//

அப்ப மறக்காம 20 ரூபா கொடுத்திடுங்க...

தம்பி கூர்மதியன் said...

அடுத்த பதிவு தானே பாப்போம்...! உங்க பதிவுல சொல்லியிருக்குற விதம் நல்லா இருக்கு.. அதே கடையில நானும் மாட்டியிருக்கேன்.. அடுத்த முறை அந்த கடைகாரரை பார்க்கும் போது இதை சொல்லிவிடுகிறேன்... செங்கல்பட்டு போய் திரும்பும் போது இதே போல் பஞ்சர் ஆகி அவதிபட்டேன்.. அதனால உங்க பதிவுல சொல்லியிருக்குற விடயத்துல ஒரு நேட்டிவிட்டி தெரியுது.. நம்ம விடயம்னு தோணுது.. ஆனா எழுத்துக்கள்ல படிக்கும் போது தூய தமிழ் வாக்கியங்களை கையாண்டிருப்பதால்.. கொஞ்சம் ஒட்ட மாட்டேங்குது.. மத்தபடி பதிவு நல்லா இருக்கு..

சதீஷ் மாஸ் said...

தம்பி கூர்மதியன் : ஆனா எழுத்துக்கள்ல படிக்கும் போது தூய தமிழ் வாக்கியங்களை கையாண்டிருப்பதால்.. கொஞ்சம் ஒட்ட மாட்டேங்குது.. //

சதீஷ் : சரி உங்களுக்கு ஏத்த மாறி அடுத்த பதிவை நம்ம சென்னை தமிழ்(ல்)ல எழுதிடலாம்...

சதீஷ் மாஸ் said...

தம்பி கூர்மதியன் அவர்களுக்கு : தனி தனியாய் ரசித்து பாராட்டியதுக்கு நன்றி...

Unknown said...

மாப்ள பிரச்னை வரும்போது நமக்கு உதவுவது பெரும்பாலும் நம்மை போன்றவனோ அல்லது நம்மை விட கஷ்டப்படுபவோனோ தான் இதுதான் இந்தியா....இதை அருமையா சொல்லிக்கிட்டு வர்றீங்க நன்றி!

கேரளாக்காரன் said...

\\Philosophy Prabhakaran said...
இவ்வளவு கஷ்டப்பட்டு பைக்கில் சென்றதற்கு பதிலாக இந்தியா மேப்பில் பயணம் செய்திருந்தால் சுலபமாக மேல்மருவத்தூர் என்ன பெண்களூருக்கே சென்றிருக்கலாம்....\\\

super boss

சதீஷ் மாஸ் said...

விக்கியுலகம் : மாப்ள பிரச்னை வரும்போது நமக்கு உதவுவது பெரும்பாலும் நம்மை போன்றவனோ அல்லது நம்மை விட கஷ்டப்படுபவோனோ தான் இதுதான் இந்தியா....இதை அருமையா சொல்லிக்கிட்டு வர்றீங்க நன்றி! //

உண்மை தான் விக்கி அடுத்த பதிவில் மேலும் பல இந்தியர்களை பற்றி சொல்கிறேன் ...

Arun Kumar said...

சதீஷ் எனக்கும் இதே போல வெகு தூரத்து பயணத்தில் பைக் பஞ்சர் ஆன கொடுமை நடந்து இருக்கிறது

பைக்கை தள்ளி கொண்டே நெடுஞ்சாலையில் பஞ்சர் கடை தேடி செல்வது மிக கொடுமையான மேட்டர்.

அடுத்த பயணத்தில் சில விழயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்

1. நெடுஞாசாலையில் வண்டியை எப்போதும் இடது பக்கம் ஓட்டவும். வலது பக்கத்தில் லாரி கார் இவற்றை பஞ்சர் ஆக்க ஆணிகள் ஆங்காங்க வைத்து இருப்பர். மேலும் லாரியில் இருந்து விழும் சிறு சிறு இரும்பு பொருட்கள் நமக்கு ஆப்பு வைத்து விடும்

2. பஞ்சர் என்று தெரிந்தால் உடனே டுயூப் வால்வை ரிம்க்கு உள்ளே திணித்து விடவும். இது வால்வ் உடைந்து ட்யூப் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பிக்க உதவும்

3. பஞ்சர் என்று தெரிந்தால் வண்டியை அங்கேயே நிறித்து விடவும்.டயர் உள்ளே முள் போன்ற ஏதாவது சிக்கி இருந்தால் ட்யூப் மூழுக்க நாஸ்தி செய்து விடும்,.

4. அடிக்கடி நீண்ட தூரம் செல்ப்வராக இருந்தால் ட்யூப் லெஸ் டயர் மாட்டுவது நல்லது.இல்லையெனில் பஞ்சர் சொல்யூசன் கூட வரும் ட்யூப்களை பொருத்துவது நல்லது.

சதீஷ் மாஸ் said...

நன்றி அருண்குமார்... இது நிச்சயம் என்னை போன்ற பலருக்கு உதவியாக இருக்கும்.....

Unknown said...

நான் கோவை டூ பெங்களூர்
கோவை டூ திருச்சினு பல தடவை பைக்லயே பறந்தவன் எங்க குருநாதர் கோவை டூ பாம்பே பைக்லயே போயிறுக்காரு ஆனா இத்தன பில்டப் இல்லையே நைனா
சரி நடத்து...

Unknown said...

நான் கோவை டூ பெங்களூர்
கோவை டூ திருச்சினு பல தடவை பைக்லயே பறந்தவன் எங்க குருநாதர் கோவை டூ பாம்பே பைக்லயே போயிறுக்காரு ஆனா இத்தன பில்டப் இல்லையே நைனா
சரி நடத்து...