தலைகணம் பிடித்த
தலைகளின் மேல்
தலையை அசைக்காமல்
சுற்றும் தலைவனே...
ஒரே அச்சில் சுற்ற
யாரிடம் கற்றுக்கொண்டாய்
பூமியிடமா...
இதை எங்கள் பெண் ஆண்களுக்கும்
சொல்லித் தா... ஒரே ஆணின் பெண்ணின்
பின்னால் சுற்ற...
விநாயகனை போல்
சுற்றுகிறாய், என் தாய்தந்தை
தலைகளின் மீது...
உன் ஆட்டம் காண
அனைவரும் தலை நிமிர்ந்தே
ஆக வேண்டும்...
உன்னை கண்டுபிடித்தவன்
உன்னை அனுபவிக்கவில்லை,
உன்னை தரிசிக்க நான் தவம் கிடந்தேன்
மின்சாரம் இல்லா போது...
உன் அருமையை விளக்க
நீ பெரும்பாடு படதேவையில்லை
ஐந்து நிமிடம் நீ ஓய்வு
எடுத்தால் போதும்...
உன்னால் சாதிக்க பெற்றது
பல உண்டு, விளக்க
எனக்கு பொறுமையில்லை...
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
பத்து நிமிடம் ஆயிற்றே....
சதீஷ்......
4 comments:
நண்பரே. எங்கிருந்து இப்படி எல்லாம் கவிதை உங்கள் கற்பனையில் பிறக்கிறது..நாள்தோறும் என்னை கேளாமல் உழைந்து வியர்வையை துடைத்து உடலை குளிர்மைப்படுத்தும் ஒரு உயிரற்ற ஆத்மாவை நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை..நீங்கள் அதற்கு கவி புனைந்து கண்களை சுட்டுவிட்டீர்கள்..எரிகிறது..விசிரியை போடுகிறேன்.நன்றி.
இது எங்க காலேஜ் லைப்ரரில நா கரண்ட் இல்லாம இருந்த போது எழுதன கவிதை... உங்கள் வார்த்தைக்கு என் நன்றிகள்....
நல்ல கவிதை! கற்பனை அருமை!
வளர வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் அவர்களுக்கு மிக்க நன்றி...
Post a Comment