என் தோழர்கள்

Friday, 20 April 2012

புது கவிதை

*கவிதையே
உன்னை படைக்க
                           -நான்
உன்னை அழிக்க
                             -அவள்..


*ஆணின்
கண்ணீரை
கூட புரிந்து கொள்ள
தயங்கும்
பெண்ணின்
உலகிற்குள் நுழைவதே
பாவம்..


*கவிதை காதலுக்கு
            சொந்தமில்லை..
காதல் கவிதைக்கு
             சொந்தமில்லை..
பிறகு ஏன்,
             எழுதுகிறேன்
என் காதலிக்காக
              காதல் கவிதை...


*சரவெடியாய்
      இருந்த நான்
இன்று சங்கு
      சக்கரமாய் சுற்றுகிறேன்
அவளால்....


*நான் யார்- என்று
தேடினேன்
தெரியவில்லை
ஆனால்
தெரிந்துகொண்டேன்
நீ யார் - என்று


*காதலில்
விழாதவர்கள்
இருந்தால்
அன்று பெண்கள்
சிரிக்க மறந்தனர்
என்று அர்த்தம்....


*வரிகள்
கொண்ட 
வாழ்க்கை
வலிகளுக்கும்
சொந்தம்....


*ஆணும் பெண்ணும்
சமம்,
அது
கருவறையிலும்
கல்லறையிலும்
மட்டுமே......


*கடலில் காலை நினைக்க தோன்றும்
                    - அது காதலின் ஆரம்பம்.
அதே கடலில் மூழ்கி இறக்கவும் தோன்றும்
                   - அது காதலில் பயண்ம்....


*காதலிக்க 
தைரியமுள்ளவன்
அதை நண்பனிடம்
சொல்ல தயங்குவது - ஏன்
ஏன்னா,
                  அது அவன் தங்கச்சி ஆச்சே.....


*உன் தாயிற்கு
வர்ண்னையும்
ஒப்பனையும்
செய்ய
தெரியுமோ,
கருவறையிலே
உன்னை
கலராக்கிவிட்டாள்....


என்றும் காதலுடன்
சதீஷ்.........


4 comments:

Kumaran said...

*ஆணும் பெண்ணும்
சமம்,
அது
கருவறையிலும்
கல்லறையிலும்
மட்டுமே......@@@

ஆஹா..ஆஹா..அருமை..

*உன் தாயிற்கு
வர்ண்னையும்
ஒப்பனையும்
செய்ய
தெரியுமோ,
கருவறையிலே
உன்னை
கலராக்கிவிட்டாள்....@@@

அற்புதமான கற்பனை..அழகிய கவிதை..

காதலும் அழகுதான் - கவிதை என்ற பெயரில்...
தொடரட்டும் தங்கள் இனிய பணி..மிக்க நன்றி.

சதீஷ் மாஸ் said...

நன்றி குமரன்.....

சசிகலா said...

*வரிகள்
கொண்ட
வாழ்க்கை
வலிகளுக்கும்
சொந்தம்....//அழகான வரிகள் .

சதீஷ் மாஸ் said...

நன்றி சசிகலா அவர்களுக்கு...