என் தோழர்கள்

Tuesday, 24 April 2012

சாமி எங்கடா...?

கடவுள் இருக்காறா இல்லயா? இதுக்கு பதில் இன்னைக்கு வரைக்கும் யாருக்குமே தெரியல. ஆனா, நம்மல வழி நடத்துற சக்தி ஒன்னு இருக்குனு மட்டும் எல்லாருக்குமே தெரியும். ஆன்மிகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். ஆன்மிகவாதி கடவுளை நம்பறான், நாத்திகவாதி தன்னை நம்பறான்.

கடவுள் இருக்கார்னு சொல்றான் பாரு அவனை நம்பலாம். கடவுள் இல்லைனு சொல்றான் பாரு அவனை கூட நம்பலாம். ஆனா நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது. கமல்ஹாசன் சார் சொன்னது.

எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது தான், ஆனா கடவுள் இல்லவே இல்லனு சொல்லவேமாட்டேன். ஒரு சக்தி தான் நம்மளை இந்த உலகத்துல செயல்பட வைக்குது. அந்த சக்தி எந்த ரூபத்துல வேணாலும் இருக்கலாம்ல. அத ஏன் பிரிக்கனும், ஆனா அந்த சக்தி மதத்தாலயும் மொழியாலயும் இனத்தாலயும் பலவாறு பிரிஞ்சி இருக்கு...

எனக்கு ஆன்மிகத்த பத்தியும் அதிகமா தெரியாது, நாத்திகத்த பத்தியும் அதிகமா தெரியாது. ஆனா, அந்த ரெண்டுத்த பத்தியும் பேசறவங்களோட பேச்ச கேக்க ரொம்ப பிடிக்கும். ஒரு இந்து உண்மையான ஒரு இந்துவா இருப்பான், ஒரு கிறிஸ்த்துவன் உண்மையான ஒரு கிறிஸ்த்துவனா இருப்பான், ஒரு இஸ்லாமியன் உண்மையான் ஒரு இஸ்லாமியனா இருப்பான். அதுபோல தான் - நாத்திகம் பேசறவங்களும், தங்களுடய கருத்துல மிகச் சரியா இருப்பாங்க.

ஒவ்வோரு மதத்துக்கும் சில கொள்கைகள் இருக்கு. நான் பிறப்பால் ஒரு இந்து அதனால எனக்கு இந்து மத கொள்கைகள், செயல்கள் பத்தி கொஞ்சம் தெரியும். அதுப்போல நா வளர்ந்த சூழ்நிலைகள் கிறிஸ்த்துவ மதம் சார்ந்த இடம், ஆகையால் எனக்கு அந்த மதம் பற்றியும் கொஞ்சம் விவரங்கள் தெரியும்.

ஆனால், இதுவரை எனக்கு பரிச்சியம் இல்லாத மதமான இஸ்லாமியத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அந்த சந்தர்ப்பம் ஒருநாள் கிட்டியது. அதுவரை எனக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு அந்த இஸ்லாமியர் பதில் அளித்தார். அவரின் பதில்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பல புதிய அருமையான ஆச்சரியமான விஷயங்களை அவர் சொன்னார். அனைத்தும் எனக்கு புதியதாய் இருந்தன...

இந்து, கிறிஸ்த்துவம், முஸ்லீம் என மதங்கள் பல உள்ள நம் நாட்டில் தான் எத்துனை அழகான மனங்கள். நான் இந்தியாவில பிறந்ததுக்கே முதலில் பெருமைப்படுகிறேன். 

நான் ஒரு ஆன்மிகவாதி என்றும், கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும் என்னால் முழுமையாக கூறிவிட முடியாது. அதுப்போல நான் நாத்திகவாதியும் அல்ல. வாரந்தோறும் வியாழன் அன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். அங்கு செல்வதால் எதோ ஒரு மன நிம்மதி கிடைக்கிறது. எல்லா செயல்களும் நல்ல விதமாகவே செயல்படிக்கிறது என்று ஒரு சிறுஆறுதல்.

சாய்பாபா அவர்கள் ஒரு இறைதூதர் என்று சொல்லாலம், அவர் வகுத்த சில வழிகள் என்னை போன்று சிலரை நம்ப வைக்கிறது. ஆனால், பிற மதத்தினர் இவரை ஏற்பதில்லை. காரணம், அது அது அவர்களின் கொள்கை.

மனநிம்மதி தேடி அலையும் பல மனிதர்களை நாம் இப்போது காண முடிகிறது. பல ஆசிரமங்களில் தஞ்சம் புகும் மனிதர்களையும் காண முடிகிறது. இறைவனை தேடி மக்கள் ஒருகாலத்தில் அலைந்தார்கள், ஆனால் இப்போது நிலைமை வேறு. இறைவனை தேடி அலையும் மக்களை விட அமைதியை தேடி அலையும் மக்கள் தான் அதிகமே.

Now a days, God is passion.. இந்த வரிக்கு எனக்கு சரியா அர்த்தம் தெரியாது, ஆனா தெரியும். அறைஎண் 305ல் கடவுள் அப்படிங்கற ஒரு தமிழ் படத்துல, ஒரு சீன் வரும். GOD IS NO WHERE அப்படிங்கற ஒரு போர்டுல ஒரு சின்ன திருத்தம் பண்ணி, GOD IS NOW HERE அப்படினு மாத்துவார். கடவுள் இருக்குனு நம்பறவனுக்கு கண்டிப்பா இருக்காருனு இதுக்கு நாம் அர்த்தம் சொல்லலாம்.

கல்லையும் கல்லையும் உரசினா நெருப்பு வரும்னு மனுஷன் கண்டுபிடிச்சு இருக்கலம், ஆனா கல்லயும் கல்லயும் உரசினா நெருப்புதான் வரனும்னு மனுஷன் கண்டுபிடிக்கலயே..

சாமி எங்கனு நாம் தேடி அலைவதை விட அந்த சாமியை நம்மின் மனகோவிலுக்கு கொண்டுவருவோம். இன்று வரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள இறைவனை தேடி நம் பயணம் தொடரட்டும்.

சதீஷ்..........

15 comments:

Unknown said...

hey you are writing very good man.

சதீஷ் மாஸ் said...

thank u sir...

KANTHANAAR said...

///ஆனா, நம்மல வழி நடத்துற சக்தி ஒன்னு இருக்குனு மட்டும் எல்லாருக்குமே தெரியும். ///
எங்க சார் இருக்கு.. கொஞ்சம் கூப்புடுறிங்களா....

சதீஷ் மாஸ் said...

இப்படிலாம் கேட்ட நா என்னத்த சொல்றாது.

Anonymous said...

///ஆனா, நம்மல வழி நடத்துற சக்தி ஒன்னு இருக்குனு மட்டும் எல்லாருக்குமே தெரியும். ///
எங்க சார் இருக்கு.. கொஞ்சம் கூப்புடுறிங்களா..../// டிரான்ஸ்பார்மர் கம்பியில் மின்சாரம் பாய்கிறது தொடாதீர்கள் என்று சொல்கிறேன் கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்று தத்துவம் பேசி தொட்டு பார்பீர்களா? அல்லது விட்டு நிற்பீகளா? கண்காணாத மனிதரிடம் எதிரில் வண்டி வருகிறது சற்று ஓரமாக நில்லுங்கள் என்று கூறினால் கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று அந்த கண்காணாத மணிதன் பதில் (நாத்திகம் போன்று) கூறினால் அவருக்காக பரிதாபபடதான் முடியும்
சதீஸ் சாய்பாபா போன்ற மனிதர்களை வணங்குவதை விட்டுவிட்டு பகவத் கீதையை நன்றாக படியுங்கள் முடிந்தால் ரிக் எஜூர் போன்ற வேதங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும்( தமிழில் கிடைக்கிறது ) படியுங்கள் பைபிள் , குர் ஆன் போன்றவற்றையும் படியுங்கள் கன்டிப்பாக உண்மையான கடவுளையும் மததையும் கண்டுபிடிக்க முடியும் குர் ஆன் மொழிபெயர்ப்பு பைபிள் போன்றவை இணைய தளங்களில் இலவசமாக கிடைக்கிறது

தமிழ் செல்வா said...

சதீஷ் உங்க எழுத்து நடை நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள். கடவுள் பூவின் அழகு போல. பூவுல அழகு எங்க இருக்கு. எந்த இதழ் லயும் தனியா இல்ல. ஒட்டுமொத்த பூதான் அழகு. கடவுளும் அப்படிதான். கடவுளுக்கு மதமில்லை. தமிழ் வார்த்தை மிக தெளிவா இருக்கு. எல்லாம் கடந்தவர், எல்லாத்துலயும் இருப்பவர். நீங்களும் கடவுள். நானும், எல்லா உயிரும் கடவுளே. தனி நபர் கடவுள் இல்லவே இல்லை. அன்பு போல, இரக்கம் போல, உண்மை போல கடவுள் என்பதும் ஒரு மதிப்பீடு. அவ்வளவுதான். நன்றி.

medimiss.org said // சதீஸ் சாய்பாபா போன்ற மனிதர்களை வணங்குவதை விட்டுவிட்டு பகவத் கீதையை நன்றாக படியுங்கள் முடிந்தால் ரிக் எஜூர் போன்ற வேதங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும்( தமிழில் கிடைக்கிறது ) படியுங்கள் பைபிள் , குர் ஆன் போன்றவற்றையும் படியுங்கள் கன்டிப்பாக உண்மையான கடவுளையும் மததையும் கண்டுபிடிக்க முடியும் //

நன்றி மெடிமிஸ் அவர்களுக்கு.. என்னிடம் பைபிள் புத்தகம் இருக்கு. குர் ஆன் படித்து பார்க்க வேண்டும் என்று ஆசைதான்.. கண்டிப்பாக படிக்கிறேன்

சதீஷ் மாஸ் said...

selvaraj said : //சதீஷ் உங்க எழுத்து நடை நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள். //

நன்றி செல்வராஜ் அவர்களுக்கு.. உங்கள் வரிகள் எனக்கு உற்சாகம் ஊட்டியிருக்கிறது.

சித்தார்த்தன் said...

தோழர் சதிஷ் அவர்களுக்கு,

தங்களது கருத்துகள் அனைத்தும் நன்றாக உள்ளன............தொடர்ந்து எழுதுங்கள்......நன்றி

Sivakumar said...

சதீஷ் எப்படி இருக்கீங்க?

சதீஷ் மாஸ் said...

தோழர் சித்தார்த்தன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்....

சதீஷ் மாஸ் said...

! சிவகுமார் ! said :
சதீஷ் எப்படி இருக்கீங்க? //

நல்லா இருக்கேன்... இப்பதான் ஞாபகம் வந்துச்சா சார்....