என் தோழர்கள்

Monday, 23 April 2012

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் அவர்கள் சொல்லி இருக்கிறார். என்னமோ தெரியல நா கண்ட கனவு மட்டும் இது வரை பலித்ததே இல்லை. ஆமாம், கனவு கண்ட மட்டும் போதுமா அதுக்குனு எதாச்சும் முயற்சி செய்யனும்ல.


2007ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிச்சு வெளில வந்த தருணம். ஏதோ மலையை கயிறுல கட்டி இழுத்த சந்தோஷம், அப்பபாடானு பெருமூச்சு விட்டு வீட்டுக்கு ஓடிவந்தேன். ஒரு ரெண்டு மூனு நாள் நல்ல ஜாலியா போச்சு, அதுக்கு அப்புறம் தான் ஒரு வெற்றிடம் வந்துச்சு. இத்தன நாளா ஒன்னா இருந்த என் ஃபிரண்ட்ஸ் இப்ப ஆளுக்கு ஒரு மூலைல இருந்தோம். போன்கூட இல்லாதால் சுத்தாமா தொடர்பு இல்லமா போச்சு. ஆஞ்சிஓஞ்சி ரெண்டு மாசம் போனதுக்கு அப்புறம் எப்படியோ பத்தாவது பாஸ் பண்ணி 11வாப்பு அதே பள்ளில சேந்தாச்சு... அட்ராசக்க


ஒரு புது பயணம், எதோ கம்ப்யுட்டர் மேல இருந்த மோகத்துல அதே பிரிவு எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வோரு ஆசிரியரும் நல்லா பழக ஆரம்பிச்சாங்க, அது ஒரு புது உணர்வு. இதுவரைக்கும் ஆசிரியர் மேல இருந்த ஒருவித பயம் போச்சு. அவங்க பழகன விதம் அப்படி. எனக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த மாரிஸ்வரன் சார் இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்காரு. அவருக்கு அப்ப வயசு 25, இளமை துள்ளலுடன் இருந்த அவரும் நாங்களும் போடாத ஆட்டமே இல்லை. எல்லமே ஒரு லிமிட்டுகுள்ள தான். காஞ்சனா மேடம் அடுத்து, எங்களுக்கு வேதியியல் பாடம் எடுத்தவங்க. எனக்கு இன்னும் இவங்க என்கிட்ட பேசின வார்த்தை நல்லா ஞாபகம் இருக்கு. எனக்கு அப்ப தெரியாது அந்த ரெண்டு வருஷம் என் வாழ்க்கையே மாத்த போகுதுனு. பத்தாவது முடிச்ச அப்ப இருந்த வலியோடு இப்ப அதிகமாவே இருந்துச்சு. அதுக்கு காரணம், இப்ப நா விட்டு பிரிஞ்சி போகறது என் ஃபிரண்ட்ஸ் மட்டும் அல்ல, ஆசிரியர்களையும் தான். (என் கலாஸ் பொண்ணுங்களும் தான். அச்சோ அவங்களாம் விட்டு நா எப்படி இருக்க போறேனோ. )


கடைசி நாள் தேர்வு முடிச்சுட்டு வெளிய வந்தப்ப, எதோ ஒரு பெரிய உலகத்த விட்டு பிரியற அந்த வலிய நான் அன்னைக்கு உணர்ந்தேன். பதிநாலு வருஷம் என்னோட பள்ளி படிப்பு அந்த தினத்தோடு முடியுது. அஹுக்கு அப்புறம் நாம என்னா முயற்சி செஞ்சாலும் அந்த வாழ்க்கைக்கு போக முடியாது. ஆனா பல மறக்க முடியாட தோழர்களையும் தோழிகளையும் கொடுத்த ஒரு குட்டி சொர்க்கம் அது.


அட இதுக்கே இப்படினா, அடுத்து ஒன்னு இருக்கு. அது தான்பா காலேஜ். நினைச்சி பாக்கவே செமயா இருக்கு. 2009ம் ஆண்டு, பல கனவோட கல்லூரிக்கு போறவங்க கூட நானும் போனேன்.(அப்பாடா தலைப்பு வந்துடுச்சு) எதோ சொர்கத்துல கால வச்ச மாதிரி இருந்துச்சு.. எந்த பக்கம் திரும்புனாலும் ஒரே ஃபிகர்ஸ் செம குஜால்ஸ். இனிது இனிது படத்துல காட்டுவாங்கள அதே மாதிரி தான். B.Sc Electronics and Communication Science இது தான் நா எடுத்த பட்ட படிப்பு. அந்த கோர்ஸ் பத்தி ஒரு மண்ணுமே தெரியாது. ஆனா, என்னோட வாழ்க்கை அங்க தான் ஆரம்பிச்சுது..


ஒரு பக்கம் படிப்பு அதுபாட்டுக்கு போயிட்டு இருந்துச்சு. மறுபக்கம் கல்லூரிக்கே உண்டான சில சில்லறை வேலைகள், அதுதாங்க சினிமாக்கு போறது, பீச்க்கு போறது. சொல்ல போன கலேஜ் கட் அடிக்கறது. கல்லூரி பேராசிரியர் கூட சண்ட போடறது, இது எல்லார் வாழ்க்கையிலுமே நடந்து இருக்குமே.. ஸ்கூலை விட காலேஜ்ல தான் நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ். அவங்க கூடலாம் பழகறதே ஒரு தனி அனுபவம். நிறைய அனுபவ பாடத்தையும் வாழ்க்கை பாடத்தையும் எனக்கு கத்து கொடுத்த பெருமை அந்த அழகிய தேவதைகளுக்கே சொந்தம். 


அந்த காலேஜ்ல படிக்கும் போது தன் எனக்கு இன்டர்நெட் புழக்கமும் பழக்கமும் வந்துச்சு. Facebookல ஆரம்பிச்சு இப்ப Blog வரைக்கும் வந்தது ரொம்ப பெருமயா இருக்கு.. அப்ப வரைக்கும் கூட என் வாழ்க்கையில எந்த ஒரு கனவும் இல்லாம லட்சியமும் இல்லாம தான் இருந்துச்சு. அடுத்து வாழ்க்கையில என்ன பண்ணப்போறோம அப்படினு எதுவுமே தெரியாத நிலமை தான்.. இந்த வருஷம் 2012ல வெற்றிகரமா என் கல்லூரி படிப்ப முடிச்சாச்சு.


அப்பாவும் அம்மாவும் ரொம்ப படிச்சவங்க கிடையாது, ஆனா படிப்பு எவ்ளோ முக்கியம்னு நல்லா தெரிஞ்சவங்க. மூச்ச புடிச்சுகிட்டு என்னை கரை சேத்துடாங்க. என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சிடனும்னு ரொம்ப ஆசைப்பட்டு இப்ப அத செஞ்சி முடிச்சிடாங்க. அவங்க கனவு ஆசை லட்சியம் எல்லாமே இப்ப நிறைவேறிடுச்சு. ஆனா நா என்ன பண்ண போறானு தெரியலயே, என்மேல நம்பிக்கை வச்சு என்ன இவ்ளோ தூரம் அனுப்பியங்களுக்கு நான் என்ன செய்ய போறேனு தெரியலயே.


எல்லா காலேஜ்லயும் இருக்கறமாதிரி எங்க காலேஜ்லயும் கேம்பஸ் இன்டர்வியு இருந்துச்சு, நடந்துச்சு. கழுதை, அந்த இங்கீலிஷ் கருமம் தெரியாததுனால DELL, HCL கம்பனி இன்டர்வியு ஊத்திகிச்சு. செம கடுப்பு ஆயிட்டேன், ஆனா அத நினைச்சுலாம் நா கவலைப்படல.. நமக்குனு ஒன்னு இல்லமயா போய்டும். எல்லாமே நன்மைக்கே. (All Is Well)


நமக்கு இந்த வேலைலாம் சரிப்பட்டு வராதுனு முடிவு பண்ணி, அப்பாகிட்ட சொன்னேன். சரி என்ன பண்ண போறானு நீயே சொல்லுனு சொன்னாரு. Cinematography பண்ணனும் ஆசையா இருக்குபானு சொன்னேன். அப்பாக்கு சினிமா துறையப்பத்தி நல்லா தெரியும், ஏன்னா அவர் அதுல தான இருபது வருஷமா குப்பைய கொட்டிகிட்டு இருக்காரு. முதல்ல வேணாம்னு கண்டிப்பா சொன்னவரு, அதுக்கு அப்புறம் எனக்காக ஒத்துக்கிட்டரு. ஆனா அப்பாக்கு உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சு. சினிமாக்கு போறதுக்காக இவன இவ்ளோ கஷ்டபட்டு படிக்கவைச்சோம்னு அவர் நினைக்கறத என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது.


அப்புறம் ஒரு பத்து நாள் கழிச்சு Wipro Technologies ல இருந்து கேம்பஸ் இன்டர்வியுக்கு வந்தாங்க. நாம சினிமாக்கு தான போகபோறோம் அப்படிங்கற நினைப்போடு, எல்லா பசங்களோடும் நானும் அந்த இன்டர்வியு அட்டேன் பண்ணேன்.


எல்லாருடைய வாழ்க்கையுலயும் ஒரு திருப்பம் வரும்ல, அது என்னக்கு அன்னைக்கு அமைஞ்சிச்சு. 25/01/20112, குடியரசு இதினத்துக்கு முன் நாள். முதல் ரவுண்டு objective test, அதனால எப்படியோ பாஸ் பண்ணிடேன். நமக்கு இங்கீலிஷ் மட்டும் தான் வராது, ஆனா Maths,Science,GK அன்னைக்கு டெஸ்ட்ல கலக்கிட்டோம்ல. நான் முதல் ரவுண்டு பாஸ் பண்ணிட்டேனு அவங்க என் பேர வாசிச்ச அப்போ இருந்த உணர்வை சொல்லவே முடியாது. ஏன்னா, அந்த இதுக்கே அவ்ளோ சந்தோஷப்ப்ட்டேனா, அடுத்து பர்ஸ்னல் இன்டர்வியு ஆச்சே. என் நிலமைய சொல்லவா வேணும்.


ஒரு அரைமணிநேரம் உணவு இடைவெளிக்கு அப்புறம் செமினார் ஹாலுக்கு வர சொன்னாங்க. மொத்தமா நாங்க நாப்பது பேர் அங்க இருந்தோம். ஒரு பேப்பர் கொடுத்து அதை ஃபில் பண்ண சொன்னங்க. ஒருவித பயத்தோடவே நா ஒவ்வோரு காய நகத்தினேன். எனக்கு விருப்பமே இல்லாம வந்த இடத்துல நான் முதல் ரவுண்டு பாஸ் பண்ணி இருக்கேனே, அங்க எனக்கு தேவையான எதோ ஒன்னு இருக்குனு தான அர்த்தம். அதனால இப்ப இருக்கற பர்சனல் இன்டர்வியு'அ முழுசா செஞ்சி பாத்தடனும்னு ஆசை வந்துச்சு. வாழ்வோ சாவோ அது ஒருமுறை தான் அப்படினு நல்லா தெரிஞ்சவன் நான்.


சரியா, மாலை 4.30க்கு என்ன உள்ள கூப்டாங்க. அவங்க கேட்ட கேள்விக்குலாம் ரொம்ப அமைதியா பதில் சொன்னேன். முடிஞ்ச வரைக்கும் பாசிட்டிவ் ஆ பதில் சொன்னேன். நான் ஒரு புக்'ல படிச்சு இருக்கேன், எப்படிலாம் அங்க கேள்வி கேப்பாங்க அதுக்கு நாமா எப்படி பதில சொன்னா நால்ல இருக்கும்னு. உன்கிட்ட extra curricular activities இருக்கானு அவங்க கேட்ட கேள்விக்கு என்னோட பதில் என்ன தெரியுமா, நான் இன்டர்நெட்ல பிளாக் எழுதரேன்னு சொன்னது தான். அவங்க ரொம்ப ஆச்சரியத்தோட அதபத்தி விசாரிச்சாங்க. எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்துச்சு, இங்க நாமா யூஸ் பண்ற HTML பத்தி கொஞ்சம் சொன்னேன். அவங்களுக்கு இதலாம் புடிச்சு போச்சு போல.. வெளில வெயிட் பண்ணுங்க கூப்பறோம்னு சொன்னாங்க.. 


5மணிக்கு எல்லாரையும் உள்ள கூப்டாங்க... வந்து இருந்த ரெண்டு HRம் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு ரிசல்ட் சொல்ல ஆயத்தம் ஆனாங்க.எனக்கு அப்பவே வேர்க்க ஆராம்பிச்சுருச்சு... மொத்தம் 25பேர் செலேக்ட் ஆயிருக்காங்க.. அதுல நானும் ஒருத்தேன், என் பேர அவங்க சொன்ன போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். அன்னைக்கு தான் எனக்கும் என் பேருக்குமே பெருமனு தோனுச்சு.. வெளில வந்து ஒவ்வோருத்தர் முகத்தையும் பாக்கனுமே, அட்ராசக்க'னான....


என்னால நம்பவே முடியல. இத்தன நாளா என்ன பண்ணபோறேனு தெரியாம இருந்த எனக்கு கிடைச்சு மிகப்பெரிய வாய்ப்பு இது. என்னைவிட என் அப்பாவும் அம்மாவும் தான் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..... அத நா இன்னைக்கும் பாத்தேன், இத்தன நாளா ரொம்ப கஷ்டபட்டவங்க, இப்பலாம் தினமும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க.... இனிமே அவங்க லைஃப்ல கஷ்டமே கிடையாதுல... இந்த தருணத்துல நா அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகனும். ரொம்ப நன்றி'மா..


இந்த சந்தோஷத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுல நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த பிளாக்கால எனக்கு வேலை கிடைச்சுதுனு சொல்லிகறதுல நா ரொம்ப பெருமைப்படறேன்... தேங்கஸ் டூ ஆல் பிளாக்கர்ஸ்...


அடுத்த மாசம் பெண்களூர்ல வேலைல ஜாயின் பண்ணனும், அதாங்க நம்ம ஜாக்கி சார் ஊரு... நானும் அந்தமிகப்பெரிய கண்ணாடி ஆபீஸ்க்கு வரேன் பாஸ். எங்க ஆயா, சோழிங்கநல்லூர்ல இருக்கற கம்பெனிய பாத்து அப்படி தான் சொல்லவாங்க...


என்றும் வேலையடன்
சதீஷ்.......

4 comments:

சித்தார்த்தன் said...

வாழ்த்துக்கள்............நல்ல வேலை கிடைததுகும்.........நல்ல பதிவு தந்ததுக்கும்..........

சதீஷ் மாஸ் said...

நன்றி சித்தார்த்தன் அவர்களுக்கு.....

vini said...

nice da super'a yeluthi iruka.all the best continue ur life with happy and joyfull by vinitha.i'm also wiproate

சதீஷ் மாஸ் said...

oh ok dude.....