என் தோழர்கள்

Friday 11 November 2011

நட்பு என்பது

நண்பன் இருந்தால் நாட்டையும் ஆளழாலம் என்பது புதுமொழி. ஒரு நட்புக்கு அவ்ளோ பெரிய தைரியம், திமிரு இருக்கா என ஆராய்ந்தால் அது உண்மையே ஆகும். ஆபத்தில் உதவுவனே உற்ற நண்பன் என்ற பழமொழி இன்னும் பழுதாகவில்லை.


இந்த பதிவு எழுத காரணமே என் பாட ஆசிரியர் அவர்கள் தான்.. அவர் வகுப்பில் ஒரு பொது கேள்வி கேட்டார், அதன் தாக்கமே இப்பதிவின் நோக்கம்.

அந்த கேள்வி "" உங்களுக்கு ஒரு நண்பன் அமைய அவனுக்கு என்ன தகுதி வேணும், அவர் எப்படி இருந்தா உங்க நண்பரா அவர ஏத்திப்பீங்க, அவர் என்னாவா இருக்கனும்" இந்த மாறி பல கேள்வி கேட்டாங்க. ஆனா அவங்க கேட்ட கேள்வி எனக்கு புரியலனு சொல்ல முடியாது, எனக்கு பிடிக்கலனு சொல்லலாம்..


அந்த மானங்கெட்ட கேள்விக்கு என் வகுப்புல நிறைய பேர் தங்களோட கருத்த சொன்னாங்க, அது அத விட கேவலமா இருந்துச்சு.. " எனக்கு சமமான தகுதி (status) இருந்தா மட்டும் தான் நான் அவங்கள என் ஃபிரண்டா ஏத்துப்பேன்" அப்படினு ஒரு பொண்ணு சொன்னா.. எனக்கு வந்த கோபத்துக்கு அவள பளார் பளார்னு அடிக்கனும் தோனுச்சு. தெரியாமா தான் கேக்கரேன் அது என்னங்க தகுதி'ங்கறது. நல்ல ஃபிரண்ட்க்கு உண்மையான மனசு இருந்தா போதும், வேற எந்த தகுதியும் தேவையில்லை.. இரண்டு ஃபிரண்டுல ஒருத்தன் பணக்காரனாவும் இன்னொருத்தன் ஏழையாவும் இருந்தா அவங்களால நட்பா பழக முடியாதா என்ன... அந்த இடத்துல எந்த தகுதியும் பாக்காம பழகற அந்த பணக்கார பையனோட நட்பு கிடைக்க அந்த ஏழை பையனும், தன்னுடய ஆழ் மனதில் இருந்து எந்த பலனயும் எதிர்பாக்காம பழகுற ஏழை பையனின் நட்பு கிடைக்க அந்த பணக்கார பையனும் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கனும்.


அடுத்து ஒரு பையன், " என் அளவுக்கு அறிவா பேசற பையன், நல்லா படிக்கற பையன்கிட்ட மட்டும் தான் பழகுவேன், அவங்கள மட்டும் தான் நா என் ஃபிரண்டா ஏத்துப்பேன்" னு சொன்னான். இந்த பதில உங்ககிட்டயே விட்டரேன் சரியா தவறானு சொல்லுங்க. அப்ப என்ன மாதிரி முட்டாள் பசங்க அவன்கூட சேரவே கூடாதா? அந்த நாயோட நட்பே தேவையில்லைனு நா மனசுல நினைச்சுகிட்டேன்.. எங்க ஏரியால எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க, எல்லாரும் நிறைய படிச்சவங்க இல்லை. 5வது 6வது வரைக்கும் படிச்சிட்டு வேலைக்கு தான் போறானுங்க, அவனுங்க கூட நா பழகலயா? உண்மையான நட்பை அவங்ககிட்ட காட்டலயா? எனக்கு எதாச்சும் ஒன்னு ஆயிடிச்சுனு தெரிஞ்சா போதும் ஒவ்வோருத்தனும் சிட்டாட்டும் பறந்து வருவனுங்க.. எங்களுக்கு உள்ள எந்த பிரிவும் வந்தது இல்லை, இனி வரப்போறதும் இல்லை.. நான் நல்ல படிச்ச பசங்ககிட்ட மட்டும் தான் பழகுவேனு சொல்லற வரைக்கும் பிரிவு வராது, கவலப்படாதீங்க அந்த மாதிரி அசிங்கமா நா பேசமாட்டேன்...


அடுத்து என்னோட வாய்ப்பு வந்துச்சு, நான் எழுந்து நின்னு எல்லாரயும் ஒரு பார்வை பாத்தேன்.. எனக்கு பேச புடிக்கல அப்படினு சொல்லுட்டு அமைதியா உக்காந்துட்டேன்... மொத்தம் 50பேர்ல 6பேர் மட்டும் தான் பதில் சொன்னாங்க, மத்தவங்க எல்லாரும் பேச புடிக்கலனு மட்டும் தான் சொன்னாங்க.. ஏன்னா அவங்க சதீஷோட ஃபிரண்ட்ஸ், நா அவங்களோடஃ பிரண்ட்ஸ்னு அன்னைக்கு நிரூபிச்சாங்க...


ரொம்ப அருமையான கேள்வி தான் ஆசிரியர் கேட்டாங்க ஆனா அத கேட்ட இடம் சரி இல்ல, ஃபிரண்ட்ஸிப்ப உயிரா நினைக்கறவங்ககிட்ட அந்த கேள்விய கேட்டு இருக்கனும்... சும்மா டைம் பாஸ்க்கு பழகறவன்கிட்ட கேட்டது தப்பு தான். 


6லிருந்து 60 வரைக்கும் எல்லாருமே இளைஞர்கள் தான் என புதியதலைமுறை இதழில் அடிக்கடி சொல்லுவாங்க.. அது உண்மை தான், அதேபோல தான் நட்புக்கும் வயது வரம்பு கிடையாது. அப்பா தன் மகன்கிட்ட பழகற நட்பை வச்சி தான் இத விளக்க முடியும். அந்த இடத்துல கூட தான் பையன்ங்கற காரணத்தால தான் அவர் நட்பா பழகுவாறு.. ஆனா எந்த ஒரு காரணமும் இல்லாம, எதயும் எதிர் பாக்காம, எல்லாதயும் பெருசா நினக்கமா நட்ப மட்டுமே பெருசா நினைக்கற ஒரு உறவுக்கு பேர் தான் நட்பு..


காதல் கூட நம்மகிட்ட சொல்லிட்டு தான் வந்து போகும் ஆனா நட்பு அந்த மாதிரி கிடையாது.. நட்பை காதலுடன் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது.. ஹாய்டா ஐயம் சதீஷ், அப்படினு நான் ஒருத்தன்கிட்ட சொல்லும் போதும் அந்த நிமிசத்துல இருந்து எங்க நட்பு ஆரம்பிக்கும்.. என்னடா இது பைத்தியகாரன் தனமா இருக்குனு உங்களுக்கு தோனுச்சினா அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது.. ஆனால் இது தான் மறுக்க முடியாத உண்மை...


நாம போற இடம்லாம் நமக்கு நண்பர்கள் இருப்பாங்க, அவங்க எந்த வடிவுல எந்த நிலைல இருந்தாலும் நாம அவங்கள ஏத்துக்கனும்.. உங்களுக்குள்ள ஒரு தடவ செட் ஆயிடிச்சுனா போதும், அப்புறம் உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை..


நட்போட மதிப்பு என்னனு தெரிஞ்சது நால தான் இன்னைக்கு வரைக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் வெற்றிகரமா போய்ட்டு இருக்கு. அவங்கல அழிக்க முடியாது,, ஏன்னா அங்கே பல நட்பு உறவாடி கொண்டு இருக்கிறது.


ஒரு நம்ப முடியாத உண்மை.. முஸ்லிம் ஃபிரண்ட் இல்லாத ஒரு இந்துவ நீ இந்தியால பாக்க முடியாதுனு விஜய் வேலாயுதம் படத்துல சொல்லுவாரு.. அது 99.99% உண்மையா தான் இருக்கும் என்பது என் கருத்து...


சிவகுமார் னு எனக்கு ஒரு நண்பர் இருக்காரு, அவர் அவரோட ஃபிரண்ட்ஸ் பத்தி ஒரு நாள் என்கிட்ட சொன்னாரு நா ரொம்ப அசந்து போய்ட்டேன்.. அவர் ஸ்கூல் படிக்கும் போது உண்டான நட்பு அது, இன்னும் அது ஆடாமல் ஆசையாமல் இருக்கிறது.. சிவகுமார் ஒரு இந்து, அவரோட இன்னொரு நண்பர் கிறிஸ்டின், அவங்களோட இன்னொரு நண்பர் முஸ்லீம்.. இவங்க மூணு பேரும் கடந்த 15 வருஷமா நண்பர்களா இருந்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.. நட்புக்கு இனம், மதம், மொழி என எந்த பாகுப்பாடும் இல்லை என்பதுக்கு இதுவே உதாரணம்... (கண்ணுப்பட போகுதய்யா சின்னகவுண்டரு, சுத்திபோட வேணும்மய்யா சின்னகவுண்டரு)... 


காற்றும் நட்பும் ஒரே மாதிரி தான், ரெண்டயும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.. ரெண்டும் இல்லாம என்னால வாழனும் முடியாது.. காதலை விட சிறந்த நட்பை சிதைத்து விடாதீர்... ஒவ்வோரு ஃபிரண்டும் தேவை மச்சான்...


*காலத்தாலும் காற்றாலும் பிறவற்றாலும்
அழியாமல் இருக்க நட்பு பதிவு செய்யப்படுகிறது.


*காற்றோடு கலந்து சென்று விடும்
நினைவு அல்ல அது - காலத்திற்க்கும்

பேசபட வேண்டிய உறவு அது.



நட்பே,
என் இதயம் துடிப்பது போன்ற உணர்வு
                                            - நீ உடன் இருந்தால்
என் இரத்தம் உறைவது போன்ற உணர்வு
                                             - நீ உடன் இல்லையேல்
நீ இல்லா இவ்வுலகம் உயிரற்ற உடல்களின் "நடமாட்டம்"
 




நட்பால் வாழ்தவனும் இருக்கான், செத்தவனும் இருக்கான்.. அது நட்போட தவறு இல்ல நண்பனோட தவறு... உங்க ஃபிரண்ட் உங்கல நம்பி வரான், அவன கெடுத்தற கூடாது. தான் நண்பனுக்கு துரோகம் நினைக்கற எவனும் நண்பனா இருக்க முடியாது. எத்தன பக்கம் வேணாலும் நட்பை பத்தி நான் பெருமையா பேசுவேன், ஆனா இதன் நட்புனு எனக்கு விளக்க தெரியல....

நட்பையும் நண்பர்களை தேடு நாம் பயணிப்போம், என்றாவது ஒரு நாள் பாதை முடியும் அன்று திரும்பி பார்த்தால் நட்பின் பெருமை தெரியும்.. 









என்றும் நட்புடன்,
சதீஷ்.........


3 comments:

N.H. Narasimma Prasad said...

ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சதீஷ். நல்லாயிருக்கு. அதே சமயம் நீங்க தமிழ் 10, இன்ட்லி, யுடான்ஸ் போன்ற திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை உங்கள் பதிவுகளில் இணைத்தால் உங்கள் பதிவு மேலும் பிரபலமடையும். இன்னும் நீங்கள் நிறைய 'நண்பர்களை' நீங்கள் பெற இது வழிவகுக்கும். பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

ஹல்லோ..சதீஷ், எப்படி சார் இருக்கீங்க?

Anonymous said...

//கண்ணுப்பட போகுதய்யா சின்னகவுண்டரு//

கடைசில கேப்டன் கூட கோத்து விட்டுட்டீங்களே..