என் தோழர்கள்

Wednesday, 9 November 2011

வெற்றியும் தோல்வியும் - சிறுகதை

அந்த ரெண்டு பசங்களுக்கும் இருபது வயசு இருக்கும். அது வரைக்கும் சந்திச்சிக்காத அந்த ரெண்டு பேரும் சந்திக்க ஒரு வாய்ப்பு வருது. சென்னையில ஒரு மிக பெரிய கல்யாண மண்டபம், அங்க தான் அவர்களின் முதல் சந்திப்பு இனிதே அரங்கேறியது.


பாஸ், ஒரு போன் பண்ணனும் உங்க போன் கொஞ்சம் தர முடியுமா? என கெஞ்சலாக கேட்டது குமரனின் குரல். எதோ அவன் சொத்தையே கேட்ட மாறி ஒரு முற முறச்சிட்டு போன் எடுத்து கொடுத்தான் கிஷோர்... குமரன் போன் பேசி முடிக்கற வரைக்கும் அவன் கூடவே இருந்து அவனோட போன்'அ திரும்ப வாங்கினான் கிஷோர்.


தாங்கஸ் பாஸ், என்கிட்ட பேலன்ஸ் இல்ல அதான் உங்கிட்ட போன் கேட்டேன். ரொம்ப நன்றி, உங்க பேரு என்ன? என தானகவே போய் அறிமுகமாக முயன்றான் குமரன். அவன் பேசிய எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அமைதியாக நகர்ந்தான் கிஷோர். ரொம்ப தலைகணம் பிடிச்சவன் போல என குமரன் நினைத்து கொண்டான்.


அந்த திருமண மண்டபமே ஆரவரத்தில் ஆர்பரித்து இருந்தது. இசைக்கச்சேரிக்கு நடனம் ஆடியபடி இளைஞர்கள் செய்த சில்மிஷத்திற்கு அளவே இல்லாமல் இருக்க குமரனும் அவர்களுடன் சேர்ந்து கும்மி அடித்து கொண்டு இருந்தான். சற்றே ஓய்வு எடுக்க ஒதுங்கிய அவனின் கண்களில் ஒரு பதட்டம் தெரிந்தது.


தூரத்தில் ஒரு குழு கையில் போனை வைத்து கொண்டு முனுமுனுத்து கொண்டு இருந்தார்கள், அது கிஷோரின் போன் என்பதை கவனித்துவிட்டான் குமரன். கிஷோரின் போன் பின்னாடி ஒரு த்ரிஷா போட்டோ ஒட்டப்பட்டு இருப்பதை வைத்தே அவன் அடையாளம் கண்டான்... அந்த குழுவிடம் நாசுக்காகவும் மிரட்டலாகவும் பேசி போனை கைப்பற்றினான் குமரன்.


கிஷோர் போனை தேடி அலைவதை தூரத்தில் இருந்து ரசித்து கொண்டு இருந்தான் குமரன். பரபரப்பாக வந்த கிஷோர் அப்போது தான் குமரனை பார்த்தான். சார், என் போனை காணோம் நீங்க எங்கயாச்சும் பாத்தீங்கல என கிஷோர் கேட்டான். அவன் கண்களில் உண்மையாகவே அவனுடய சொத்தை இழந்த கலக்கம் தெரிந்தது. மேலும் அவனை கலங்கவிடாமல் போனை எடுத்து அவனிடம் நீட்டினான். எதோ மூன்றாம் உலகபோரில் வென்ற மகிழ்ச்சியோடு பேச தொடங்கினான் கதையின் முதல் நாயகன் கிஷோர்.


ஹாய் என் பேரு கிஷோர், உங்களுக்கு எப்படி நன்றி சொல்ரதுனே தெரியல ரொம்ப தாங்க்ஸ். இப்பதான் எனக்கு மூச்சே வருது, இது என் ஆளு எனக்கு கிப்ட்டா கொடுத்தது. தொலைஞ்சி போச்சுனு தெரிஞ்சதும் ரொம்ப ஆடிபோயிட்டேன். என படபடவேன பொரிந்து தள்ளினான் கிஷோர்...

சில நாட்களுக்கு பிறகு... (திருமண நிகழ்ச்சியும் முடிந்த பிறகு)



ஹாலோ கிஷோர்,  நான் குமரன் பேசறேன் ஞாபகம் இருக்கா.. சொல்லுடா மச்சி என்றான் கிஷோர். அந்த ஒரு வார்த்தைக்குள் ஓராயிரம் உறவுகளும் நெருக்கமும் தெரிந்தது. இன்னைக்கு பசங்களோட படத்துக்கு போறேன் நீயும் வாடா என அதட்டலாக அழைத்தான் குமரன். அவர்கள் இருவரின் வாழ்க்கை சக்கரமும் அன்று மாறப்போகிறது என்பது மூன்று மணி நேர படம் முடிந்ததும் தெரிந்தது.


படத்தின் விமர்சனத்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த நிருபர்களிடம், படம் மொக்கயா இருக்குங்க வேஸ்ட் என கொந்தளித்தான் குமரன். அதை கேட்ட கிஷோர் அமைதியாக இருந்தான். ஏன் படம் பிடிக்கலனு சொல்லு என குமரனிடம் கேட்டான்., அதற்க்கு அவன் அளித்த பதில்கள் திருப்பிப்படுத்தும் விதமாக கிஷோருக்கு அமையவில்லை.


பிறகு மெல்ல கிஷோர் பேச ஆரம்பித்தான். தான் BBA பட்டதாரி என்பதையும் தற்போது சினிமா துறையில் உதவி இயக்குனராக பணி புரிவதையும் கூறினான். கலைத்துறையில் மிகப்பெரிய முயற்சிக்கு பிறகு சேர்ந்துள்ளான் என்பது அவன் பேச்சில் தெரிந்தது. தமிழ் திரையுலகில் பல மாறுதல்கள் நிகழ்த்த பிறந்துள்ளான் என்பதை போல குமரனுக்கு தோன்றிற்று. 


பின், மாலை பொழுதை ஒரு உணவகத்தில் கழித்துவிட்டு இருவரும் விடை பெற்றனர்..


அதன் பிறகு அவர்களின் உரையாடல் முழுவதும் சினிமா பற்றியே இருந்தது. ப்ல உலக திரைப்படத்தை பற்றி அடிக்கடி விமர்சிப்பான் கிஷோர். தனக்கான ஒரு நல்ல நண்பனாய் குமரனை கருதினான். யாரிடமும் அதிகம் பழக்காத கிஷோரின் ஒரே நண்பன் குமரன் எனலாம்.


இரு வாரங்களுக்கு பிறகு.......


கிஷோரிடம் இருந்து குமரனுக்கு போன் அழைப்பு வருகிறது. மாப்ள ஒரு சின்ன உதவி, நீ இப்ப வடபழனி வரமுடியுமா?... சரிடா ஒரு மணி நேரத்துல வரேன் அங்கயே இரு என குமரன் சொன்னான். காலைல ஒரு தயாரிப்பாளர பாத்து கதை சொன்னேன் ரொம்ப புடிச்சு இருக்குனு சொன்னாருடா, எனக்கு சந்தோஷத்துல என்ன பண்றதுனு தெரில கைகால் ஓடல. உன்கிட்ட தான் முதல சொல்லனும்னு தோனுச்சு அதான் உனக்கு போன் பண்ணேன். கிஷோரின் பேச்சில் இருந்த மகிழ்ச்சிக்கு அடிமையாய் குமரன் இருந்தான், அவன் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது..


அங்கு இருந்து இருவரும் புறப்பட்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். மாலை 5மணி இருக்கும் அப்போது அதே தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. கிஷோரும் குமரனும் அவரை சந்திக்க சென்றனர். மரியாதை நிமத்தமாக குமரன் வெளியே காத்திருக்க அவன் மட்டும் உள்ளே சென்றான். அந்த அலுவலக அறையின் உள்ளே நடக்கும் விஷயங்களை கவனித்து கொண்டு இருந்தான் குமரன்.


அரைமணி நேர உரையாடலுக்கு பிறகு வெளியே வந்தான் கிஷோர். அவன் கண்கள் என்ன சொல்லும் அவன் வாய் என்ன பேசும் என்பதில் கவனம் செலுத்தினான் குமரன். படத்துக்கு ஒகே சொல்லிடாரு, அட்வான்ஸா 10லட்சம் செக் திங்கள்கிழமை தரனு சொல்லிட்டாரு என்றான் கிஷோர். அதை ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ர என கேட்டான் குமரன். 


படத்துக்கு ஹீரோவா யார போடலாம்னு அவரோட அபிப்ரயத்த கேட்டேன், அங்க வெளிய நிக்கரான்ல அந்த பையன்'அ ஹீரோவ போடுனு சொல்லிட்டு அவர் எழுந்து போய்டாரு என மெதுவாக கிஷோர் தன்னுடைய சந்தோஷத்தை ஆரவரமாக வெளிப்படுத்தினான். குமரனுக்கும் இதில் சம்மதமே என்பது அவனுடய சிரிப்பில் தெரிந்தது.


எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருந்த அந்த இருவரின் வாழ்க்கையிலும் தீப ஒளி அன்று படர்ந்தது. தோல்வி மட்டுமே வாழ்வாய் இருந்த அவர்கள் அன்று முதல் வெற்றியின் முதுகில் பயணம் செய்தனர்.




சதீஷ்......


3 comments:

Philosophy Prabhakaran said...

என்னது கதை முடிஞ்சிருச்சா... சொல்லவே இல்லை...

N.H. Narasimma Prasad said...

சிறுகதை நன்றாக இல்லை சதீஷ். ஆனால் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டு. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். நன்றி.

சதீஷ் மாஸ் said...

வெளிப்படயா உங்க கருத்த சொன்னதுக்கு ரொம்ப நன்றி பிரசாத்... நான் இன்னும் நிறைய முயற்சி பண்ணவேண்டி இருக்கு...