என் தோழர்கள்

Thursday, 7 March 2013

கவிதை நேரம்எண்ணத்தை விதைத்து
விளைச்சலை பார்த்தேன்,
அது பயனற்ற பதராய் போயிற்று..
-------------------------------------------------
எழுத்து மூலம் உலகம்
படைக்க உணர்ச்சி இல்லா
எழுதுகோலை எடுத்தேன்
எதுவுமே புரியாமல்.....!
-------------------------------------------------
அர்த்தமே இல்லாமல்
எழுதிய ஆயிரம்
கவிதையை அர்த்தப்படுத்தியவள்,
அவளுக்காக ஆயிரத்து ஒன்றாய் இது...!
-------------------------------------------------
பெண்ணை காதலிப்பதை
       விட
காலத்தை காதலி
அது உன்னை
செம்மையாக்கும்...!
-------------------------------------------------
அழகை பார்த்து காதல்
செய்யாதே...!
அவள் அழுக்காய் இருக்கலாம்.....!
-------------------------------------------------
பேனா பிடித்தவன் எல்லாம்
கவிஞனும் அல்ல
காதலிப்பவன் எல்லாம்
காதலனும் அல்ல......!
-------------------------------------------------
அறிவாளியாய் பிறந்து
அறிவை இழந்து
துறவியோடு சேர்ந்து
துறவு பூண்டு
வேதனையோடு நிற்கிறேன்
                         அவளால்.......!
-------------------------------------------------
ஆயிரம் ஆயிரமாய்
பணம் இருந்தும்
செய்வது அறியாமல்
தவிக்கிறேன்.....
       -வங்கி காவலாளி....
-------------------------------------------------என்றும் கவிதையோடு
சதீஷ் மாஸ்.......No comments: