எங்க பாத்தாலும் இதே பேச்சு தான்.. செய்திதாள், தொலைக்காட்சி, இப்ப வானொலில கூட கூவ ஆரம்பிச்சாச்சு..
அந்த ஊர் மக்கள் ரொம்ப நாட்டுப்பற்று உள்ளவங்க போல, என்னாம்மா பொங்கறாங்க... கிடத்தட்ட 10நாளுக்கு மேல உண்ணாவிரதம் இருக்காங்க. அவங்க ஒரே நோக்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடி சீல் வைப்பது மட்டுமே.
ஏன் மக்கள் எல்லோரும் ஒன்னு சேந்து இவ்ளோ அதிரடியாய் இந்த போரட்டத்துல குதிச்சு இருக்காங்கனு தெரியல.. ஆனால் அவங்க சொல்ற பதில் என்னவென்றால் "அணுமின் நிலையம் மிகவும் ஆபத்து"... டேய் அத தவர வேற எதாச்சும் சொல்லுங்கடா....
ஏற்கனவே கல்பாக்கத்துல தான் ஒரு அணுமின் நிலையம் இருக்கே, அப்புறம் என்னத்துக்கு இங்க இன்னொன்னு... இது எல்லாம் வீண் செலவு, மக்களுக்கு தேவை இல்லாத தலைவலி, இப்ப இருக்குற பிரச்சனையில இது தேவையா... இந்த மாதிரிலாம் அணுமின் நிலையத்துக்கு எதிரா கேள்விக்கேக்றவன் நீயா இருந்தா... சத்தியமா சொல்றேன் நீ அஞ்சாகலாசு கூட தாண்டி இருக்கமாட்ட...
ஒவ்வொரு நாடும் தங்களுடைய மண்ணுல அணுமின் நிலையம் அமைக்க எவ்ளோ கஷ்டப்படுதுனு தெரியுமா... நம்ம நிலத்துல கடக்கால் தோண்டி வூடு கட்டற மாதிரி அவ்ளோ சுலபம் கிடையாது... பல நாடுகள் சேர்ந்து தான் நமக்கு பர்மிஷன் தரனும்.. ஏகப்பட்ட பார்மாலிஸ்ட் இருக்கு, அதலாம் தாண்டி வரதுக்குள்ள பல வருஷம் ஆயிரும்... ஆயிடுச்சு...
ஆமா இங்க நம்ம தமிழ்நாட்டுல கரண்ட் எடுத்து பக்கத்து மாநிலத்தல இருக்கரவங்களுக்கு ஓசில கொடுக்கணுமா ? டேய் எப்பத்தல இருந்து இப்படி பிரிச்சு பேச ஆரம்பிச்சுங்க.. எல்லாம் நம்ம இந்தியா தான், நம் மக்கள் தான்... ஒரு சகோதரத்துவம் வேண்டாமா? அவங்க மட்டும் நமக்கு தண்ணி தராங்கலா என்ன" அப்படினு நீங்க முணங்கற சத்தம் கேக்குது... அட, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு இப்படிலாம் பேசலாமா.. நாம நம்மோட கடமைய சரியா செய்வோம். நடக்கறது நடக்கட்டும்...
அய்யோ அம்மா அப்பா தாத்தா..... சுனாமி, பூகம்பம், புயல் வந்தா அந்த கண்ராவி புடிச்ச அணுஉலை வெடிச்சுடுமே.. ஜப்பானும் ஜப்பான் மக்களும் அழிஞ்ச மாறி நாமலும் அழிஞ்சு போய்டுவுமே.... முதல போய் உன் வாய்ல பினாயில் ஊத்தி கழுவுடா ராஸ்கல்....
இந்தியாவை ஜப்பானோட கம்பெர் பண்ணாதீங்க பாஸ்... ஜப்பான்ல ஒரே சமயத்துல பூகம்பம், சுனாமி, புயல், எல்லாமே வரும்.. ஆனா இந்தியால அந்த மாதிரி எல்லா ஆபத்தும் ஒரே நேரத்துல அதிரடியாய் வந்து தாக்காது... அதான் நம்ம நாட்டோட ஸ்பெஷல்.... ம்ம்ம்ம்ம்ம்....
கூடங்குளம் அணுமின் நிலையத்தால சுத்தாமா மக்களுக்கு பாதிப்பே இல்லை, நிறைய பலன் மட்டுமே இருக்கு... அணுமின் நிலையம் அமைஞ்சி இருக்குற இடத்துல பூகம்பம் வர வாய்ப்புகள் மிக குறைவாக தான் உள்ளது.. சுனாமி வந்தாலும் இந்த நிலையத்திற்கு பாதிப்பு இல்லை.. பல முன் அறிவிப்பு கருவிகள் அங்காங்கே பொறுத்தப்பட்டுள்ளது... சொல்ல போனால் கல்பாக்கத்தை விடவும் மிகுந்த பாதுகாப்பு உடையது தான் கூடங்குளம் அணுமின் நிலையம்....
கல்பாக்கம்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது... ஒரு முறை எங்கள் கல்லூரியின் மூலமாக நாங்கள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி பாக்க சென்று இருந்தோம்... உண்மையா சொல்றேன், அந்த அளவுக்கு பல ஏக்கர்ல மிக பிரம்மாண்டமான இருந்தது.. நான் அதுவரை அந்த மாறி பாத்ததே இல்லை.. மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது... கிட்டத்தட்ட 200பேருக்கு மேல வேலை செய்ராங்க...
அப்ப நாங்க கேட்ட கேள்வி : இந்த அணு உலை வெடிக்காதா? வெடிச்சா என்னவாகும்?
அதுக்கு அவரோட பதில்: ( சிரிச்சுக்கிட்டே சொன்னாரு ) நீங்களாம் இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க... இவ்ளோ பெரிய நிலையத்துல எவ்ளோ பாதுகாப்பு கருவிகள் இருக்கும்.. அத எல்லாத்தியும் மீறி எந்த ஒரு கதிர்வீச்சும் வெளியே போக முடியாது...
அப்ப யோசிச்சு பாருங்க... கூடங்குளத்துல பாதுகாப்பு எந்த அளவுக்கு அதிகாமா இருக்கும்னு... 2004ல சுனாமி வந்தப்ப கூட கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதிக்கபடவில்லை என்பது கூடுதல் தகவல்...
கூடங்குளத்துல யாருக்கு தான் உண்மையான பிரச்சனைனு எனக்கு புரியல... 10வருஷமா அந்த அணுமின் நிலையம் கட்டப்படுது.. அப்பலாம் இல்லாத பிரச்சனை திறக்க போற நேரத்துல எங்க இருந்து வந்துச்சு... அந்த ஊர் மக்கள் என்ன அப்போ பாரின் போய் இருந்தாங்களா? அணுமின் நிலையத்தில் உள்ள லாபத்தை அறியாத மக்கள் தான் முட்டாள் தனாமா எதோ செய்யராங்கனா, இந்த அரசியல் தலைவர்கள் உள்ள புகுந்து நல்லா நோண்டி விட்டாங்க... இப்ப கலங்கி போய் இருக்கற குட்டையில மீன் புடுக்கிறது யாருனு தெரியுதா ? அந்த குட்டையை கலக்கி விட்ட அதே அரசியல் தலைவர்கள் தான்...
லாபம் :
* கிட்டத்தட்ட 200பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய உத்திரவாதம்
*தமிழ்நாட்டுக்கு மட்டும் 1000மெகா வாட் வரை மின்சாரம் சப்ளை செய்யப்படும்... (அது மட்டும் கிடைச்சா மின்தடைக்கு அவசியமே இருக்காது)
*மேலும் ஒரு புது அங்கிகாரம் மற்றும் முன்னேற்றம் நம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்...
*கூடங்குளைத்தை சுற்றியுள்ள பகுதியின் மதிப்பு கூடும்.. பல விதமான போக்குவரத்து கிடைக்கும்...
இந்த மாதிரி நிறைய இருக்கு..
நஷ்டம் :
*அந்த நிலையத்தை மூடிவிட்டால் நமக்கு தான் பெருத்த நஷ்டம்...
என் கருத்து :
ப்ளீஸ் கூடங்குளத்து அணுமின் நிலையத்தை திறக்கவிடுங்க.. உங்க அறியாமையை போக்கற சக்தி எனக்கு இருக்கானு தெரியல, ஆனால் அந்த அறியாமையை ஒழிச்சுருங்க... அரசியல் தலைவர்கள் மக்களுக்கு எடுத்து சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி அவர்களை ஆதரிப்பது தவறு என சொல்லிகறேன்.. பல படித்த தமிழர்கள் உங்களை கவனித்து கொண்டு இருக்கிறார்கள், அதையும் நினைவில் கொள்ள வேண்டும்...
எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.. விடுங்க பாஸ்.. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி... ஆனால் கண்டிப்பாக 100% சொல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுமே தவிர சீல் வைக்கப்பட மாட்டாது...
சதீஷ்..........

22 comments:
http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_19.html
இந்த பதிவில் தெளிவாக கூடங்குளம் அணு மின் நிலைய ஆபத்துக்கள் பற்றி எழுதியிருக்கிறார், பாலா. கொஞ்சம் படித்துப்பாருங்கள்.
தம்பி நீ சொன்னா கேட்க மாட்டேங்குற... பட்டாதான் திருந்துவ போல இருக்கு... நடக்கட்டும்...
தம்பி.......
ஹா ஹா ஹா.....
உன்னோட கருத்து நல்லாத்தான் இருக்கு.....
ஆனா, ஒரே ஒரு உண்மையைப் புரிஞ்சிக்கணும்......
அதோட ரியாக்டர் டைப் னு ஒண்ணு இருக்கு.
ரியாக்டர் இன்சுலேசன் டைப் னு ஒண்ணு இருக்கு.
ஜியோ பிசிக்ஸ் ரிபோர்ட்ஸ் இருக்கு.....
கதிரியக்கம் வெளியாகவே ஆகாதுன்னு சொல்ல முடியாது. அக்சப்ட் லெவெல்ல லீக் ஆயே தீரும்...
#நான் நாலாங்கிளாசு வரைக்கும்தான் படிச்சிருக்கேன்பா!
மாடுரேசன தூக்குப்பா!
உனக்கு கமண்ட் போட, எனக்கு பயமாயிருக்கு....
சதிஷ்!ஒரு வேண்டுகோள்!ஒரு விசயத்துல மாற்றுக்கருத்து இருந்தா நாசூக்கா தெரியப்படுத்துங்க!
யாருக்கும் உங்கள விட வயசு கம்மி இல்லன்னு நினைக்கிறேன்!(யூத் பதிவர் தானே!)
இந்த விசயத்தில் எனது கருத்துக்களை தெரியப்படுத்த விரும்புகிறேன்!
நம் நாட்டுக்கு அணு மின் நிலையம் தேவையா?
தேவை ( சில விதிகளுக்கு உட்பட்டு)
கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?
தேவை இல்லை.
ஏன்?
தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை, இவ்வளவு காசு போட்டு, அரதப்பழசான ரஷியதொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணுமின் நிலையம் அமைத்துத்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
விளக்கம் ப்ளீஸ்.…
தமிழ்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி 10237 MW.
நமக்கு எங்கிருந்து மின்சாரம் கிடைக்கிறது?
• TNEB க்குச் சொந்தமான மின்நிலையங்கள் மூலம் — 5677 MW
• தனியார் மின் நிலையங்கள் மூலம் — 1180 MW
• மாநிலத்தில் இயங்கும் பொதுத்துறை மின்சார நிலையங்கள் மூலம் — 2861 MW
• தனியார் நிறுவனங்கள் , சொந்த உபயோகத்துக்காக உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உபரியை, மாநிலத்துக்கு விற்பதால் கிடைக்கக் கூடியது — 214 MW
• மற்றும் பிற (வெளி மாநிலங்களில் வாங்குவது எட்செட்ரா) — 305 MW
ஆனால், இதெல்லாம், மின்சார உற்பத்தி நிலையங்கள் 100% சீராக இயங்கினால் மட்டுமே கிடைக்கும். நடைமுறையில் தோராயமாக 8000 MW என்று வைத்துக் கொள்ளலாம் ( சென்ற ஆண்டு கணக்குப் படி).
ஆக, நம்முடைய உற்பத்தி 8000 MW
தேவை : 10,500 MW — 11,500 MW
பற்றாக்குறை : 2500 MW – 3500 MW
இந்தப் பற்றாக்குறையை கூடங்குளம் அணுமின் நிலையம் மொத்தமாகத் தீர்த்து விடாது. கூடங்குளத்தின் திட்ட அளவு 2000 MW ( அதிலே முதல் கட்டமாக 1000 MW, இன்னும் சில மாதங்களில் இயங்க இருக்கிறது.) இந்த 2000 MW மின்சாரத்தில் நமக்குக் கிடைக்கவிருக்கும் பங்கும் 925 MW மட்டுமே.
அப்பறம்
அப்படியானால் நம் பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது?
தற்போது ஏழு பெரிய மின்சார திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன ( கூடங்குளம் திட்டம், கல்பாக்கம் விரிவாக்கத் திட்டம் அடக்கம்) . இவை 2012 இறுதியில் மின்சார உற்பத்தியைத் துவங்கும். இதன் மூலம் நமக்குக் கிடைக்க இருப்பது 4640 MW. இதிலிருந்து கல்பாக்கம், கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை (925 MW + 167 MW) ஐக் கழித்து விட்டாலும், கிடைக்க இருப்பது, 3548 MW. சில திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்க தாமதமானாலும், உறுதியாக 2500 MW கிடைக்கும்.
இதைத் தவிர, புதிதாக திட்டமிடப்பட்டு ஆனால், கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளப் படவிருக்கும் திட்டங்கள் 5. இதன் மூலம் 2015 ஆண்டு இறுதியில் கிடைக்க இருக்கும் மின்சாரம் 5600 MW. இதையும் தவிர, அமைச்சகத்தின் அனுமதிக்காக வேண்டி காத்து நிற்கும் பெரிய திட்டங்கள் நான்கு. எல்லாம் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், இத்திட்டங்கள் 2013 ஆம் ஆண்டில் பூர்வாங்க வேலைகளைத் துவங்கினால், 2016 ஆண்டு இறுதியில் மின்சார உற்பத்தியைத் தொடங்கும். இதன் மூலமாகக் கிடைக்க இருக்கும் மின்சாரம் 3800 MW.
இவை, அதிகரிக்கும் தேவையையும் சேர்த்து ஈடுகட்டும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை விட்டால் தமிழ்நாடே இருளில் மூழ்கும் என்கிற கருத்து தவறானது.
கூடங்குளம் எல்லா விதிகளுக்கும் உட்பட்டுத்தான் கட்டப் படுகிறதா?
தனியாரோ, பொதுத் துறையோ, மாநில மின்சார வாரியமோ யாராக இருந்தாலும், மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. எந்த வகை மின்சாரம் ( அனல், நீர், சூரியசக்தி…) என்பதைப் பொறுத்து விதிகள் மாறும், ( யார் அமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அல்ல) . நிறைய விதிமுறைகள் இருந்தாலும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கான விதிகள் தான் கடுமையானவை. இதிலே முக்கியமானவை இரண்டு.
மின்நிலையம் அமைக்க முடிவு செய்து ( இந்த இடத்திலே கூடங்குளம்) , பூர்வாங்க வேலைகள் முடிந்ததும், அந்தத் திட்டத்தை ( திட்ட மதிப்பு, நில தேவை, சூற்றுச்சூழல் பாதிப்பு, அதற்கான பரிகாரங்கள்: உள்ளிட்ட) , குறிப்பிட்ட for¬mat இலே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை, அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆராய்ந்து திருத்தங்கள் சொல்லும். திருத்திக் கொண்டு அப்பீல் செய்ய வேண்டும். பிறகு மீண்டும் திருத்தங்கள், இப்படி சில மாதங்கள் ஓடும். ஏழெட்டு வருடமாக, இந்த நிலையிலேயே இருக்கும் மின்சார திட்டங்கள் ( தனியார் &பொதுத்துறை) ஏராளம். ஒரு வழியாக, அவர்களுக்குத் திருப்தி வந்ததும், அதை, மாநில, நிபுணர் குழுவிடம் பரிந்துரைப்பார்கள்
மாநில நிபுணர் குழு, ஒரு சாங்கியத்துக்கு, மேலிடம் கேட்ட கேள்விகளையே கேட்டுவிட்டு, pub¬lic hear¬ing என்ற சடங்கு செய்யப் பணிப்பார்கள். pub¬lic hear¬ing என்பது, எந்த இடத்தில் அந்த மின்நிலையம் கட்டப் பட இருக்கிறதோ, அங்கு வசிக்கும் மக்களை அழைத்து அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருக்கிறதா என் கேட்கும் ஒரு நடைமுறை. சுற்றுப்புறச் சூழலுக்கு ( அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உட்பட) பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்து பெரிய திட்டங்களும் இந்த pub¬lic hear¬ing நடைமுறையைக் கடந்துதான் வரவேண்டும். pub¬lic hear¬ing நடப்புகளுக்கு விளக்கம் கேட்க யாரும் வரவில்லை என்றால், சில வழக்குகளில் அளிக்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு போல, யாருக்கும் ஆட்சேபம் இல்லை என்று NOC பெற்று வேலையைத் துவங்கி விடுவார்கள்.
( இந்த வேலைக்கு மொத்தப் பொறுப்பாளியான அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தன் வேலையை சீரியஸாக எடுத்துக் கொண்டு vedanta , Lavasa, Jin-dal, POSCOபோன்ற பெருமுதலாளிகளுக்கு இம்சை கொடுத்ததால், அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஜெயந்தியக்காவை அந்த இடத்திலே உட்கார்த்தி வைத்துவிட்டார்கள் என்பது ஒரு கிளைக்கதை )
கூடங்குளம் விவகாரத்தில், இரண்டு யூனிட்டுகள் ( 1000 MW) கொண்ட முதல் கட்டத்துக்கு இந்த pub¬lic hearing நடந்ததா, முடிவு என்ன என்பது குறித்து என்னிடம் தகவல்கள் இல்லை. அதே அளவிலான இரண்டாவது கட்டத்துக்கு, திட்ட வரைவு, கடந்த வருட மத்தியில் மத்திய சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்டு, அது முதல் கட்ட அனுமதியைப் பெற்றது. இரண்டாம் கட்ட அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது.
அணுமின் நிலையம் அமைப்பதிலே செலவு அதிகம் என்கிறார்களே? நிசமாகவா? வேறு சீப்பான வழிகள் என்ன என்ன?
உண்மைதான். அனல் / நீர் மின்சாரம் போல் அல்லாமல், அனல் மின் நிலையத்துக்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்ய வேண்டும். மிக அதிக அளவு நிலம் வேண்டும். நுட்பமும், உபகரணங்களும் விலை அதிகம். கூடங்குளம் முதல் கட்டத்துக்கு இது வரை ஆன செலவு சுமாராக 15 ஆயிரம் கோடி ( அனைத்தும் உள்ளிட்டது). அதாவது ஒரு மெகாவாட்டுக்கு 15 கோடி ரூபாய். ஆனால், நிலக்கரி அனல் மின்சாரத்தை , 5 — 5.5 கோடி ரூபாய் / மெகாவாட் என்ற விலையில் உற்பத்தி செய்யலாம். ஆனால், நிலக்கரி மின்சாரத்தின் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளும் அதிகம். நிலக்கரி பற்றாக்குறையும் நிலவுகிறது. அரசு மின் நிறுவனங்கள் சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் ஒரிசா மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிடம் coal link¬age க்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தனியார்கள், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மின்சார திட்டங்களின் தாமதத்துக்கு நிலக்கரி இருப்புக்குறைவும் ஒரு முக்கியக் காரணம். உலகெங்கும், நிலக்கரி மின்சாரத்தைக் குறைக்க முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் ( உடனடியாக ) முடியாது என்பதால், தீங்கு குறைவான super crit¬i¬cal technology மூலம் அனல் மின் நிலையங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முறைசாரா எரிசக்தி நம் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க முக்கியமானதொரு வழி.
காற்று மின்சாரம் : நாம் கடந்த ஆண்டு, உற்பத்தி செய்த மின்சாரத்தில் கிட்டதட்ட 4000MW , காற்றாலை மூலமாக வந்தது. காற்றாலை மின்சாரத்தில், தமிழ்நாடு தான் முன்னோடி. இதிலே, சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. காற்று மின்சாரத்துக்கு அடிப்படைத் தேவையான தட்ப வெப்பச் சூழலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு, தட்ப வெப்பத்தைக் கணிக்கக் கூடிய நுட்பம் ( wind forecasting) தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளன.
சூரிய சக்தி : இது கொஞ்சம் பரபரப்பாக உள்ளது. இதிலே உள்ள முக்கியமான சிக்கல், உபகரணங்கள், உள்நாட்டில் தேவைப்படும் அளவில் கிடைப்பதில்லை என்பதோடு, விலையும் அதிகம். ஒரு மெகாவாட்டுக்கு குறைந்த பட்சம் 15 கோடி ரூபாய்கள் ஆகும். ஆனால், அரசு அவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்காது. இந்தச் சிக்கலைக் களையவும், சூரிய மின்சார உற்பத்தியைப் பெருக்கவும், அரசு, ஒரு சலுகை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், ஒரிசா போன்ற , solar radiation அதிகமாக உள்ள மாநிலங்கள் ஓரளவு பரபரப்பாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கொஞ்சம் மந்தம் தான். அரசு சலுகைகள் எல்லாம் இல்லாமல், சூரிய மின்சாரத்துக்கான உபகரணங்களின் விலை குறைந்தாலும், அவற்றின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும், தனியார் இதிலே முதலீடு செய்ய முன்வருவார்கள். ( இன்னும் விளக்கலாம், ஆனால், இந்த மேட்டரின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது)
கடலலை மின்சாரம் ( Tidal Power) , geot¬her¬mal energy போன்றவை இன்னும் R and D லெவலில் தான் இருக்கிறது. நடைமுறைக்கு வந்தாலும், நம் மொத்தத் தேவையில் 1% பங்களிக்கும். அவ்வளவே.
மின்சார விநியோகத்தைச் சீராக்கினாலே அனைத்தும் சீராகும் என்கிறார்களே உண்மையா?
இது முழு உண்மை அல்ல.
கொஞ்சம் அடிப்படையில் இருந்து பார்ப்போம். இந்த மின்சாரக் கட்டமைப்பு மொத்தம் மூன்று படிநிலைகளை உள்ளடக்கியது.
1. Gen¬er¬a¬tion ( உற்பத்தி)
2. Trans¬mis¬sion ( மின் கடத்தலா?)
3. Distribution ( விநியோகம்) .
மூன்று இடங்களிலுமே சேதாரம் ஏற்படலாம்.
ஒரு 500 MW மின்நிலையம் 90% capac¬ity இலே இயங்கினால், வெளியே வருவது 450 MW. உற்பத்தியில் ஏற்படும் சேதாரம். இந்த மின்சாரத்தை, உயர் அழுத்தக் கம்பிகள் மூலம் அங்கங்கே ட்ரன்ஸ்மிஷன் டவர்கள் அமைத்து அரசு மின் வாரிய grid க்கு அனுப்புவார்கள். அங்கங்கே டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மின்சாரத்தை பார்சல் செய்யும் பொழுது இயல்பாகவே கொஞ்சம் வீணாகும். இது ட்ரான்ஸ்மிஷன் மூலம் ஏற்படும் சேதாரம். grid ஐ வந்தடைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு அனுப்புவதற்குப் பெயர் விநியோகம். இங்கே திருட்டு மூலம் கொஞ்சம் சேதாரம் ஆகும்.
Aggre¬gate Tech¬ni¬cal & Com¬mer¬i¬cal Loss ( AT &C) என்று இந்த மூன்று வகையான நட்டத்தின் மூலமும், நாம் கடந்த ஆண்டு இழந்தது மொத்த உற்பத்தியில் 18.5 % தான். ஆகவே, இந்தச் சேதாரங்களைத் தவிர்த்தால், எல்லாம் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது முழு உண்மை அல்ல.
வேறு என்ன தான் வழி?
Demand Response Management.
நம் மின்சார விநியோகக் கட்டமைப்பு ஒரு வழிப் பாதை. உதாரணமாக, TNEB, தேவைப்படுகிற நேரத்தில், நம் வீட்டு கிரைண்டரிடம் ‘தொடர்பு’ கொண்டு, தேவைப்படும் மின்சாரத்தை அளிக்கும். ஆனால், அந்த மின்சாரம், கிரைண்டர் இயக்கத்தான் பயன்பட்டதா என்பதை என்பதை , TNEB Grid அறிந்து கொள்ளா வாய்ப்பில்லை. மின்சார அளவைக் கணக்கிடும் தற்கால அனலாக் மீட்டர்களுக்கு அத்தனை புத்திசாலித்தனமில்லை.
அப்படி ஒரு வழி இருந்தால்?
நாம் மின்சாரத்தைச் செலவு செய்யும் விதங்களைப் பதிவு செய்யக் கூடிய ஒரு டிஜிடல் மீட்டர் இருந்தால்? ( smart metering)
யார் யாருக்கு எத்தனை மின்சாரம் தேவைப்படும் என்பதை முன் கூட்டியே கணிக்கக்கூடிய தரவுகள் இருந்தால்?
எதெதெற்கு எவ்வளவு, எப்பொழுது மின்சாரம் தேவைப்படும் என்பதை கணிக்க முடிந்தால்?
எந்த ஏரியாவில் லோட் அதிகம் ஆகும், குறையும் என்கிற pattern ஐக் கண்டு பிடிக்க முடிந்தால்?
எந்த இடத்திலே, மின் திருட்டு நடைபெறுகிறது என்பதை உட்கார்ந்த இடத்திலே கண்டு பிடிக்க முடிந்தால்?
குளிர்சாதன வசதிக்கான மின்சாரத்துக்கு இத்தனை விலை, மிக்ஸி இயக்க தேவையான மின்சாரத்துக்கு இத்தனை விலை என்று ( dif¬fer¬en-tial pricing) என்று நிர்ணயிக்க முடிந்தால்?
தகவல் நுட்பம் துணை கொண்டு இது அனைத்தையும் சாதிக்க முடியும். இதை smart grid என்று சொல்வார்கள். நம் மின்சார விநியோகக் கட்டமைப்பையே, மொத்தமாகக் கலைத்துப் போட்டு புதிதாகச் செய்ய வேண்டும் என்பதால், இதற்கு ஆகக் கூடிய செலவும், கால நேரமும் அதிகம். என்றாலும், அரசு அளவிலும் , தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இதற்கான முனைப்பு துவங்கிவிட்டது. தொலைத் தொடர்பில் புரட்சி செய்த அண்ணன் சாம் பிட்ரோடா வைத் தலைவராகக் க் கொண்டு ஒரு உயர்மட்ட செயல் குழு ஒன்றை உருவாக்கி, சில பைலட் திட்டங்கள் ( பெங்களூருவில்) செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் விளக்கம் வேணும்னா gokul304@gmail.com க்கு மெயில் பண்ணு சொல்றேன்!
இந்த கருத்துகளை வெளியிடவும்,மறுப்பதும்,உண் இஷ்டம்.நன்றி!
ஒரு வேளை நீங்க கல்பாக்கம் பக்கம் அல்லது கூடங்குளம் அருகே இருந்தால் அந்த வலி தெரிய வாய்ப்பு உண்டு. பேராபத்து அல்லது இயற்கை பேரழிவுகளில் இருந்து மிகப்பாதுகாப்பான இடங்களை 100% காப்பாற்றிவிட வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் அவ்விடத்தை சுற்றி உள்ள மக்களின் சந்ததிகள் வாழ்நாள் முழுதும் துயரத்தை அனுபவிக்க வேண்டும். எத்தனை கோடி இழப்பீடி தந்தாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. அதனால்தான் இந்தப்போராட்டம். போராட்டம் நடத்துபவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடனே செயலில் இறங்கவில்லை. விஷயத்தை நன்றாக புரிந்து கொண்ட பிறகே உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பார்கள் என ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?
கோகுல் அவர்களின் கருத்து ஏற்புடையது தான்... அவரை போலவே நானும் யோசிச்சு இருக்கனும்.. பிரச்சனனு தெரியுதுல அப்புறம் எதுக்கு அங்க அணுமின் நிலையம் கட்ட அனுமதிச்சிங்க... இப்ப எவ்ளோ பண்ம் வேஸ்ட்னு தெரியுமா? இப்ப நாடு இருக்கற நிலைல அம்புட்டு பண்மும் மண்ணுக்கு தானா???
வெளங்காதவன் said... கதிரியக்கம் வெளியாகவே ஆகாதுன்னு சொல்ல முடியாது. அக்சப்ட் லெவெல்ல லீக் ஆயே தீரும்...
#நான் நாலாங்கிளாசு வரைக்கும்தான் படிச்சிருக்கேன்பா! //
லீக் ஆகும்னு அழகாக சொல்றீங்க.. அப்புறம் எப்படி கல்பாக்கம் அணுமின் நிலையத்துல வேலை நடக்குது.. அங்க மனுசங்க தான வேலை செய்யறாங்க... அதலாம் எப்படி சாத்தியம்... ? முடிந்தால் விளக்கம் தரவும்..
! சிவகுமார் ! said... போராட்டம் நடத்துபவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடனே செயலில் இறங்கவில்லை. விஷயத்தை நன்றாக புரிந்து கொண்ட பிறகே உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பார்கள் என ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? //
சரி ஒத்துகறேன்... இத ஏன் 10வருஷத்துக்கு முன்னாடி செய்யல அந்த ஊர் மக்கள்.. அரசாங்கம் அப்ப யோசிச்சு பாக்க வாய்ப்பு இருந்து இருக்கும்...
சரி ஒத்துகறேன்... இத ஏன் 10வருஷத்துக்கு முன்னாடி செய்யல அந்த ஊர் மக்கள்.. அரசாங்கம் அப்ப யோசிச்சு பாக்க வாய்ப்பு இருந்து இருக்கும்...//
பத்து வருசத்துக்கு முன்னால நம்ம எல்லோரையும் போல அப்பகுதி மக்கள் ஹை!நம்ம பகுதிக்கும் ஒரு தொழிற்சாலை வரப்போகுது,நமக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்கும் அப்படிங்கற நினைப்புலதான் ஆதரவு தந்தாங்க!ஆனா அப்பில இருந்தே விஷயம் தெரிஞ்சவங்க மட்டும் எதிர்தாங்க!
இப்ப புகுஷிமா க்கு அப்பறம் மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துச்சு.அது மட்டுமில்லாம பாதுகாப்பு நடவடிக்கைங்கர பேர்ல அணுஉலை நிர்வாகத்தினர் நடத்திய சம்பவங்கள் மக்களிடையே பயத்தையும் விழிப்புணர்வையும் அதிகமாக்கிடுச்சு.
லீக் ஆகும்னு அழகாக சொல்றீங்க.. அப்புறம் எப்படி கல்பாக்கம் அணுமின் நிலையத்துல வேலை நடக்குது.. அங்க மனுசங்க தான வேலை செய்யறாங்க... அதலாம் எப்படி சாத்தியம்... ? முடிந்தால் விளக்கம் தரவும்..//
கல்பாக்கதுலையே கொஞ்ச நாள் முன்னால அங்கே வேலை பாக்குற 5 தொழிலாளர்கலுக்கு நடத்தப்பட்ட கதிரியக்க ஆய்வில் அவங்க உடலில் அளவுக்கதிகமா கதிர்வீச்சின் அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதை அணுஉலை வரலாற்றில் மிகப்பெரும் விபத்தாக அனுஊலையின் முன்னால் இயக்குனர் தெரிவித்ததாக தெகல்கா.காம் செய்தி வெளியிட்டிருந்தது!
இன்னும் நிறைய விளக்க வேண்டிருக்கு .நேரம் பத்தல அப்பறம் வரேன்!
//சதீஷ் மாஸ் said...
! சிவகுமார் ! said... போராட்டம் நடத்துபவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடனே செயலில் இறங்கவில்லை. விஷயத்தை நன்றாக புரிந்து கொண்ட பிறகே உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பார்கள் என ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? //
சரி ஒத்துகறேன்... இத ஏன் 10வருஷத்துக்கு முன்னாடி செய்யல அந்த ஊர் மக்கள்.. அரசாங்கம் அப்ப யோசிச்சு பாக்க வாய்ப்பு இருந்து இருக்கும்...//
இது என்ன கேள்வி? முதன் முறை சுதந்திர போராட்டத்திற்காக களத்தில் இறங்கியவர்களை பார்த்து ஏன் இதற்கு முன் உங்கள் முன்னோர்கள் இதில் ஈடுபடவில்லை என்று கேட்பது போல் உள்ளது. இப்போதாவது நடந்ததே என்றுதான் எண்ண வேண்டும்.
Post a Comment