என் தோழர்கள்

Saturday, 3 September 2011

என் மச்சானின் மனசாட்சி

வணக்கம் தோழர்களே, என் மச்சானின் மனசாட்சியின் திறப்பு விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி (முன்னாலயும் பின்னாலயும் மூடிக்கிட்டு என்ன விஷம்னு சொல்லுடா - சரிங்க பாஸ்)....


நீங்க மேல படிச்சிங்களே ஒன்னு அது தான் தலைப்பு (எங்க கானோம்)...
என் மச்சானின் மனசாட்சி ( தோ இருக்கா )... ஒவ்வொரு மனுஷனுக்கும் வாழ்க்கையில சிலபல பிரச்சனைகள் வரும்  (வாழ்க்கைனாலே பிரச்சன தான்பா)... பெரிய பிரச்சன வந்த அத மாத்தவங்ககிட்ட பகிர்ந்து தீத்துபோம்... ஆனா ஒன்னுமே இல்லாத சின்ன சின்ன பிரச்சனைக்கு நாமலே யோசிச்சு அத முடிச்சுடுவோம்...


உதாரணத்துக்கு, இன்னைக்கு ஆவடிக்கு போகலாமா இல்ல அம்பத்தூர் போகலாமா? சினிமாக்கு போகலாமா இல்ல காலேஜ்க்கு போகலாமா? இந்த மாதிரி சின்ன சின்ன கேள்விக்கு (எதோ பிரச்சனைய பத்தி சொல்ரதா சொன்ன..) நாமே பதில் தேடிப்போம்... அதுக்கு பெரிதும் உதவியாய் இருப்பது ந்ம்முடைய மனம் (மனசுங்க) தான்... அப்பேர்பட்ட என் மனதிற்க்கு நான் இட்ட பெயர் தான் "என் மச்சான்" (துதுதுதுது கேவலமா இருக்கு.. - துடைச்சுகிட்டேன்)

நான் பெரிய பிரச்சனையா இருந்தாலும் சரி சின்ன பிரச்சனையா இருந்தாலும் சரி என் மச்சான்கிட்ட தான் கேட்பேன்... எந்த ஒரு சூழ்நிலையுலும் என்னை கைவிடாத என் தோழன் அவன், நான் கேட்கும் கேள்விக்கு நடுநிலையான பதில் தந்து என்னை காப்பாற்றும் என் தோழன்.. நான் சிரிக்கும் போதும் அழும் போதும் என்னோடே இருக்கும் என் தோழன் மச்சான்....


வலிய தாங்கற சக்தி மனசுக்கு இருக்குனு யாரோ சொன்னாங்க... ஆனா அது உண்மை தான்... நான் ஜெயிச்சா நாலு பேர் பின்னால இருப்பான் (உன் followers சொல்றயா - டேய் நீ மொதலுக்கே மோசம் பண்ணிடுவல போல இருக்கே) ஆனா நா தோத்தா என் மச்சான் மட்டும் தான் என்கூட இருப்பான்....
i love my machansssss (எங்கோ கெகேட்ட குரல் - இது அது இல்லைங்கோ)


யார் யாரயோ காதலிக்குறோம் ஆனா நம்மோட மனச எத்தன பேர் காதலிக்குறோம், எத்தன பேர் அவன் கூட பேசறோம்... அவனை மதிச்சு அவன் கூட பேசி பார் உன்னை வெற்றியின் உச்சியில் நிறுத்துவான் (தோ வந்த்டாருடா புலவரு).... நா வாழ்க்கையில அடிப்பட்டு நின்னப்ப என் கூட இருந்தவன் என் மச்சான்.... யாருமே இல்லாத போது எனக்கு பேச்சு துணையாகவும் ஆசானாகவும் இருந்தவன் என் மச்சான்...


உங்க மனசு பேசுமா'னு நீங்க கேக்கறது புரியது... சாமியார் சொல்ற மாதிரி அதலாம் நல்லவங்களுக்கு தான் கேக்கும் (அப்புறம் எப்படி உனக்கு கேக்குது..)... ஒவ்வோரு விஷயத்தை அலசும் போது நமக்கு ஒரு முடிவு கிடைக்காது, அப்ப உங்க மனசுகிட்ட கேளுங்க என்ன பண்ணலாம்னு, அது ஒரு பதிலயும் அதுக்கான வழியையும் காட்டும்... அந்த வழில போன நிச்சயம் வெற்றி கிடைக்கும்..... எவன் பேச்சயும் கேக்காதீங்க, அவன் உன்னயும் என்னையும் சேத்து கவுத்திருவான்.... எப்பவும் உங்க மனசு மச்சான் சொல்றத கேளுங்க...


நா அதிகமா என் மச்சானை நம்புறவேன்.. அதுக்கான காரணத்தையும் சொல்லிடேன்... இது என் கருத்து மட்டுமே... மனமிருந்தால் மார்க்கமுண்டு, என் மச்சான் இருந்தால் இந்த உலகமே என்னுது... 


இந்த தலைப்பில் என் பதிவு புதிய வடிவில் தொடரும், அதற்க்கு உங்கள் ஆதரவு வேண்டும் (அரசியல் மூளையோ - அதலாம் இல்லைபா - ஓ மூளையே இல்லையோ).... 












சதீஷ்......... (முன்னேறிட்டான்)


6 comments:

Sivakumar said...

பல பேர் நிலைமை இதுதான் "மச்சான் என்ன சாச்சிபுட்டான் மச்சான்!!"

சதீஷ் மாஸ் said...

ஆனா எனக்கு அந்த நிலைமை இல்லை... நம்புனும் முழுசா நம்பனும்.....

Philosophy Prabhakaran said...

தல நாங்க பின்னூட்டத்துல சொல்ல வேண்டியத எல்லாம் நீங்களே அடைப்புக்குறிகளுக்குள் போட்டுட்டா எப்படி...

Philosophy Prabhakaran said...

நீங்க ஜாக்கி ரசிகர்ன்னு நிரூபிச்சிட்டீங்க... இசுபெல்லிங் மிஸ்டேக்கை குறைங்கப்பு...

சதீஷ் மாஸ் said...

வேற யாரும் என்ன மொக்க பண்ணாம இருக்க தான்... அந்த அடைப்புகுறி....

இசுபெல்லிங் மிஸ்டேக்கை குறைச்சுகறேன்...

Unknown said...

மாப்ள என்னமோ சொல்றீங்க....சர்தான்!