என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்..
நான் என் போனையும் மேல்வருவத்தூர் செல்லும் பாதையையும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருந்தேன். தீடீரென்று அதே ப்ஞ்சர் கடைக்காரனின் குரல், அப்பாட பஞ்சர் போட்டாச்சு போல என நினைக்கும் முன்பே "இத சரி பண்ண முடியாது வேற தான் மாத்தனும்"... எத சொல்றானு புரியாம முழுச்சிகிட்டு நின்னேன்...
அப்புறம் தான் புரிஞ்சிது அவன் என் வண்டியின் டயரை பற்றி பேசுகிறான் என்று. வெகுதூரம் தள்ளி கொண்டும் பல வளைவு சுளைவுகளில் எற்றி இறக்கி வந்த்தாலும் வண்டியின் டயர் ஒரு பக்கமாய் நசுங்கியே போய்விட்டது. அதை மாற்றினால் தான் மேற்கொண்டு போக முடியும்..
எவ்ளோ ஆகும்னு கேட்டேன், அந்த கடைக்காரன் முறைச்சான்.. ஏன்னு தான் இப்ப வரைக்கும் தெரியல... என்கிட்ட ஒரு பழைய டயர் இருக்கு அத போட்டு விடேறேன், அப்படினு சொன்னான்.. "கல்லுக்குள் ஈரம்" அது இதனா என மகிழ்ச்சி என் மனதில் பொங்குவதற்குள், ஒரு 200ரூ கொடுத்துருங்க னு சொல்லிடான்..... ஏன்டா என் உயிர இப்படி வாங்கற...
இப்ப டயர் இல்லாம நான் சென்னைக்கும் போக முடியாது, மேல்வருத்தூருக்கும் போக முடியாது... அவ்வளவு தான் முடிஞ்சிது கதை... என் போனை எடுத்து முதலாளிக்கு போன் பண்ணேன்...
"அண்ணேன் இங்க இந்த மாதிரி ஆயிடுச்சு, அடுத்த என்ன பண்ணட்டும்" கேட்டேன்... அந்த ஆளுக்கு என்ன தோனுச்சுனே தெரியல பட்டுனு போனை கட் பண்ணிடான்... அட போட கொயய்யால... இனிமே என்ன நான் தான் பாதுகாத்துகனும்...
ஆத்துல ஓடற மீன் தண்ணில இருந்து வெளிய வந்து விழுந்த அடுத்து என்ன பண்ணறதுனு தெரியாம முழிக்கற மாறி முழிச்சேன்... மீண்டும் தெய்வம் வந்தது டீக்கடையில் இருந்து.. என்னப்பா என்ன ஆச்சுனு கேட்டார்... டயர் மாத்தனும்னு சொல்றாருனு சொன்னேன்... அட இந்த கடகாரன் கூட பெரிய தொந்தரவா போச்சுனு சொல்லிகிட்டடே, அந்த கடைக்காரன் கிட்ட கொஞ்சம் நேரம் பேசினார்... அப்புறம் தன்னோட பக்கெட்டுல இருந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து கொடுத்தார்.. அது எனக்கு தெரிய கூடாதுனு மறைக்க நினைத்தார்... ஆனால் நான் அதை பார்த்துவிட்டேன், கண்ணீல் கண்ணீர் வராதது தான் குறை....
அப்புறம் எதோ ஒரு பழைய டயரை எடுத்து மாட்டி விட்டு தயாராகி விட்டதுனு சொன்னான்(ர்)... அந்த டிரைவர் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிட்டு பிரியாவிடை பெற்றேன்.. என் வாழ்நாளில் நான் இதுவரை சந்திக்காத புது மனிதர்... எத்தனை பேருக்கு இந்த உதவும் எண்ணம் வரும்.. இதுவரை என்னை ஏமாற்றிய மனிதர்களுக்கு மத்தியில் அவர் ஒரு மாணிக்கம்... மீண்டும் ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்...
பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்து மேல்வருவத்தூர் நோக்கி மிக மெதுவாக ஓட்ட ஆரம்பித்தேன். சரியான நேரத்தில் சென்றுவிட்ட சந்தோஷம்.. சென்ற காரியம் நல்ல படியாக முடிந்தது.. இப்போது எனக்கு 150ரூ அங்கு இருந்தவர் கொடுத்தார்.. அதை பெற்று கொண்டு மீண்டும் சென்னை செல்ல ஆயத்தமானேன்..
அம்மன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை பார்த்து சிறிது நேரம் சாமி கும்பிட்டேன்.. அந்த டிரைவர் அண்ணன் முகம் தான் வந்துபோயிற்று.. அவரின் பெயர் தெரியவில்லை என இங்கு எழுதுவதற்கே எனக்கு கேவலமாய் இருக்கிறது....
அப்பாட என நீங்கள் பெரு மூச்சு விடுவது எனக்கு தெரிகிறது ஆனால் இன்னும் முடியவில்லை... மீதி இருப்பதை சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறேன்...
மேல்வருவத்தூர் தாண்டி வரும் போது இரண்டாவதாக ஒரு பாலம் இருக்கும்.. அதன் மேல் ஏறி வரும் போது மீண்டும் டயர் பஞ்சர் ஆனது.. இப்போதும் அதே முன்சக்கரம் தான்... என் வாயில அசிங்க அசிங்கமா வந்துச்சு ஆனா யாரை திட்டுவது என்று தான் அப்போது தெரியவைல்லை.... வண்டியை நிறுத்தாமல் ஓட்டினேன்.. ஏனெனில் தள்ளிட்டு போற அளவுக்கு உடம்புல தெம்பு இல்லைங்க...
பாலத்தை தாண்டி ஒரு 50அடிக்கும் குறைவான தூரத்தில் ஒரு பஞ்சர் கடை இருந்தது.. அங்கே நான் இன்னும் ஒரு கடவுளை கண்டேன்.. அது அந்த பஞ்சர் கடை ஓனர் தான்.. முன்சக்கரத்தை பிரித்து பார்த்து பஞ்சர் ஆகியிருப்பதை உறுதி செய்தார்.. அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை அப்படியே கலங்க வைத்து விட்டது...
அந்த சிங்கபெருமாள் கோவில் இருந்த இடத்தில் நான் மாற்றிய டியூப் பாக்கா லோக்கல் டியூப் ஆகும்.. அதன் விலை 80ரூ தான் இருக்கும் என்றார்... "சென்சார்டு" என அந்த கடைக்காரனை மனதில் திட்டினேன்... அவன் மாத்தி கொடுத்த டயர வச்சிக்கிட்டு சத்தியமா நீ சென்னைக்கு போக முடியாதுனு சொன்னார்... அடுத்த என்ன அதே தான், அடிச்சேன் போனை என் ஓவருக்கு... "தம்பி யாருப்பா நீங்க அப்படினு கேக்காதது ஒன்னு தான் குறை"... மீண்டும் இங்கு சென்சார்டு வார்த்தைகள் என அறிவிக்கப்படுகிறது...
பிறகு அவர் வேரோரு நல்ல டயரும், பஞ்சர் ஒட்டியும் கொடுத்தார்... அதற்கு நான் வெறும் அந்த 150 மட்டுமே கொடுத்தேன்... என்னை முறைத்து கொண்டே அதை வாங்கி கொண்டார் என் நிலைமையை புரிந்துகொண்டு... அதன் பிறகு இத்தனை நாள் ஆகியும் அந்த டயரும் டியூப்க்கும் ஒன்னும் ஆகவில்லை என்பது தான் அதிசயம்...
மெல்ல வண்டியை உருட்டிக்கிட்டு சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டேன்.. அதுவரை நான் தவித்த தவிப்பு வார்த்தையால் சொல்ல முடியாது.. மீண்டும் ஒரு முறை பஞ்சர் ஆகி இருந்தாலோ இல்லை வேறு எதாவது பிரச்சனை என்றலோ நான் நடுரோட்டில் பிச்சை தான் எடுத்து இருக்க வேண்டும்...
அன்று தான் நான் பைக்கில் பயணம் மேற்கொள்வதை அடியோடு வெறுத்தேன்.. ஏன் சொல்ல போனால் வாழ்க்கையையே வெறுத்தேன் எனலாம்.... இனி மீண்டும் இப்படி ஒரு பயணத்தை பைக்கில் மேற்கொள்ளமாட்டேன்... சீக்கரம் BMW கார் வாங்கறேன்.... அதுல தான் டிராவல் பண்ண போறேன்...
பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி... கடந்த சில தினங்களாக அதிக வேலை பளுவின் காரணமாய் எழுத முடியவில்லை... நமக்கு காலேஜ் தாங்க முக்கியம்... படிப்பு தாங்க முக்கியம்... ஹி ஹி ஹி....
சதீஷ்............

5 comments:
///அப்புறம் தன்னோட பக்கெட்டுல இருந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து கொடுத்தார்.. அது எனக்கு தெரிய கூடாதுனு மறைக்க நினைத்தார்.////
இன்னும் மனித நேயம் அங்கங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கு....
நொந்த கதையை நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க,....வாழ்த்துக்கள்..மேன் மேலும் வளர !!!!!
யோவ்... செம்புற்றுப்பழம் இப்போ நல்லாவே தெரியுதுய்யா...
சரி, இங்க மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கேரக்டர் வந்துச்சே... அது எதுனா பஞ்சர் ஒட்டுச்சா...
• » мσнαη « • said... நொந்த கதையை நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க,....வாழ்த்துக்கள்..மேன் மேலும் வளர !!!!!
நன்றிகள் பல...
Philosophy Prabhakaran said...
சரி, இங்க மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கேரக்டர் வந்துச்சே... அது எதுனா பஞ்சர் ஒட்டுச்சா...
ஏன் நீங்க வேற வெறுப்பு ஏத்தறீங்க...
Post a Comment