என் தோழர்கள்

Thursday, 8 September 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 09/09/2011

என் கருத்து :


பிரபல பதிவரான யுவகிருஷ்ணா அவர்கள் வெளியிட்ட பதிவில் 2ஜி-அரசுக்கு 7000கோடி லாபம் என குறிப்பிட்டு இருந்தார். அவர் சொல்லும் தகவல்களை (தரவுகள்) சற்றே ஆராய்ந்து பார்த்தால் அதில் பல விஷயங்கள் இருப்பதாக தோன்றுகிறது ஒரு சாதாரண மனிதனாக அதை அனைவரும் உற்று பார்க்க வேண்டும். ஊடகங்கள் இது போன்ற கருத்துகளை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பது பற்றி பேச இப்போது நேரம் கூட இல்லை. அவர் 2ஜிக்கும் 3ஜிக்கும் கொடுத்த விளக்கமே பல பேர் புரிந்து கொள்ளமல் உள்ளனர். அந்த வித்தியாசம் தெரிந்தால், யுவகிருஷ்ணாவை புரிந்து கொள்ள முடியும்.


மக்கள் : ராசா நல்லவரா கெட்டவரா ?
சதீஷ் : தெரியலயே (டென்டடுன் டென்டயின்)


பி.கு : இது ஒரு பதிவருடைய பதிவிற்கு என் கருத்து மட்டுமே...


-----------------------------------------------------------------------------------------


சுயம்வரம் :


சென்னையில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைப்பெற்றது. சாதி மதம் அந்தஸ்து என எந்த வித்தியாசமும் இல்லாமல் நடந்தது. தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். பல பேருக்கு திருமண பேச்சுகள் அவர்களுடைய பெற்றோரால் அங்கயே பேசி முடிக்கப்பட்டது. சிலருக்கு ஏற்ற துணை கிடைக்காமல் வருத்ததுடன் காணப்பெற்றனர். அவர்களுக்கும் அடுத்த வருடம் நல்ல செய்தி வரும் என வாழ்த்துவோம்.


-----------------------------------------------------------------------------------


ஹெல்மேட் : 


தமிழக அரசு எவ்வளவு வற்புருத்தினாலும் ஹெல்மேட் போடமாட்டேன் என பல பேர் அடம் பிடித்து கொண்டு இருக்கும் இந்த நிலையில், பல பேர் ஹெல்மேட் அணிய தொடங்கிவிட்டன. இப்போது அவர்கள் தங்கள் பாதுகாப்பு பற்றி அறிய தொடங்கிவிட்டனர். சாலையில் நடக்கும் பல விபத்துகளை அவர்கள் பார்த்த பயத்தால் கூட ஹெல்மேட் அணிய ஆரம்பித்து இருக்கலாம். சென்னையில் ஆங்காங்கே போலிசார் இது குறித்து பல நடவடிக்கையில் ஈடுப தொடங்கி உள்ளனர். அவர்களின் உழைப்பின் பலன் அனைவரும் ஹெல்மேட் போடும் போது தான் தெரிய வரும்.


-----------------------------------------------------------------------


அறிவிப்பு :


எல்லோருக்கும் வெற்றி கொஞ்சம் முயற்சி செய்தாலே கிடைக்கப் பெற்றுவிடும். ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, அவன் முன்பு உழைத்ததை விட பல மடங்கு முயல வேண்டும். வெற்றி பெற்ற பலர் அடுத்த சுற்றில் தோல்வி பெற காரணமும் அதான்.
எனக்கு இப்போது ஒரு வெற்றி கிடைத்து இருக்கிறது, அதை நான் தக்க வைத்துக் கொள்ள இனி தான் கடுமையாக உழைக்க வேண்டுமே.


-----------------------------------------------------------------------------------


புகைப்படம் : 


வாரம் ஒரு அழகிய புகைப்படம் இங்கு வெளியிடப்படும். அது உங்கள் படமாக இருந்தாலும் சரி.


என்னை மிகவும் சுண்டி இழுத்தது இந்த நிறம்....


  -------------------------------------------------------------------------------------------

ஓணம் :


கேரளாவில் மிக பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா எனில் அது ஓணம் பண்டிகை தான். கேரள நண்பர்களுக்கும் மற்ற மலையாள மக்களுக்கும் ஓணம் வாழ்த்துகள்.


-----------------------------------------------------------------------------------------------


நன்றி : 




என்னை ஊக்கப்படுத்திய உற்சாக மூட்டிய என் எழுத்தை ரசித்த தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்ட அத்துணை சகோதர சகோதரிகளுக்கும் தோழர் தோழிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

-------------------------------------------------------------------------------------------------


வறுவல் மற்றும் நொறுவலில் மசாலா கொஞ்சம் குறைவாக இருப்பதாக தகவல்... அதை உடைத்து எறிய 11 பேர் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும்...


--------------------------------------------------------------------------------------







சதீஷ்......


9 comments:

Philosophy Prabhakaran said...

ம்ம்ம் மசாலா கம்மி தான்...

சதீஷ் மாஸ் said...

மசாலா கம்மி தான். ஆனால் பிழை இல்லாமல் எழுத ஆரம்பித்துவிட்டேன்....

வெளங்காதவன்™ said...

//பிழை இல்லாமல் எழுத ஆரம்பித்துவிட்டேன்.... ///

பலரும் ஹெல்மெட் அணிய ஆரம்பித்துவிட்டன...

உயர்திணை படர்கை பலர்பால்....

#ஜாக்கியின் வாடை அண்ட் ஸ்டைல்...
கூல்

சதீஷ் மாஸ் said...

வெளங்காதவன் : சாரி பாஸ், தவறு நேர்ந்துவிட்டது... இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதயாக இருக்கிறேன்....

சதீஷ் மாஸ் said...

என் தவறை அனைவரும் தெரிந்து கொள்ள அது திருத்தப்படமாட்டாது...

Arun Kumar said...

சதீஸ் இங்க 2g 3g பிரச்சனையில் ஊழல் நடை பெற்றட்து எங்கு தான் மேட்டர்,

2ஜியில் என்னைக்கு டெண்டர் கொடுக்க போறோம் எத்தனை மணிக்கு கொடுக்க போறோம். எப்படி கொடுக்க போறோம் இதேல்லாம் யாருக்குக்கும் சொல்லாம சில பேருக்கும் மட்டும் சொல்லி காரியத்தை முடிச்சாங்க,

மற்றபடி ஸ்ப்க்ட்ரெம் என்பது அரசின் சொத்து. இதை விற்பனை செய்வதை வைத்து அரசின் வருமானம் அதிகரிக்கும்,

சிம்பிளா சொல்ல வேண்டும் என்றால் பல கோடி வருமானம் வர வேண்டிய இடத்தை சில கோடி வாங்கி கமிசன் அடிச்சி போங்கு ஆட்டம் ஆடிடாங்க அவ்வளுதான்.
மற்றபடி எந்த திமுக ஆளுங்க அல்லது எந்த குற்றவாளி ஆமாம் நான் தப்பு செய்தேன்னு ஒத்து கொள்கிறான்.??

சதீஷ் மாஸ் said...

அருண்குமார் அவர்களுக்கு : மிக வலுவான பின்னூட்டம் தான்... நீங்கள் சொல்லும் கருத்து ஏற்று கொள்வது தான்.. பல கோணங்களில் ஆராய்ந்து சொல்லவேண்டிய விஷயமாச்சே... யுவகிருஷ்ணா அவர்கள் தன்னுடய கருத்தை தெரிவித்தார். நான் என்னுடைய கருத்தை சொன்னேன்.. இது உங்களின் கருத்து...

கேரளாக்காரன் said...

boss please change ur template.... that orange color kannu koosuthu

சதீஷ் மாஸ் said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

boss please change ur template.... that orange color kannu koosuthu //

மாற்றிவிடுகிறேன் தல...