என் தோழர்கள்

Friday, 8 June 2012

Wipro Man           தலைப்ப பாத்தலே பயங்கரமா இருக்கா... உங்களுக்கு இருக்காது, ஏன்னா உங்கள பலபேர் அந்த ஆபிஸ்ல வேலை செஞ்சிகிட்டு இருக்கலாம். ஆனா எனக்கு அது பெருய மேட்டர்.. என் இனிய தமிழ் மக்களே இனி நானும் ஐடி நானும் ஐடி...

முதல கதைய எங்க ஆரம்பிக்கலாம்னு யோசிக்கறேன்... அப்புறம் ஒரு மேட்டர், இது தொரர்பான மற்றொரு பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

இப்ப மேல படிப்போம், எனக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சது.. அன்னைல இருந்து என் பேரு Wipro Man.... இதை என் class பையன், சங்கர் நாரயணன் தான் வச்சான்... அவன் அப்படி தான் என்னையும் கூப்டான்....

ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருந்தேன், எப்படா விப்ரோல இருந்து எனக்கு மெயில் வரும்னு... வந்துச்சே, என்னை ஜீன் 4ம் தேதி சோழிங்கநல்லூர் விப்ரோக்கு ரிப்போட் கொடுக்க வர சொல்லி இருந்தாங்க... #அப்படி போடு அருவாள....
                                          

எப்படா பொழுது விடியும்னு புரண்டு புரண்டு படுத்தேன், ஜீன் 3ம் தேதி... சுத்தமா துக்கமே வரல.. எப்படியொ பொழுது விடிஞ்சி போச்சு.. ஆறு மணிக்கு அலாரம் வச்சி இருந்தேன்..நா 5.49க்கே எழுந்துட்டேன்... ஹி ஹி ஹி...

அப்படி இப்படினு ஒரு வழியா கிளம்பி சோழிங்கநல்லூர் போய் இறங்கினேன்.. அப்புறம் வழக்கம் போல டாக்குமெண்ட் வெரிபிகேஷன் நடந்து முடிஞ்சி... சாயங்காலம் 6.45க்கு Temporary ID Card தந்தாங்க.... அப்ப என் மூஞ்சிய பாத்து இருக்கனுமே... இந்த ஒரு ஐடி கார்டு வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்...

வருகிற ஜீன்11ந்தேதில இருந்து I AM A WIPRO MAN...... சப்ப்ப்பாபாபாப்பா முடியல.....
இது சும்மா ஐடி கார்டு


10 comments:

அறிவன்#11802717200764379909 said...

வாழ்த்துக்கள்..

அதே சமயம் இந்தப் பதிவைக் கட்டாயம் படித்து நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்..

நன்றி.

வீடு சுரேஸ்குமார் said...

வாழ்த்துகள்.....!ஹெலிகாப்டர் வாங்குனா அண்ணனை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போங்க தம்பி! உனக்கு காஜல் மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைப்பா....!
:-)

SARAVANAN.K said...

வாழ்த்துகள் நண்பரே!

Deiva said...

Congratulations on your new job! Just a caution. Please don't publish your employee ID / cell phone number. That might cause problem for you with the company.

சதீஷ் மாஸ் said...

// அறிவன்#11802717200764379909 said...

வாழ்த்துக்கள்.. //

வாழ்த்துகளுக்கு நன்றி அறிவன்..அந்த பதிவையும் படித்து விட்டேன்...

சதீஷ் மாஸ் said...

// வீடு சுரேஸ்குமார் said...

வாழ்த்துகள்.....!ஹெலிகாப்டர் வாங்குனா அண்ணனை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போங்க தம்பி! உனக்கு காஜல் மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைப்பா....!
:-) //

நானும் ஜாவா தான் படிக்கபோறேன்.. ஹெலிகாப்டர் வாங்கமாட்டேன்... கார் வாங்கனா கண்டிப்பா நாம ஒரு டிரிப் போகலாம்....

சதீஷ் மாஸ் said...

// SARAVANAN.K said...

வாழ்த்துகள் நண்பரே! //

நன்றி நண்பா....

சதீஷ் மாஸ் said...

// Deiva said...

Congratulations on your new job! Just a caution. Please don't publish your employee ID / cell phone number. That might cause problem for you with the company. //

Thank u sir.. i remove that photo from this post...

Bala Ganesan said...

congrage

சதீஷ் மாஸ் said...

thank u.....