என் தோழர்கள்

Showing posts with label சென்னை பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label சென்னை பதிவர் சந்திப்பு. Show all posts

Tuesday, 22 May 2012

சென்னை பதிவர் சந்திப்பு - 20/05/2012

               முதலில் மரியாதை, சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு விழாவிற்கு கடுமையாக உழைத்த அனைத்து யூத் பதிவருக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம். இந்த மாதிரி மொத்தமா மரியாதை பண்ணிட்ட போதும்.. அப்புறம் அவா பேரு விட்டு போச்சு, இவா பேரு விட்டு போச்சுனு சொல்லிட கூடாதுல....

இனிமே நம்ம ஸ்டைலில் பதிவு போடலாம். எனக்கு இந்த பெரிய பொறுப்பு தந்த மற்றும் தராத பதிவருக்கு நன்றி...

இப்பதிவு முழுக்க என் கண்ணோட்டத்தின் வழியே பயணம் ஆகும். (கதை அப்படினு ஒன்னு இருந்தா அது கதாப்பத்திரம் யாரவது ஒருத்தவங்க மீது பயணம் ஆகியே வேண்டும் என 50லட்சம் ஹிட்ஸ் வாங்கிய சென்னை ஆதினம் என்னும் மிகவும் யூத் பதிவர், எனக்கு அறிவுரை அளித்தார்..)


1.நேரம் சரியாக 3.30 மணி இருக்கும், அறக்கப்பறக்க சென்னை டிராப்பிகிலும் சென்னை வெயிலிலும் பைக்கை ஓட்டிய படி பறந்தேன்.

2.கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் போய் சேர்ந்து, பைக்கை பார்க் பண்ணிட்டு பாத்தேன்.. ஒரு சின்ன பையன் போனில் பேசிட்டு இருந்தான்.. அவரை பாத்ததும் தெரிஞ்சி போச்சி வெளியூரில் இருந்து வந்து இருக்கும் பதிவர்னு.. எப்படி நீ அதை கண்டு பிடிச்ச அப்படினு கேள்வி கேக்க கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

3.போனை வெளிய எடுத்து நம்ம பிலாசபி சார்க்கு போன் போட்டேன். எப்பவும் மிஸ் கால் கொடுத்து தான் பழக்கம், ஆனா போன் பண்ணி நான் வந்து சேந்துட்டேன் அப்படினு சொன்னேன். பிலாசபி அப்ப தான் அசோக்பில்லர்'ல இருந்தாறு அதனால என்னை உள்ளே போய் இருக்க சொன்னரு..

4.அடுத்து விழாக்குழுவின் முக்கிய புள்ளி மற்றும் தன் கை காசை போட்டு செலவு செய்யும் வள்ளல் மற்றும் சென்னையின் அடுத்த ஆதினம் என பல சிறப்புகளை உடைய மெட்ராஸ்பவன் சிவகுமார்'க்கு போன் பண்ணி, நான் வந்து இருப்பதை சொன்னேன்.. அவர் என்னை உள்ளே வருமாறு அழைத்தார்..

5.உள்ளே சென்றதும் தலைவருக்கு சலாம் போட்டேன். (பிகாஸ் அடுத்த ஆதினம் அவர் தானே..)... அவர் என்னை பல பதிவருக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.. அவங்க பேரு ஆரூர் மூனா செந்தில்... அவர் கலைஞர் தொகுதியை சேர்ந்த என் புதிய நண்பர்.. (அவர் இதை படிக்கும் போது கண்டிப்பாக சிரிப்பார், காரணம் சொல்லமாட்டேன்).. கோகுல் அவர்களை போன சந்திப்பிலே பார்த்து உள்ளேன்... கடலூர் காரர்...(ஜாக்கி சார் ஊருங்கோ)..

6.புக் பேலஸ்'ல இருந்த புத்தகத்தை சும்மா ஒரு நோட்டம் விட்டேன். ஆனா ஒன்னு கூட வாங்கல... எவ்ளோ நேரம் தான் நானும் சீன் போடறது, முடியல.. 90% தள்ளுபடி என்று சொல்லி பிறகு இல்லை அது வெறும் வதந்தி என்று சொன்ன வேடியப்பன் அவர்களை என்ன பண்ணலாம்..( வேடியப்பன் : கொய்யால, ஓசில இடம் கொடுத்தா படுக்க பாய் கேப்பியே.. ஹி ஹி ஹி)

7.நேரம் ஆக ஆக பல பதிவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரிடமும் என்னை நானே அறிமுகப்படுத்தி கொண்டேன்.. அக்கப்போர், நாய்நக்கஸ், உணவு உலகம் ஆபிசர், சென்னைப் பித்தன்(ர்), புலவர் இராமனுசம்(ர்) மற்றும் பலர்.. டிவிட்டர் கார்க்கியும் கூட, சம்பத்... நினைவில் நிற்காத பெயர்களை கொண்ட பல பதிவர்கள்...

8.பிலாசபி பிரபா அவர்களும் அஞ்சாசிங்கம் செல்வின் அவர்களும் ஒருசேர வந்தனர்.. அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தேன்..

9.எல்லாரும் அமர்வதற்காக சேர் அடுக்கி வைக்கும் வேலை மும்முரமாக நடந்தது... அதை முழுவதும் ஏற்று செய்த நபர் அந்த புக் பேலசில் இருந்தார். அந்த நண்பரின் பெயர் தெரியவில்லை.... மன்னிக்கவும்.. அவருக்கும் நன்றிகள் பல..

10.ஒவ்வோருவருக்கும் தனி சிறப்பு பல இருக்கிறது. அக்கப்போரை பார்க்கும் போது, எதோ நாலு ஆளை போட்டு தள்ளிட்டு நேரா பதிவர் சந்திப்புக்கு வந்ததை போல இருந்தது...

11.நாய்-நக்கஸ் அவர் தான் எண்டர்டெயிண்மெண்ட்.. நல்லா பேசினாரு... அவங்க கும்பலா உக்காந்துக்கிட்டு கமெண்ட் கொடுத்தத நீங்க மிஸ் பண்ணிடிங்க சார்..

12.எங்கள் கவுண்டமணி ரசிகர் ஆன "அஞ்சா சிங்கம்" தன்னோட மடிக்கணிணியை எடுத்து கிட்டு வந்து.. மொத்த பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிப்பரப்பு செய்தார்.. அது தான் எங்களின் வெற்றி.. சாரி அவர்களின் வெற்றி.. . அந்த நேரடி ஒளிப்பரப்பை பார்த்த அனைவரும் நல்லா இருக்குனு சொல்லி இருந்தாங்க. ஆடியோ அருமையாக இருந்ததாகவும், விடியோ சரியாக தெரியவில்லை என்று சொல்லி இருந்தார்கள்.. வெப்கேமிரா'ல அந்த அளவுக்குதான் தெரியும் ஆகையால் அடுத்த முறை அதிக மெகாபிக்சல் கொண்ட வெப்கேமிரா பயன்படுத்தப்படும் என விழாக்குழுவினர் சொல்லி இருக்காங்க.. பாப்போம், அதுக்கு மொத்த ஸ்பான்சர் கேபிள்ஜி என உளவுத்துறை சொல்லி இருக்கு... அதையும் பாக்கலாம்.. (அந்த நேரலைக்கு முதல் கமெண்ட் கொடுத்த பெருமை எனக்கும் கோகுலுக்கும் தான் சொந்தம்.. சதீஷ்:ம்ம் நல்லா இருக்கே.. கோகுல்: வேற என்னத்த சொல்ல டெக்னாலஜி வளந்து போச்சு..) கூடுதல் தகவல்:மொத்தம் 166viewers என்பதை அஞ்சா சிங்கம் மார்த்தட்டி கொண்டு பிலாசபியிடம் சொன்னார். இது ஒரு நல்ல தொடக்கம்..

13. மெதுவாக உள்ளே நுழைந்தார்கள் சங்கர்நாரயணனும் செந்தில் அவர்களும்.. அது யாருடா புதுசா அப்படினுலாம் கேக்க கூடாது.. நம்ம கேபிள்ஜியும் கேஆர்பியும் தான்.. இவர்கள் தானே இப்போது சென்னையை கலக்கி கொண்டு இருக்கும் பிரபலங்கள்.. பல்ல காட்டிக்கிட்டே நான் போய் கேபிள்ஜி கிட்ட பேசினேன்.. ஹலோ சார், நான் தான் சதீஷ்மாஸ்.. போன சந்திப்புல பாத்திங்களே ஞாபகம் இருக்கா... உன்னை மறக்க முடியுமா நீதான ஜாக்கி சார் பத்தி பேசனது என்று ஒரு போடு போட்டார்.. நான் இடத்தை காலி பண்ணிட்டேன்ல.. பிகாஸ் எனக்கு சப்போர்ட் பண்ண என் தல "ஜாக்கி" அங்க இல்லை.... மிக பெரிய ஏமாற்றம் தான்....

14. அங்க இருந்து கழண்டுகிட்டதுல நான் செந்தில் அவர்களை பாத்து பேச முடியாம போய்டிச்சு. ஆனா ஒரு மணிநேரம் கழித்து கேஆர்பி.செந்தில் அவர்கள் என்னை பார்த்து ஹாய் எப்படி இருக்க எனக் கேட்டார். நான் வழக்கம் போல திரும்பி பின்னாடி யாராச்சும் இருக்காங்கலா என பாத்தேன்.. சார் என்னையா கேக்கறீங்க என்றேன். உன்னைதான்யா கேக்கறேன் என்றார். #நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அவரின் இந்த செயல் என்னை ஒரு நிமிடம் ஆட வைத்தது... பிரபலமா இருந்தாலும் அங்க எல்லாரும் ஒன்னு தான் அப்படினு கேஆர்பி அவர்கள் நிரூபிச்சுட்டார்.. ( அந்த வானத்தை போல மனம் படைச்ச வள்ளவரே...)

15.அப்புறம் யாரு நம்ம மெட்ராஸ்பவன் சிவகுமார் தான்.. அவரை எவ்வளவு பாரட்டினாலும் தகாது.. அவ்ளோ உழைத்து இருக்கார் அந்த மாமனிதர்.. மொத்த நிகழ்ச்சிக்குமே அவர் தான் காரணம். கதை, திரைக்கதை, வசனம், லொக்கேஷன், இயக்கம், தயாரிப்பு இப்படி பல முகங்களுக்கு சொந்தகாரர்.. அவருக்கு பல நல்உள்ளங்கள் உதவி செய்தனர்.. அவர்களுக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள்... பிளக்ஸ் பேனரில் எங்கள் ஆஸ்தான குரு கவுண்டமணி இல்லாதது வருத்தமே.. கூடுதல் தகவல்: அடுத்த பதிவர் சந்திப்பு "சென்னை பதிவர் சந்திப்பு என்று அழைக்கப்படமாட்டாது... அதற்கு பதிலாக "மெட்ராஸ் பதிவர்கள் சந்திப்பு" என அன்போடு அழைக்கப்படும்.. ஹலோ மெட்ராஸ்பவன் சிவகுமார் சார், என்ன ஒகே வா?

16.போன சந்திப்புக்கு வெளியூர் பதிவர்கள் குறைவு தான். ஆனால், இம்முறை அடேங்கப்பா எத்தன வெளியூர் பதிவர்கள் தெரியுமா.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்ப்பட்ட வெளியூர் பதிவர்கள்.. இது யாரும் எதிர் பாக்காதது. ஓட்டலில் ரூம் போட்டு தங்கி பதிவர் சந்திப்புக்கு வந்தனர்.. என்ன ஒரு பாசம் உள்ள பயபுள்ளைகள்.... அடுத்த முறை பதிவர் சந்திப்பை எதேனும் கல்யாணமண்டபத்தில வச்சி மொத்த தமிழக பதிவரையும் அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதற்கு இதான் சாட்சி..

17. ம்ம்ம் அடுத்து விஷாலினி என்னும் சிறுமி... கனிணி துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளார்... என்ன என்னமோ பேசிச்சு அந்த புள்ள, என் மரமண்டைக்கு தான் ஒன்னும் புரியல... மிகவும் அதிகமான, பல புது தகவல்கள் தன்னுள்ளே வைத்துள்ளார்.. அவரை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்... food officer link..

18. தென் இந்தியாவிலே ஈகோ என பெயர் பெற்ற ஒரே மனிதர் யோகநாதன்.. பல மரங்களை தென் தமிழகம் முழுவதும் நட்டு மிக பெரிய சாதனையை சத்தம் இல்லாமல் செய்துள்ளார்.. அவரை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்...

19. கோகுல் அவர்கள் தான் இந்த வருடத்தின் மிக சிறந்த யூத் பதிவராக நாங்களே தேர்ந்து எடுத்து அவரை கௌரவித்தோம்... #புதுமாப்பிள்ளைக்கு பம்பம்பரே.... புதுமாப்பிள்ளைக்கு பம்பம்பரே....

20. யோகநாதன், கோகுல், விஷாலினி இவர்கள் மூவருக்கும் நினைவு பரிசாக புத்தகமும் "சென்னை பதிவர்கள்" என பெயரிடப்பட்ட கேடயமும் விழாக்குழுவினர் சார்பாக தரப்பட்டது... #சென்னை பிளாக்ர்ஸ் யூ ஆர் கிரேட், எங்களை ஆசிர்வாதம் பண்ணூங்க...

21. இவங்க எல்லாரும் பேசி முடிக்கறதுக்குள்ள நேரம் 8 ஆயிடுச்சு.. வந்து இருந்த பதிவர்கள் தங்களை அறிமுக படுத்தி கொள்ள மட்டுமே நேரம் அளிக்கப்பட்டது.. அது எமக்கு பெரும் ஏமாற்றம்... இன்னும் நேரம் கிடைத்து இருந்தால் பல பதிவர்கள் பேசி இருப்பார்கள்...

22.புட் ஆபிசரின் நண்பர் "டெல்லியில் உள்ள ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியர்" வந்து இருந்தார்.. அவர் சமூகத்தில் நிலவும் அக்கிரமங்களை பற்றி விளக்கமாக பேசினார்... பல உண்மைகளை சொல்லி பரபரப்புக்கு குறை இல்லாமல் செய்தார்..

23.பலபேர் தங்களுடைய பிளாக்கில் எழுதுவதற்காக நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தனர். அதில் என்னை மிகவும் கவர்ந்தவர் தமிழகத்தின் பெயரில் தன் பெயrai கொண்டு உள்ளதாக சென்னை பித்தன் அவர்கள் சொன்னார்.. ஏனெனில் அவர் உண்மையாகவே நோட்ஸ் எடுக்கும் நோட்டை கொண்டு வந்து நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தார்... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயாய... #பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு... அவர் பெயர் தெரியாத காரணத்தால் நோ லிங்க....

24.இந்த முறையும் நான் அடிச்சு சொல்லுவேன்... அந்த பதிவர் சந்திப்புலேயே இந்த முறையும் நான் தாங்க ரியல் யூத்... எல்லாருமே என்னை விட வயது மூத்த யூத் பதிவர்ஸ்... #டேய் நீ வாங்கற அஞ்சு பத்து பிச்சைக்கு இதலாம் தேவையா அப்படினு கேக்காதீங்க பாஸ்..

25.ஒரு வழியா பதிவர் சந்திப்பு இனிதாய் நிறைவேறியது... நான் எதிர் பார்த்த ஜாக்கி, லக்கிலுக், சுரேகா வராதது ஏமாற்றமே... அடுத்த சந்திப்பில் கண்டிப்பா வரனும்..

26. ஹலோ தலைவரே எங்க போறீஙக்... இன்னும் முடியல.. நான் இன்னும் முடிக்கல....
------------------------------------------------------------------------------------------------------------

கலக்கல் பேச்சுகள்:

சந்திப்பு கூட்டம் முடிந்தவுடன் நடந்த உரையாடல்... உண்மைகள் வெளி வர போகிறது...

1. நா நேரா போய் யோகநாதன் சார்கிட்ட 'எங்க வீட்டுல என்ன மரம் நடலாம்னு கேட்டு தெரிங்சு கிட்டேன்..

2.கடைக்கு புத்த்கம் வாங்க வந்த பலர் சந்திப்பு முடியர வரைக்கும் இருந்து விழாவை சிறப்பித்தனர்..

3.நம்ம வடசென்னையின் இளைய ஆதினம் பிலாசபி பிரபாக்கு, அவருடைய வாசகர் (நோட் திஸ் பாயிண்ட் வாசகாரே) ஒரு அன்பு பரிசு தந்தார்... அதுவும் கனடாவில் இருந்து வந்த பரிசு... கனடானில் உள்ள வாசகர் தன்னால் சென்னைக்கு வர முடியாது என்பதால், தன்னுடைய நண்பரின் மூலம் அந்த பரிசை தந்து அனுப்பினார்...

4.அந்த பரிசு என்னவென்றால், 1200ரூபாய் பணம் கொண்ட ஒரு மூவி கார்டு... வர ஞாயிறு அன்று அந்த கார்டில் சத்யம் தியேட்டரில் படம் பாக்க போறாங்க, எல்லா சென்னை ஆதினங்களும்.... #என்சாய்..

5.போதாத குறைக்கு கேபிள்ஜீயின் ரசிகர் ஒருவர் பாலகணேஷ்... கடலூரில் இருந்து அவரை சந்திக்க வந்து இருந்தார்.. அவர் போகும் வரை கேபிள்ஜி கூடவே இருந்தார் என்பது கூடுதல் தகவல்... நல்லா போட்டாங்கய சாம்பிராணிய..... பாலகணேஷ் அவர்கள் ஒரு புதிய பதிவர் என்பது சிறப்பு, அது எனக்கு ஆப்பு...

6.பிற பதிவர்கள் எல்லாரும் கிளம்ப, கேபிள்ஜீயின் அல்லக்கைகள் அல்லாத உண்மை ரசிகர்கள் மட்டுமே இருந்தனர்... கோபம் வரவங்க தனியா கூப்புட்டு திட்டுங்க சார்....  எல்லாரும் கூம்பளா சேந்துக்கிட்டு பல கேள்வி கனைக்களை கேபிள்ஜி அவர்கள் மீது தொடுத்தோம்.. அவர் அமெரிக்காவிலுள்ள அரசியல்வாதிகள் போல எல்லாத்துக்கும் சிரிச்சே மலுப்பிட்டார்.... அதுல முக்கிய கேள்வி "நீங்க ஏன் நடிகர் விஜய் படங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள்"... தலைவர் கடைசி வரைக்கும் பதில் சொல்லவே இல்ல பாஸ்..

7. இந்த இடத்துல நான் கேபிள்ஜி அவரிடம் மன்னிப்பு(பூ) கேக்க வேண்டும். #காரணம், எனக்கு மைக்'ல பேச வாய்ப்பு கொடுத்த அப்போ நான் அதிக பிரசங்கி தனமா ஒரு வார்த்தை விட்டுட்டேன்... அது அவருக்கு ஞாபகம் இருக்கானு தெரிய்லை... இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள்... சாரி சார்...

8.பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்... நேரில் பார்த்து பல கேள்விகள் கேக்க முடிகிறது.. அதற்கான பதிலும் அங்கயே கிடைக்கிறது... கேபிள்ஜி பேசியதில் இருந்து என் பிளாக்கை அவர் படிப்பதை தெரிந்து கொண்டேன்...

9.வீடு சுரேஷ் எனக்கு பிளாக் டிசைன்க்கு உதவி செய்வதாக தெரிவித்தார்... ஆரூர் மூனா அவர்கள் நல்ல படியாக பேசினார்.. அவரின் தம்பி என்னுடைய மொபைல் நம்பரை வாங்கி சென்றார்..

10. Tally in Tamil என்னும் பெயரில் பதிவு எழுதும் நண்பர் அவர்கள் தன்னுடய விசிட்டிங் கார்டை தந்து சென்றார்...

11.மேலும் நண்பர் கோகுல் அவர்கள் தன்னுடைய கல்யாண பத்திரிக்கையை அனைவருக்கும் தந்து அனைவரையும் கல்யாணத்துக்கு வருமாறு அழைத்தார்.. அவருடைய திருமண வரவேற்பு பாண்டிச்சேரியில் நடக்கபோகுதுனு தெரிஞ்சதும் எல்லாரும் ஒரு சேர தலை அசைத்து சொன்னார்கள்... ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்..... அனேகமாக அடுத்து 'பாண்டிச்சேரியில் பதிவர் சந்திப்பு நடந்துடும்னு நினைக்கறேன்...

12இன்னும் நிறைய இருக்கு சொல்லுவதற்க்கும் எழுதுவதற்க்கும், ஆனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்..

எல்லோருக்கும் என் நன்றிகள்..யாரையவது கூற மறந்து இருந்தால் மன்னிக்கவும்.... எனக்கு அவ்ளோ தன் ஞாபகம் இருக்கு....

பொது அறிவிப்பு: எங்கேனும் பேச்சில் பிழை இருப்பின் மன்னிக்கவும்...

நண்பர்கள் என்னுடய பிளாக்குக்கு லிங்க் கொடுக்கவும்...

பல தளங்களில் ஓட்டு போடவும்...

பல நண்பர்களை அழைக்கவும்ம்ம்....

""" என்னையா பெரிய பிளாக்கர்ஸ், 1000 பேர் எழுதுறான், அத 1001பேர் படிக்கிறான், அந்த 1001 நான் தான்"""" புதுகை அப்துல்லா மைக்கில் சொன்னது....


என்றும் யூத்'துடன்
சதீஷ் மாஸ்.......


Thursday, 17 May 2012

சதீஷ் காபிஷாப் - 18/05/2012



வணக்கம் அன்பர்களே...

சென்ற காபிஷாப் பதிவிற்கு அமோக வரவேற்பு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட 505 பேர் வந்து சென்றனர். சின்னதாய் ஒரு நன்றி தான் பாஸ்... இந்த மாதிரி பதிவுக்குனு சில வரைமுறை இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, நாமும் அதியே ஃபலோ பண்ணுவும். (இது போன்ற பதிவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உள்ளதாய் அனைவரும் சொல்கிறார்கள், ஆகையால் நாமும் அதை பின்பற்றி செயல்படலாம்)..
------------------------------------------------------------------------------------------------------------
பதிவர் சந்திப்பு:

பதிவர் சந்திப்பு பற்றி எதாவது நானும் சொல்லியே ஆகனும்ல.. அப்ப தான ஒரு கேத்து இருக்கும். வழக்கம் போல தடபுடலா ஆரவரமா பிரச்சாரம் பண்ணி பதிவர் சந்திப்புக்கான நேரம் அறிவிச்சாங்க.. அது வழக்கம் போல இல்லாம இந்த முறை சொதப்பிடுச்சி. மே20 பதிவர் சந்திப்புக்கான தேதி. அதே தேதியில் சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடக்கிறது. செய்வது அறியாமல் தவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் நிலைமை தான் கவலைக்கிடம்.
------------------------------------------------------------------------------------------------------------
கொங்கு பதிவர் சங்க துவக்க விழா:

இது ஒரு பக்கம் இருக்க, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா கூகிள் பிளசில் ஒரு செய்தி பரவல்... கோவை மாநகர பதிவர்களே வாருங்கள் நாம் ஒன்று கூடுவோம் என அழைப்பு விடுத்து உள்ளார் சஞ்சய் காந்தி.. அப்ப, கூடிய விரைவில் அவர்களுடய சந்திப்பு நடந்து விடும்.. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பதிவர்களை மட்டும் அழைக்கவில்லை. முகநூல் அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அறிய.. அவர்களுடைய இந்த முதல் முயற்சி வெற்றி அடைய சென்னை பதிவர்களின் சார்பாக மனமார நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்... எல்லாருக்கும் ஒரு கன்டிஷன், அங்க அங்க நடக்குற பதிவர் சந்திப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா எல்லாரும் ஒன்னா சேந்துடனும்.. சென்னை பதிவர், கோவை பதிவர், ஈரோடு பதிவர்னு யாராச்சும் பிரிச்சி பாத்திங்க, சுட்டுப்புடுவன்.. ஆயிரம் கைகளை இணைக்கும் சக்தி தமிழனின் எழுத்தில் உள்ளது. சொன்னவர் பிரபல பதிவர் சதீஷ் மாஸ்..
------------------------------------------------------------------------------------------------------------
சென்ற சென்னை பதிவர் சந்திப்பு:

போன வருடம் நடந்த பதிவர் சந்திப்பு தான் என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு. ரொம்ப ஜாலியா இருந்துச்சு . யூத் பதிவர் சந்திப்புனு சொல்லி என்னை அழைத்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்கள் தான். அந்த சந்திப்புக்கு பிறகு தான் என் எழுத்தில் ஒரு சூடுபிடித்தது.. அந்த மொத்த பதிவர் சந்திப்பையும் கவர் ஸ்டோரியாக எழுதிய ஒரே பதிவர் சதீஷ்குமார் மட்டுமே. அதை படிக்க.. பல சூவரிஸ்யமான சம்பவங்கள் நடந்துச்சு சோ டோன்ட் மிஸ் இட்..
ஜாக்கி அவர்களின் தளத்தில் மேலும் வாசிக்க...

பதிவர் சந்திப்புக்கான வேலைகளை எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்து இருக்காங்க. ஆனா இந்த முறையும் கவர் ஸ்டோரி நான் தான் எழுதுவேன் என்று என் வேலையை நானே எடுத்து கொள்கிறேன்... இதுக்கு பேர்தான் வில்லத்தனம்...
------------------------------------------------------------------------------------------------------------
உங்க கமெண்ட்:

இப்ப தான் கொஞ்சம் தைரியம் வந்து கமெண்ட் மாடுரேஷனை நீக்கி உள்ளேன். பார்ப்போம் என்ன நடக்குதுனு... ஹி ஹி.. உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் இல்லை நிறையாவே பயமா தான் இருக்கு.. இருந்தாலும் என் பல ஆசான்களின் பின் தொடர்களாக நானும் செயல்படுவேன்.. ஆவரது ஆகாட்டும்...
------------------------------------------------------------------------------------------------------------
போட்டோ... என்ன கொடுமை சார் இது.. :

எங்க கணக்கு வாத்தியாரின் கணக்கு. சத்தியமா ஒன்னும் புரியலை
இதுல இருக்கற கணக்கை solve பண்ணி நிறைய பேருக்கு விடை கொண்டு வர தெரியாது என்பதே எமக்கு தெரிந்த விடை... அவ்வ்வ்வ்வ்வ்....
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:

போடா போய் வே(வ)லைய பாரு இல்லனா எவனாச்சு ஆட்டய போட்டுறுவான்..

பொன்னுக்கும் பொண்ணுக்கும் தான் சண்டை அதுல உருளுது ஆம்பளைங்க மண்டை..

ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, அனைவரையும் நம்புவது பேராபத்து..

------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரம்:

பிற பதிவரின் பெருமையை எடுத்து சொல்லி அவர்களுக்கு விளம்பரம் செய்வதே இப்பகுதி.. 
இன்று அன்பைத் தேடி.. அன்பு.. தமிழகத்துல இருந்து சிங்கப்பூர் சென்று செட்டில் ஆன நம்மூர் காரர் ஆன அன்பு.. கணிப்பொறி சம்பந்தப்பட்ட தகவல்களை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார். அதான் எல்லாரும் எழுதுறாங்களே அப்புறம் என்ன? அப்படிஎன்று நீர் முழங்குவது எம் காதுகளில் பளார் என கேட்கிறது.. இவர் தனது பதிவை மிக தெளிவாக விவரமாக எழுதுகிறார். நடுநடுவே விளம்பர பேனர்கள் வந்து தொந்தரவு செய்யாத ஒரு வலைப்பூ.. இவருடைய வலைப்பூவில் உலகில் உள்ள எல்லா தமிழ் வானொலிகளுக்குமான லிங்க் கொட்டி கிடக்கிறது.. தமிழ் செய்தித்தாள்களும், தமிழ் தொலைக்காட்சிகளும் காணக்கிடக்கிறது. பல நூறு இலவச சாப்ட்வேர்கள் அண்வகுக்கின்றன.. இப்ப கொஞ்ச நாளைக்கு முன் அவர் எழுதிய பதிவு இசைக்கருவிகள் பற்றியது. மிக அருமையான தொகுப்பு அது..

சார் விளம்பரத்துக்கான பணத்தை என்னோட ஸ்விஸ் அக்கோன்ட்டுல போட்டுறுங்க..
------------------------------------------------------------------------------------------------------------
உண்மை:

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு உண்மைய தெரிஞ்சிக்கிட்டேன். நாம புதுசா யாரவது ஒருவரின் தளத்திற்கு சென்று ஒர்ரே ஒரு கமெண்ட் போட்டால் போதும் அடுத்த நிமிடம் அந்த தளத்தின் உரிமையாளர் நம்ம வலைப்பூவிற்கு வந்து ஒரு நோட்டம் விடுகிறார் என்று... அவ்வ்வ்... (இது இப்ப தான் உனக்கு தெரியுமா உனக்கு)... ஆமாங்க பாஸ்... இதுக்கு தான் கமெண்ட் போடனும்.. புரியுதோ நோக்கு..
------------------------------------------------------------------------------------------------------------
பல்லை காட்டாதீர்:
பாவம் அந்த பிகரு......


------------------------------------------------------------------------------------------------------------
கவிதை நேரம்:

நான்
நீ
நாம்
அவன்
அவள்
எல்லாம் நம்ம
சொந்தம்
வாழ்க வளமுடன்..

என் ஆசான் கவிஞர், புலவர், எழுத்து புயல், கவிச்சக்கரவர்த்தி மிஷ்கின் அவர்களுக்கு சம்ர்ப்பணம்..
------------------------------------------------------------------------------------------------------------

போதும் நிறுத்திக்களாம்டா சதீஷ்.. பாரு இப்பவே பாதி பேர் முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கமெண்ட் போடுவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் அதுவும் என் ஸ்விஸ் அக்கோண்டில் இருந்து தரப்படும்..



என்றும் காபிவுடன்
சதீஷ் மாஸ்........



Tuesday, 6 September 2011

நானும் ஜாக்கியும்

பதிவர் சந்திப்பு நடந்துச்சுனு சொன்னான், ஜாக்கிசேகர் வந்தார்னு சொன்னான்.. அவ்ளோ தானா? அப்ப தலைவரு தலைவருனு சொல்லி பதிவு போட்டது எல்லாம் ஒரு விளம்பரம் தானா???

இப்படிலாம் உங்க மனசுல அசிலி பிசிலியா எதாச்சும் இருந்தா அதை அப்சரா ரப்பர் போட்டு அழிச்சுருங்க.... அவர் எப்ப வருவார்னு வாசக்காலயே பாத்துக்கிட்டு இருந்தேன்.... இந்த பதிவை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு "சென்னை பதிவர் சந்திப்பு" அந்த பதிவ படிச்சிட்டு வாங்க அப்ப தான் புரியும்..


என்னோட அறிமுக பேச்சு முடிஞ்சுருச்சு... அது வரைக்கும் கூட நா ஜாக்கிசேகர் கிட்ட போய் அறிமுக பண்ணிகல... மீண்டும் வந்து என் இடத்துலயே உக்காந்துட்டேன்... பிரபா அவர்கள் ஜாக்கிசேகருக்கு ஒரு சீட்டு போட சொன்னாருனு நா அங்கு பேசும் போது சொன்னேன்...


ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் அருகில் ஒரு குரல் கேட்டது... "என்னடா சீட்டு போட்டு வச்சிருக்கியா?" அது ஜாக்கி சார் வாய்ஸ்.... எனக்கும் ஒன்னும் புரியாம "ம்ம்ம், ஆமா சார் உங்களுக்கு தான் இந்த சீட்டு" என சொன்னேன்.... அதற்க்கு ஏற்றார் போல் என் அருகில் ஒரு சீட்டு மட்டும் காலியாக இருந்தது.....


சரி அப்புறம் என்ன ஆச்சு.... நா என்ன கதையா சொல்றேன்...


இரண்டு முறை என் போன் சினுங்கியது... "போனை, சைலெண்டில் போடு" என ஒரு சிறிய அதட்டல்...  சட்டென்று என் போன் அமைதியானது.... ஹி ஹி ஹி நைஸ் ஜாக்கி..... வேறு எதுவும் அவருடன் பேசவில்லை... நான் அமைதியாய் தான் இருந்தேன்....


சற்று நேரம் கழித்து, சந்திப்புக்கு வந்து இருந்த அனைவருக்கும் டீ சப்ளை செய்யப்பட்டது.... நான் ஒரு கப் டீயை எடுத்து அதை அவருக்கு கொடுத்தேன்... 


பிறகு பல சூடான விவாதங்கள் நடைப்பெற்றன.. அதில் அவரும் பங்கேற்றார்.... "புதிய பதிவர்கள் தங்களுடைய பதிவுகளை சந்தைபடுத்துவது ரொம்ப முக்கியம்.. அப்ப தான் அது பல முகவரை சென்று அடையும்... பல திரட்டிகளில் பதிவு செய்வது நலமே... முடிந்த வரை லேபிள் உபயோகிக்கவும் " இந்த மாதிரி நிறைய சொன்னாரு...


புதிய பதிவர்கள் தொடர்ந்து எழுதனும், பின்னூட்டம் இல்லை எனவும் வருகையர் யாரும் இல்லை எனவும் கவலைபடதீங்க.... என கூறி ஆறுதல் அளித்தார்...

கூட்டம் நிறைவாய் முடிய, என் கண்கள் மட்டும் ஜாக்கி சாரை தேடியது... அவரை சந்தித்து பேச வேண்டும் என ஆவல்.... அவரை பார்த்து சிரித்தவாறே அருகில் சென்றேன்... பல கேள்விகளை கேட்டேன், சற்றும் சளைக்காமல் பதில் தந்தார்... மிகுந்த மரியாதையுடன் பேசினார்... என்னை ஊக்கபடுத்தியது அவரது வார்த்தைகள்.... ஒரு பத்து நிமிடம் அவருடன் தனியாய் பேசியதில் மகிழ்ச்சி....



இது தாங்க "பைனல் கிளிக்"..... கேபிள்சங்கர், நான், ஜாக்கிசேகர்.... இவ்ளோ சீக்கரத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது..... இந்த போட்டோ எத்தனை பேரின் வயித்து எரிச்சலாக மாறபோகிறது என தெரியவில்லை.....

என் கையில இருக்கற அந்த புத்தகம் தான் சிவகுமார் அண்ணன் தந்தது.... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

மீண்டும் அடுத்த சந்திப்பில் பாக்கலாம்......





சதீஷ்..........


Monday, 5 September 2011

சென்னை பதிவர் சந்திப்பு - 04/09/2011

ஆரம்பத்துல இருந்து வரேன்.. சென்னையில ஒரு பதிவர் சந்திப்பு நடத்தனும் அப்படினு பிரபல பதிவரான கே.ஆர்.பி.செந்தில், சிவகுமார், பிரபா மற்றும் பலர் முடிவு பண்ணி அத வெற்றிகரமா செய்தும் முடிச்சுடாங்க.....


செப்டம்பர் 4,2011 அன்று கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸின் மேல்தளத்தில் நடைப்பெருகிறது, புதிய மற்றும் அறிமுகமில்லாத பல பதிவர்களை அறிமுகபடுத்தும் விழா தான் அது... என்னையும் தனிப்பட்ட முறையில் சிவகுமார் சார் அழைத்து இருந்தார்... சாரி சாரி அவரை சார் என் அழைக்க கூடாதுனு அவர் அன்பு கட்டளை போட்டு இருக்கார்.. அதனால சிவகுமார் அண்ணே என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து இருந்தார்... அப்பாடா இன்ரோடக்‌ஷன் முடிஞ்சுபோச்சு....


இனிமே என் பார்வையில் இருந்து பதிவர் சந்திப்பு நடைபெற்ற விதத்தை எழுதுகிறேன்......


1. மங்காத்தா படம் பாத்துட்டு நேராக பதிவர் சந்திப்புக்கு போனேன்.. கே.கே.நகர் போனதும் அங்க இருந்து பாண்டிச்சேரி (புதுச்சேரி) கெஸ்ட் அவுஸ்க்கு ஒரு இளநீர் கடைகாரர் வழிசொன்னார்...

2. அங்க போனதும், பதிவர் சந்திப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேசும்படி ஒரு தொலைபேசி இருந்தது.. அந்த எண்ணை தொடர்புக் கொண்டு மீதி முகவரியை வாங்கி கொண்டு, அந்த இடத்தை அடைந்தேன்...

3. என்னை கீழே இறங்கி வந்து அழைத்து சென்றார் சிவகுமார் அண்ணே, பிறகு தான் தெரிந்தது அது அவருடய தொலைபேசி எண் தான் என்பது.. இன்முகத்துடன் வரவேற்றார்.. 


சிவகுமார் : உங்க பேரு?
நான் : சதீஷ் சார்..
சிவகுமார் : அட நீங்க சதீஷ்மாஸ் ஆ?!?!
நான் : ஆமா சார், நீங்க?
சிவகுமார் : மெட்ராஸ் பவன் சிவகுமார்.. உங்களுடைய தெருகூத்து கலைஞர்கள் பற்றிய போஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு.. கீப்ட் அப்...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்..

4. என்னை உள்ளே அழைத்து சென்று, ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அறிமுகம் செய்து வைத்தார்... அவர்கள் அனைவரும் என்னை வாழ்த்தினர்.. பிரபா, கவிதைவீதி சௌந்தர், சென்னை பித்தன், மாறன் மற்றும் பலரிடம்...  நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்...


5. எனக்குனு ஒரு சீட் போட்டு நா உக்காந்துடேன்... அப்போது இன்னும் இரு பதிவர் தங்களை அறிமுக படுத்தி என்னை பற்றியும் கேட்டார்கள்.. அதில் மணிவண்ணன் அவர்களும், பதிவர் தென்றல் உரிமையாளரும் ஒருவர்...


6. பதிவர் தென்றல் என்பது ஒரு பத்திரிக்கை.. பதிவர்கள் எழுதும் சில கட்டுரைகளை அவர்களின் அனுமதியோடு பிரசுரம் செய்யப்படுகிறது... அந்த பத்திரிக்கையின் ஒரு காப்பி எனக்கும் தந்தார்...


7.அமைதியாய் அமர்ந்து இருந்தேன்.. அப்போது கே.ஆர்.பி.செந்தில் அவர்களை அழைத்து வந்து என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் சிவகுமார்..


கே.ஆர்.பி : வணக்கம், சதீஷ் ஆ?
நான் : ம்ம்ம் ஆமா சார்..
கே.ஆர்.பி : ஜாக்கியோடு ரசிகர் தான?
நான் : (எனக்கு ஆச்சரியம்) சார் உங்களுக்கு எப்படி தெரியும்?
கே.ஆர்.பி : உங்க பிளாக் படிச்சு இருக்கேன்.. நல்லா எழுதறீங்க...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்...
கே.ஆர்.பி : உங்க தலைவரும் இங்க வராரு...
நான் : (மனதிற்குள் பயங்கர சந்தோஷத்தில்) ஒகே ஒகே சார்..


பிரபா : ஜாக்கி சார் அவருக்கு உன் பக்கதுல ஒரு சீட்டு போட்டு வை..
நான் : கண்டிப்பா....


8. சிவகுமார் அவர்கள் தாங்கள் கொன்டுவந்த பிளக்ஸ் பேனரை ஒட்டினார்.. அதில் "வா நண்பா" , "சென்னை பதிவர் சங்கம்" என அழகாய் எழுதப்பட்டு இருந்தது.. மேலும் மற்றொரு பேனரில் கவுண்டமணி படம் போட்டு அழகாய் வரவேற்று இருந்தார்...


9. சென்னையை சேர்ந்த பதிவரான கேபிள்சங்கர் வந்தார்.. அதன்பிறகு பல கலகலப்பான விஷயம்லம் நடந்தது... அனைவரும் அவரை சூழ்ந்து நிற்க அந்த இடமே சிரிப்பின் பிறப்பிடமாய் மாறியது... கேபிள்சங்கர் எகிறி எகிறி குதித்து "நானும் யூத் நானும் யூத்" கூப்பாடு போட்டார்...


10. பல பிரபலமான பதிவர்கள் வருகை புரிந்தனர்... யுவகிருஷ்ணா, நரேன், சுரேகா மற்றும் பலர்... (அட என்னடா, யார் யார் வந்தங்கனு முழுசா சொல்லேன்...  -  நா முதல்முறையாக அங்கு சென்றால் எனக்கு அவர்களின் பெயர் மனதில் பதியவில்லை)


11.பின்பு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, ஒவ்வொருவராய் எழுந்த சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.. பெரும்பாலும் அவர்களுடைய அறிமுகத்தை யாரும் கவனிக்கவில்லை.... ஆனால், ஒவ்வொருவரையும் நம்ம கேபிள்ஜீ நக்கல் விட்டு கமெண்ட் அடிச்சது சூப்பர் அப்பு (நோ ஆப்பு)...


12.ஒரு பத்து பேர் பேசி முடிச்சசிருப்பாங்க.. அப்ப திடீர்னு ஒரு பரபரப்பு, ஆரவரம், கலவரம், Hero Entering... Ya u r right... My thala JackieSekar coming... அவர் பின்னால ஒரு கூட்டம்... (தலைவர்னா அப்படி தாங்க இருப்பாங்க).... நா எதோ அவரையே பாத்தேன்... எனக்கு பின்னால இருக்கற சீட்டுல இருந்து ஒரு நாலு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தார்... சில பேர் எழுந்து போய் அவர்கிட்ட அறிமுகம் பண்ணிகிட்டாங்க... எனக்கு போக பிடிக்கல...


13.என்னை அறிமுகம் படுத்திக்கொள்ள அழைத்தார்கள்.. நான் முன்னே சென்று பேசினேன்... பத்து பேர் முன்னாடி பேசினா எனக்கு கை,கால்லம் உதரும்... ஆனா அங்க எப்படி பஅவ்ளோ தைரியமா பேசினேன் எனக்கு தெரியல... என்னை பொறுத்த வரை நான் நன்றாகவே பேசினேன்...  கொஞ்சம் அதிக நேரம் எடுத்து கொண்டேன்.. அனைவரின் மனதிலும் அழகாய் பதிந்தேன்.. அங்கு என் எழுத்தை ரசிக்காதவர்கள் கூட என் பேச்சை ரசித்தனர்...


14. இப்ப சீரியஸ் ஆன விஷயத்துக்கு வரலாம்... பல முன்னணி பதிவர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைத்து பேசினார்கள்... பல விவதங்கள் முன் வைக்கப்பட்டன... யுவகிருஷ்னா அவர்கள் பல நல்ல தகவல்களை புதிய பதிவர்களுக்கு (அத கொஞ்சம் சொல்லவும் - முடியாது, சந்திப்புக்கு வாரதவங்களுக்கு அதான் தண்டனை)... கூகுள் பஸ் வந்ததில் இருந்து பதிவர்கள் குறைந்து விட்டதாக தெரிவித்தார்.. நல்ல விவாதங்கள் தற்போது இல்லை எனவும் சொன்னார்... உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளியிடவும் என அறிவுருத்தினார்...


15.அவரை தொடர்ந்து "உருப்படாத" நரேன் (நா சொல்லல அவரே தான் சொன்னாரு) பேசினார்.... பற்பல விவாதங்களை முன் வைத்தார்... ராஜீவ், ஈழ தமிழர், அன்னா ஹசாரே.. போன்ற பல முக்கிய விவாதம் நடைப்பெற்றது...


16. சிவகுமார் அவர்கள் பேச ஆரம்பித்தார்.. அதை ஒரே வரியில் சொல்ல முடியாது, ஈழ தமிழர்களை பற்றி கவலைப்படுகிறோமே தவிர நம் தமிழர்களை யாரும் கண்டுக்கொள்வது இல்லை.. டாஸ்மாக் கடையில் பள்ளி சிறுவர்கள் நிற்பது மனதிற்கு வெக்கபட வேண்டிய விஷயம்.. இதை அரசாங்கம் எப்போது தான் கண்டுக்கொள்ளும் என நம் அரசாங்கத்தை பற்றி தெரியாமல் பேசிட்டார் சைவகுமார் (சைவகுமார்)...நாம அவர மன்னிச்சடலாம்...


17.அப்புறம் சுரேகா, தாங்கள் ஆரம்பித்த "கேட்டால் கிடைக்கும்"  பற்றி சூடாக பேசினார்... ஆட்டோ மீட்டர் பற்றியும் தன் கருத்தை முன் வைத்தார்... வெகுஜன மக்களின் நிலை குறித்து கடிந்து கொண்டார்...

18.கணிப்பொறியில் தமிழை உபயோகிக்க முடியும் எனவும் அதை அனைவருக்கும் அறிமுகம் படுத்தவும் அனைவரும் முடிவு எடுத்தனர்... அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்..


19. பின் கூட்டம் தொடர்ந்து நடக்க, சிவகுமார் அண்ணன் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்... பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் நல்ல புத்தகங்களை கொண்டு வந்து புதிய பதிவருக்கு பரிசளிக்கும் படி சொல்லி இருந்தார்கள்.. அதை சரிவர செய்தது சிவகுமார் அண்ணன் ம்ட்டும் தான்.. "ஹென்றி ஃபோர்ட், எழுதியவர் இலந்தை சு.இராமசாமி " அந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.. அதில் அவரின் கையெழுத்தும் அழகாய் போட்டு தந்தார்... அண்ணன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...


20. கூட்டம் முடிந்து ஒவ்வோருவரய் கலைந்தனர்.... பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த சந்தோஷம் சிவகுமார் முகத்திலும் பிலாசஃபி பிரபா முகத்திலும்.. என்னை இந்த சந்திப்பிற்கு அழைத்து அறிமுகபடுத்தி வைத்த இவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல....








மீண்டும் சந்திப்போம்.........






சதீஷ்.............