என் தோழர்கள்

Wednesday, 20 March 2013

கவிதை நேரம்

இருட்டுக்குள் இருக்கும் 
    நிலவிற்கு வெளிச்சமாய்
வந்த சூரியனை வேண்டாம் 
                            என்றாள்......

--------------------------------------------------

உன் கைக்குள் இருக்க 
        வேண்டும் என்பதற்கே
மோதிரமாய் பிறந்தேன்.....
     ஆனால் நீ தகுதியை விட
தங்கத்தை பார்த்தாய்....

--------------------------------------------------

உனக்கான உலகத்தில் 
         உனக்கானவனை தேடு.....
பிறருக்காக உன்னவனை இழக்காதே....

--------------------------------------------------

சிற்பத்திற்கும் சிரிப்பு உண்டு...
    தள்ளி நில், இல்லையேல்
நீ ஏமாந்து விடுவாய்.....

--------------------------------------------------

அன்று
      அரக்கனை அமைதிப்படுத்தியவள் - பெண்
இன்று
      அமைதியனவனை அரக்கனாக்குகிறாள்....

--------------------------------------------------

காலம் பதில் சொல்லும் என்பர்
  அவருக்கு தெரியாது
அந்த காலம் எனக்கு இல்லை என்று...

--------------------------------------------------

நகைச்சுவைக்கு நகைப்பு வேண்டும்
  சிந்தனைக்கு ஆற்றல் வேண்டும்
செயலுக்கு தைரியம் வேண்டும்
  மனிதனுக்கு உண்மை வேண்டும் 
உண்மைக்கு உணர்ச்சி வேண்டும்....

--------------------------------------------------

யோசித்து பார் அன்றை
   நேசித்து பார் இன்றை
பிடித்து விடும் நாளையை....

--------------------------------------------------

சிட்டுக்குருவியாய் வாழு
    மயிலாய் வாழ நினைத்து
காட்சிப்பொருளாய் ஆகிவிடாதே...

--------------------------------------------------

முயலுக்கும் ஆமைக்கும் - போட்டி
   உன் முயலாமையை நீக்கு
வெற்றி உன் முதுகில் பயணிக்கும்.....

--------------------------------------------------

என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்....

No comments: