என் தோழர்கள்

Showing posts with label சென்னை அனுபவம். Show all posts
Showing posts with label சென்னை அனுபவம். Show all posts

Saturday, 9 June 2012

செருப்பு

           பெரிய பருப்பு மாதிரி பேசாதடா... சென்னைவாசிகளின் மிக பெரிய ஆசிர்வாத சொல்.. இச்சொல்லை உச்சரிக்காதவன் சிங்கார சென்னையில் பிறந்த சிங்கக்குட்டி அல்ல, அவனின் பூர்விகமும் சென்னையாய் இருக்காது. வேறு ஊரிலிருந்து குடி பெயர்ந்தவராக இருக்கலாம்... இன்று பிற ஊரை சேர்ந்தவர்களும் இதை கற்றுக் கொண்டு தன்னை ஒரு அழகிய சென்னைவாசியாக மாற்றி கொண்டனர் என்பதே உண்மை..


நா சென்னை மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு வரை படிச்சேன்... அப்ப என் கூட படிக்கர பசங்ககிட்ட போடா எருமை அப்படினு திட்டினா கூடா அது பெரிய மேட்டாரா ஆக்கிடுவாங்க.. அது கூட கெட்ட வார்த்தை லிஸ்ட்'ல தான் இருந்துச்சு..

இப்ப அதே பள்ளியில் படிக்கற பசங்க, எங்க ஏரியால இருக்கறவனுங்க பேசற பேச்ச காது கொடுத்து கேக்க முடியல... தம்மாதுண்டு இருந்துகினு அதுங்க பேசறது இருக்கே.. ஓத்__ அப்படியே உரிச்சு உப்புகன்டம் வச்சிறனும்... அந்த பசங்களுக்குலாம் முழுசா பத்து வயசு கூட இருக்காது.. இந்த இடத்துல நா அந்த பள்ளிகூடத்த குறை சொல்லல.. நானும் அங்கதானே படிச்சேன்.. எப்படி விட்டு கொடுக்க முடியும்... இந்த நாதரிங்க கெட்டு குட்டி சுவரா போகுது..

நா படிச்ச அப்போ, எங்களில் யாரோட நடவடிக்கையாவது மாறிச்சுனா அதை உடனே டீச்சர் பாத்து எங்கள அப்பவே தண்டிப்பாங்க.... ஆனா இப்ப டீச்சர் எல்லாரும் எதயும் கண்டுகறது இல்ல.. ஏன்னா இந்த பரதேசிங்க அப்படி நடந்துகிதுங்க... அவங்க அதனால ஒரு முடிவுக்கு வந்தறாஙக்.. சேத்துல கல்ல அடிச்சா அது நமக்கு தான் சங்கடம்...

அப்ப நீ மட்டும் இப்ப இந்த மாறிலாம் பேசறியேனு கேப்பவர்களுக்கு, இந்த உலகத்துல எவனும் நல்லவன் கிடையாது.. எவனும் கேட்டவன் கிடையாது... உலகத்தை பத்தி புரிஞ்சவனுக்கு எவனும் அறிவுரை பண்ண தேவை இல்லை... ஆனா அந்த அறிவுரைய கேக்கறவனுக்கு என்ன நடக்கும்னு எவனுக்கும் தெரியாது....

ஒரு முறை பதிவர் சந்திப்பு அப்போ, மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்கள், சின்ன பசங்க எல்லாம் இப்ப ரொம்ப கெட்டு போச்சு.. சின்ன வயசுலயே அவனுங்க டாஸ்மாக்கு போறானுங்க... அதுக்கு எதாச்சும் வழி பண்ணனும் அப்படினு தன்னோட அதங்கத்த வெளிப்படுத்தனாரு... அதுவும் சரி தான்... அவருக்கு ஏன் அவ்ளோ கோபம் அன்னைக்கு வந்துச்சு அப்படினு எனக்கு தெரியல...

ஆனா நாலு நாளைக்கு முன்னாடி என் பிரண்டோட தம்பி சிகரெட் புடிக்கும் போது என் கண்ணுல மாட்டிகிட்டான்... அந்த ரோட்டில நாலு வச்சேன்.. வாங்கிகிட்டு சைலன்ட் ஆ போய்டான்... அப்பா இல்லதா பையன அவங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்க.. இந்த நாய் என்னான தம் அடிக்குது.... அவங்க அம்மாகிட்ட சொல்லவும் எனக்கு மனசு வரல.. அவங்க அண்ணன் கிட்ட இத பத்தி கேட்டதுக்கு அவன் தண்ணி அடிக்கற அளவுக்கு போய்ட்டான்டா.. இப்ப தான் கொஞ்ச நாள ஓக்கியமா இருக்கான் அப்படினு சொல்றான்.... இதுக்கு மேல நான் என்னத்த சொல்றது...

இந்த இடத்துல நா இப்போ யாரை குறை சொல்றது... அவனோட குடும்பத்தய, அவனோட பள்ளியைய, அவனோட நண்பர்களைய, அவனோட ஏரியாவைய, அவனோட இந்த நிலைமைக்கு யார் காரணம்... தெரியலயே...

பேசமா எல்லாரும் கிளம்பி அமெரிக்கா போய்ரலாமா... அங்க எப்படினு அங்க போனா தான தெரியும்...

இன்னொரு மேட்டர்.. இந்த பையன் பேரு மணி... பத்தாவது படிக்கறான்.. கூட படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கு அந்த பக்கி.. அந்த பொண்ணோட அப்பன்காரன் ஆட்டோல நாலு அஞ்சு பேரோட வந்து ஒரு காட்டுகாட்டிடு போய்டான்... தேவையா இது.. மூடிகிட்டு இருந்து இருக்கலாமா.... பத்தவப்புலயே லவ்... விளங்குமா இதலாம்...

பெத்தவங்க எல்லாருமே தான் புள்ளய நல்ல புள்ளய வளக்கனும்னு தான் கஷ்டப்பட்டு உழைக்கறாங்க.. மெட்ரிகுலேஷன் பள்ளில சேத்து படிக்க வைக்கறாங்க... ஆனா ?????

ஆனா நா ஒன்ன மட்டும் உறுதியா சொல்வேன்... பொறக்கும் போது எல்லா குழந்தையும் நல்லா குழந்தை தான்.. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே.... இது எந்த அளவுக்கு உண்மை அப்படினு நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்... அதுக்காக நா யாரையும் குறை சொல்றனு அர்த்தம் இல்லை... ஒரு குழந்தையோட ஒவ்வோரு அசைவையும் அம்மா கவனிச்சாலே போதும்.. அந்த பையன் மனசுல ஒரு பயம் இருக்கும்... வாழ்க்கையில இப்ப நல்ல நிலைமைல இருக்க ஒவ்வொருத்தனுக்கும் அவங்க அம்மாவோட பங்களிப்பு அதிகமா இருக்கும்....

என்னடா சதீஷ், சும்மா பசங்களயே குறை சொல்லிகிட்டு இருக்க... இல்ல மச்சான், சட்டப்படி ஆம்பளைங்க பெண்களை பற்றி பேச கூடாது... ஆனா அவங்களும் லேசுப்பட்டவங்க கிடையாது.. பல பசங்க தண்ணி அடிச்சதுக்கு காரணமா கட்டறது அவன் லவ் பண்ண பொண்ண தான்.... எதுக்கு டா இந்த பொழப்பு... போங்கடா போய் வேளையை பாருங்க....

நான் காலேஜ் படிக்கும் போது என்னை ஒரு ஆசிரியர் திட்டிய வார்த்தைகள் பின்வருமாறு "நீ பெரிய பருப்பா இருந்தா அதலாம் வெளிய வச்சிக்கோ" அப்ப நான் முதல் வருடம் தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு வரைக்கும் நான் அதை மறக்கல அப்படினு சொல்ல முடியாது, மறக்க முடியலனு வேணா சொல்லலாம்... நானும் அன்னைக்கு என்ன பண்ணேன்னு சொல்லனும்ல... அவங்க சொன்னத எழுதிட்டு போகல அதுக்கு என்னை திட்டிக்கிடே இருந்தாங்க... மேம், இந்த மாதிரிலாம் திட்டாதீங்க அப்படினு தான் சொன்னேன்.. அவ்ளோ தான் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் அவளோ ரணகளம்....

எனக்கு வரவர சென்னையில இருக்கவே பிடிக்கல, ஆனா என்ன பண்றது.. இதான் சொந்த ஊர்னு ஆயி போச்சு..இதல எல்லாம் சகித்து கொள்ளும் மனபக்குவம் சென்னைவாசிக்கு அதிகம் உண்டு.... இப்படியே போய்ட்டு இருந்த என்னப்பா ஆகறது இதுகு ஒரு முடிவே இல்லயா....

**முடிவு**

எல்லாம் வல்ல இறைவா போற்றி.....


என்றும் சென்னை வாசியாக செருப்பு பருப்புடன் பொறுப்பாய்
சதீஷ் மாஸ்......


Monday, 23 April 2012

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் அவர்கள் சொல்லி இருக்கிறார். என்னமோ தெரியல நா கண்ட கனவு மட்டும் இது வரை பலித்ததே இல்லை. ஆமாம், கனவு கண்ட மட்டும் போதுமா அதுக்குனு எதாச்சும் முயற்சி செய்யனும்ல.


2007ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிச்சு வெளில வந்த தருணம். ஏதோ மலையை கயிறுல கட்டி இழுத்த சந்தோஷம், அப்பபாடானு பெருமூச்சு விட்டு வீட்டுக்கு ஓடிவந்தேன். ஒரு ரெண்டு மூனு நாள் நல்ல ஜாலியா போச்சு, அதுக்கு அப்புறம் தான் ஒரு வெற்றிடம் வந்துச்சு. இத்தன நாளா ஒன்னா இருந்த என் ஃபிரண்ட்ஸ் இப்ப ஆளுக்கு ஒரு மூலைல இருந்தோம். போன்கூட இல்லாதால் சுத்தாமா தொடர்பு இல்லமா போச்சு. ஆஞ்சிஓஞ்சி ரெண்டு மாசம் போனதுக்கு அப்புறம் எப்படியோ பத்தாவது பாஸ் பண்ணி 11வாப்பு அதே பள்ளில சேந்தாச்சு... அட்ராசக்க


ஒரு புது பயணம், எதோ கம்ப்யுட்டர் மேல இருந்த மோகத்துல அதே பிரிவு எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வோரு ஆசிரியரும் நல்லா பழக ஆரம்பிச்சாங்க, அது ஒரு புது உணர்வு. இதுவரைக்கும் ஆசிரியர் மேல இருந்த ஒருவித பயம் போச்சு. அவங்க பழகன விதம் அப்படி. எனக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த மாரிஸ்வரன் சார் இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்காரு. அவருக்கு அப்ப வயசு 25, இளமை துள்ளலுடன் இருந்த அவரும் நாங்களும் போடாத ஆட்டமே இல்லை. எல்லமே ஒரு லிமிட்டுகுள்ள தான். காஞ்சனா மேடம் அடுத்து, எங்களுக்கு வேதியியல் பாடம் எடுத்தவங்க. எனக்கு இன்னும் இவங்க என்கிட்ட பேசின வார்த்தை நல்லா ஞாபகம் இருக்கு. எனக்கு அப்ப தெரியாது அந்த ரெண்டு வருஷம் என் வாழ்க்கையே மாத்த போகுதுனு. பத்தாவது முடிச்ச அப்ப இருந்த வலியோடு இப்ப அதிகமாவே இருந்துச்சு. அதுக்கு காரணம், இப்ப நா விட்டு பிரிஞ்சி போகறது என் ஃபிரண்ட்ஸ் மட்டும் அல்ல, ஆசிரியர்களையும் தான். (என் கலாஸ் பொண்ணுங்களும் தான். அச்சோ அவங்களாம் விட்டு நா எப்படி இருக்க போறேனோ. )


கடைசி நாள் தேர்வு முடிச்சுட்டு வெளிய வந்தப்ப, எதோ ஒரு பெரிய உலகத்த விட்டு பிரியற அந்த வலிய நான் அன்னைக்கு உணர்ந்தேன். பதிநாலு வருஷம் என்னோட பள்ளி படிப்பு அந்த தினத்தோடு முடியுது. அஹுக்கு அப்புறம் நாம என்னா முயற்சி செஞ்சாலும் அந்த வாழ்க்கைக்கு போக முடியாது. ஆனா பல மறக்க முடியாட தோழர்களையும் தோழிகளையும் கொடுத்த ஒரு குட்டி சொர்க்கம் அது.


அட இதுக்கே இப்படினா, அடுத்து ஒன்னு இருக்கு. அது தான்பா காலேஜ். நினைச்சி பாக்கவே செமயா இருக்கு. 2009ம் ஆண்டு, பல கனவோட கல்லூரிக்கு போறவங்க கூட நானும் போனேன்.(அப்பாடா தலைப்பு வந்துடுச்சு) எதோ சொர்கத்துல கால வச்ச மாதிரி இருந்துச்சு.. எந்த பக்கம் திரும்புனாலும் ஒரே ஃபிகர்ஸ் செம குஜால்ஸ். இனிது இனிது படத்துல காட்டுவாங்கள அதே மாதிரி தான். B.Sc Electronics and Communication Science இது தான் நா எடுத்த பட்ட படிப்பு. அந்த கோர்ஸ் பத்தி ஒரு மண்ணுமே தெரியாது. ஆனா, என்னோட வாழ்க்கை அங்க தான் ஆரம்பிச்சுது..


ஒரு பக்கம் படிப்பு அதுபாட்டுக்கு போயிட்டு இருந்துச்சு. மறுபக்கம் கல்லூரிக்கே உண்டான சில சில்லறை வேலைகள், அதுதாங்க சினிமாக்கு போறது, பீச்க்கு போறது. சொல்ல போன கலேஜ் கட் அடிக்கறது. கல்லூரி பேராசிரியர் கூட சண்ட போடறது, இது எல்லார் வாழ்க்கையிலுமே நடந்து இருக்குமே.. ஸ்கூலை விட காலேஜ்ல தான் நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ். அவங்க கூடலாம் பழகறதே ஒரு தனி அனுபவம். நிறைய அனுபவ பாடத்தையும் வாழ்க்கை பாடத்தையும் எனக்கு கத்து கொடுத்த பெருமை அந்த அழகிய தேவதைகளுக்கே சொந்தம். 


அந்த காலேஜ்ல படிக்கும் போது தன் எனக்கு இன்டர்நெட் புழக்கமும் பழக்கமும் வந்துச்சு. Facebookல ஆரம்பிச்சு இப்ப Blog வரைக்கும் வந்தது ரொம்ப பெருமயா இருக்கு.. அப்ப வரைக்கும் கூட என் வாழ்க்கையில எந்த ஒரு கனவும் இல்லாம லட்சியமும் இல்லாம தான் இருந்துச்சு. அடுத்து வாழ்க்கையில என்ன பண்ணப்போறோம அப்படினு எதுவுமே தெரியாத நிலமை தான்.. இந்த வருஷம் 2012ல வெற்றிகரமா என் கல்லூரி படிப்ப முடிச்சாச்சு.


அப்பாவும் அம்மாவும் ரொம்ப படிச்சவங்க கிடையாது, ஆனா படிப்பு எவ்ளோ முக்கியம்னு நல்லா தெரிஞ்சவங்க. மூச்ச புடிச்சுகிட்டு என்னை கரை சேத்துடாங்க. என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சிடனும்னு ரொம்ப ஆசைப்பட்டு இப்ப அத செஞ்சி முடிச்சிடாங்க. அவங்க கனவு ஆசை லட்சியம் எல்லாமே இப்ப நிறைவேறிடுச்சு. ஆனா நா என்ன பண்ண போறானு தெரியலயே, என்மேல நம்பிக்கை வச்சு என்ன இவ்ளோ தூரம் அனுப்பியங்களுக்கு நான் என்ன செய்ய போறேனு தெரியலயே.


எல்லா காலேஜ்லயும் இருக்கறமாதிரி எங்க காலேஜ்லயும் கேம்பஸ் இன்டர்வியு இருந்துச்சு, நடந்துச்சு. கழுதை, அந்த இங்கீலிஷ் கருமம் தெரியாததுனால DELL, HCL கம்பனி இன்டர்வியு ஊத்திகிச்சு. செம கடுப்பு ஆயிட்டேன், ஆனா அத நினைச்சுலாம் நா கவலைப்படல.. நமக்குனு ஒன்னு இல்லமயா போய்டும். எல்லாமே நன்மைக்கே. (All Is Well)


நமக்கு இந்த வேலைலாம் சரிப்பட்டு வராதுனு முடிவு பண்ணி, அப்பாகிட்ட சொன்னேன். சரி என்ன பண்ண போறானு நீயே சொல்லுனு சொன்னாரு. Cinematography பண்ணனும் ஆசையா இருக்குபானு சொன்னேன். அப்பாக்கு சினிமா துறையப்பத்தி நல்லா தெரியும், ஏன்னா அவர் அதுல தான இருபது வருஷமா குப்பைய கொட்டிகிட்டு இருக்காரு. முதல்ல வேணாம்னு கண்டிப்பா சொன்னவரு, அதுக்கு அப்புறம் எனக்காக ஒத்துக்கிட்டரு. ஆனா அப்பாக்கு உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சு. சினிமாக்கு போறதுக்காக இவன இவ்ளோ கஷ்டபட்டு படிக்கவைச்சோம்னு அவர் நினைக்கறத என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது.


அப்புறம் ஒரு பத்து நாள் கழிச்சு Wipro Technologies ல இருந்து கேம்பஸ் இன்டர்வியுக்கு வந்தாங்க. நாம சினிமாக்கு தான போகபோறோம் அப்படிங்கற நினைப்போடு, எல்லா பசங்களோடும் நானும் அந்த இன்டர்வியு அட்டேன் பண்ணேன்.


எல்லாருடைய வாழ்க்கையுலயும் ஒரு திருப்பம் வரும்ல, அது என்னக்கு அன்னைக்கு அமைஞ்சிச்சு. 25/01/20112, குடியரசு இதினத்துக்கு முன் நாள். முதல் ரவுண்டு objective test, அதனால எப்படியோ பாஸ் பண்ணிடேன். நமக்கு இங்கீலிஷ் மட்டும் தான் வராது, ஆனா Maths,Science,GK அன்னைக்கு டெஸ்ட்ல கலக்கிட்டோம்ல. நான் முதல் ரவுண்டு பாஸ் பண்ணிட்டேனு அவங்க என் பேர வாசிச்ச அப்போ இருந்த உணர்வை சொல்லவே முடியாது. ஏன்னா, அந்த இதுக்கே அவ்ளோ சந்தோஷப்ப்ட்டேனா, அடுத்து பர்ஸ்னல் இன்டர்வியு ஆச்சே. என் நிலமைய சொல்லவா வேணும்.


ஒரு அரைமணிநேரம் உணவு இடைவெளிக்கு அப்புறம் செமினார் ஹாலுக்கு வர சொன்னாங்க. மொத்தமா நாங்க நாப்பது பேர் அங்க இருந்தோம். ஒரு பேப்பர் கொடுத்து அதை ஃபில் பண்ண சொன்னங்க. ஒருவித பயத்தோடவே நா ஒவ்வோரு காய நகத்தினேன். எனக்கு விருப்பமே இல்லாம வந்த இடத்துல நான் முதல் ரவுண்டு பாஸ் பண்ணி இருக்கேனே, அங்க எனக்கு தேவையான எதோ ஒன்னு இருக்குனு தான அர்த்தம். அதனால இப்ப இருக்கற பர்சனல் இன்டர்வியு'அ முழுசா செஞ்சி பாத்தடனும்னு ஆசை வந்துச்சு. வாழ்வோ சாவோ அது ஒருமுறை தான் அப்படினு நல்லா தெரிஞ்சவன் நான்.


சரியா, மாலை 4.30க்கு என்ன உள்ள கூப்டாங்க. அவங்க கேட்ட கேள்விக்குலாம் ரொம்ப அமைதியா பதில் சொன்னேன். முடிஞ்ச வரைக்கும் பாசிட்டிவ் ஆ பதில் சொன்னேன். நான் ஒரு புக்'ல படிச்சு இருக்கேன், எப்படிலாம் அங்க கேள்வி கேப்பாங்க அதுக்கு நாமா எப்படி பதில சொன்னா நால்ல இருக்கும்னு. உன்கிட்ட extra curricular activities இருக்கானு அவங்க கேட்ட கேள்விக்கு என்னோட பதில் என்ன தெரியுமா, நான் இன்டர்நெட்ல பிளாக் எழுதரேன்னு சொன்னது தான். அவங்க ரொம்ப ஆச்சரியத்தோட அதபத்தி விசாரிச்சாங்க. எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்துச்சு, இங்க நாமா யூஸ் பண்ற HTML பத்தி கொஞ்சம் சொன்னேன். அவங்களுக்கு இதலாம் புடிச்சு போச்சு போல.. வெளில வெயிட் பண்ணுங்க கூப்பறோம்னு சொன்னாங்க.. 


5மணிக்கு எல்லாரையும் உள்ள கூப்டாங்க... வந்து இருந்த ரெண்டு HRம் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு ரிசல்ட் சொல்ல ஆயத்தம் ஆனாங்க.எனக்கு அப்பவே வேர்க்க ஆராம்பிச்சுருச்சு... மொத்தம் 25பேர் செலேக்ட் ஆயிருக்காங்க.. அதுல நானும் ஒருத்தேன், என் பேர அவங்க சொன்ன போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். அன்னைக்கு தான் எனக்கும் என் பேருக்குமே பெருமனு தோனுச்சு.. வெளில வந்து ஒவ்வோருத்தர் முகத்தையும் பாக்கனுமே, அட்ராசக்க'னான....


என்னால நம்பவே முடியல. இத்தன நாளா என்ன பண்ணபோறேனு தெரியாம இருந்த எனக்கு கிடைச்சு மிகப்பெரிய வாய்ப்பு இது. என்னைவிட என் அப்பாவும் அம்மாவும் தான் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..... அத நா இன்னைக்கும் பாத்தேன், இத்தன நாளா ரொம்ப கஷ்டபட்டவங்க, இப்பலாம் தினமும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க.... இனிமே அவங்க லைஃப்ல கஷ்டமே கிடையாதுல... இந்த தருணத்துல நா அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகனும். ரொம்ப நன்றி'மா..


இந்த சந்தோஷத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுல நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த பிளாக்கால எனக்கு வேலை கிடைச்சுதுனு சொல்லிகறதுல நா ரொம்ப பெருமைப்படறேன்... தேங்கஸ் டூ ஆல் பிளாக்கர்ஸ்...


அடுத்த மாசம் பெண்களூர்ல வேலைல ஜாயின் பண்ணனும், அதாங்க நம்ம ஜாக்கி சார் ஊரு... நானும் அந்தமிகப்பெரிய கண்ணாடி ஆபீஸ்க்கு வரேன் பாஸ். எங்க ஆயா, சோழிங்கநல்லூர்ல இருக்கற கம்பெனிய பாத்து அப்படி தான் சொல்லவாங்க...






என்றும் வேலையடன்
சதீஷ்.......





Tuesday, 13 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -2

என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 

நான் என் போனையும் மேல்வருவத்தூர் செல்லும் பாதையையும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருந்தேன். தீடீரென்று அதே ப்ஞ்சர் கடைக்காரனின் குரல், அப்பாட பஞ்சர் போட்டாச்சு போல என நினைக்கும் முன்பே "இத சரி பண்ண முடியாது வேற தான் மாத்தனும்"... எத சொல்றானு புரியாம முழுச்சிகிட்டு நின்னேன்...


அப்புறம் தான் புரிஞ்சிது அவன் என் வண்டியின் டயரை பற்றி பேசுகிறான் என்று. வெகுதூரம் தள்ளி கொண்டும் பல வளைவு சுளைவுகளில் எற்றி இறக்கி வந்த்தாலும் வண்டியின் டயர் ஒரு பக்கமாய் நசுங்கியே போய்விட்டது. அதை மாற்றினால் தான் மேற்கொண்டு போக முடியும்..

எவ்ளோ ஆகும்னு கேட்டேன், அந்த கடைக்காரன் முறைச்சான்.. ஏன்னு தான் இப்ப வரைக்கும் தெரியல... என்கிட்ட ஒரு பழைய டயர் இருக்கு அத போட்டு விடேறேன், அப்படினு சொன்னான்.. "கல்லுக்குள் ஈரம்" அது இதனா என மகிழ்ச்சி என் மனதில் பொங்குவதற்குள், ஒரு 200ரூ கொடுத்துருங்க னு சொல்லிடான்..... ஏன்டா என் உயிர இப்படி வாங்கற...

இப்ப டயர் இல்லாம நான் சென்னைக்கும் போக முடியாது, மேல்வருத்தூருக்கும் போக முடியாது... அவ்வளவு தான் முடிஞ்சிது கதை... என் போனை எடுத்து முதலாளிக்கு போன் பண்ணேன்...

"அண்ணேன் இங்க இந்த மாதிரி ஆயிடுச்சு, அடுத்த என்ன பண்ணட்டும்" கேட்டேன்... அந்த ஆளுக்கு என்ன தோனுச்சுனே தெரியல பட்டுனு போனை கட் பண்ணிடான்... அட போட கொயய்யால... இனிமே என்ன நான் தான் பாதுகாத்துகனும்...

ஆத்துல ஓடற மீன் தண்ணில இருந்து  வெளிய வந்து விழுந்த அடுத்து என்ன பண்ணறதுனு தெரியாம முழிக்கற மாறி முழிச்சேன்... மீண்டும் தெய்வம் வந்தது டீக்கடையில் இருந்து.. என்னப்பா என்ன ஆச்சுனு கேட்டார்... டயர் மாத்தனும்னு சொல்றாருனு சொன்னேன்... அட இந்த கடகாரன் கூட பெரிய தொந்தரவா போச்சுனு சொல்லிகிட்டடே, அந்த கடைக்காரன் கிட்ட கொஞ்சம் நேரம் பேசினார்... அப்புறம் தன்னோட பக்கெட்டுல இருந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து கொடுத்தார்.. அது எனக்கு தெரிய கூடாதுனு மறைக்க நினைத்தார்... ஆனால் நான் அதை பார்த்துவிட்டேன், கண்ணீல் கண்ணீர் வராதது தான் குறை....

அப்புறம் எதோ ஒரு பழைய டயரை எடுத்து மாட்டி விட்டு தயாராகி விட்டதுனு சொன்னான்(ர்)... அந்த டிரைவர் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிட்டு பிரியாவிடை பெற்றேன்.. என் வாழ்நாளில் நான் இதுவரை சந்திக்காத புது மனிதர்... எத்தனை பேருக்கு இந்த உதவும் எண்ணம் வரும்.. இதுவரை என்னை ஏமாற்றிய மனிதர்களுக்கு மத்தியில் அவர் ஒரு மாணிக்கம்... மீண்டும் ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்...

பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்து மேல்வருவத்தூர் நோக்கி மிக மெதுவாக ஓட்ட ஆரம்பித்தேன். சரியான நேரத்தில் சென்றுவிட்ட சந்தோஷம்.. சென்ற காரியம் நல்ல படியாக முடிந்தது.. இப்போது எனக்கு 150ரூ அங்கு இருந்தவர் கொடுத்தார்.. அதை பெற்று கொண்டு மீண்டும் சென்னை செல்ல ஆயத்தமானேன்..

அம்மன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை பார்த்து சிறிது நேரம் சாமி கும்பிட்டேன்.. அந்த டிரைவர் அண்ணன் முகம் தான் வந்துபோயிற்று.. அவரின் பெயர் தெரியவில்லை என இங்கு எழுதுவதற்கே எனக்கு கேவலமாய் இருக்கிறது....

அப்பாட என நீங்கள் பெரு மூச்சு விடுவது எனக்கு தெரிகிறது ஆனால் இன்னும் முடியவில்லை... மீதி இருப்பதை சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறேன்...

 மேல்வருவத்தூர் தாண்டி வரும் போது இரண்டாவதாக ஒரு பாலம் இருக்கும்.. அதன் மேல் ஏறி வரும் போது மீண்டும் டயர் பஞ்சர் ஆனது.. இப்போதும் அதே முன்சக்கரம் தான்... என் வாயில அசிங்க அசிங்கமா வந்துச்சு ஆனா யாரை திட்டுவது என்று தான் அப்போது தெரியவைல்லை.... வண்டியை நிறுத்தாமல் ஓட்டினேன்.. ஏனெனில் தள்ளிட்டு போற அளவுக்கு உடம்புல தெம்பு இல்லைங்க...

பாலத்தை தாண்டி ஒரு 50அடிக்கும் குறைவான தூரத்தில் ஒரு பஞ்சர் கடை இருந்தது.. அங்கே நான் இன்னும் ஒரு கடவுளை கண்டேன்.. அது அந்த பஞ்சர் கடை ஓனர் தான்.. முன்சக்கரத்தை பிரித்து பார்த்து பஞ்சர் ஆகியிருப்பதை உறுதி செய்தார்.. அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை அப்படியே கலங்க வைத்து விட்டது... 

அந்த சிங்கபெருமாள் கோவில் இருந்த இடத்தில் நான் மாற்றிய டியூப் பாக்கா லோக்கல் டியூப் ஆகும்.. அதன் விலை 80ரூ தான் இருக்கும் என்றார்... "சென்சார்டு" என அந்த கடைக்காரனை மனதில் திட்டினேன்... அவன் மாத்தி கொடுத்த டயர வச்சிக்கிட்டு சத்தியமா நீ சென்னைக்கு போக முடியாதுனு சொன்னார்... அடுத்த என்ன அதே தான், அடிச்சேன் போனை என் ஓவருக்கு... "தம்பி யாருப்பா நீங்க அப்படினு கேக்காதது ஒன்னு தான் குறை"... மீண்டும் இங்கு சென்சார்டு வார்த்தைகள் என அறிவிக்கப்படுகிறது...

பிறகு அவர் வேரோரு நல்ல டயரும், பஞ்சர் ஒட்டியும் கொடுத்தார்... அதற்கு நான் வெறும் அந்த 150 மட்டுமே கொடுத்தேன்... என்னை முறைத்து கொண்டே அதை வாங்கி கொண்டார் என் நிலைமையை புரிந்துகொண்டு...  அதன் பிறகு இத்தனை நாள் ஆகியும் அந்த டயரும் டியூப்க்கும் ஒன்னும் ஆகவில்லை என்பது தான் அதிசயம்...

மெல்ல வண்டியை உருட்டிக்கிட்டு சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டேன்.. அதுவரை நான் தவித்த தவிப்பு வார்த்தையால் சொல்ல முடியாது.. மீண்டும் ஒரு முறை பஞ்சர் ஆகி இருந்தாலோ இல்லை வேறு எதாவது பிரச்சனை என்றலோ  நான் நடுரோட்டில் பிச்சை தான் எடுத்து இருக்க வேண்டும்...

அன்று தான் நான் பைக்கில் பயணம் மேற்கொள்வதை அடியோடு வெறுத்தேன்.. ஏன் சொல்ல போனால் வாழ்க்கையையே வெறுத்தேன் எனலாம்.... இனி மீண்டும் இப்படி ஒரு பயணத்தை பைக்கில் மேற்கொள்ளமாட்டேன்... சீக்கரம் BMW கார் வாங்கறேன்.... அதுல தான் டிராவல் பண்ண போறேன்...


பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி... கடந்த சில தினங்களாக அதிக வேலை பளுவின் காரணமாய் எழுத முடியவில்லை... நமக்கு காலேஜ் தாங்க முக்கியம்... படிப்பு தாங்க முக்கியம்... ஹி ஹி ஹி....




சதீஷ்............ 


Friday, 9 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -1

நான் சென்னையில் இருந்து மேல்வருவத்தூர் சென்ற போது நிகழ்ந்த பல கசப்பான ஆனால் நினைவில் நின்ற பயணம் இது. கிட்டத்தட்ட ஒரு பத்து நாள்களுக்கு முன் நடந்த சம்பவம் தான்.


அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து புறப்பட தயாரானேன். சென்னையில் இருந்தே பைக்கில் செல்வதாக திட்டமிட்டு இருந்தேன். நான் மட்டும் தான் தனியாக சென்றேன். மேல்வருவத்தூரில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் ஒரு தற்காலிக வேலைக்காக தான் சென்றேன்.

நெடுந்தூர பயணம் என்பதால் முதல் நாள் இரவே பெட்ரோல் போட்டு விட்டேன். நான் செய்த உருப்படியான ஒரே விஷயம் அது தான். ஹெல்மேட் மாட்டிக் கொண்டு என் எல்ஜி போனின் ஹெட்செடை காதில் திணித்து கொண்டு பைக்கில் பறந்தேன். இளையாராஜா முதல் யுவன்சங்கர்ராஜா வரை அனைவரின் பாடல்களும் அந்த அதிகாலை வேளையில் மனதிற்கு இதமாக அமைந்தது. என் பைக்கின்  வேகமும் கூடியது.


மிக ரம்மியமான பொழுது தான். சூரியன் தன் கடமையை சரிவர செய்தது, அது வானம் எங்கும் செந்நிறத்தை பரப்பியபடியே வெளியே எட்டி பார்த்தது. ஆனால் என்னால் தான் அதை அனைத்தையும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தேன்.


வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என அனைத்து ஊர்களையும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தாண்டிவிட்டேன். சிங்க பெருமாள் கோவிலை நெருங்கி செல்லும் வேளையில் எனக்கு முதல் சோதனை நடந்தது. அப்போது தெரியாது அது ஒரு மிக பெரிய விஷமாகவும் நான் திரும்ப வீட்டிற்கு செல்வது கடினமாகவும் போகிறது என்று.


ஒரு அரசாங்க பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்து அதன் ஒரு பக்கவாட்டில் ஏறினேன். என்னை சற்றும் கவனிக்காத பேருந்தின் ஓட்டுனர் திடிரென்று ஒரு ஓரமாக பேருந்தை செலுத்தினார். சட்டென்று சுதாரித்துக் கொண்டு என் பைக்கின் வேகத்தை மளமளவென குறைத்தேன். இரண்டு பிரேக்குகளையும் அழுத்தி பிடித்தேன். இப்போது பேருந்தின் வாயில் இருந்து தப்பிவிட்டேன் ஆனால் அந்த ரோட்டின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரின் மீது இடித்து தொப்பென்று கீழே விழுந்தேன்.


பைக்கின் பின்னால் ஒரு பெரிய பைபை கட்டி வைத்திருந்தேன். அது இல்லாமல் இருந்து இருந்தால் நான் சற்றே என வண்டியை நிறுத்தி இருப்பேன். நேரம் சரியாக ஆறு மணி இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் குறைவாக தான் இருந்தது. தன் கையே தனக்கு உதவி. மெல்ல எழுந்து நின்று என் பைக்கையும் நிமிர்த்தினேன். பெட்ரோல் கசிந்து அந்த வாசம் வீசிக்கொண்டு இருந்தது. 7.30மணிக்குள் மேல்வருவத்தூர் செல்ல வேண்டும் என்பதற்காக வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தேன்.


ஒரு 50அடிக்கும் குறைவான தூரம் செல்வதற்குள் அடுத்த சோதனை. வண்டியின் முன் சக்கரம் பஞ்சர் ஆகியிருப்பது தெரிந்தது. இப்போது சரியாக நான் சிங்கபெருமாள் கோவில் ஜாங்ஷனை அடைந்து விட்டேன். அங்கு இருந்த ஒரு டீக்கடை முன் வண்டியை நிறுத்தி செய்வது அறியாமல் நின்றேன். என் முதலாளியிடம் இருந்து போன் வந்தது. விவரமாக நடந்ததை கூறினேன், "பஞ்சர் போட்டுகிட்டு சீக்கரம் கிளம்பு தம்பி, நீ அங்க 7.30 மணிக்கு எல்லாம் இருக்கணும்" என தெரிவித்தார்.. இதற்கு பெயர் தான் முதலாளித்துவம் என அன்று அறிந்து கொண்டேன்..


அந்த டீக்கடைக்கு போய் விசாரித்தேன், அருகில் எதுவும் பஞ்சர் ஒட்டும் கடை இந்நேரத்துக்கு இல்லை என சொன்னார். அவர் சொன்னது உண்மைதான். மேலும் சில கடைகளில் விசாரித்தவாறே நான் மட்டும் முன்னேறினேன். வண்டியில் பெரிய மூட்டை இருப்பதாலும் பஞ்சர் ஆகியிருப்பதாலும் வண்டியை அந்த டீக்கடையிலேயே நிறுத்திவிட்டேன். பலபேரிடம் விசாரித்தேன் எல்லோரும் ஒருசேர அந்த ஒரு கடையை மட்டுமே சுட்டிக்காட்டினர். "அந்த ரிலையான்ஸ் கட்டவுட் கீழ உள்ள பில்டீங்கில் ஒரு கடை இருக்கிறது, அது 24மணி நேர கடை" என தெரிவித்தனர். கிட்டத்தட்ட அந்த கடை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு குறையாமல் தூரத்தில் இருந்தது.


இப்போது எனக்கு துணையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா யாருமே இல்லை. அந்த காலை பொழுதிலும் எனக்கு வியர்வை கொட்டி கொண்டு இருந்தது. வேகவேகமாக அந்த கடையை நோக்கி நான் மட்டும் நடந்தேன். மன்னிக்கவும் ஓடினேன் என தான் சொல்ல வேண்டும். 10 நிமிட ஓட்டத்துக்கு பிறகு அந்த கடையை அடைந்து எட்டி உள்ளே பார்த்தேன். ஒரு லாரி டிரைவர் வெளியே வந்தார், அவரிடம் விவரத்தை கூறினேன். "வண்டியை தள்ளிக்கிட்டு வா, இந்த கடைக்காரர் இப்ப வந்துருவாரு" என சொன்னார். சட்டென்று சிட்டாய் என் பைக்கை நோக்கி நான் பறந்தேன்.


வேகவேகமாக தள்ளிக் கொண்டு அந்த கடையை அடைந்தேன். ஒரேவரியில் இங்கு முடித்து விட்டேன், ஆனால் நான் அப்போது பட்ட துன்பம் அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். நான் மட்டுமே பரபரபாய் இருந்தேன். என்னை தவிர வேறுயாருக்கும் அந்த பரபரப்பு இல்லை. அந்த கடைக்காரர் வருவதற்குள் நான் முன்பு சொன்ன டிரைவர் என் வண்டியின் சக்கரத்தை கழட்டி ஆயத்தமாக வைத்தார்.


ஒரு பத்து நிமிடம் கழித்து கடைக்காரன் வந்தான். மிக பொறுமையாக வேலையை கையாண்டான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவன் தலையில் கல்ல தூக்கி போட்டு இருப்பேன், பாவம்னு விட்டுடேன். அந்த புண்ணியவான் வாய திறந்து சொன்ன முதல் வார்த்தை "டியுப் கிழிஞ்சிறுச்சு, புதுசு தான் போடனும்.. கம்பெனி டியூப் தான் என்கிட்ட இருக்கு" "அதோட விலை 200ரூ அப்புறம் நான் கழட்டி மாட்டனதுக்கு 50ரூ"... அடப்பாவிகளா "என்ன கொடுமை சார் இது"


என் பார்சை எடுத்து உள்ள எவ்வளவு இருக்குனு பார்த்தேன். சரியா சொல்லனும்னா 238ரூ தான் இருந்துச்சு. அந்த கடைக்காரன்கிட்ட சொன்னேன் "238ரூ தான் இருக்கு".. "இல்லை கட்டுபடி ஆகாது, நீங்க கிளம்புங்க"... மனசாட்சி இல்லாத ஜென்மம்...


என் தவிப்பை புரிந்து கொண்டது அந்த லாரி டிரைவர் மட்டும் தான். ஒரு 20ரூ எடுத்து கொடுத்தார். தெய்வம் போல எனக்கு காட்சி தந்தார். இன்னும் அவரின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சென்னை கே.கே.நகரில் தான் வசிக்கிறார் என சொன்னார். மீண்டும் ஒரு நாள் அவரை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் தோன்றுகிறது..


என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 


இப்போது அதே பஞ்சர் கடையில் வேறொரு பிரச்சனை அதுவும் அந்த டிரைவர் அண்ணனால் தான் சரி செய்யப்பட்டது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....






தொடரும்....








சதீஷ்........