என் தோழர்கள்

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, 11 November 2011

நட்பு என்பது

நண்பன் இருந்தால் நாட்டையும் ஆளழாலம் என்பது புதுமொழி. ஒரு நட்புக்கு அவ்ளோ பெரிய தைரியம், திமிரு இருக்கா என ஆராய்ந்தால் அது உண்மையே ஆகும். ஆபத்தில் உதவுவனே உற்ற நண்பன் என்ற பழமொழி இன்னும் பழுதாகவில்லை.


இந்த பதிவு எழுத காரணமே என் பாட ஆசிரியர் அவர்கள் தான்.. அவர் வகுப்பில் ஒரு பொது கேள்வி கேட்டார், அதன் தாக்கமே இப்பதிவின் நோக்கம்.

அந்த கேள்வி "" உங்களுக்கு ஒரு நண்பன் அமைய அவனுக்கு என்ன தகுதி வேணும், அவர் எப்படி இருந்தா உங்க நண்பரா அவர ஏத்திப்பீங்க, அவர் என்னாவா இருக்கனும்" இந்த மாறி பல கேள்வி கேட்டாங்க. ஆனா அவங்க கேட்ட கேள்வி எனக்கு புரியலனு சொல்ல முடியாது, எனக்கு பிடிக்கலனு சொல்லலாம்..


அந்த மானங்கெட்ட கேள்விக்கு என் வகுப்புல நிறைய பேர் தங்களோட கருத்த சொன்னாங்க, அது அத விட கேவலமா இருந்துச்சு.. " எனக்கு சமமான தகுதி (status) இருந்தா மட்டும் தான் நான் அவங்கள என் ஃபிரண்டா ஏத்துப்பேன்" அப்படினு ஒரு பொண்ணு சொன்னா.. எனக்கு வந்த கோபத்துக்கு அவள பளார் பளார்னு அடிக்கனும் தோனுச்சு. தெரியாமா தான் கேக்கரேன் அது என்னங்க தகுதி'ங்கறது. நல்ல ஃபிரண்ட்க்கு உண்மையான மனசு இருந்தா போதும், வேற எந்த தகுதியும் தேவையில்லை.. இரண்டு ஃபிரண்டுல ஒருத்தன் பணக்காரனாவும் இன்னொருத்தன் ஏழையாவும் இருந்தா அவங்களால நட்பா பழக முடியாதா என்ன... அந்த இடத்துல எந்த தகுதியும் பாக்காம பழகற அந்த பணக்கார பையனோட நட்பு கிடைக்க அந்த ஏழை பையனும், தன்னுடய ஆழ் மனதில் இருந்து எந்த பலனயும் எதிர்பாக்காம பழகுற ஏழை பையனின் நட்பு கிடைக்க அந்த பணக்கார பையனும் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கனும்.


அடுத்து ஒரு பையன், " என் அளவுக்கு அறிவா பேசற பையன், நல்லா படிக்கற பையன்கிட்ட மட்டும் தான் பழகுவேன், அவங்கள மட்டும் தான் நா என் ஃபிரண்டா ஏத்துப்பேன்" னு சொன்னான். இந்த பதில உங்ககிட்டயே விட்டரேன் சரியா தவறானு சொல்லுங்க. அப்ப என்ன மாதிரி முட்டாள் பசங்க அவன்கூட சேரவே கூடாதா? அந்த நாயோட நட்பே தேவையில்லைனு நா மனசுல நினைச்சுகிட்டேன்.. எங்க ஏரியால எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க, எல்லாரும் நிறைய படிச்சவங்க இல்லை. 5வது 6வது வரைக்கும் படிச்சிட்டு வேலைக்கு தான் போறானுங்க, அவனுங்க கூட நா பழகலயா? உண்மையான நட்பை அவங்ககிட்ட காட்டலயா? எனக்கு எதாச்சும் ஒன்னு ஆயிடிச்சுனு தெரிஞ்சா போதும் ஒவ்வோருத்தனும் சிட்டாட்டும் பறந்து வருவனுங்க.. எங்களுக்கு உள்ள எந்த பிரிவும் வந்தது இல்லை, இனி வரப்போறதும் இல்லை.. நான் நல்ல படிச்ச பசங்ககிட்ட மட்டும் தான் பழகுவேனு சொல்லற வரைக்கும் பிரிவு வராது, கவலப்படாதீங்க அந்த மாதிரி அசிங்கமா நா பேசமாட்டேன்...


அடுத்து என்னோட வாய்ப்பு வந்துச்சு, நான் எழுந்து நின்னு எல்லாரயும் ஒரு பார்வை பாத்தேன்.. எனக்கு பேச புடிக்கல அப்படினு சொல்லுட்டு அமைதியா உக்காந்துட்டேன்... மொத்தம் 50பேர்ல 6பேர் மட்டும் தான் பதில் சொன்னாங்க, மத்தவங்க எல்லாரும் பேச புடிக்கலனு மட்டும் தான் சொன்னாங்க.. ஏன்னா அவங்க சதீஷோட ஃபிரண்ட்ஸ், நா அவங்களோடஃ பிரண்ட்ஸ்னு அன்னைக்கு நிரூபிச்சாங்க...


ரொம்ப அருமையான கேள்வி தான் ஆசிரியர் கேட்டாங்க ஆனா அத கேட்ட இடம் சரி இல்ல, ஃபிரண்ட்ஸிப்ப உயிரா நினைக்கறவங்ககிட்ட அந்த கேள்விய கேட்டு இருக்கனும்... சும்மா டைம் பாஸ்க்கு பழகறவன்கிட்ட கேட்டது தப்பு தான். 


6லிருந்து 60 வரைக்கும் எல்லாருமே இளைஞர்கள் தான் என புதியதலைமுறை இதழில் அடிக்கடி சொல்லுவாங்க.. அது உண்மை தான், அதேபோல தான் நட்புக்கும் வயது வரம்பு கிடையாது. அப்பா தன் மகன்கிட்ட பழகற நட்பை வச்சி தான் இத விளக்க முடியும். அந்த இடத்துல கூட தான் பையன்ங்கற காரணத்தால தான் அவர் நட்பா பழகுவாறு.. ஆனா எந்த ஒரு காரணமும் இல்லாம, எதயும் எதிர் பாக்காம, எல்லாதயும் பெருசா நினக்கமா நட்ப மட்டுமே பெருசா நினைக்கற ஒரு உறவுக்கு பேர் தான் நட்பு..


காதல் கூட நம்மகிட்ட சொல்லிட்டு தான் வந்து போகும் ஆனா நட்பு அந்த மாதிரி கிடையாது.. நட்பை காதலுடன் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது.. ஹாய்டா ஐயம் சதீஷ், அப்படினு நான் ஒருத்தன்கிட்ட சொல்லும் போதும் அந்த நிமிசத்துல இருந்து எங்க நட்பு ஆரம்பிக்கும்.. என்னடா இது பைத்தியகாரன் தனமா இருக்குனு உங்களுக்கு தோனுச்சினா அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது.. ஆனால் இது தான் மறுக்க முடியாத உண்மை...


நாம போற இடம்லாம் நமக்கு நண்பர்கள் இருப்பாங்க, அவங்க எந்த வடிவுல எந்த நிலைல இருந்தாலும் நாம அவங்கள ஏத்துக்கனும்.. உங்களுக்குள்ள ஒரு தடவ செட் ஆயிடிச்சுனா போதும், அப்புறம் உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை..


நட்போட மதிப்பு என்னனு தெரிஞ்சது நால தான் இன்னைக்கு வரைக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் வெற்றிகரமா போய்ட்டு இருக்கு. அவங்கல அழிக்க முடியாது,, ஏன்னா அங்கே பல நட்பு உறவாடி கொண்டு இருக்கிறது.


ஒரு நம்ப முடியாத உண்மை.. முஸ்லிம் ஃபிரண்ட் இல்லாத ஒரு இந்துவ நீ இந்தியால பாக்க முடியாதுனு விஜய் வேலாயுதம் படத்துல சொல்லுவாரு.. அது 99.99% உண்மையா தான் இருக்கும் என்பது என் கருத்து...


சிவகுமார் னு எனக்கு ஒரு நண்பர் இருக்காரு, அவர் அவரோட ஃபிரண்ட்ஸ் பத்தி ஒரு நாள் என்கிட்ட சொன்னாரு நா ரொம்ப அசந்து போய்ட்டேன்.. அவர் ஸ்கூல் படிக்கும் போது உண்டான நட்பு அது, இன்னும் அது ஆடாமல் ஆசையாமல் இருக்கிறது.. சிவகுமார் ஒரு இந்து, அவரோட இன்னொரு நண்பர் கிறிஸ்டின், அவங்களோட இன்னொரு நண்பர் முஸ்லீம்.. இவங்க மூணு பேரும் கடந்த 15 வருஷமா நண்பர்களா இருந்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.. நட்புக்கு இனம், மதம், மொழி என எந்த பாகுப்பாடும் இல்லை என்பதுக்கு இதுவே உதாரணம்... (கண்ணுப்பட போகுதய்யா சின்னகவுண்டரு, சுத்திபோட வேணும்மய்யா சின்னகவுண்டரு)... 


காற்றும் நட்பும் ஒரே மாதிரி தான், ரெண்டயும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.. ரெண்டும் இல்லாம என்னால வாழனும் முடியாது.. காதலை விட சிறந்த நட்பை சிதைத்து விடாதீர்... ஒவ்வோரு ஃபிரண்டும் தேவை மச்சான்...


*காலத்தாலும் காற்றாலும் பிறவற்றாலும்
அழியாமல் இருக்க நட்பு பதிவு செய்யப்படுகிறது.


*காற்றோடு கலந்து சென்று விடும்
நினைவு அல்ல அது - காலத்திற்க்கும்

பேசபட வேண்டிய உறவு அது.



நட்பே,
என் இதயம் துடிப்பது போன்ற உணர்வு
                                            - நீ உடன் இருந்தால்
என் இரத்தம் உறைவது போன்ற உணர்வு
                                             - நீ உடன் இல்லையேல்
நீ இல்லா இவ்வுலகம் உயிரற்ற உடல்களின் "நடமாட்டம்"
 




நட்பால் வாழ்தவனும் இருக்கான், செத்தவனும் இருக்கான்.. அது நட்போட தவறு இல்ல நண்பனோட தவறு... உங்க ஃபிரண்ட் உங்கல நம்பி வரான், அவன கெடுத்தற கூடாது. தான் நண்பனுக்கு துரோகம் நினைக்கற எவனும் நண்பனா இருக்க முடியாது. எத்தன பக்கம் வேணாலும் நட்பை பத்தி நான் பெருமையா பேசுவேன், ஆனா இதன் நட்புனு எனக்கு விளக்க தெரியல....

நட்பையும் நண்பர்களை தேடு நாம் பயணிப்போம், என்றாவது ஒரு நாள் பாதை முடியும் அன்று திரும்பி பார்த்தால் நட்பின் பெருமை தெரியும்.. 









என்றும் நட்புடன்,
சதீஷ்.........


Tuesday, 13 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -2

என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 

நான் என் போனையும் மேல்வருவத்தூர் செல்லும் பாதையையும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருந்தேன். தீடீரென்று அதே ப்ஞ்சர் கடைக்காரனின் குரல், அப்பாட பஞ்சர் போட்டாச்சு போல என நினைக்கும் முன்பே "இத சரி பண்ண முடியாது வேற தான் மாத்தனும்"... எத சொல்றானு புரியாம முழுச்சிகிட்டு நின்னேன்...


அப்புறம் தான் புரிஞ்சிது அவன் என் வண்டியின் டயரை பற்றி பேசுகிறான் என்று. வெகுதூரம் தள்ளி கொண்டும் பல வளைவு சுளைவுகளில் எற்றி இறக்கி வந்த்தாலும் வண்டியின் டயர் ஒரு பக்கமாய் நசுங்கியே போய்விட்டது. அதை மாற்றினால் தான் மேற்கொண்டு போக முடியும்..

எவ்ளோ ஆகும்னு கேட்டேன், அந்த கடைக்காரன் முறைச்சான்.. ஏன்னு தான் இப்ப வரைக்கும் தெரியல... என்கிட்ட ஒரு பழைய டயர் இருக்கு அத போட்டு விடேறேன், அப்படினு சொன்னான்.. "கல்லுக்குள் ஈரம்" அது இதனா என மகிழ்ச்சி என் மனதில் பொங்குவதற்குள், ஒரு 200ரூ கொடுத்துருங்க னு சொல்லிடான்..... ஏன்டா என் உயிர இப்படி வாங்கற...

இப்ப டயர் இல்லாம நான் சென்னைக்கும் போக முடியாது, மேல்வருத்தூருக்கும் போக முடியாது... அவ்வளவு தான் முடிஞ்சிது கதை... என் போனை எடுத்து முதலாளிக்கு போன் பண்ணேன்...

"அண்ணேன் இங்க இந்த மாதிரி ஆயிடுச்சு, அடுத்த என்ன பண்ணட்டும்" கேட்டேன்... அந்த ஆளுக்கு என்ன தோனுச்சுனே தெரியல பட்டுனு போனை கட் பண்ணிடான்... அட போட கொயய்யால... இனிமே என்ன நான் தான் பாதுகாத்துகனும்...

ஆத்துல ஓடற மீன் தண்ணில இருந்து  வெளிய வந்து விழுந்த அடுத்து என்ன பண்ணறதுனு தெரியாம முழிக்கற மாறி முழிச்சேன்... மீண்டும் தெய்வம் வந்தது டீக்கடையில் இருந்து.. என்னப்பா என்ன ஆச்சுனு கேட்டார்... டயர் மாத்தனும்னு சொல்றாருனு சொன்னேன்... அட இந்த கடகாரன் கூட பெரிய தொந்தரவா போச்சுனு சொல்லிகிட்டடே, அந்த கடைக்காரன் கிட்ட கொஞ்சம் நேரம் பேசினார்... அப்புறம் தன்னோட பக்கெட்டுல இருந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து கொடுத்தார்.. அது எனக்கு தெரிய கூடாதுனு மறைக்க நினைத்தார்... ஆனால் நான் அதை பார்த்துவிட்டேன், கண்ணீல் கண்ணீர் வராதது தான் குறை....

அப்புறம் எதோ ஒரு பழைய டயரை எடுத்து மாட்டி விட்டு தயாராகி விட்டதுனு சொன்னான்(ர்)... அந்த டிரைவர் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிட்டு பிரியாவிடை பெற்றேன்.. என் வாழ்நாளில் நான் இதுவரை சந்திக்காத புது மனிதர்... எத்தனை பேருக்கு இந்த உதவும் எண்ணம் வரும்.. இதுவரை என்னை ஏமாற்றிய மனிதர்களுக்கு மத்தியில் அவர் ஒரு மாணிக்கம்... மீண்டும் ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்...

பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்து மேல்வருவத்தூர் நோக்கி மிக மெதுவாக ஓட்ட ஆரம்பித்தேன். சரியான நேரத்தில் சென்றுவிட்ட சந்தோஷம்.. சென்ற காரியம் நல்ல படியாக முடிந்தது.. இப்போது எனக்கு 150ரூ அங்கு இருந்தவர் கொடுத்தார்.. அதை பெற்று கொண்டு மீண்டும் சென்னை செல்ல ஆயத்தமானேன்..

அம்மன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை பார்த்து சிறிது நேரம் சாமி கும்பிட்டேன்.. அந்த டிரைவர் அண்ணன் முகம் தான் வந்துபோயிற்று.. அவரின் பெயர் தெரியவில்லை என இங்கு எழுதுவதற்கே எனக்கு கேவலமாய் இருக்கிறது....

அப்பாட என நீங்கள் பெரு மூச்சு விடுவது எனக்கு தெரிகிறது ஆனால் இன்னும் முடியவில்லை... மீதி இருப்பதை சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறேன்...

 மேல்வருவத்தூர் தாண்டி வரும் போது இரண்டாவதாக ஒரு பாலம் இருக்கும்.. அதன் மேல் ஏறி வரும் போது மீண்டும் டயர் பஞ்சர் ஆனது.. இப்போதும் அதே முன்சக்கரம் தான்... என் வாயில அசிங்க அசிங்கமா வந்துச்சு ஆனா யாரை திட்டுவது என்று தான் அப்போது தெரியவைல்லை.... வண்டியை நிறுத்தாமல் ஓட்டினேன்.. ஏனெனில் தள்ளிட்டு போற அளவுக்கு உடம்புல தெம்பு இல்லைங்க...

பாலத்தை தாண்டி ஒரு 50அடிக்கும் குறைவான தூரத்தில் ஒரு பஞ்சர் கடை இருந்தது.. அங்கே நான் இன்னும் ஒரு கடவுளை கண்டேன்.. அது அந்த பஞ்சர் கடை ஓனர் தான்.. முன்சக்கரத்தை பிரித்து பார்த்து பஞ்சர் ஆகியிருப்பதை உறுதி செய்தார்.. அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை அப்படியே கலங்க வைத்து விட்டது... 

அந்த சிங்கபெருமாள் கோவில் இருந்த இடத்தில் நான் மாற்றிய டியூப் பாக்கா லோக்கல் டியூப் ஆகும்.. அதன் விலை 80ரூ தான் இருக்கும் என்றார்... "சென்சார்டு" என அந்த கடைக்காரனை மனதில் திட்டினேன்... அவன் மாத்தி கொடுத்த டயர வச்சிக்கிட்டு சத்தியமா நீ சென்னைக்கு போக முடியாதுனு சொன்னார்... அடுத்த என்ன அதே தான், அடிச்சேன் போனை என் ஓவருக்கு... "தம்பி யாருப்பா நீங்க அப்படினு கேக்காதது ஒன்னு தான் குறை"... மீண்டும் இங்கு சென்சார்டு வார்த்தைகள் என அறிவிக்கப்படுகிறது...

பிறகு அவர் வேரோரு நல்ல டயரும், பஞ்சர் ஒட்டியும் கொடுத்தார்... அதற்கு நான் வெறும் அந்த 150 மட்டுமே கொடுத்தேன்... என்னை முறைத்து கொண்டே அதை வாங்கி கொண்டார் என் நிலைமையை புரிந்துகொண்டு...  அதன் பிறகு இத்தனை நாள் ஆகியும் அந்த டயரும் டியூப்க்கும் ஒன்னும் ஆகவில்லை என்பது தான் அதிசயம்...

மெல்ல வண்டியை உருட்டிக்கிட்டு சென்னைக்கு நான்கு மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டேன்.. அதுவரை நான் தவித்த தவிப்பு வார்த்தையால் சொல்ல முடியாது.. மீண்டும் ஒரு முறை பஞ்சர் ஆகி இருந்தாலோ இல்லை வேறு எதாவது பிரச்சனை என்றலோ  நான் நடுரோட்டில் பிச்சை தான் எடுத்து இருக்க வேண்டும்...

அன்று தான் நான் பைக்கில் பயணம் மேற்கொள்வதை அடியோடு வெறுத்தேன்.. ஏன் சொல்ல போனால் வாழ்க்கையையே வெறுத்தேன் எனலாம்.... இனி மீண்டும் இப்படி ஒரு பயணத்தை பைக்கில் மேற்கொள்ளமாட்டேன்... சீக்கரம் BMW கார் வாங்கறேன்.... அதுல தான் டிராவல் பண்ண போறேன்...


பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி... கடந்த சில தினங்களாக அதிக வேலை பளுவின் காரணமாய் எழுத முடியவில்லை... நமக்கு காலேஜ் தாங்க முக்கியம்... படிப்பு தாங்க முக்கியம்... ஹி ஹி ஹி....




சதீஷ்............ 


Friday, 9 September 2011

பயணம் : சென்னை டூ மேல்வருத்தூர் -1

நான் சென்னையில் இருந்து மேல்வருவத்தூர் சென்ற போது நிகழ்ந்த பல கசப்பான ஆனால் நினைவில் நின்ற பயணம் இது. கிட்டத்தட்ட ஒரு பத்து நாள்களுக்கு முன் நடந்த சம்பவம் தான்.


அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து புறப்பட தயாரானேன். சென்னையில் இருந்தே பைக்கில் செல்வதாக திட்டமிட்டு இருந்தேன். நான் மட்டும் தான் தனியாக சென்றேன். மேல்வருவத்தூரில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் ஒரு தற்காலிக வேலைக்காக தான் சென்றேன்.

நெடுந்தூர பயணம் என்பதால் முதல் நாள் இரவே பெட்ரோல் போட்டு விட்டேன். நான் செய்த உருப்படியான ஒரே விஷயம் அது தான். ஹெல்மேட் மாட்டிக் கொண்டு என் எல்ஜி போனின் ஹெட்செடை காதில் திணித்து கொண்டு பைக்கில் பறந்தேன். இளையாராஜா முதல் யுவன்சங்கர்ராஜா வரை அனைவரின் பாடல்களும் அந்த அதிகாலை வேளையில் மனதிற்கு இதமாக அமைந்தது. என் பைக்கின்  வேகமும் கூடியது.


மிக ரம்மியமான பொழுது தான். சூரியன் தன் கடமையை சரிவர செய்தது, அது வானம் எங்கும் செந்நிறத்தை பரப்பியபடியே வெளியே எட்டி பார்த்தது. ஆனால் என்னால் தான் அதை அனைத்தையும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தேன்.


வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என அனைத்து ஊர்களையும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தாண்டிவிட்டேன். சிங்க பெருமாள் கோவிலை நெருங்கி செல்லும் வேளையில் எனக்கு முதல் சோதனை நடந்தது. அப்போது தெரியாது அது ஒரு மிக பெரிய விஷமாகவும் நான் திரும்ப வீட்டிற்கு செல்வது கடினமாகவும் போகிறது என்று.


ஒரு அரசாங்க பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்து அதன் ஒரு பக்கவாட்டில் ஏறினேன். என்னை சற்றும் கவனிக்காத பேருந்தின் ஓட்டுனர் திடிரென்று ஒரு ஓரமாக பேருந்தை செலுத்தினார். சட்டென்று சுதாரித்துக் கொண்டு என் பைக்கின் வேகத்தை மளமளவென குறைத்தேன். இரண்டு பிரேக்குகளையும் அழுத்தி பிடித்தேன். இப்போது பேருந்தின் வாயில் இருந்து தப்பிவிட்டேன் ஆனால் அந்த ரோட்டின் இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரின் மீது இடித்து தொப்பென்று கீழே விழுந்தேன்.


பைக்கின் பின்னால் ஒரு பெரிய பைபை கட்டி வைத்திருந்தேன். அது இல்லாமல் இருந்து இருந்தால் நான் சற்றே என வண்டியை நிறுத்தி இருப்பேன். நேரம் சரியாக ஆறு மணி இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் குறைவாக தான் இருந்தது. தன் கையே தனக்கு உதவி. மெல்ல எழுந்து நின்று என் பைக்கையும் நிமிர்த்தினேன். பெட்ரோல் கசிந்து அந்த வாசம் வீசிக்கொண்டு இருந்தது. 7.30மணிக்குள் மேல்வருவத்தூர் செல்ல வேண்டும் என்பதற்காக வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தேன்.


ஒரு 50அடிக்கும் குறைவான தூரம் செல்வதற்குள் அடுத்த சோதனை. வண்டியின் முன் சக்கரம் பஞ்சர் ஆகியிருப்பது தெரிந்தது. இப்போது சரியாக நான் சிங்கபெருமாள் கோவில் ஜாங்ஷனை அடைந்து விட்டேன். அங்கு இருந்த ஒரு டீக்கடை முன் வண்டியை நிறுத்தி செய்வது அறியாமல் நின்றேன். என் முதலாளியிடம் இருந்து போன் வந்தது. விவரமாக நடந்ததை கூறினேன், "பஞ்சர் போட்டுகிட்டு சீக்கரம் கிளம்பு தம்பி, நீ அங்க 7.30 மணிக்கு எல்லாம் இருக்கணும்" என தெரிவித்தார்.. இதற்கு பெயர் தான் முதலாளித்துவம் என அன்று அறிந்து கொண்டேன்..


அந்த டீக்கடைக்கு போய் விசாரித்தேன், அருகில் எதுவும் பஞ்சர் ஒட்டும் கடை இந்நேரத்துக்கு இல்லை என சொன்னார். அவர் சொன்னது உண்மைதான். மேலும் சில கடைகளில் விசாரித்தவாறே நான் மட்டும் முன்னேறினேன். வண்டியில் பெரிய மூட்டை இருப்பதாலும் பஞ்சர் ஆகியிருப்பதாலும் வண்டியை அந்த டீக்கடையிலேயே நிறுத்திவிட்டேன். பலபேரிடம் விசாரித்தேன் எல்லோரும் ஒருசேர அந்த ஒரு கடையை மட்டுமே சுட்டிக்காட்டினர். "அந்த ரிலையான்ஸ் கட்டவுட் கீழ உள்ள பில்டீங்கில் ஒரு கடை இருக்கிறது, அது 24மணி நேர கடை" என தெரிவித்தனர். கிட்டத்தட்ட அந்த கடை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு குறையாமல் தூரத்தில் இருந்தது.


இப்போது எனக்கு துணையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா யாருமே இல்லை. அந்த காலை பொழுதிலும் எனக்கு வியர்வை கொட்டி கொண்டு இருந்தது. வேகவேகமாக அந்த கடையை நோக்கி நான் மட்டும் நடந்தேன். மன்னிக்கவும் ஓடினேன் என தான் சொல்ல வேண்டும். 10 நிமிட ஓட்டத்துக்கு பிறகு அந்த கடையை அடைந்து எட்டி உள்ளே பார்த்தேன். ஒரு லாரி டிரைவர் வெளியே வந்தார், அவரிடம் விவரத்தை கூறினேன். "வண்டியை தள்ளிக்கிட்டு வா, இந்த கடைக்காரர் இப்ப வந்துருவாரு" என சொன்னார். சட்டென்று சிட்டாய் என் பைக்கை நோக்கி நான் பறந்தேன்.


வேகவேகமாக தள்ளிக் கொண்டு அந்த கடையை அடைந்தேன். ஒரேவரியில் இங்கு முடித்து விட்டேன், ஆனால் நான் அப்போது பட்ட துன்பம் அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். நான் மட்டுமே பரபரபாய் இருந்தேன். என்னை தவிர வேறுயாருக்கும் அந்த பரபரப்பு இல்லை. அந்த கடைக்காரர் வருவதற்குள் நான் முன்பு சொன்ன டிரைவர் என் வண்டியின் சக்கரத்தை கழட்டி ஆயத்தமாக வைத்தார்.


ஒரு பத்து நிமிடம் கழித்து கடைக்காரன் வந்தான். மிக பொறுமையாக வேலையை கையாண்டான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவன் தலையில் கல்ல தூக்கி போட்டு இருப்பேன், பாவம்னு விட்டுடேன். அந்த புண்ணியவான் வாய திறந்து சொன்ன முதல் வார்த்தை "டியுப் கிழிஞ்சிறுச்சு, புதுசு தான் போடனும்.. கம்பெனி டியூப் தான் என்கிட்ட இருக்கு" "அதோட விலை 200ரூ அப்புறம் நான் கழட்டி மாட்டனதுக்கு 50ரூ"... அடப்பாவிகளா "என்ன கொடுமை சார் இது"


என் பார்சை எடுத்து உள்ள எவ்வளவு இருக்குனு பார்த்தேன். சரியா சொல்லனும்னா 238ரூ தான் இருந்துச்சு. அந்த கடைக்காரன்கிட்ட சொன்னேன் "238ரூ தான் இருக்கு".. "இல்லை கட்டுபடி ஆகாது, நீங்க கிளம்புங்க"... மனசாட்சி இல்லாத ஜென்மம்...


என் தவிப்பை புரிந்து கொண்டது அந்த லாரி டிரைவர் மட்டும் தான். ஒரு 20ரூ எடுத்து கொடுத்தார். தெய்வம் போல எனக்கு காட்சி தந்தார். இன்னும் அவரின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சென்னை கே.கே.நகரில் தான் வசிக்கிறார் என சொன்னார். மீண்டும் ஒரு நாள் அவரை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் தோன்றுகிறது..


என் வண்டிக்கு டியூப் மாற்றும் வேலை நடந்து கொண்டு இருக்க, அந்த டிரைவர் அண்ணன் டீக்கடைக்கு டீ சாப்பிட வரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் அவரை மேன்மேலும் சங்கடபடுத்த விருப்பம் இல்லாமல் வேண்டாம் என கூறினேன்.. 


இப்போது அதே பஞ்சர் கடையில் வேறொரு பிரச்சனை அதுவும் அந்த டிரைவர் அண்ணனால் தான் சரி செய்யப்பட்டது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....






தொடரும்....








சதீஷ்........