என் தோழர்கள்

Sunday, 27 May 2012

விளையாட்டு - 1ன் விடை & விளையாட்டு - 2

   விளையாட்டு ஒன்னுக்கான விடை அதிகப்பட்சமா எல்லருமே சொல்லிடீங்க... உங்கள் ஆதரவுக்கு நன்றி.... இதற்கான விடை வெளியிடப்பட்டுள்ளது....


8
1
6
3
5
7
4
9
2



இதை கண்டுபிடிக்கவும், ஞாபகம் வைத்துக்கொள்ளவும் ஒரு எளிய வழி உள்ளது இருப்பினும் அதற்கு முன்பாக விளையாட்டு 2யையும் முடித்து விடலாம்....

விளையாட்டு ஒன்றிற்கு சொன்ன அதே நிபந்தனைகள் தான்.. ஆனால் இம்முறை கட்டங்களின் எண்ணிக்கை அதிகம்.. மொத்தம் 25 கட்டங்கள்... 1 முதல் 25 வரை நிரப்ப வேண்டும்... மொத்த கூட்டுத்தொகை 65 ஆக வரவேண்டும்....

நிபந்தனைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y


A=? B=? C=? D=? E=?
F=? G=? H=? I=? J=? 
K=? L=? M=? N=? O=? 
P=? O=? R=? S=? T=? 
U=? V=? W=? X=? Y=? 


இதை காப்பி செய்து கமெண்ட் பெட்டியில் பேஸ்ட் செய்து, கேள்விக்குறியை நீக்கிவிட்டு தங்கள் பதிலை அளித்து எண்டர் செய்யவும்... 



என்றும் விளையாட்டுடன்
சதீஷ் மாஸ்......
தங்கை நந்தினியுடன்


Saturday, 26 May 2012

விளையாட்டு - 1

     னைவருக்கும் வணக்கம்... எப்பவுமே எதாவது பதிவு போட்டு அத எல்லாரும் படிக்கறது, சதாரண விஷயம் தான்.... இப்ப அதை அசதாரணமான விஷயம் ஆக்கலம் வாருங்கள்... 

ஒரு சிறு விளையாட்டு போட்டி.இதுக்கு உங்க ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குனு பாத்துட்டு இந்த விளையாட்டு பதிவை தொடர்ந்து எழுதுவதா என்று பாக்கலாம்...


விதிமுறைகள்...
  • கீழே மொத்தம் ஒன்பது கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. (3*3=9)
  • 3 Rows 3 Columns.. அவற்றிக்கு A to I என ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு எழுத்து கொண்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது..
A
B
C
D
E
F
G
H
I
  1. இப்போது கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் 1,2,3,4,5,6,7,8,9 என்னும் எண்களை நிரப்ப வேண்டும்.
  2. கொடுக்கப்பட்டுள்ள 9 எண்களை உங்க எண்ணப்படி எந்த கட்டங்களில் வேண்டுமனாலும் நிரப்பலாம்.. 
  3. ஒரு முறை உபயோகப்படித்திய எண்ணை மீண்டும் வேறு கட்டத்தில் நிரப்பக்கூடது... like as SUDUKU...
  4. கட்டங்களில் எண்களை நிரப்பிய பிறகு, அதன் கூட்டுத்தொகை 15 என்று வர வேண்டும்.. கூட்டுத்தொகை எப்படி அமைய வேண்டும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
  5. A+B+C=15
  6. D+E+F=15
  7. G+H+I=15
  8. A+E+I=15
  9. G+E+C=15
  10. A+D+G=15
  11. B+E+H=15
  12. C+F+I=15
  13. எந்த வரிசை முறையில் கூட்டினாலும் 15 என வர வேண்டும்..
  14. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..
  15. மிக முக்கியமான நிபந்தனை ஒரு முறை உபயயோகித்த எண் மீண்டும் வர கூடாது...
  16. எ-கா: சரியான நிரப்புதல்:
 8
 6
 1







 8



 6



 1




 1

 6

 8




 8


 6


 1




  1. தாவறான நிரப்புதல்:
 6



 6



 3

எண்கள் எக்காரணம் கொண்டும் ரிபீட் ஆக கூடாது...

கொடுத்து இருக்கும் தகவல் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.... உங்கள் பதிலை கமெண்டில் தெரிக்கவும்...

கமெண்ட் மாடுரேஷன் தற்காலிகமாக நீக்கப்படுகுஇறது.. விடை, அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்... விடையை கண்டுபிடிக்கும் எளிய முறையும் தெரிவிக்கப்படும்..

A=? B=? C=? 
D=? E=? F=? 
G=? H=? I?

இதை காப்பி செய்து கமெண்ட் பெட்டியில் பேஸ்ட் செய்து, கேள்விக்குறியை நீக்கிவிட்டு தங்கள் பதிலை அளித்து எண்டர் செய்யவும்... 



என்றும் விளையாட்டுடன் 
சதீஷ் மாஸ்.............






Thursday, 24 May 2012

சதீஷ் காபிஷாப் - 25/05/2012


  அனைவருக்கும் வணக்கம்.... நா ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டேன், நா பதிவுனு எதயாச்சும் போட்டா யாரும் அந்த பக்கம் போறதே இல்ல.. ஆனா காபிஷாப்க்கு நல்ல ரெஸ்பானஸ்... வாங்கோ நாம தொடரலாம்...
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும்:
பல பரப்பரப்புக்கு அப்புறம் பதிவர் சந்திப்பு முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னும் இருக்கவே செய்கிறது. பல பதிவர்கள் தொடரும் என்று போட்டு பதிவை எழுதி தள்ளி இருக்கிறார்கள்... #அடா போங்கடா நீங்களும் உங்க சந்திப்பும் அப்படினு அவசரப்பட்டு சொல்லிடாதீங்க... நா சூடானேன்ன்ன்ன்ன்ன்ன் சுளுக்கு எடுத்துறுவேன் போகற மாத்திரை மட்டுமே கொடுப்பேன்..

ஒரு சிறு முயற்சியாக....


எனக்கு தெரிந்த பெயர் மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்...... 
------------------------------------------------------------------------------------------------------------
ஆசை:
மனிதனோட மனசு குரங்கு மாதிரினு பெரும்பாலும் சொல்லுவாங்க.. ஆமா அது நூத்துக்கு நூறு உண்மை தான். மனிதனுடைய ஆசை அடங்கவே அடங்காது, அது ஒரு காமத்தீ... மனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று புத்தர் ஆசைப்பட்டார் என்பதே உண்மை...

இப்ப என்னோட ஆசை என்னவென்றால் ஒரு மென்நிரலி(iPad) வாங்க வேண்டும். ஒரு ஆன்ட்ராய்டு மொபைல் வேணும். கடவுளே சீக்கரமா ஏற்பாடு பண்ணுங்க....
------------------------------------------------------------------------------------------------------------
காலேஜ்:
தம்பியோட பன்னிரெண்டாவது ரிசல்ட் வந்துரிச்சு.. நல்ல மார்க் எடுத்து இருக்கான்.. ஏற்கனவே காலேஜ் சீட் பிளாக் பண்ணியாச்சு அதனால நோ பிராப்ளம்.. சரவணன் B.E biotech engg...

ஆனா ஒரு சின்ன வருத்தம் என்னான்னா அவனுக்கு அம்மா தர லேப்டாப் கிடைக்காது... மம்மீ மம்மீ... ஆனா மக்களே உங்கள் ஏரியால இருக்கற பசங்களுக்கு ஒரு அட்வைஸ் நீங்க தாங்க.. அதாவது, இந்த வருஷம் எந்த காலேஜ்லலாம் லேப்டாப் தந்தாங்களோ அந்த காலேஜ்ல சேர சொல்லிங்க... 32000ரூ மதிப்புள்ள மடிகனிணி ஓசில கிடைக்கும்...
------------------------------------------------------------------------------------------------------------
இந்தவார பிளாக்கர்:

ஆயிசா ஃபரூக்,
இவரை நான் முகபுத்தகத்தில் நான் கண்டுபிடித்தேன்.. பல அருமையான பதிவுகளை எழுதி உள்ளார். சில போட்டோகாப்பி பதிவும் இருக்கு... அவரை பத்தி அவருடைய பிளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு இதுவரை ஒரு ஃபலோயர் கூட இல்லை.. அவருடைய பதிவுக்கு ஒரு கமெண்ட் கூட இல்லை... ஏன் என அவருடைய பிளாக்கில் உமக்குதெரியும்....



------------------------------------------------------------------------------------------------------------
தமிழும் தாய்லாந்தும்:

ஆயிரம் ஆயிரம் வருடங்கள் தொன்மை வாய்ந்த மொழி தமிழ் என்பதில் ஐயமே இல்லை... அதற்கு இதுவே சாட்சி... 
------------------------------------------------------------------------------------------------------------
கமெண்ட்:
ம்ம்ம் போன பதிவில் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எனக்கு கமெண்ட்டும் பாராட்டும் தந்து இருந்தார்... ரொம்ப நல்லா இருந்துச்சு.. என் பிளாக்கில் ஜாக்கி,கேபிள்,சுரேகா, லக்கிலுக் யுவா, இன்னும் பலர் கமெண்ட்டுகள் அங்காங்கு இருக்கிறது.. டோன்ட் வேரி பீ ஹாப்பி...
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:
மற்றவர் துயரங்களை பகிர்ந்து கொள்ள முன் வராத கல் நெஞ்சங்கள் மகா கேவலமானவை....

நல்லதுக்கு போய் நிக்கலனாலும் கெட்டதுக்கு போய் நிக்கனும்'னு பெரியவங்க சொல்லுவாங்க.... பல பெருசுங்க மண்டய போட்டு பல குடும்பங்களை சேத்து வைக்கும்.. சில சமயம் சொத்து பிரச்சனையில் மீண்டும் சண்டை வரவும் வாய்ப்பு இருக்கு...
------------------------------------------------------------------------------------------------------------
அனல் பறக்கும் வெயில் காத்து சுத்தமா தாங்க முடியல.. பொன்னுங்க எல்லாம் முகத்தை அழகா முடிக்கிறாங்க... அதுவும் நடந்து போற பொன்னுலாம் துப்பட்டா போட்டு மூஞ்ச மூடிக்கறாங்க... ம்ம்ம் ரெண்டு துப்பட்டா கொண்டு வராங்க தெரியுமா.. ஒகேஓகே படத்துல ஒரு சீன்ல, ஒரு பொன்னோட முகத்துல இருக்கற துப்பட்டாவ எடுத்து பாத்துட்டு உதயநிதி காரி துப்புவாரு... அதுப்போல பொன்னுங்க முகத்தை மூடிக்கறதுல நமக்கும் ஒரு விதத்திலு நன்மை தான்..

                                          
------------------------------------------------------------------------------------------------------------
டாட்டோ போட்டோ:
பொது இடத்துல வச்சி பாத்துடாதீங்க... அப்புறம் மானம் போய்டும்... போட்டோல இருக்கற கலையை மட்டும் ரசிக்கவும்.. அது தான் எல்லாருக்கும் நல்லது.... அதில் உள்ள அழகை பாருங்கள். அதை வரைஞ்சவனின் கை பக்குவத்தை காணுங்கள்....
அதை இந்த எடுத்துல போட முடியல சோ இந்த லிங்க அ கிளிக் பண்ணுங்க.. நாம பேஸ்புக்குக்கு போகலாம்..
------------------------------------------------------------------------------------------------------------

என்றும் உங்களுடன்
சதீஷ் மாஸ்.....





Tuesday, 22 May 2012

சென்னை பதிவர் சந்திப்பு - 20/05/2012

               முதலில் மரியாதை, சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு விழாவிற்கு கடுமையாக உழைத்த அனைத்து யூத் பதிவருக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம். இந்த மாதிரி மொத்தமா மரியாதை பண்ணிட்ட போதும்.. அப்புறம் அவா பேரு விட்டு போச்சு, இவா பேரு விட்டு போச்சுனு சொல்லிட கூடாதுல....

இனிமே நம்ம ஸ்டைலில் பதிவு போடலாம். எனக்கு இந்த பெரிய பொறுப்பு தந்த மற்றும் தராத பதிவருக்கு நன்றி...

இப்பதிவு முழுக்க என் கண்ணோட்டத்தின் வழியே பயணம் ஆகும். (கதை அப்படினு ஒன்னு இருந்தா அது கதாப்பத்திரம் யாரவது ஒருத்தவங்க மீது பயணம் ஆகியே வேண்டும் என 50லட்சம் ஹிட்ஸ் வாங்கிய சென்னை ஆதினம் என்னும் மிகவும் யூத் பதிவர், எனக்கு அறிவுரை அளித்தார்..)


1.நேரம் சரியாக 3.30 மணி இருக்கும், அறக்கப்பறக்க சென்னை டிராப்பிகிலும் சென்னை வெயிலிலும் பைக்கை ஓட்டிய படி பறந்தேன்.

2.கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் போய் சேர்ந்து, பைக்கை பார்க் பண்ணிட்டு பாத்தேன்.. ஒரு சின்ன பையன் போனில் பேசிட்டு இருந்தான்.. அவரை பாத்ததும் தெரிஞ்சி போச்சி வெளியூரில் இருந்து வந்து இருக்கும் பதிவர்னு.. எப்படி நீ அதை கண்டு பிடிச்ச அப்படினு கேள்வி கேக்க கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

3.போனை வெளிய எடுத்து நம்ம பிலாசபி சார்க்கு போன் போட்டேன். எப்பவும் மிஸ் கால் கொடுத்து தான் பழக்கம், ஆனா போன் பண்ணி நான் வந்து சேந்துட்டேன் அப்படினு சொன்னேன். பிலாசபி அப்ப தான் அசோக்பில்லர்'ல இருந்தாறு அதனால என்னை உள்ளே போய் இருக்க சொன்னரு..

4.அடுத்து விழாக்குழுவின் முக்கிய புள்ளி மற்றும் தன் கை காசை போட்டு செலவு செய்யும் வள்ளல் மற்றும் சென்னையின் அடுத்த ஆதினம் என பல சிறப்புகளை உடைய மெட்ராஸ்பவன் சிவகுமார்'க்கு போன் பண்ணி, நான் வந்து இருப்பதை சொன்னேன்.. அவர் என்னை உள்ளே வருமாறு அழைத்தார்..

5.உள்ளே சென்றதும் தலைவருக்கு சலாம் போட்டேன். (பிகாஸ் அடுத்த ஆதினம் அவர் தானே..)... அவர் என்னை பல பதிவருக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.. அவங்க பேரு ஆரூர் மூனா செந்தில்... அவர் கலைஞர் தொகுதியை சேர்ந்த என் புதிய நண்பர்.. (அவர் இதை படிக்கும் போது கண்டிப்பாக சிரிப்பார், காரணம் சொல்லமாட்டேன்).. கோகுல் அவர்களை போன சந்திப்பிலே பார்த்து உள்ளேன்... கடலூர் காரர்...(ஜாக்கி சார் ஊருங்கோ)..

6.புக் பேலஸ்'ல இருந்த புத்தகத்தை சும்மா ஒரு நோட்டம் விட்டேன். ஆனா ஒன்னு கூட வாங்கல... எவ்ளோ நேரம் தான் நானும் சீன் போடறது, முடியல.. 90% தள்ளுபடி என்று சொல்லி பிறகு இல்லை அது வெறும் வதந்தி என்று சொன்ன வேடியப்பன் அவர்களை என்ன பண்ணலாம்..( வேடியப்பன் : கொய்யால, ஓசில இடம் கொடுத்தா படுக்க பாய் கேப்பியே.. ஹி ஹி ஹி)

7.நேரம் ஆக ஆக பல பதிவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரிடமும் என்னை நானே அறிமுகப்படுத்தி கொண்டேன்.. அக்கப்போர், நாய்நக்கஸ், உணவு உலகம் ஆபிசர், சென்னைப் பித்தன்(ர்), புலவர் இராமனுசம்(ர்) மற்றும் பலர்.. டிவிட்டர் கார்க்கியும் கூட, சம்பத்... நினைவில் நிற்காத பெயர்களை கொண்ட பல பதிவர்கள்...

8.பிலாசபி பிரபா அவர்களும் அஞ்சாசிங்கம் செல்வின் அவர்களும் ஒருசேர வந்தனர்.. அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தேன்..

9.எல்லாரும் அமர்வதற்காக சேர் அடுக்கி வைக்கும் வேலை மும்முரமாக நடந்தது... அதை முழுவதும் ஏற்று செய்த நபர் அந்த புக் பேலசில் இருந்தார். அந்த நண்பரின் பெயர் தெரியவில்லை.... மன்னிக்கவும்.. அவருக்கும் நன்றிகள் பல..

10.ஒவ்வோருவருக்கும் தனி சிறப்பு பல இருக்கிறது. அக்கப்போரை பார்க்கும் போது, எதோ நாலு ஆளை போட்டு தள்ளிட்டு நேரா பதிவர் சந்திப்புக்கு வந்ததை போல இருந்தது...

11.நாய்-நக்கஸ் அவர் தான் எண்டர்டெயிண்மெண்ட்.. நல்லா பேசினாரு... அவங்க கும்பலா உக்காந்துக்கிட்டு கமெண்ட் கொடுத்தத நீங்க மிஸ் பண்ணிடிங்க சார்..

12.எங்கள் கவுண்டமணி ரசிகர் ஆன "அஞ்சா சிங்கம்" தன்னோட மடிக்கணிணியை எடுத்து கிட்டு வந்து.. மொத்த பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிப்பரப்பு செய்தார்.. அது தான் எங்களின் வெற்றி.. சாரி அவர்களின் வெற்றி.. . அந்த நேரடி ஒளிப்பரப்பை பார்த்த அனைவரும் நல்லா இருக்குனு சொல்லி இருந்தாங்க. ஆடியோ அருமையாக இருந்ததாகவும், விடியோ சரியாக தெரியவில்லை என்று சொல்லி இருந்தார்கள்.. வெப்கேமிரா'ல அந்த அளவுக்குதான் தெரியும் ஆகையால் அடுத்த முறை அதிக மெகாபிக்சல் கொண்ட வெப்கேமிரா பயன்படுத்தப்படும் என விழாக்குழுவினர் சொல்லி இருக்காங்க.. பாப்போம், அதுக்கு மொத்த ஸ்பான்சர் கேபிள்ஜி என உளவுத்துறை சொல்லி இருக்கு... அதையும் பாக்கலாம்.. (அந்த நேரலைக்கு முதல் கமெண்ட் கொடுத்த பெருமை எனக்கும் கோகுலுக்கும் தான் சொந்தம்.. சதீஷ்:ம்ம் நல்லா இருக்கே.. கோகுல்: வேற என்னத்த சொல்ல டெக்னாலஜி வளந்து போச்சு..) கூடுதல் தகவல்:மொத்தம் 166viewers என்பதை அஞ்சா சிங்கம் மார்த்தட்டி கொண்டு பிலாசபியிடம் சொன்னார். இது ஒரு நல்ல தொடக்கம்..

13. மெதுவாக உள்ளே நுழைந்தார்கள் சங்கர்நாரயணனும் செந்தில் அவர்களும்.. அது யாருடா புதுசா அப்படினுலாம் கேக்க கூடாது.. நம்ம கேபிள்ஜியும் கேஆர்பியும் தான்.. இவர்கள் தானே இப்போது சென்னையை கலக்கி கொண்டு இருக்கும் பிரபலங்கள்.. பல்ல காட்டிக்கிட்டே நான் போய் கேபிள்ஜி கிட்ட பேசினேன்.. ஹலோ சார், நான் தான் சதீஷ்மாஸ்.. போன சந்திப்புல பாத்திங்களே ஞாபகம் இருக்கா... உன்னை மறக்க முடியுமா நீதான ஜாக்கி சார் பத்தி பேசனது என்று ஒரு போடு போட்டார்.. நான் இடத்தை காலி பண்ணிட்டேன்ல.. பிகாஸ் எனக்கு சப்போர்ட் பண்ண என் தல "ஜாக்கி" அங்க இல்லை.... மிக பெரிய ஏமாற்றம் தான்....

14. அங்க இருந்து கழண்டுகிட்டதுல நான் செந்தில் அவர்களை பாத்து பேச முடியாம போய்டிச்சு. ஆனா ஒரு மணிநேரம் கழித்து கேஆர்பி.செந்தில் அவர்கள் என்னை பார்த்து ஹாய் எப்படி இருக்க எனக் கேட்டார். நான் வழக்கம் போல திரும்பி பின்னாடி யாராச்சும் இருக்காங்கலா என பாத்தேன்.. சார் என்னையா கேக்கறீங்க என்றேன். உன்னைதான்யா கேக்கறேன் என்றார். #நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அவரின் இந்த செயல் என்னை ஒரு நிமிடம் ஆட வைத்தது... பிரபலமா இருந்தாலும் அங்க எல்லாரும் ஒன்னு தான் அப்படினு கேஆர்பி அவர்கள் நிரூபிச்சுட்டார்.. ( அந்த வானத்தை போல மனம் படைச்ச வள்ளவரே...)

15.அப்புறம் யாரு நம்ம மெட்ராஸ்பவன் சிவகுமார் தான்.. அவரை எவ்வளவு பாரட்டினாலும் தகாது.. அவ்ளோ உழைத்து இருக்கார் அந்த மாமனிதர்.. மொத்த நிகழ்ச்சிக்குமே அவர் தான் காரணம். கதை, திரைக்கதை, வசனம், லொக்கேஷன், இயக்கம், தயாரிப்பு இப்படி பல முகங்களுக்கு சொந்தகாரர்.. அவருக்கு பல நல்உள்ளங்கள் உதவி செய்தனர்.. அவர்களுக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள்... பிளக்ஸ் பேனரில் எங்கள் ஆஸ்தான குரு கவுண்டமணி இல்லாதது வருத்தமே.. கூடுதல் தகவல்: அடுத்த பதிவர் சந்திப்பு "சென்னை பதிவர் சந்திப்பு என்று அழைக்கப்படமாட்டாது... அதற்கு பதிலாக "மெட்ராஸ் பதிவர்கள் சந்திப்பு" என அன்போடு அழைக்கப்படும்.. ஹலோ மெட்ராஸ்பவன் சிவகுமார் சார், என்ன ஒகே வா?

16.போன சந்திப்புக்கு வெளியூர் பதிவர்கள் குறைவு தான். ஆனால், இம்முறை அடேங்கப்பா எத்தன வெளியூர் பதிவர்கள் தெரியுமா.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்ப்பட்ட வெளியூர் பதிவர்கள்.. இது யாரும் எதிர் பாக்காதது. ஓட்டலில் ரூம் போட்டு தங்கி பதிவர் சந்திப்புக்கு வந்தனர்.. என்ன ஒரு பாசம் உள்ள பயபுள்ளைகள்.... அடுத்த முறை பதிவர் சந்திப்பை எதேனும் கல்யாணமண்டபத்தில வச்சி மொத்த தமிழக பதிவரையும் அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதற்கு இதான் சாட்சி..

17. ம்ம்ம் அடுத்து விஷாலினி என்னும் சிறுமி... கனிணி துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளார்... என்ன என்னமோ பேசிச்சு அந்த புள்ள, என் மரமண்டைக்கு தான் ஒன்னும் புரியல... மிகவும் அதிகமான, பல புது தகவல்கள் தன்னுள்ளே வைத்துள்ளார்.. அவரை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்... food officer link..

18. தென் இந்தியாவிலே ஈகோ என பெயர் பெற்ற ஒரே மனிதர் யோகநாதன்.. பல மரங்களை தென் தமிழகம் முழுவதும் நட்டு மிக பெரிய சாதனையை சத்தம் இல்லாமல் செய்துள்ளார்.. அவரை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்...

19. கோகுல் அவர்கள் தான் இந்த வருடத்தின் மிக சிறந்த யூத் பதிவராக நாங்களே தேர்ந்து எடுத்து அவரை கௌரவித்தோம்... #புதுமாப்பிள்ளைக்கு பம்பம்பரே.... புதுமாப்பிள்ளைக்கு பம்பம்பரே....

20. யோகநாதன், கோகுல், விஷாலினி இவர்கள் மூவருக்கும் நினைவு பரிசாக புத்தகமும் "சென்னை பதிவர்கள்" என பெயரிடப்பட்ட கேடயமும் விழாக்குழுவினர் சார்பாக தரப்பட்டது... #சென்னை பிளாக்ர்ஸ் யூ ஆர் கிரேட், எங்களை ஆசிர்வாதம் பண்ணூங்க...

21. இவங்க எல்லாரும் பேசி முடிக்கறதுக்குள்ள நேரம் 8 ஆயிடுச்சு.. வந்து இருந்த பதிவர்கள் தங்களை அறிமுக படுத்தி கொள்ள மட்டுமே நேரம் அளிக்கப்பட்டது.. அது எமக்கு பெரும் ஏமாற்றம்... இன்னும் நேரம் கிடைத்து இருந்தால் பல பதிவர்கள் பேசி இருப்பார்கள்...

22.புட் ஆபிசரின் நண்பர் "டெல்லியில் உள்ள ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியர்" வந்து இருந்தார்.. அவர் சமூகத்தில் நிலவும் அக்கிரமங்களை பற்றி விளக்கமாக பேசினார்... பல உண்மைகளை சொல்லி பரபரப்புக்கு குறை இல்லாமல் செய்தார்..

23.பலபேர் தங்களுடைய பிளாக்கில் எழுதுவதற்காக நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தனர். அதில் என்னை மிகவும் கவர்ந்தவர் தமிழகத்தின் பெயரில் தன் பெயrai கொண்டு உள்ளதாக சென்னை பித்தன் அவர்கள் சொன்னார்.. ஏனெனில் அவர் உண்மையாகவே நோட்ஸ் எடுக்கும் நோட்டை கொண்டு வந்து நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தார்... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயாய... #பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு... அவர் பெயர் தெரியாத காரணத்தால் நோ லிங்க....

24.இந்த முறையும் நான் அடிச்சு சொல்லுவேன்... அந்த பதிவர் சந்திப்புலேயே இந்த முறையும் நான் தாங்க ரியல் யூத்... எல்லாருமே என்னை விட வயது மூத்த யூத் பதிவர்ஸ்... #டேய் நீ வாங்கற அஞ்சு பத்து பிச்சைக்கு இதலாம் தேவையா அப்படினு கேக்காதீங்க பாஸ்..

25.ஒரு வழியா பதிவர் சந்திப்பு இனிதாய் நிறைவேறியது... நான் எதிர் பார்த்த ஜாக்கி, லக்கிலுக், சுரேகா வராதது ஏமாற்றமே... அடுத்த சந்திப்பில் கண்டிப்பா வரனும்..

26. ஹலோ தலைவரே எங்க போறீஙக்... இன்னும் முடியல.. நான் இன்னும் முடிக்கல....
------------------------------------------------------------------------------------------------------------

கலக்கல் பேச்சுகள்:

சந்திப்பு கூட்டம் முடிந்தவுடன் நடந்த உரையாடல்... உண்மைகள் வெளி வர போகிறது...

1. நா நேரா போய் யோகநாதன் சார்கிட்ட 'எங்க வீட்டுல என்ன மரம் நடலாம்னு கேட்டு தெரிங்சு கிட்டேன்..

2.கடைக்கு புத்த்கம் வாங்க வந்த பலர் சந்திப்பு முடியர வரைக்கும் இருந்து விழாவை சிறப்பித்தனர்..

3.நம்ம வடசென்னையின் இளைய ஆதினம் பிலாசபி பிரபாக்கு, அவருடைய வாசகர் (நோட் திஸ் பாயிண்ட் வாசகாரே) ஒரு அன்பு பரிசு தந்தார்... அதுவும் கனடாவில் இருந்து வந்த பரிசு... கனடானில் உள்ள வாசகர் தன்னால் சென்னைக்கு வர முடியாது என்பதால், தன்னுடைய நண்பரின் மூலம் அந்த பரிசை தந்து அனுப்பினார்...

4.அந்த பரிசு என்னவென்றால், 1200ரூபாய் பணம் கொண்ட ஒரு மூவி கார்டு... வர ஞாயிறு அன்று அந்த கார்டில் சத்யம் தியேட்டரில் படம் பாக்க போறாங்க, எல்லா சென்னை ஆதினங்களும்.... #என்சாய்..

5.போதாத குறைக்கு கேபிள்ஜீயின் ரசிகர் ஒருவர் பாலகணேஷ்... கடலூரில் இருந்து அவரை சந்திக்க வந்து இருந்தார்.. அவர் போகும் வரை கேபிள்ஜி கூடவே இருந்தார் என்பது கூடுதல் தகவல்... நல்லா போட்டாங்கய சாம்பிராணிய..... பாலகணேஷ் அவர்கள் ஒரு புதிய பதிவர் என்பது சிறப்பு, அது எனக்கு ஆப்பு...

6.பிற பதிவர்கள் எல்லாரும் கிளம்ப, கேபிள்ஜீயின் அல்லக்கைகள் அல்லாத உண்மை ரசிகர்கள் மட்டுமே இருந்தனர்... கோபம் வரவங்க தனியா கூப்புட்டு திட்டுங்க சார்....  எல்லாரும் கூம்பளா சேந்துக்கிட்டு பல கேள்வி கனைக்களை கேபிள்ஜி அவர்கள் மீது தொடுத்தோம்.. அவர் அமெரிக்காவிலுள்ள அரசியல்வாதிகள் போல எல்லாத்துக்கும் சிரிச்சே மலுப்பிட்டார்.... அதுல முக்கிய கேள்வி "நீங்க ஏன் நடிகர் விஜய் படங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள்"... தலைவர் கடைசி வரைக்கும் பதில் சொல்லவே இல்ல பாஸ்..

7. இந்த இடத்துல நான் கேபிள்ஜி அவரிடம் மன்னிப்பு(பூ) கேக்க வேண்டும். #காரணம், எனக்கு மைக்'ல பேச வாய்ப்பு கொடுத்த அப்போ நான் அதிக பிரசங்கி தனமா ஒரு வார்த்தை விட்டுட்டேன்... அது அவருக்கு ஞாபகம் இருக்கானு தெரிய்லை... இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள்... சாரி சார்...

8.பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்... நேரில் பார்த்து பல கேள்விகள் கேக்க முடிகிறது.. அதற்கான பதிலும் அங்கயே கிடைக்கிறது... கேபிள்ஜி பேசியதில் இருந்து என் பிளாக்கை அவர் படிப்பதை தெரிந்து கொண்டேன்...

9.வீடு சுரேஷ் எனக்கு பிளாக் டிசைன்க்கு உதவி செய்வதாக தெரிவித்தார்... ஆரூர் மூனா அவர்கள் நல்ல படியாக பேசினார்.. அவரின் தம்பி என்னுடைய மொபைல் நம்பரை வாங்கி சென்றார்..

10. Tally in Tamil என்னும் பெயரில் பதிவு எழுதும் நண்பர் அவர்கள் தன்னுடய விசிட்டிங் கார்டை தந்து சென்றார்...

11.மேலும் நண்பர் கோகுல் அவர்கள் தன்னுடைய கல்யாண பத்திரிக்கையை அனைவருக்கும் தந்து அனைவரையும் கல்யாணத்துக்கு வருமாறு அழைத்தார்.. அவருடைய திருமண வரவேற்பு பாண்டிச்சேரியில் நடக்கபோகுதுனு தெரிஞ்சதும் எல்லாரும் ஒரு சேர தலை அசைத்து சொன்னார்கள்... ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்..... அனேகமாக அடுத்து 'பாண்டிச்சேரியில் பதிவர் சந்திப்பு நடந்துடும்னு நினைக்கறேன்...

12இன்னும் நிறைய இருக்கு சொல்லுவதற்க்கும் எழுதுவதற்க்கும், ஆனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்..

எல்லோருக்கும் என் நன்றிகள்..யாரையவது கூற மறந்து இருந்தால் மன்னிக்கவும்.... எனக்கு அவ்ளோ தன் ஞாபகம் இருக்கு....

பொது அறிவிப்பு: எங்கேனும் பேச்சில் பிழை இருப்பின் மன்னிக்கவும்...

நண்பர்கள் என்னுடய பிளாக்குக்கு லிங்க் கொடுக்கவும்...

பல தளங்களில் ஓட்டு போடவும்...

பல நண்பர்களை அழைக்கவும்ம்ம்....

""" என்னையா பெரிய பிளாக்கர்ஸ், 1000 பேர் எழுதுறான், அத 1001பேர் படிக்கிறான், அந்த 1001 நான் தான்"""" புதுகை அப்துல்லா மைக்கில் சொன்னது....


என்றும் யூத்'துடன்
சதீஷ் மாஸ்.......


Thursday, 17 May 2012

சதீஷ் காபிஷாப் - 18/05/2012



வணக்கம் அன்பர்களே...

சென்ற காபிஷாப் பதிவிற்கு அமோக வரவேற்பு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட 505 பேர் வந்து சென்றனர். சின்னதாய் ஒரு நன்றி தான் பாஸ்... இந்த மாதிரி பதிவுக்குனு சில வரைமுறை இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, நாமும் அதியே ஃபலோ பண்ணுவும். (இது போன்ற பதிவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உள்ளதாய் அனைவரும் சொல்கிறார்கள், ஆகையால் நாமும் அதை பின்பற்றி செயல்படலாம்)..
------------------------------------------------------------------------------------------------------------
பதிவர் சந்திப்பு:

பதிவர் சந்திப்பு பற்றி எதாவது நானும் சொல்லியே ஆகனும்ல.. அப்ப தான ஒரு கேத்து இருக்கும். வழக்கம் போல தடபுடலா ஆரவரமா பிரச்சாரம் பண்ணி பதிவர் சந்திப்புக்கான நேரம் அறிவிச்சாங்க.. அது வழக்கம் போல இல்லாம இந்த முறை சொதப்பிடுச்சி. மே20 பதிவர் சந்திப்புக்கான தேதி. அதே தேதியில் சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடக்கிறது. செய்வது அறியாமல் தவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் நிலைமை தான் கவலைக்கிடம்.
------------------------------------------------------------------------------------------------------------
கொங்கு பதிவர் சங்க துவக்க விழா:

இது ஒரு பக்கம் இருக்க, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா கூகிள் பிளசில் ஒரு செய்தி பரவல்... கோவை மாநகர பதிவர்களே வாருங்கள் நாம் ஒன்று கூடுவோம் என அழைப்பு விடுத்து உள்ளார் சஞ்சய் காந்தி.. அப்ப, கூடிய விரைவில் அவர்களுடய சந்திப்பு நடந்து விடும்.. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பதிவர்களை மட்டும் அழைக்கவில்லை. முகநூல் அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அறிய.. அவர்களுடைய இந்த முதல் முயற்சி வெற்றி அடைய சென்னை பதிவர்களின் சார்பாக மனமார நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்... எல்லாருக்கும் ஒரு கன்டிஷன், அங்க அங்க நடக்குற பதிவர் சந்திப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா எல்லாரும் ஒன்னா சேந்துடனும்.. சென்னை பதிவர், கோவை பதிவர், ஈரோடு பதிவர்னு யாராச்சும் பிரிச்சி பாத்திங்க, சுட்டுப்புடுவன்.. ஆயிரம் கைகளை இணைக்கும் சக்தி தமிழனின் எழுத்தில் உள்ளது. சொன்னவர் பிரபல பதிவர் சதீஷ் மாஸ்..
------------------------------------------------------------------------------------------------------------
சென்ற சென்னை பதிவர் சந்திப்பு:

போன வருடம் நடந்த பதிவர் சந்திப்பு தான் என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு. ரொம்ப ஜாலியா இருந்துச்சு . யூத் பதிவர் சந்திப்புனு சொல்லி என்னை அழைத்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்கள் தான். அந்த சந்திப்புக்கு பிறகு தான் என் எழுத்தில் ஒரு சூடுபிடித்தது.. அந்த மொத்த பதிவர் சந்திப்பையும் கவர் ஸ்டோரியாக எழுதிய ஒரே பதிவர் சதீஷ்குமார் மட்டுமே. அதை படிக்க.. பல சூவரிஸ்யமான சம்பவங்கள் நடந்துச்சு சோ டோன்ட் மிஸ் இட்..
ஜாக்கி அவர்களின் தளத்தில் மேலும் வாசிக்க...

பதிவர் சந்திப்புக்கான வேலைகளை எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்து இருக்காங்க. ஆனா இந்த முறையும் கவர் ஸ்டோரி நான் தான் எழுதுவேன் என்று என் வேலையை நானே எடுத்து கொள்கிறேன்... இதுக்கு பேர்தான் வில்லத்தனம்...
------------------------------------------------------------------------------------------------------------
உங்க கமெண்ட்:

இப்ப தான் கொஞ்சம் தைரியம் வந்து கமெண்ட் மாடுரேஷனை நீக்கி உள்ளேன். பார்ப்போம் என்ன நடக்குதுனு... ஹி ஹி.. உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் இல்லை நிறையாவே பயமா தான் இருக்கு.. இருந்தாலும் என் பல ஆசான்களின் பின் தொடர்களாக நானும் செயல்படுவேன்.. ஆவரது ஆகாட்டும்...
------------------------------------------------------------------------------------------------------------
போட்டோ... என்ன கொடுமை சார் இது.. :

எங்க கணக்கு வாத்தியாரின் கணக்கு. சத்தியமா ஒன்னும் புரியலை
இதுல இருக்கற கணக்கை solve பண்ணி நிறைய பேருக்கு விடை கொண்டு வர தெரியாது என்பதே எமக்கு தெரிந்த விடை... அவ்வ்வ்வ்வ்வ்....
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:

போடா போய் வே(வ)லைய பாரு இல்லனா எவனாச்சு ஆட்டய போட்டுறுவான்..

பொன்னுக்கும் பொண்ணுக்கும் தான் சண்டை அதுல உருளுது ஆம்பளைங்க மண்டை..

ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, அனைவரையும் நம்புவது பேராபத்து..

------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரம்:

பிற பதிவரின் பெருமையை எடுத்து சொல்லி அவர்களுக்கு விளம்பரம் செய்வதே இப்பகுதி.. 
இன்று அன்பைத் தேடி.. அன்பு.. தமிழகத்துல இருந்து சிங்கப்பூர் சென்று செட்டில் ஆன நம்மூர் காரர் ஆன அன்பு.. கணிப்பொறி சம்பந்தப்பட்ட தகவல்களை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார். அதான் எல்லாரும் எழுதுறாங்களே அப்புறம் என்ன? அப்படிஎன்று நீர் முழங்குவது எம் காதுகளில் பளார் என கேட்கிறது.. இவர் தனது பதிவை மிக தெளிவாக விவரமாக எழுதுகிறார். நடுநடுவே விளம்பர பேனர்கள் வந்து தொந்தரவு செய்யாத ஒரு வலைப்பூ.. இவருடைய வலைப்பூவில் உலகில் உள்ள எல்லா தமிழ் வானொலிகளுக்குமான லிங்க் கொட்டி கிடக்கிறது.. தமிழ் செய்தித்தாள்களும், தமிழ் தொலைக்காட்சிகளும் காணக்கிடக்கிறது. பல நூறு இலவச சாப்ட்வேர்கள் அண்வகுக்கின்றன.. இப்ப கொஞ்ச நாளைக்கு முன் அவர் எழுதிய பதிவு இசைக்கருவிகள் பற்றியது. மிக அருமையான தொகுப்பு அது..

சார் விளம்பரத்துக்கான பணத்தை என்னோட ஸ்விஸ் அக்கோன்ட்டுல போட்டுறுங்க..
------------------------------------------------------------------------------------------------------------
உண்மை:

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு உண்மைய தெரிஞ்சிக்கிட்டேன். நாம புதுசா யாரவது ஒருவரின் தளத்திற்கு சென்று ஒர்ரே ஒரு கமெண்ட் போட்டால் போதும் அடுத்த நிமிடம் அந்த தளத்தின் உரிமையாளர் நம்ம வலைப்பூவிற்கு வந்து ஒரு நோட்டம் விடுகிறார் என்று... அவ்வ்வ்... (இது இப்ப தான் உனக்கு தெரியுமா உனக்கு)... ஆமாங்க பாஸ்... இதுக்கு தான் கமெண்ட் போடனும்.. புரியுதோ நோக்கு..
------------------------------------------------------------------------------------------------------------
பல்லை காட்டாதீர்:
பாவம் அந்த பிகரு......


------------------------------------------------------------------------------------------------------------
கவிதை நேரம்:

நான்
நீ
நாம்
அவன்
அவள்
எல்லாம் நம்ம
சொந்தம்
வாழ்க வளமுடன்..

என் ஆசான் கவிஞர், புலவர், எழுத்து புயல், கவிச்சக்கரவர்த்தி மிஷ்கின் அவர்களுக்கு சம்ர்ப்பணம்..
------------------------------------------------------------------------------------------------------------

போதும் நிறுத்திக்களாம்டா சதீஷ்.. பாரு இப்பவே பாதி பேர் முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கமெண்ட் போடுவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் அதுவும் என் ஸ்விஸ் அக்கோண்டில் இருந்து தரப்படும்..



என்றும் காபிவுடன்
சதீஷ் மாஸ்........



Saturday, 12 May 2012

அழகி எந்தன் அன்னை



வெறும் வயிற்றில் வெத்தலை
போடும் ஆயாவே
உன் மகள் என் அம்மா

எண்ணி பார் பணத்தை 
கிள்ளி பார் அத்தை மகளை
அணைத்து பார் அன்னையை
அகிலம் அடிமை ஆகுமடி

அம்மா, அன்னை ஆத்தா, தாயீ
உன் மீது ஏறி உலகம் சுற்றினேன்
உலகமே எனக்கு நீ ஆனாய்

இன்று எனக்கு இருபது வயது
இருப்பினும் நான் திண்ணதுக்கு
பின் உண்ணும் அன்னம் கை
கொண்ட அன்னையே

ஓடி ஓடி ஓடாய் உழைத்த பின்னும்
எண்ணம் முழுதும் பெற்ற பிள்ளைகளின்
நினைப்பே உமக்கு...

ஆண்டில் ஒரு தினம் உங்களுக்கு
அனுதினமும் என் நினைப்போடு
வாழும் தெய்வமே - அம்மா

பெற்ற கடனுக்கு சோறு போடாத
தாயே
காலமெல்லாம் உன் காலடியில்
நன்றி சொல்வேன்..

இன்னும் பல உள்ளது
உம் பெருமையை விளக்க
ஆனால்
உங்களுக்கு தான் புகழ்ச்சி பிடிக்காதே

நீர் வாழ வேண்டும் 
என் வாழ்நாளையும்
எடுத்து கொள் - அம்மா

இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா...

----------------------------------------------------------------------------------------------------------------------------------
அ முதல் ன் வரை
தமிழே
தலை முதல் கால் வரை
அன்னையே
துருவம் எங்கோ
அங்கே அம்மாவின்
காலடி...

பட்டிமன்றம் வைத்தால்
பாட்டியாய் போன உன் அம்மா
போட்டிமன்றம் வைத்தால்
மாடாய் வளர்ந்த உம் பிள்ளைகள்
இதானே உங்கள் சித்தம்

எல்லா ஆண்மகனின் ஆசை
அன்னை போல் துணைவி வேண்டும்
காரணம் தெரியுமோ
என் அன்னை அழகி
அகிலம் அறியும் முன்
நான் அறிந்த அழகு அன்னையே

----------------------------------------------------------------------------------------------------------------------------------


அம்மா பெயர் திருமதி சுந்தரி மனோகரன்
அவங்க அம்மாவாகி இத்தோட 22 வருஷம் ஆகுது..
அவர்களுக்கான என் வணக்கங்கள்.....

----------------------------------------------------------------------------------------------------------------------------------

என்றும் அம்மாவுடன்

சதீஷ் மாஸ்.........







கயவன் படக்குழு தளத்தில் நான் மற்றும் சினிமா தகவல்

             ஆ'னு வாய பொழந்துகிட்டு சினிமா படம் எடுக்கறத வேடிக்கை பாக்கறவங்க இன்னும் நம்ம ஊருல இருக்க தான் செய்யறாங்க... நா மட்டும் என்ன விதி விளக்கா..? எங்க அப்பா கூட சேர்ந்து அடிக்கடி சூட்டிங் பாக்க கிளம்பிடுவேன்.. அது பெரும்பாலும் மே மாதத்தில் நான் நடக்கும்.. இது வரைக்கும் பல வெளியூர் பயணங்களுக்கு அப்பா கூட போய் இருக்கேன். அதுல மறக்க முடியாத வெளியூர் பயணம் அப்படினா அது ஒரிசா போனது தான்... 24மணிநேரம் பயணம் அது, செம ஜாலியான டிரிப்...
(படங்களின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)

இப்ப இந்த மேட்டருக்கு வருவோம்... கடந்த வெள்ளி கிழமை மாலை வீட்டுல வெட்டியா இருந்த அப்போ தான் அப்பா வந்து என்னை நைட் சூட்டிங் க்கு கூட்டிடு போனாறு...


தாம்பரத்துல இருந்து கொஞ்சம் தூரம் போன எல்லாருக்கும் தெரிந்த மணிமங்கலம் ஊர் வரும், அங்க இருந்து ரைட் எடுத்து ஜுட் விட்டு வண்டிய ஒட்டினா வஎது நிக்கும் படப்பை.. இப்ப கொஞ்ச நாளா, நல்ல ஃபேமஸ் ஆகுது அந்த ஏரியா... அங்க இருக்குற மார்க்கெட் ஏரியால இருந்து ரைட் கட் பண்ணி வண்டிய ஓட்டினா, நிறைய தோட்டம் துரவு வரும்... அத எல்லாம் வேடிக்கை பாத்துகிட்டே வண்டிய வேகமா விட்டுடாதீங்க....


ஃபர்ம் ஹவுஸ் அப்படினு சொல்ற பல பெரிய மனிதர்களின் தோட்டம் அங்கு தான் இருக்கு.. மாதா தோட்டம், ஓம் சக்தி தோட்டம், PLR தோட்டம் இந்த மாதிரி பல.....


அந்த ரோட்டுல தான் சசிகலா அவர்களின் ஒயின் ஃபேக்டரி குடியிருக்கு.. இப்ப அந்த ஏரியா பல பேருக்கு ஞாபகம் வரும்னு நினைக்கறேன்...


ஓகே, பிஎல்ஆர் தோட்டம் தான் நாங்க சூட்டிங் போன இடம்.. அந்த தோட்டத்தை பத்தி கொஞ்சம் விளக்கம் தரேன்.. அந்த தோட்டம் பல வருட காலமாக சினிமா சூட்டிங்காகவே பெயர் பெற்ற இடம். சிவாஜி அவர்களின் கடைசி காலத்துல இருந்து ரஜினி, கமல் ஆரம்பிச்சு ராம்கி வரைக்கும் பாத்த அந்த தோட்டம் இப்ப கொஞ்ச நாளா ஈஈஈ ஓட்டுது... சினிமா படம் எடுக்கவே ஏற்பாடு பண்ண மாதிரியே அங்க பல மூங்கில் குடில்கள் இருக்குது.. அதுல தான் பாட்டு சீன் எல்லாம் படம் எடுக்கறாங்க.. அந்த தோட்டம் மொத்தம் 5 ஏக்கர்.. இப்ப அதுல பல குட்டி குட்டி செடிலாம் வளக்கராங்க.. சென்னை முழுக்க இருக்குற பல சிறு குறு வியாபரிகளுக்கு செடிகள் மொத்த விற்பனை செய்யப்படுகிறது.. பல அதிசயக்க கூடிய செடிகள் மரங்கள் அங்கு இருந்துச்சு.. இலவங்க பட்டை மரம், கிராம்பு இன்னும் பல... எல்லாத்தையும் பாக்கறதே ஒரு அழகு தான்... எனக்கு ஏதோ காட்டுக்குள்ள போன மாதிரி இருந்துச்சு... அப்ப மணி கிட்டத்தட்ட இரவு 10 தாண்டி இருக்கும்..
அப்பா (கேமிராவுடன்)
வழக்கம் போல தொழிலாளிகள் சீக்கரம் வர, நம்ம டைரக்டர்ஸ், கேமரா மேன் மற்றும் உதவியாளர்கள் கொஞ்சம் லேட்டா தான் வந்தாங்க.... வந்ததும் வராததுமா எல்லாருக்கும் ஒரு போண்டா கொடுத்தாங்க... பிகாஸ், அது தான் ஈவ்னிங் டிபன்.. என்ன கொடுமை சார் இது-1.... போண்டாவ புட்டு வாயில போட்டு தின்னுட்டு, நாங்க போட்டு இருந்த பேண்ட்டுல அந்த எண்ணெய் கைய துடச்சாச்சு... அப்புறம், லைட் மெம்பர்ஸ் வேகமா லைட் எல்லாம் எடுத்து வச்சி செட் பண்ணிட்டு இருந்தாங்க....


இப்ப அடுத்து ஒரு மணிநேரம் பரபரப்பா அங்க வேலை போய்கிட்டு இருந்துச்சு.. அன்னைக்கு டான்ஸ் சூட்டிங் நடந்துகிட்டு இருந்துச்சு.. டான்ஸ் மாஸ்டர் அவங்களோட ரிகல்ஸல் நடந்துச்சு.. கேமரா மேன் லொகஷன் பாத்துக்கிட்டு இருந்தாங்க... நா அப்படியே எல்லாத்தையும் பராக் பாத்துக்கிட்டு சுத்திகிட்டு இருந்தேன்.... ம்ம்ம் அந்த படத்தோட ஹீரோயின் பாக்க ஒரு மாதிரி நல்லா தாங்க இருந்தாங்கோ... அதுவும் சாங் சூட்டிங் வேறவா, டிரஸ் பத்தி சொல்லவ வேணும்.. அந்த ஹீரோயின் கூட பாதுகாப்புக்கு அவங்க அப்பா, தம்பி கூடவே இருந்தாங்க... என்ன கொடுமை சார் இது-2...


படம் பேர் கயவன்.. தயாரிப்பு மற்றும் ஹீரோ ஒரே ஆள் தான்.. அவர் பேர் தெரியாது.. டைரக்டர் பேர் தெரியாது, கேமராமேன் பேர் தெரியாது.. அப்ப என்னத்துக்கு படம் பேர் மட்டும் தெரிஞ்சிகிட்ட அப்படினு நீங்க கேக்கறது புரியுது சார்... நைட் சூட்டிங் முடிய இரவு 2 மணி ஆயிடும், அப்ப நாமா பைக்'ல போகும் போது போலீஸ் அங்கிள் கிட்ட மாட்டினா அவங்க கேக்கற முதல் கேள்வி "படம் பேர் என்ன?".... பிம்பிலிக்கி பிலாப்பி.....


கேமரா & நாகரா:
 இப்ப நிறைய படத்துக்கு பிலிம் ரோல் கேமிரா யூஸ் பண்றது இல்ல அதுவும் முக்கியமா குறைஞ்ச பட்ஜெட் படங்களில்... இப்ப நிறைய டிஜிட்டல் கேமிரா வந்துடிச்சு... இந்த படத்துலயும் டிஜிட்டல் கேமிரா தான் யூஸ் பண்ணாங்க... ரெண்டு அஸிஸ்டன்ட் கேமிரா ஆப்ரேட்டர் தான் கேமிரா கொண்டு வந்தாங்க... ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, ஒரு படத்துல ரெண்டு கேமிரா அஸிஸ்டன்ட் கேமிராமேன் இருப்பாங்க..அவங்க அந்த கேமிரா யூஸ் பண்ணி படம் எடுக்கறவங்க மட்டும் தான்.. அதாவது உதவி இயக்குனர்கள் மாதிரி தான் அவங்களும்.. ஆனா, அந்த கேமிராக்குனு ரெண்டு அஸிஸ்டண்ட் இருப்பாங்க... அவங்க தான் அந்த கேமிராக்கு முழு பொருப்பு, பாதுகாப்பு எல்லாமே... இதுவே எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரியுமே...



அப்புறம் நாகரா... இது நம்ம வீட்டுல இருக்குற டேப்ரெக்கடர் மாதிரி தான் ஆனா கொஞ்சம் சைஸ் பெரிசு... இதுல தான் பாட்டுக்கான டேப் போட்டு டான்ஸ் சூட்டிங் நடத்துவாங்க.... அத சில படங்களில் நாம கவனிச்சா தெரியும்.. அப்புறம் சூட்டிங் நரக்கும் போது பேசற வசனம் கூட இதுல பதிவு பண்ணுவாங்க....


ஒரு வழியா அன்னைக்கு 2 மணி வரைக்கும் சூட்டிங் நடந்து முடிஞ்சிது.. அதுக்கு மேல நேரம் ஆச்சுனா ரெண்டாவது பேட்டா தர வேண்டியது இருக்கும்.. அதுலாம் வேற கதை... எல்லா பொருளையும் வண்டில ஏத்திகிட்டு கிளம்பி ஆச்சு....


----------------------------------------------------------------------------------------------------------------------------------


லோ பட்ஜெட் படத்துல என்ன ஒரு பிரச்சனை'னா சரியான சாப்பாடு கிடைக்காது.. அன்னைக்கு சூட்டிங் நடந்த அப்போ குடிக்க தண்ணி இல்லை.. 2மணி நேரத்துக்கு மேல தான் வாட்டர் பாக்கெட் மூட்டை வாங்கிட்டு வந்தாங்க... அந்த வெறும் போண்டா சாப்புட்டு முடிச்சுட்டு தண்ணி இல்லமா தவிச்ச தவிப்பு இருக்கே அடடா.... என்ன கொடுமை சார் இது-3....


நைட் சாப்பாடு வெளில இருந்து வர வச்சாங்க.. எல்லாருக்கும் சிக்கன் பிரைட் ரைஸ்.... கொஞ்சம் செலவு ஆயிருக்கும் நிணைக்கறேன்....


எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் இல்லைனாலும் கரெக்ட் ஆ படம் சூட்டிங் மட்டும் போயிட்டே இருக்கும் அதான் ஸ்பெஷலே....


----------------------------------------------------------------------------------------------------------------------------------


கீழ இருக்குற படம் எல்லாம் எங்க அப்பா வேலாயுதம் படத்துல வேலை செய்த காட்சிகள்.. பக்கத்துல இருக்கறது இரயில்... அதுல கேமிராவை பொருத்திட்டு அழகா போஸ் கொடுக்கறாறு பாருங்க... அந்த மெசின் பேரு "வேக்கம் பேஸ்".....





தண்டவாளத்துக்கு கீழ கேமிரா பொருத்துகிறார்..




ரயிலின் பக்கவாட்டில் கேமிரா பொருத்துதல்











----------------------------------------------------------------------------------------------------------------------------------
 கோவால நடந்த ஒரு சூட்டிங்கல ஹெலிகாப்டர்ல கேமிரா வச்ச போட்டோஸ் காணல, இல்லனா அதயும் போட்டு இருப்பேன்...எல்லா விதமான கேமிராவிலும் இதை பொருத்தாலம்.. கோலிவுட்டில் இதற்கான ஆட்கள் குறைவு தான்... APACHE bike சைலன்சர்ல குட்டி கேமிரா வச்சி எடுத்த காட்சிகள் பல நாள் சின்னதிரையில ஒளிப்பரப்பாச்சு.... 


படம் எடுக்க ஒரு யூனிட் வேணும்னு சொல்லுவாங்க.. சினிமாதுறையில இருக்கறவங்களுக்கு இது புரியும்... அதற்கான மொத்த பொருளும் அப்பாவிடம் இருக்கிறது.. இப்ப பல படங்கள் நல்லபடியா போய்கிட்டு இருக்கு.. அந்த யூனியன் மெம்பர் என்பது கூடுதல் தகவல்... ஆகையால் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்... எனக்கு மெயில் அனுப்பினால் போதும், பிற தகவல் நான் சொல்கிறேன்.. அப்பாவின் தொலைபேசி எண் அப்போது தரப்படும்....
----------------------------------------------------------------------------------------------------------------------------------


என்றும் அப்பாவின் புகழில்
சதீஷ் மாஸ்..........


Tuesday, 8 May 2012

சதீஷ் காபிஷாப் - 03/05/2012

பெயர் மாற்றம்:
சென்ற பதிவான வறுவல் மற்றும் நொறுவலில் சொல்லியது போல், இனிமே "சதீஷ் காபிஷாப்" என்ற பெயரில் இனிமேல் பதிவு எழுதப்படும். புதிய பெயர் சூட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள். இதே பெயரில் பதிவு எழுதுபவர்கள் அல்லது இந்த தலைப்புடன் ஒட்டி பதிவு எழுதி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுக்கொள். Its a Medical Miracle.
-------------------------------------------------------------------------------------------------------------
கூகிள் டிரைவ்:
கடந்த 2வருடமாக அதோ இதோ என்று கிடப்பில் கடந்த கூகிள் டிரைவ் இப்போது தான் அமலுக்கு வந்துள்ளது. இதை பற்றிய தகவலை நான் வந்தேமாதரம் பிளாக்கில் இருந்து திரட்டினேன். எனக்கு அறிவுறுத்தப்பட்ட படி நான் எனக்கான, கூகிள் டிரைவ்க்கு பதிவு செய்தேன். அது எனக்கு கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிமே அஜால் குஜால் தான் போங்க, நாங்க சும்மாவே காட்டுகாட்டுனு காட்டுவோம் இனிமே கேக்கவா வேணும். தேங்க்ஸ் டூ வந்தேமாதரம் 'சசிகுமார்'..
-------------------------------------------------------------------------------------------------------------
சென்னை கிளப்:
இந்த சென்னை கிளப் பற்றி பலருக்கும் பெருமளவில் தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் எனக்கு இந்த சென்னை கிளப் பற்றி தெரியும். கடந்த சனிக்கிழமை எனக்கு அவர்கள் போன் செய்தார்கள், எனக்கான குலுக்கலில் 45,000ரூபாய்க்கான பரிசு கூப்பன் தருவதாக சொல்லி அழைத்தார்கள். தோ கிளம்பிட்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் சொன்ன இடமான 'வள்ளுவர்கோட்டம் பகுதியில் உள்ள மூன்டிவி அலுவலகம் அருகில் உள்ள இடத்திற்கு சென்றேன். கடந்த ஞாயிறுலிருந்து சென்னை கிளப் ஆனது செலிபிரிட்டி கிளப் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விழா தான் அன்று நடைப்பெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து விட்டு வந்தேன். அந்த முக்கியமான மேட்டரை விட்டுடன் பாத்திங்களா, அது என்ன 45000ரூபாய்னா ஏழுநாள் கோவா சுற்றுலா தளத்திற்கு சென்று தங்கி வருவதற்கான பேக்கஜ். ஆனால், அங்கு தங்கும் ஓட்டல் பில் மட்டுமே அதில் அடங்கும். ரெண்டுநாளா அந்த கூப்பனை தான் தேடறேன், எங்க கொண்டு வந்து வைச்சனு தெரியலை.
-------------------------------------------------------------------------------------------------------------
கயவன் படக்குழு தளம்:
கடந்த வெள்ளிகிழமை, அப்பா கூட சூட்டிங் போனேன். ரொம்ப நாள் கழிச்சு அப்பாகூட போனேன். செம ஜாலியான டிரிப் அது... அதை பத்தின முழு தகவல் அடுத்த பதிவில் எழுதுகிறேன்..
-------------------------------------------------------------------------------------------------------------
உயிர்நுட்பம்:
மிக சிறப்பான ஒரு அறிவியல் தளத்தின் பெயர் தான் உயிர்நுட்பம் பிளாக்.. பல சூவாரிஸ்யமான தகவல்கள் அங்கு கொட்டிக்கிடக்கிறது. நமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அதை பலவாறு தீர்த்து வைக்கிறார் அப்பதிவர். இதில் மற்றுமொரு கூடுதல் தகவல் என்னவென்றால், எவரெனும் அத்தளத்தில் Follower ஆக இணைந்தால் அவர்களுக்கு தனியாக ஒரு பதிவு போட்டு வரவேற்கிறார். நான் Follower ஆக இணைந்த போது எனக்கு வரவேற்பு கொடுத்தை பார்க்கவும். சந்தேகமாக இருந்தால் நீங்கள் இனைந்து பாருங்கள், உங்களுக்கான வரவேற்பு கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------
கூகிள்சிறி:
நிறைய நண்பர்களுக்கு இந்த பெயர் பரிச்சயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் பரவாயில்லை இப்போ நா சொல்லிறேன். தமிழ் பதிவர்களுக்கென பல திரட்டிகள் இணையத்தில் இருக்கிறது. எ.கா: தமிழ்மணம், இன்டலி, யுடான்ஸ்.... கூகிள்சிறி என்பது ஒரு பிளாக் தான்.. அந்த பதிவர் தன்னுடைய பிளாக்கை பல தளங்களில் இணைத்து வைத்துள்ளார். நீங்கள், உங்கள் தளத்திற்கான லிங்கை அவருடைய தளத்தில் பதிவு செய்தால் போதும். பின்பு தன்னிச்சையாகவே நம்முடைய தளமுகவரி எல்லா திரட்டிகளிலும் பதிவு செய்யப்படுகிறது. வாசகர்கள் மேலும் படிக்க விரும்பினால் அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால், முதலில் கூகிள்சிறி பிளாக்குக்கு நம்மை அழைத்து செல்கிறது. பின்பு அங்கு இருந்து நம்மை நம்முடைய தளத்திற்கு அழைத்து செல்கிறது. மேலும் அறிய, அந்த தளத்திற்கு ஒரு விசிட் அடிக்கவும்..
-------------------------------------------------------------------------------------------------------------
History Channel:
பல வெளிநாட்டு சேனல்கள் இப்போது தமிழகத்திற்கு படையெடுக்க ஆரம்பித்து பல நாள்கள் ஆகிவிட்டன.கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளுமே தமிழில் டப் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதில் ஒரு சேனல் தான் History TV18... இது எத்தன நாளா தமிழில் வழங்கப்படுகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் பல ஆச்சரியப்படக்கூடிய நிகழ்ச்சிகள் இந்த சேனலில் ஒளிப்பரப்படுகிறது. ஒவ்வோனும் சும்மா நின்னு விளையாடுது. முடிஞ்சா கொஞ்சம் பாருங்க சார். அந்த சேனலில் அறிவியல் மாணவர்களுக்கு தேவையான அறிவியல் நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் குவிந்து கிடக்கிறது.அவங்க பேசற தமிழ் டப்பிங் இருக்கு பாருங்க, பிண்ணி பெடல் எடுக்கறாங்க. எனக்கு பிடிச்ச சில நிகழ்ச்சிகளின் பெயரை சொல்கிறேன்.. Pawn Stars, The Works, Modern Marvels... இந்த நிகழ்ச்சிகளை மட்டுமாவது பாருங்க, செமயா இருக்கும்.

-------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:
ஓய்வு என்பது அழகான ஆடை, அதை தொடர்ந்து அணிவது நல்லதல்ல.

இளமை இருக்கும் போது மட்டும் தான், ஆசைப்படவும் முடியும் அனுபவிக்கவும் முடியும்..

(டேய் இத காலைல காலண்டர்ல தேதி கிழிக்கும் போது தான படிச்ச..)
-------------------------------------------------------------------------------------------------------------
போதும் நிறுத்துங்கடா...
என்ன கொடுமை சார் இது..
-------------------------------------------------------------------------------------------------------------

என்றும் உங்களுடன்
சதீஷ்.......