போடும் ஆயாவே
உன் மகள் என் அம்மா
எண்ணி பார் பணத்தை
கிள்ளி பார் அத்தை மகளை
அணைத்து பார் அன்னையை
அகிலம் அடிமை ஆகுமடி
அம்மா, அன்னை ஆத்தா, தாயீ
உன் மீது ஏறி உலகம் சுற்றினேன்
உலகமே எனக்கு நீ ஆனாய்
இன்று எனக்கு இருபது வயது
இருப்பினும் நான் திண்ணதுக்கு
பின் உண்ணும் அன்னம் கை
கொண்ட அன்னையே
ஓடி ஓடி ஓடாய் உழைத்த பின்னும்
எண்ணம் முழுதும் பெற்ற பிள்ளைகளின்
நினைப்பே உமக்கு...
ஆண்டில் ஒரு தினம் உங்களுக்கு
அனுதினமும் என் நினைப்போடு
வாழும் தெய்வமே - அம்மா
பெற்ற கடனுக்கு சோறு போடாத
தாயே
காலமெல்லாம் உன் காலடியில்
நன்றி சொல்வேன்..
இன்னும் பல உள்ளது
உம் பெருமையை விளக்க
ஆனால்
உங்களுக்கு தான் புகழ்ச்சி பிடிக்காதே
நீர் வாழ வேண்டும்
என் வாழ்நாளையும்
எடுத்து கொள் - அம்மா
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அ முதல் ன் வரை
தமிழே
தலை முதல் கால் வரை
அன்னையே
துருவம் எங்கோ
அங்கே அம்மாவின்
காலடி...
பட்டிமன்றம் வைத்தால்
பாட்டியாய் போன உன் அம்மா
போட்டிமன்றம் வைத்தால்
மாடாய் வளர்ந்த உம் பிள்ளைகள்
இதானே உங்கள் சித்தம்
எல்லா ஆண்மகனின் ஆசை
அன்னை போல் துணைவி வேண்டும்
காரணம் தெரியுமோ
என் அன்னை அழகி
அகிலம் அறியும் முன்
நான் அறிந்த அழகு அன்னையே
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா பெயர் திருமதி சுந்தரி மனோகரன்
10 comments:
வாழ்த்துக்கள்...பின்னிட்டய்யா மாப்ளே!
நன்றி விக்கியுலகம்...
நீர் வாழ வேண்டும்
என் வாழ்நாளையும்
எடுத்து கொள் - அம்மா//வாழ்த்துக்கள்
நன்றி மாலதி அவர்களுக்கு...
GOOD WRITING...
பெற்ற கடனுக்கு சோறு போடாத (போட்ட)
தாயே
காலமெல்லாம் உன் காலடியில்
நன்றி சொல்வேன்..
// Kovam Nallathu said...
GOOD WRITING... //
நன்றிகள் பல...
// அன்பை தேடி,,அன்பு said...
பெற்ற கடனுக்கு சோறு போடாத (போட்ட)
தாயே
காலமெல்லாம் உன் காலடியில்
நன்றி சொல்வேன்.. //
நீங்க சொன்ன மாதிரி தான் நானும் யோசிச்சேன் ஆனா எழுதும் போது மாத்திட்டேன்... நன்றி அன்பு...
உங்கள் பக்கம் இப்போதான் வருகிறேன்.அன்னையின் வணக்கப்பதிவோடு சந்திக்கிறேன்.வாழ்த்துகள் சதீஷ்.
அம்மா என்று சொல்லும்போதே கருணையும் அன்பும் குழைத்த ஒரு கவிதை.உங்கள் கவிதை அந்தக் கவிதையை மெருகூட்டுகிறது.
தொடருங்கள்.தொடர்கிறோம் !
thank u hema....
Post a Comment