அனைவருக்கும் வணக்கம்.... நா ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டேன், நா பதிவுனு எதயாச்சும் போட்டா யாரும் அந்த பக்கம் போறதே இல்ல.. ஆனா காபிஷாப்க்கு நல்ல ரெஸ்பானஸ்... வாங்கோ நாம தொடரலாம்...
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும்:
பல பரப்பரப்புக்கு அப்புறம் பதிவர் சந்திப்பு முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னும் இருக்கவே செய்கிறது. பல பதிவர்கள் தொடரும் என்று போட்டு பதிவை எழுதி தள்ளி இருக்கிறார்கள்... #அடா போங்கடா நீங்களும் உங்க சந்திப்பும் அப்படினு அவசரப்பட்டு சொல்லிடாதீங்க... நா சூடானேன்ன்ன்ன்ன்ன்ன் சுளுக்கு
ஒரு சிறு முயற்சியாக....
எனக்கு தெரிந்த பெயர் மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்......
------------------------------------------------------------------------------------------------------------
ஆசை:
மனிதனோட மனசு குரங்கு மாதிரினு பெரும்பாலும் சொல்லுவாங்க.. ஆமா அது நூத்துக்கு நூறு உண்மை தான். மனிதனுடைய ஆசை அடங்கவே அடங்காது, அது ஒரு காமத்தீ... மனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று புத்தர் ஆசைப்பட்டார் என்பதே உண்மை...
இப்ப என்னோட ஆசை என்னவென்றால் ஒரு மென்நிரலி(iPad) வாங்க வேண்டும். ஒரு ஆன்ட்ராய்டு மொபைல் வேணும். கடவுளே சீக்கரமா ஏற்பாடு பண்ணுங்க....
------------------------------------------------------------------------------------------------------------
காலேஜ்:
தம்பியோட பன்னிரெண்டாவது ரிசல்ட் வந்துரிச்சு.. நல்ல மார்க் எடுத்து இருக்கான்.. ஏற்கனவே காலேஜ் சீட் பிளாக் பண்ணியாச்சு அதனால நோ பிராப்ளம்.. சரவணன் B.E biotech engg...
ஆனா ஒரு சின்ன வருத்தம் என்னான்னா அவனுக்கு அம்மா தர லேப்டாப் கிடைக்காது... மம்மீ மம்மீ... ஆனா மக்களே உங்கள் ஏரியால இருக்கற பசங்களுக்கு ஒரு அட்வைஸ் நீங்க தாங்க.. அதாவது, இந்த வருஷம் எந்த காலேஜ்லலாம் லேப்டாப் தந்தாங்களோ அந்த காலேஜ்ல சேர சொல்லிங்க... 32000ரூ மதிப்புள்ள மடிகனிணி ஓசில கிடைக்கும்...
------------------------------------------------------------------------------------------------------------
இந்தவார பிளாக்கர்:
ஆயிசா ஃபரூக்,
இவரை நான் முகபுத்தகத்தில் நான் கண்டுபிடித்தேன்.. பல அருமையான பதிவுகளை எழுதி உள்ளார். சில போட்டோகாப்பி பதிவும் இருக்கு... அவரை பத்தி அவருடைய பிளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு இதுவரை ஒரு ஃபலோயர் கூட இல்லை.. அவருடைய பதிவுக்கு ஒரு கமெண்ட் கூட இல்லை... ஏன் என அவருடைய பிளாக்கில் உமக்குதெரியும்....
------------------------------------------------------------------------------------------------------------
தமிழும் தாய்லாந்தும்:
ஆயிரம் ஆயிரம் வருடங்கள் தொன்மை வாய்ந்த மொழி தமிழ் என்பதில் ஐயமே இல்லை... அதற்கு இதுவே சாட்சி...
------------------------------------------------------------------------------------------------------------
கமெண்ட்:
ம்ம்ம் போன பதிவில் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எனக்கு கமெண்ட்டும் பாராட்டும் தந்து இருந்தார்... ரொம்ப நல்லா இருந்துச்சு.. என் பிளாக்கில் ஜாக்கி,கேபிள்,சுரேகா, லக்கிலுக் யுவா, இன்னும் பலர் கமெண்ட்டுகள் அங்காங்கு இருக்கிறது.. டோன்ட் வேரி பீ ஹாப்பி...
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:
மற்றவர் துயரங்களை பகிர்ந்து கொள்ள முன் வராத கல் நெஞ்சங்கள் மகா கேவலமானவை....
நல்லதுக்கு போய் நிக்கலனாலும் கெட்டதுக்கு போய் நிக்கனும்'னு பெரியவங்க சொல்லுவாங்க.... பல பெருசுங்க மண்டய போட்டு பல குடும்பங்களை சேத்து வைக்கும்.. சில சமயம் சொத்து பிரச்சனையில் மீண்டும் சண்டை வரவும் வாய்ப்பு இருக்கு...
------------------------------------------------------------------------------------------------------------
அனல் பறக்கும் வெயில் காத்து சுத்தமா தாங்க முடியல.. பொன்னுங்க எல்லாம் முகத்தை அழகா முடிக்கிறாங்க... அதுவும் நடந்து போற பொன்னுலாம் துப்பட்டா போட்டு மூஞ்ச மூடிக்கறாங்க... ம்ம்ம் ரெண்டு துப்பட்டா கொண்டு வராங்க தெரியுமா.. ஒகேஓகே படத்துல ஒரு சீன்ல, ஒரு பொன்னோட முகத்துல இருக்கற துப்பட்டாவ எடுத்து பாத்துட்டு உதயநிதி காரி துப்புவாரு... அதுப்போல பொன்னுங்க முகத்தை மூடிக்கறதுல நமக்கும் ஒரு விதத்திலு நன்மை தான்..
------------------------------------------------------------------------------------------------------------
டாட்டோ போட்டோ:
பொது இடத்துல வச்சி பாத்துடாதீங்க... அப்புறம் மானம் போய்டும்... போட்டோல இருக்கற கலையை மட்டும் ரசிக்கவும்.. அது தான் எல்லாருக்கும் நல்லது.... அதில் உள்ள அழகை பாருங்கள். அதை வரைஞ்சவனின் கை பக்குவத்தை காணுங்கள்....
அதை இந்த எடுத்துல போட முடியல சோ இந்த லிங்க அ கிளிக் பண்ணுங்க.. நாம பேஸ்புக்குக்கு போகலாம்..
------------------------------------------------------------------------------------------------------------
என்றும் உங்களுடன்
சதீஷ் மாஸ்.....
4 comments:
அடிங்கோ!பொதுவா சாக்கடை பதிவர்கள்,கசுமால பதிவர்கள்,இப்படிப்பட்ட பதிவர்களைதான் ஸ்பூப் பண்ணுவாங்கோ.இந்த கசுமாலதையும்
ஸ்பூப் பண்ணி சாக்கடையோட மானத்த கெடுத்துப்புடீங்களே.ஹே.ஹே.ஹே,
நன்றி தலைவா... வாழ்க உங்க நாமம்...
YOU ARE WRITING GOOD SATHISH... THE WAY OF PRESENTING THINGS IMPROVING WITH POSTS...
CONWAY MY WISHES TO YOUR BROTHER... TELL HIM TO DO WELL...BIOTECHNOLOGY CAN DO ANYTHING FOR HIM, IF HE DO WELL...
கோவம் நல்லது அவர்களுக்கு நன்றி... என் தம்பியிடம் சொல்லிவிடுகிறேன்.....
Post a Comment